அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 13 டிசம்பர், 2014

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி யில் 55 இடங்களில் தமுமுகவின் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் தினரடித்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 6 இறைவன் துணையால் மிக சிறப்பாக நடைபெற்றது

அன்பு உறவுகளுக்கு..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி யில் 55 இடங்களில்
தமுமுகவின் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் 
 தமிழகம் முழுவதும் தினரடித்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 6 
இறைவன் துணையால் மிக சிறப்பாக நடைபெற்றது

கழக போராளிகளே!மறுமை வெற்றியை நோக்கி களம் அமைப்போம்!







டிசம்பர் 6 ல் எங்கள் குடும்ப​ சேவகர்கள் 
கலந்து கொண்ட..  "மெய் சிலிர்க்கும் காட்சி"

​​
"யா அல்லாஹ்" எங்களுக்கு மேலும் மேலும் துணிவை தருவாயாக.












 நீதி கிடைக்கும் வரை ஒயமாட்டோம்....!



போராட்ட கள முழக்கங்கள்...





மௌலவி ஜே.எஸ். ரிஃபாயி (தலைவர்,தமுமுக )

அவர்களின் டிசம்பர் 6 வீர வரிகள்

முடியாது என்று மட்டும் இழக்காரமாக தமுமுக 

தொண்டனை நினைத்து விடாதீர்கள்

இவர்களுடைய கரத்திற்க்கு ஆயுதம் தேவையில்லை

இவர்களுடைய கரத்திற்க்கு ஆயுதம் தேவையில்லை

இந்தியாவை ஆட்டி அசைக்க கூடிய ஈமான் நெஞ்சிலே 

இருக்கிறது முஸாஃபர் நகரத்திற்க்கு சென்று விட்டோம் 
அங்கே தமுமுக கொடி பறக்கிறது; 
அயோத்தி எங்களுக்கு வெகு தூரம் இல்லை.. ..

சனி, 15 நவம்பர், 2014

23 கிரிமினல் வழக்குகள் நிலுவையிலுள்ள ஒருவர் – மோடிஜியின் புதிய கல்வி மந்திரி….!!!

23 கிரிமினல் வழக்குகள் நிலுவையிலுள்ள ஒருவர் – மோடிஜியின் புதிய கல்வி மந்திரி….!!!


திருவாளர் ராம்ஷங்கர் கதேரியா – 2009ஆம் ஆண்டு முதல் ஆக்ராவைச் சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர். எப்போதோ இவர் கல்லூரியில் பேராசிரியராக (லெக்சரர்..? ) இருந்தாராம்.

அதனால் தன்னை இவர் ப்ரொபசர் கதேரியா என்றே அழைத்துக் கொள்கிறார்.

புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட 21 மந்திரிகளில் இவர் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மிக முக்கியமான மனிதர். எவ்வளவு முக்கியம் என்றால் …. இவர் மீது தான் அதிகபட்சமாக - 23 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
பாஜக, இந்த வழக்குகள் எல்லாம் அரசியல் ரீதியாக போடப்பட்டவை என்று கூறினாலும், குறைந்த பட்சம் இரண்டு வழக்குகள் வித்தியாசமானவை - கொலை முயற்சி, மற்றும் மோசடி சம்பந்தப்பட்டவை.

இன்று காலையிலிருந்து இவர் பெயர் டெல்லி தொலைக்காட்சி சேனல்களில் முழங்கப்படுகிறது….. தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளின் மார்க் ஷீட்டில் இவர் forgery செய்து விட்டதாக ஒரு வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் முன் வந்து, அது குறித்த விசாரணை ஆக்ரா செஷன்ஸ் நீதிமன்றத்தில் வருகிற 26ந்தேதி நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்….!!!

இப்பேற்பட்ட பெருமைகளைக் கொண்ட ஒருவரை மத்திய அரசின் கல்வி மந்திரியாக மோடிஜி நியமித்திருப்பது – அவருக்கும், இந்த நாட்டு மக்களாகிய நமக்கும் எப்பேற்பட்ட பெருமை சேர்க்கும் விஷயம் ….!!!!

சம்மனை வாங்கினால் தானே வழக்கு கணக்கில் சேரும்….?
இங்கு வித்தியாசமான ஒரு மோடிஜியின் மந்திரி - ராஜஸ்தானைச் சேர்ந்த நிகால்சந்த் மேஹ்வால் என்பவர் மீது ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் ராஜஸ்தான் கோர்ட் ஒன்று சம்மன் வெளியிட்டிருக்கிறது. ஆனால் டெல்லியில் மத்திய மந்திரியாக இருக்கும் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று ராஜஸ்தான் போலீஸ் கோர்ட்டில் சொல்லி விட்டது.
Association for Democratic Reforms (ADR) – என்கிற பெயரில் பொதுநல அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அரசியல்வாதிகள் பற்றிய பல உண்மைகளை ஆதாரபூர்வமாக சேகரித்து, அவ்வப்போது வெளியிடுவது அது செய்து வரும் பொதுநலப் பணிகளில் ஒன்று.
அது அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்கள் சில - மோடிஜியின் அமைச்சரவையில் உள்ள மொத்தம் 66 மந்திரிகளில் – 59 பேர் அதாவது 92 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
அதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்களில் ஒருவரான திருவாளர் மகேஷ் சர்மா என்பவரின் சொத்து மதிப்பு 2009-ல் 15.85 கோடி ரூபாயாக இருந்தது, 2014-ல் 47.37 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறதாம்…. 5 வருடங்களில் 3 மடங்கு உயர்வு – இவர் அரசியலைத்தவிர வேறு தொழில் எதுவும் செய்வதாகவும் தெரியவில்லை ….!!!

மத்திய அமைச்சர்களின் ஜாதகங்களை முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, Association for Democratic Reforms (ADR) சொல்கிறது -

மொத்தம் உள்ள 66 மத்திய அமைச்சர்களில், 20 பேர் – தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, அவர்களே தேர்தல் கமிஷனுக்கு கொடுத்த பிரமாண பத்திரங்களில் கூறி இருக்கிறார்களாம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து, ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திய அரசியலை சுத்தப்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னர் மோடிஜி -மாநிலம் மாநிலமாகச் சென்று வாக்குறுதி கொடுத்து விட்டு வந்தார்….
அந்த வாக்குறுதிக்கும் இவரது அமைச்சரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை போலிருக்கிறது ….!!!
பாரதியின் பாடல் வரிகள் இங்கு வேறு அர்த்தத்தில் தோன்றுகிறது -
”இங்கிவரை யாம் பெறவே -என்ன தவம் செய்து விட்டோம்……!!!”

சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்

சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்!




இந்த விவகாரம் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன.

டந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நீலகண்டாச்சாரி சுவாமிகள் என்பவர் பெங்களூரு விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2011 – 2012-ம் ஆண்டில் தானும் தனக்கு வேண்டியவர்கள் எட்டு பேருமாக சேர்ந்து ஜெனிசிஸ் என்கிற நிதி அலோசனை நிறுவனத்திற்கு சுமார் 3,994 கோடிகள் அளவுக்கு நன்கொடை வசூலிக்க உதவியதாகவும், இதற்கான கழிவுத் தொகை இரண்டு சதவீதம் வர வேண்டியிருப்பதாகவும், அந்த தொகையை ஜெனிசிஸ் தர மறுத்து மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ஜெனிசிஸ்? எதற்கான நன்கொடை வசூல் இது? – நீலகண்டாச்சாரியின் புகார் மனு மேலும் சில விளக்கங்களை அளிக்கிறது.
தங்களை காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தர்கள் என்று குறிப்பிடும் நீலகண்டாச்சாரி, தனக்கும் மடத்தில் உள்ள சிரீதரன் என்பவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கிறார். சிரீதரன் என்பவர் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியால் மடத்தின் சார்பாக 10,000 கோடி வரை நன்கொடை வசூலிக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரீதரனை ஜெனிசிஸ் நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் நீலகண்டாச்சாரியும் அவரது எட்டு நண்பர்களும், மடத்திற்காக ஜெனிசிஸ் நிறுவனம் நன்கொடை வசூலித்துக் கொடுப்பது அதிலிருந்து இரண்டு சதவீதத்தை கழிவாக தமக்குக் கொடுப்பது என்று பேசி வைத்திருக்கிறார்கள்.
தற்போது ஜெனிசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, அவரது கணவர் கிரிஷ்ணப்பா, இத்தம்பதியினரின் மகள்களான சௌமியா, ஷில்பா, மேகனா மற்றும் மருமகன் சுதாகர் ஆகியோரின் மீது கிரிமினல் சதி புரிந்தது, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிந்திருக்கிறார் நீலகண்டாச்சாரி. மேலும் இவர்கள் சங்கரமடத்திற்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை தம்மிடமிருந்து மறைத்துள்ளதாகவும், சங்கர மடத்தைப் பயன்படுத்தி கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் குற்றச்சாட்டில் பதிந்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட விஜயநகர காவல் நிலையம், ஜெகத்து குருவே விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் விசாரணைக்காக கர்நாடக மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகாரை அனுப்பி வைத்தது. புகாரின் மேல் விசாரணையைத் துவங்கிய குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஜெனிசிஸ் சார்பில் சில ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மடத்தின் சார்பாக சிரீதரன் என்பவரை நன்கொடையைப் பெற்றுக் கொள்ள அதிகாரம் கொண்டவராக நியமித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2012-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி ஜெனிசிஸ் சார்பில் மடத்திற்கு அனுப்பட்ட கடிதம் ஒன்றில் மடத்திற்கு உட்பட்ட ஐந்து அறக்கட்டளைகளுக்கு ஜெனிசிஸ் சார்பாக ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் மற்றும் சிட்டி யூனியன் வங்கிக் கணக்குகளின் வழியே 3,992 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மடத்தின் சார்பாக இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள சிரீதரன், இந்த தொகையைப் பெற்றுக் கொண்டதை உறுதிப் படுத்தி அளித்த கடிதமும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்துள்ளது.
இந்த விவரங்களோடு மடத்தின் கணக்குத் தணிக்கை அலுவலரை அணுகிய குற்றப் புலனாய்வுத் துறை, மடத்திற்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் கிடைத்த நன்கொடை மற்றும் நிதி விவரங்களை கேட்டிருக்கிறது. மடத்தின் சார்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் வெறும் பதினைந்து கோடிகளுக்கு மட்டுமே முறையான கணக்குகள் உள்ளன. ஜெனிசிஸ் நிறுவனத் தரப்பின் படி, அவர்கள் தமக்கு மடத்திடம் இருந்து கிடைத்திருக்க வேண்டிய 2.5 சதவீத கழிவுத் தொகையே இன்னமும் வர வேண்டியுள்ளது என்பது தான்.
சிரீதரனும் விசாரணையில் தனது தரப்பை முன்வைத்துள்ளார். தான் ஜெனிசிஸ் நிறுவனத்தோடு சங்கர மடம் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தவிற பிற விவரங்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றுள்ளார். 2011-12 காலகட்டத்தில் சந்திரசேகர் குரு என்பவரின் தலைமையில் சங்கர மடத்திற்குச் சென்றதாகவும், அப்போது மடத்தின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து நடந்த விவாதங்களில் தான் பங்கேற்கவில்லை, தன்னை அறைக்கு வெளியே செல்லுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் பதிவு செய்துள்ளார்.
இந்த அளவில் தற்போது விவகாரம் விசாரணையில் உள்ளது. பெங்களூரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை மடத்தின் குறிப்பிட்ட ஐந்து அறக்கட்டளைகளின் மூலம் கருப்புப் பண சுழற்சி நடந்திருக்கிறது என்ற கோணத்தில் மேல் விசாரணை செய்து வருகிறது.
என்னது காஞ்சி சங்கர மடத்தில் கருப்பு பணமா என்று யாராவது அதிர்ச்சி அடைய முடியுமா? லோககுரு கம்பெனிக்கு ஒரு கிரிமினல் கூட்டத்தை ஜமுக்காளத்தைப் போட்டு வடித்து எடுத்தாலும் உலகில் வேறெங்கும் கண்டு பிடிக்க முடியாது என்பதைத்தான் யாராவது மறுக்க முடியுமா?
கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!
கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!
உள்ளே நடந்த ஊழல் விவகாரங்களை சுட்டிக்காட்டிய ஒரே ‘பாவ’த்துக்காக சங்கர ராமனை சாட்சாத் அந்த ’பகவானின்’ சந்நிதியில் ’பகவானின் கண்’ முன்னே போட்டுத் தள்ளியதாகட்டும், சாட்சிகளை காசு கொடுத்து பிறழ் சாட்சிகளாக மாற்றிய சாமர்த்தியமாகட்டும், நீதிபதியிடமே டீலிங் பேசிய திமிராகட்டும் – ஜெகத்து குரு உலகத்து ஜெகத்தின் கிரிமினல்கள் அனைவருக்குமே ஆதி குரு என்பதை நிரூபித்துக் காட்டியவர்.
கும்பகோண மடத்தை சங்கர மடமாக மாற்ற வரலாற்றையே போர்ஜரி செய்து மாற்றியதாகட்டும், பெரும் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டைப் பஞ்சாயத்து தரகனாக செயல்படுவதாகட்டும் இந்த கும்பலை மிஞ்சிய திருட்டு கும்பலை பார்ப்பது கடினம்.
ஆனால், இந்த மொத்த விவகாரமும் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன. அது போல தேசிய, பிராந்திய என்ற வேறுபாடுமில்லை.
இதே காலகட்டத்தில் 2ஜி வழக்கில் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கனிமொழியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பற்றி தேசிய ஊடகத்திலிருந்து பா.திருமாவேலனின் விகடன் பத்திரிகை வரை மாய்ந்து மாய்ந்து எழுதினார்கள். ஊழலுக்கு எதிரான இந்த போர்முரசு சங்கராச்சாரி (அ) சுப்புனி குறித்து வெம்பிய முரசாக ஏன் போங்காட்டம் ஆட வேண்டும்?
சங்கர மடம் காசு கொடுத்து தான் இந்த மௌனத்தை விலைக்கு வாங்கியிருக்க வேண்டும் என்பதில்லை, பார்ப்பன நலன் என்று வந்தால் யாரும் சொல்லாமலே பொத்திக் கொள்ளும் வாய்கள் தான் இவை.
சாராயம் காய்ச்சி விற்பதெல்லாம் ’ராயப்பன்களின்’ வேலையாக பதிவாகியிருக்கும் பொதுபுத்தியின் முன் சோ ராமசாமி சாராயக் கம்பெனியின் தலைமைப் பதவியில் இருந்தார் என்கிற செய்தி நுழைவதில்லை.
இந்த இலட்சணத்தில் சுவிஸ் வங்கியின் பாதுகாப்பறையில் இருக்கும் பல பல பலான கோடி கோடி பணத்தை ஸ்கார்பியோ காரில் பறந்து சென்று மோடி மீட்டு வருவார் என காமிக்ஸ் கதை காட்டிய கனவான்களை நினைத்துப் பாருங்கள்! ஸ்கார்பியோ கார் தயாராகும் பெங்களூருவிலேயே 4000 கோடியை ஆட்டையைப் போட்டு விட்டு ஒன்னும் தெரியாத அம்பி மாதிரி சங்கரமடத்தில் நெய் பொங்கலை மொக்கி விட்டு ஒரு பெருச்சாளி இருக்கிறதே? அது குறித்து தமிழிசை தவிலோசை போல பேசுவாரா? இல கணேசனோ, பொன்னாரோ பொங்கி எழுவார்களா?
அவ்வளவு ஏன், சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது கூட ஜெயேந்திரனுக்கு பார்டிகார்டாகவும், பிரச்சார பீரங்கியாகவும் பேசிய கூட்டமல்லவா இது!
சமூகத்தை ஏற்றத்தாழ்வுடன் கூடிய படிநிலை அமைப்பாக நிலைநிறுத்திய பார்ப்பனியம் தன்னளவிலேயே குற்றத் தன்மையுடையது தான் – அப்படியிருக்க நடைமுறையில் அதன் இருப்பை உத்திரவாதப்படுத்தும் சங்கர மடம் இந்தக் குற்றத்தை மட்டுமல்ல, இதற்கு மேல் பஞ்சமா பாதகங்களையும் செய்யாவிட்டால்தான் அதிசயம்!
இந்தக் குற்றக் கும்பலையும், அதன் பகிரங்கமான சங்கர மட கம்பெனி ஆபிசையும் இழுத்து மூடுவது எப்போது?
–    தமிழரசன்
http://www.vinavu.com/2014/11/13/kanchi-mutt-black-money-scandal

புதன், 29 அக்டோபர், 2014

விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?

அன்பு உறவுகளுக்கு..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

லட்சக்கணக்கான நிராபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான்நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும்கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன.


சிறையிடப்பட்டுள்ள ஒரு விசாரணைக் கைதிஅவர் செய்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு சட்டப் புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தில்பாதியளவுக் காலத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால்அத்தகையோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஇதன்படி தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்குட்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படும் சிறு குற்றவழக்குகளில் கைதாகி சிறையிடப்பட்டுள்ளஏறத்தாழ 3,000 விசாரணைக் கைதிகள் உள்ளிட்டுநாடெங்கும் ஒரு இலட்சத்துக்கும் மேலான விசாரணைக் கைதிகள் அக்டோபருக்குள் விடுதலை செய்யப்படுவார்கள்என்றும்இது இந்திய நீதித்துறை ஓசையின்றி செய்துள்ள புரட்சி என்றும் ஊடகங்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.

விசாரணைக் கைதிகள் என்பவர்கள் யார்அவர்கள் சட்டப் புத்தகங்களின்படி குற்றவாளிகள் அல்லர்குற்றம் சாட்டப்பட்டவர்கள்அதாவதுகுற்றம் புரிந்ததாக அளிக்கப்படும்புகார் அல்லது தகவலின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள்.

ஏறத்தாழ 3.23 இலட்சம் பேரை அடைத்துவைக்குமளவுக்குத்தான் நாட்டிலுள்ள 1382 சிறைச்சாலைகளில் இடவசதி உள்ளிட்டவை உள்ளனஇருப்பினும்தற்போதுஇச்சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமாக – ஏறத்தாழ 3.81 இலட்சம் பேர் கைதிகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்றவியல் ஆணையம் கூறுகிறது.இவர்களில் 2.54 இலட்சம் பேர் – அதாவதுசிறைக்கைதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் விசாரணைக் கைதிகளாவர்இந்த அளவுக்கு விசாரணைக் கைதிகளால் இந்தியச்சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்குக் காரணம் என்ன?

இன்றைய அரசியலமைப்பு முறையில் போலீசார் எந்தவொரு குடிமகனையும் பிடித்து பொய்வழக்கைச் சோடித்து சிறையிலடைக்க முடியும்குற்றவியல் சட்டப்படிபோலீசுக்கு தண்டிக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டாலும்யாரையும் பிடித்து சிறையில் தள்ளுவதற்கான வாய்ப்பும் அதிகாரமும் அவர்களுக்குஅளிக்கப்பட்டுள்ளதுகுற்றங்களை விரைந்து தடுப்பதாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் போலீசார் பல்வேறு சிறு குற்ற வழக்குகளில் அப்பாவிகளைப்பிடித்து வருவதென்பதும்தங்களது பதவி உயர்வுக்காகவும்சம்பளம்-சலுகைகளுக்காகவும்மிரட்டிப் பணம் பறிப்பதற்காகவும் இப்படி பல பொய்வழக்குகளைச்சோடிப்பதென்பதும் போலீசாரின் வாடிக்கையாகவே உள்ளதுஇவையெல்லாம் நீதிபதிகளுக்குத் தெரியாத இரகசியமல்ல.

உதாரணமாகஒரு சிறு திருட்டுக் குற்றத்திற்கு அதிகபட்சத் தண்டனையாக மூன்றாண்டு சிறை என சட்டம் பரிந்துரைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்பல நேரங்களில்ஒரு விசாரணைக் கைதியின் மீதான குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதாகக் கூறிக் கொண்டு போலீசார் இழுத்தடிப்பதாலும்நீதிபதிகள் வழக்குவிசாரணையைத் தள்ளிப்போட்டு அலட்சியப்படுத்துவதாலும் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைக் காலத்துக்கும் மேலாக – நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்குச் சிறையில்வதைபடுகின்றனர்அதேசமயம்அரசியல் பலமும் சாதிய பலமும் குண்டர் பலமும் கொண்ட மேட்டுக்குடியினரும் தொழில்முறை கிரிமினல்களும்சமூகத்தொடர்புள்ளவர்களும் விரைவில் பிணையில் வெளியேவர முடிகிறதுஅல்லது சிறையிலேயே அவர்கள் அனைத்து வசதிகளோடு பாதுகாப்பாக ஓய்வெடுக்கின்றனர்.இத்தகைய பலம் ஏதுமில்லாத சாமானிய மக்கள்தான் பிணை கிடைக்காமல் தொடர்ந்து விசாரணைக் கைதிகளாகச் சிறையில் வதைபடுவதோடுசட்டவிரோதமாகநீதிபதிகள் வீடுகளில் எடுபிடி வேலைகளைச் செய்யுமாறு பயன்படுத்தப்படுகிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் இந்த வழக்கைச் சீர்குலைப்பார்சாட்சிகளைக் கலைப்பார் என்ற நியாயமான அச்சம் நீதிபதிக்கு ஏற்பட்டால்அவர் ஒரு விசாரணைக் கைதியைநீதிமன்றக் காவலில் வைக்கலாம் என்று சட்டம் கூறுகிறதுஆனால் இப்படி எந்த அச்சத்தையும் தெரிவிக்காமல்போலீசார் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டுஒருவிசாரணைக் கைதியை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உடனடியாக உத்தரவிடுகின்றனர்தாங்கள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றுஒருவர் நீதிமன்றத்தில் கதறியழுதாலும்அது நீதிபதிகளின் காதுகளில் விழுவதில்லைசுருக்கமாகச் சொன்னால்போலீசு நிலையத்தின் விரிவாக்கப்பட்ட நிலையமாகவேகீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.

இப்படி இலட்சக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப்படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான்பலரது வாழ்க்கையும்பல குடும்பங்களும் நாசமாக்கப்பட்டதற்குஇந்நீதிபதிகள்தான் காரணம்குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டவர் மீது 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்இல்லையேல்அந்தவிசாரணைக் கைதியை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க வேண்டுமென சட்டம் கூறினாலும்ஆண்டுக்கணக்கில் சிறையில் விசாரணைக் கைதிகள் வதைபடுவதற்குக்காரணமே நீதிபதிகள்தான்.
கடந்த மார்ச் 24 அன்று புழல் சிறையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள்போலீசார் தங்கள் மீது போட்டுள்ள பொய்வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றும்,

நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன்பாக தங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கக் கோரியும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்கோடைவிடுமுறையைக் கழிக்க குடும்பத்தோடு உல்லாசமாகக் கிளம்பும் நீதிபதிகள்இக்காலத்தில் தேவையில்லாமல் அப்பாவிகள் சிறையில்விசாரணைக் கைதிகளாக வதைபடுவது அவர்களை உறுத்தவில்லையாஅல்லது போலீசார் சோடித்திருப்பது பொய்வழக்கு என்பது அவர்களுக்குத் தெரியாதாஇந்தஅநீதியைத் தெரிந்தே செயல்படுத்திய முதன்மைக் குற்றவாளிகளான இந்நீதிபதிகளுக்கு என்ன தண்டனைபொய்வழக்கு போட்டு சாமானியர்களை வதைக்கும் போலீசுக்குஎன்ன தண்டனைமாதமொருமுறை கீழமை நீதிமன்ற நீதிபதிகள்வழக்குரைஞர்களுடன் சிறைச்சாலைக்கு நேரில் வந்து சிறைக்கைதிகளிடம் விசாரணை நடத்தி,நிலைமைகளைப் பரிசீலித்து அறிக்கை தரவேண்டுமென விதிகள் இருந்தபோதிலும்அவற்றை அவர்கள் தெரிந்தே புறக்கணித்து அலட்சியப்படுத்துவது எந்த வகையில்நியாயமானது?

ஒருவரைப் பொய்வழக்கில் போலீசு பிடித்துச் செல்வதும்பின்னர் கைதானவரை விடுவிக்க அவரது உறவினர்களும் நண்பர்களும் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்வதும்,அதன் பிறகு நீதிபதிகள் விசாரணை நாடகமாடி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து அந்த நிரபராதியை பிணையில் விடுவிப்பதும்தான் போலீசு மற்றும் நீதித்துறையின்அன்றாட நடைமுறையாக இருக்கிறதுஉயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட போலீசு ஆட்சேபிக்காவிட்டால்தான் ஒருவருக்குப் பிணை வழங்கிறார்கள்ஒரே நாளில் பலவழக்குகளில் பொய்சாட்சி கூறுவதற்காகவே சிலரை போலீசார் உருவாக்கி வைத்திருப்பதை தங்கள் கண்ணெதிரே கண்ட போதிலும்நீதிபதிகள் இதை எதிர்த்துவாய்திறப்பதில்லைஇது நீதித்துறைக்கும் போலீசுத்துறைக்குமிடையிலான எழுதப்படாத உடன்பாடாக நீடிக்கிறதுபொய்வழக்கு போடுவதைத் தங்களது உரிமையாகபோலீசு செயல்படுத்தி வருவதை கண்டுகொள்ளாமல்அதனை அங்கீகரிப்பது நீதிபதிகள்தான்.

இப்படி நிரபராதிகளான ஏழைகளை வதைத்துக் கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றனஇந்தத்தொழில்தான்அவர்களை வாழ வைக்கிறதுஇந்த கூட்டுக் களவாணிகளின் வலைப்பின்னல்தான் சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறதுஎந்தப் பொவழக்கிலாவது தங்களைப்போலீசார் சிக்கவைத்து விடுவார்களோ என்று நாளும் அச்சத்துடன்தான் சாமானிய மக்கள் வாழவேண்டியிருக்கிறது.

இந்தியச் சிறைச்சாலைகளில் கைதிகள் நிரம்பி வழிவதையும்அதனால் அடிப்படை வசதிகளின்றி நோய்வாய்ப்பட்டு கைதிகள் மரணமடைவதையும் பற்றி 1979-ல் முன்னாள்உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர்கன்னா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டுஅப்போதைய சட்ட அமைச்சரிடம் அறிக்கையும் பரிந்துரைகளும் அளிக்கப்பட்டனஆனாலும்அவை கிடப்பில் போடப்பட்டனபின்னர் 1996-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவிசாரணைக் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய 9 கட்டளைகளைப் பிறப்பித்தார்கள்.அதன்பின்னர்,

2005-ல் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிணை வழங்கும் பகுதியில் 436- என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டதுஇதன்படிகுற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ள ஒரு விசாரணைக் கைதிஅந்தக் குற்றத்திற்கான சிறைத் தண்டனையில் பாதிக் காலத்தை சிறையில் கழித்துவிட்டால்அவரைசொந்தப் பிணையில் விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டதுஇருப்பினும்இந்தச் சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்படாமல் நீதிபதிகளாலேயே புறக்கணிக்கப்பட்டது.இப்போது மீண்டும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்து பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாலேயேஇந்தச் சட்டப்பிரிவை நினைவுபடுத்தி விசாரணைக் கைதிகளை விடுதலைசெய்யும் உத்தரவை அவசரமாகப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இறுதியில்விசாரணைக் கைதிகளான நிரபராதிகள் குற்றவாளிகளாகிவிட்டார்கள்நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கும் அயோக்கியத்தனத்தைச் செய்யும் முதன்மைக்குற்றவாளிகளான நீதிபதிகள் கருணாமூர்த்திகளாகிவிட்டார்கள்இதுதான் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் நீதித்துறையின் புரட்சி!
குமார்.