அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 30 ஜூன், 2013

தம்மாம் மாநகர பொதுக்கூட்டம் - "தமிழகத்திலிருந்து நமது மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான முனைவர் சகோ. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்."

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தம்மாம் மாநகர பொதுக்கூட்டம்

தம்மாம் மாநகர பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(28-06-2013) அன்று மாநகர தலைவர் கமுதி சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் ரோஸ் உணவகத்தில்  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மதியம் 1.00 முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற்றது

தமுமுக செயலாளர் மதுக்கூர் சகோ.அஜ்மல்கான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மாநகர பொருளாளர் வந்தவாசி சகோ. பிலால் பீர்முகம்மது அவர்கள் வரவேற்புரை நடத்தினார்கள்.

தொடக்கமாக இளவல் சகோ. ஜக்கரியா பிலால் அவர்களின் துவா வுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது

அதனைத் தொடர்ந்து மண்டலத்திலிருந்து வருகை புரிந்த மண்டல துணைச் செயலாளர் சகோ. நிசார் அவர்கள் ஜூலை 6 ல் பேரணி ஏன் என்று விளக்கினார்கள். மேலும் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தூபம் போட்டவர்கள் நம் முன்னோர்கள் என வரலாற்று நிகழ்வினை எடுத்து விளக்கினார்கள்.அதன் வடிவமாக கிபி 1800 ஜூலை திங்கள் 9ம் நாள் வேலூரில் நடைபெற்ற மாவீரன் திப்பு சுல்தானின் இளைய மகள் திருமணத்தில் நம்து சிப்பாய்கள் ஆலோசனை நடத்திய பிறகு மறு நாள் அதாவது ஜூலை 10 ம் நாள் இந்திய வரலாற்றிலே முதன் முறையாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நமது சிப்பாய்கள் கிளர்ச்சியை தொடங்கினார்கள்..இந்த கிளர்ச்சியினால் நமது இஸ்லாமிய சிங்கங்கள் 200 மேற்பட்டோரை நாம் இழந்தோம். அதே ஜூலை திங்களில் நமது உரிமைக்கான போரட்டமும் நடைபெற இருக்கிறது என்று விளக்கினார்கள்.

அதனை தொடர்ந்து தமிழகத்திலிருந்து நமது மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான முனைவர் சகோ. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

நாம் ஏன் திமுகவை ஆதரித்தோம் என்பதை பற்றி விளக்கினார்கள்.இஸ்லாமியருக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள திருமண பதிவு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும்.நமது மக்களின் விகிதாச்சார அளவிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

அலிகார் பல்கலைகழகத்தின் கிளை தமிழகத்தில் தொடங்க நிலம் வழ்ங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அதிமுக விடம் முன்வைத்தோம். அதிமுக அமைச்சர்கள் திரு.பன்னீர் செல்வம் திரு நத்தம் விஸ்வநாதன் அவர்களுடன் மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடை பெற்றது .இந்த மூன்று கட்ட பேச்சு வார்த்தையிலும் அவர்கள் நமது கோரிக்கைக்கு  செவி சாய்க்கவும் இல்லை.

எந்த ஒரு உறுதி மொழியையும் நமக்கு கொடுக்கவில்லை. மேலும் அடுத்து வருகிற மக்களவை தொகுதிக்கான மமகவுடன் கூட்டணி பற்றி கேட்ட போது அன்றைய தேதியில் பார்த்து கொள்ளலாம் என்று மழுப்பலான பதிலை கூறியதால் நாம் திமுக வை ஆதரிப்பதற்கு அவர்களே வழிவகை கொடுத்தனர் என்று கூறினார்கள்..மேலும் திமுகவுடன் ,நமது சமுதாய நலன்களை நன்மை விளைவிக்கும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நாம் திருமதி கனிமொழியை ஆதரித்தோம் என்று கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் இருமேனி மவ்லவி அலாவுதீன் பாகவி அவர்கள் ஃபித்ரா எனும் கடமையை சரியாக செய்ய நாமே தமிழகத்தில் அனைத்து நகர கிராமங்களிலும் சரியான மக்களுக்கு வசூலிக்கப்பட்ட ஃபித்ராவை விநியோகம் செய்தோம். மேலும் நமது உரிமைக்கான ஜூலை 6 பேரணி பற்றி எடுத்து கூறினார்கள்.கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு கூடுதலாக ஃபித்ரா வசூலிக்க வேண்டும் .

வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாது என்ற தானத்திற்கு இந்த தமுமுகவின் ஃபித்ரா விநியோகமே பொருள் வடிவம் என்று கூறினார்கள்.ஆதலால் அர்ஷின் நிழலை நாம் எல்லாரும் பெற  வேண்டும் என்று கூறினார்கள்

மேலும் நமது இந்திய திருநாட்டில் சுதந்திரத்துக்காக முதன் முதலில் தூபம் போட்டவர்களும் மேலும் அனைத்தையும் இழந்தவர்களும் நம் முன்னோர்களென்றும் கூறினார்கள.கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா அவர்கள் சிறையில் இருக்கும் போது ஒருமுறை பசிக்கிறது உணவு தாருங்கள் என்று கேட்ட போது ஆங்கிலயே கவர்னர் , 


மன்னின் மகனின் தலையை வெட்டி கொண்டு வந்து பட்டு போர்த்திய தட்டில் கொண்டு வந்து கொடுத்தனர்.அச்சூழ்நிலையில் ஒரு  தகப்பனாக எவ்வாறு இருந்திருக்கும் என்று கூறும் போது கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் கண்கள் கலங்கின. இவ்வாறு நாம்தான் சுதந்திர போரட்டதின் தலைவர்களாகவும் முன்னோடிகளாகவும் இருந்தோம்.ஆனால் ஆரிய , பார்ப்பண சதியால் நமது வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்கள்.

அதன் பிறகு மண்டலப் பொருளாளர் அதிரை சகோ. நஸுரூத்தின் சாலிஹ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

அதனை தொடர்ந்து அனைவருக்கும் ஃபித்ரா படிவம் வழங்க பட்டது.

இறுதியாக செயற்குழு உறுப்பினர் நெல்லை-வீராணம் சகோ.காசிம் முஹம்மது அவர்கள் நன்றியுரையுடன் துவா ஓதி கூட்டம் இனிதே முடிந்தது

வந்திருந்த அனைவருக்கும் மதியஉணவு மற்றும் தண்ணிர் ஏற்பாடுகள்  மருத்துவஅணி செயலாளர் கள்ளக்குறிச்சி சகோ. ஜாகிர்பாட்ஷா அவர்களால் சிறப்பாக செய்யப்பட்டது.
 

தொகுப்பு:
சேகை மைந்தன்.



Inline image 1

சனி, 29 ஜூன், 2013

வேலூர் மாவட்ட முஸ்லிம்களுக்கு மத்தியில் உருதுவில் ஜூலை 6 பேரணி குறித்தான விளம்பர பேனர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வேலூர் மாவட்ட முஸ்லிம்களுக்கு மத்தியில் உருதுவில் ஜூலை 6 பேரணி குறித்தான விளம்பர பேனர்.


புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
 ·         அஸ்ஸலாமு அலைக்கும்...

Inline image 1

புனிதமும்கண்ணியமும்ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது.

ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும்,சந்தோஷமாகவும் உள்ளனர்.

ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும்வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குக்கான ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒருவசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

இறைவனை நினைவு கூர்தல்தர்மம் செய்தல்நோன்பு நோற்றல்ஐவேளை தொழுதல்இரவுநேர வணக்கங்கள்சொல்-செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியானநிம்மதியான சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழு பலனையும் அடையவேண்டும் என்பதில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

·         ரமலானை வரவேற்க தயாராவது எப்படி?

எதிர்வரும் ரமலானை இறையச்சத்தோடு அதன் பலனை அடைவதற்கும்இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்கும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவது சாலச் சிறந்தது.

·         ரமலான் வருகைக்கு ஆர்வமூட்டல்:

குடும்பத்தினர்நண்பர்கள்சக ஊழியர்கள் மத்தியில் ரமலானுக்கு மனதளவில் தயாராவது குறித்து அறிவுறுத்த வேண்டும். ரமலானின் சிறப்புகளைப் பற்றி அதிகமதிகம் விவாதிப்பதும்பேசுவதும் ரமலான் மீதுள்ள ஆர்வத்தை அதிகரிக்கும்.

·         குர்ஆன் ஓத ஆர்வமூட்டல்:

ரமலானுடைய மாதங்களில் குர்ஆனை மனனம் செய்வதற்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ளுதல். ஏனென்றால் ரமலான் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். ரமலானில் திருக்குர்ஆனை ஓதுவதுடன்திருக்குர்ஆன் வசனங்களைக் குறித்த சிந்தனையில் ஈடுபடுவது,அதனை நடைமுறைப்படுத்துவது ஆகியனவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

·         நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக் கூடியதாகும். அது ஏற்கப்படக் கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.
(அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூத்(ரலி) ஆதாரம்: முஸ்லிம்)
·         சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தல்
:
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு நோன்பின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை அதற்கு தகுந்தாற்போல் பயிற்றுவிக்க வேண்டும். ஸஹர் மற்றும் இஃப்தார் நேரங்களில் அவர்களையும் அமரச் செய்யலாம். நோன்பு நோற்றிருக்கும் போது அவர்களுக்கு முடியுமானவரை இருந்துவிட்டு இடையில் விடுவதற்கு அனுமதிக்கலாம். இதன்மூலம் நோன்பு நோற்பதற்கு படிப்படியாக தயாராவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கமுடியும். மேலும் இதன் மூலம் நோன்பை பற்றிய அறிவும்ஆற்றலும் அவர்களுக்கு கிடைக்கும்.

·         பெண்களை தயார்படுத்துதல்:

பெண்களுக்கு உணவுகள்சிற்றுண்டிகள் தயாரிக்கும் நேரத்தை சுருக்கி கொள்ள அறிவுரைகள் வழங்க வேண்டும். ரமலானின் முழுபலனையும் அடைவதற்கு முதன்மைப்படுத்த வேண்டும். ஏனென்றால்,வேலைப் பளுவின் காரணமாக பெரும்பாலும் ஃபர்லான அமல்களை கூட செய்ய முடியாமல் போய்விடும். மேலும் ஆண்கள் பெண்களுக்கு உதவினால் பெண்களின் வேலைப் பளுவை குறைக்கலாம்.

·         திக்ரின் பலனை அறிதல்:

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு(தியானம்) செய்யுங்கள். இன்னும் காலையிலும்மாலையிலும் அவனைத் துதிச் செய்யுங்கள்” (அல்-குர்ஆன்33:41-42)

மேலே சொன்ன குர்ஆன் வசனம் திக்ரின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது.

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானதாகும், (நன்மை-தீமை நெருக்கப்படும்) தராசில் கனமானதகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியதாகும்(அவை)

சுப்ஹானல்லாஹில் அலீம்சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’.(பொருள்:கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். அவனைப் போற்றி புகழ்ந்து துதி செய்கிறேன்.)” (ஆதாரம்:ஸஹீஹ் புஹாரி).

இது போன்று திக்ருகளை இப்போதே மனனம் செய்து கொண்டால் நல்லது.
பெருநாள் ஷாப்பிங்கை’ முன்கூட்டியே முடித்துக் கொள்ளுதல்:

பெருநாளின் போது புதிய ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்காக ஷாப்பிங்’ என்ற பெயரில் வீணாக நேரங்களை கழிக்க கூடாது. அதனால் ரமலானின் முழுபலனையும் அடைவதில் சிக்கல் ஏற்படக் கூடும். எனவே ஷாப்பிங்கை’ முன்கூட்டியே முடித்து கொண்டால் நல்லது.

வரக்கூடிய ரமலானில் அதிகமதிகம் நல்லமல்கள் செய்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக ஆக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்!

Thanks: Abdul Rahman https://www.facebook.com

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லீம்! என்று கூறியவனைவிட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?” [திருக்குர்ஆன் - 41:33]

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

வியாழன், 27 ஜூன், 2013

மும்பை தாக்குதல்; தொலைபேசி பதிவுகளில் திருத்தம். மும்பை காவல் துறையில் கறுப்பு ஆடுகளா.....? - வினிதா காம்தே!

மும்பை தாக்குதல்; தொலைபேசி பதிவுகளில் திருத்தம்.மும்பை :::::: காவல் துறையில் கறுப்பு ஆடுகளா.....?
- வினிதா காம்தே!

Inline image 1

மும்பை மாநகரில் 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 தேதி நடைபெற்ற தாக்குதலில் முக்கிய ஆதாரங்களில் ஒன்று தொலைபேசி அழைப்பு பதிவுகள்.

தாக்குதல் தொடங்கிய இடத்திற்கு அருகில் உள்ள வடக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பதியப்பட்ட அழைப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

அந்த நேரத்தில் நடைப்பெற்ற குற்றப்பிண்ணனியின் முடிச்சுகளை ஓரளவிற்கு அவிழ்த்தெறிய இந்த தொலைபேசி அழைப்புகள் உதவும்.


ஆனால் தகவல் பெறும் சட்டத்தின் படி கிடைத்த தகவலின் படி ஒரே அழைப்பிற்க்கு கிடைத்ததோ இருவேறு தொலைபேசி அழைப்பு பதிவு தகவல்கள்?!

அதே சமயம்,நீதிமன்றத்தில் காவல் துறை நீதிமன்றத்தில் சமர்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதோ இந்த இரண்டு தகவல்களும் அல்லாத மூன்றாவது ஒரு தகவல் ஆகும்.

தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் தீவிரவாதிகளுடன் போராடிய காவல்துறை அதிகாரிகள் தங்களூக்குள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களில் தான் இந்த குளறுபடிகளும் திருத்தல்களும் நடைபெற்று இருக்கின்றன.

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தேவிற்க்கே இந்த அணுபவம் கிடைத்திருக்கிறது என்பது அதிர்ச்சியை அளிக்க கூடிய மற்றொரு செய்தி!

தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் பதியப்பட்ட அனைத்து பதிவு குறிப்புகளும் போலியானதா..?என்ற சந்தேகம் எழ ஆரம்பித்து இருக்கிறது என்றும் கையால் திருத்தி எழுதப்பட்ட குறிப்புகளிலும்,குறிப்பிடப்பட்டிருக்கும் சமயங்களிலும் வித்தியாசம் உள்ள மூன்று தொலைபேசி அழைப்புகள் எவ்வாறு சேர்க்கப்பட்டு இருக்கிறது என்று அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்று வினிதா காம்தா கேள்வி உயர்த்தியிருக்கிறார்.

இது குறித்து மாநில முதன்மை தகவல் பெறும் சட்டத்தின் இயக்குனரை சந்தித்து சுட்டிகாட்டிய போது,சம்பவத்தை விசாரனை செய்து ஆதார குறிப்புகளில் தில்லுமுல்லுகள் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று முதன்மை தகவல் பெறும் சட்டத்தின் இயக்குனர் ரத்னாகர் கெய்காத்,துனை உள்துறை செயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இது குறித்து உத்திரவினையும் பிறப்பித்து இருக்கிறார். இதுகுறித்த செய்திகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும் வினிதா காம்தேவிற்கு இப்படி ஒரு ஆதார குறிப்புகள் கிடைத்திருப்பதன் பிண்ணனியில் ஏதேனும் சதி திட்டங்கள் இருக்கிறதா என்றும் அந்த உத்திரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அஜ்மல் கசாப் உள்படயுள்ளவர் துப்பாக்கி சூடு நடத்திய காமா மருத்துவமனையில் நடைப்பெற்ற சம்பவங்களையும் விமர்சிக்கிறது இந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹராஸ்டிரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த கர்கரே,கிழக்கு பகுதி துனை இயக்குனர் அசோக் காம்தே,துப்பாக்கி சுடுவதில் நிபுனரான விஜய் சலஸ்கர் ஆகியோர்களும் கொல்லப்பட்டதும் காமா மருத்துவமனை பகுதியில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*இவர்களது கொலையில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு உண்டு என்றும் காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் இவர்களின் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற விமர்சனமும் உண்டு.

மஹாராஸ்டிரா முன்னாள் ஐ.ஜி எஸ்.எம் முஸ்ரப் எழுதிய கர்கரேயை கொன்றவர்கள் யார்? என்ற நூலில் இது குறித்த விமர்சனங்களை உறுதி படுத்தும் விதமாக தற்போதைய இந்த புதிய செய்தியகள் வெளியாகியுள்ளன.

பதியப்பட்ட தொலைபேசி அழைப்புகளில் சமய வித்தியாசங்கள் சில நிமிட வித்தியாசங்கள் தான் என்றாலும்,சம்பவங்களின் முக்கியத்துவத்தை வைத்து பார்க்கும் போது அது மிகவும்
பிராதானப்பட்ட ஒன்று என்று வினிதா காம்தே தெரிவிக்கிறார்.

கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போதுமான உதவிகள் செய்து கொடுக்காதற்காகவா இத்தகைய குறிப்பு திருத்தல்கள் என்றும் வினிதா காம்தே கேள்வியை எழுப்பினார்.

தாக்குதல் நடைப்பெற்ற சமயத்தில் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகளுக்கு போதுமான உதவிகள் செய்து தரப்படவில்லை என்கிற விமர்சனமும் உண்டு.

தகவல் பெறும் சட்டத்தின் மூலம் கிடைத்த இரண்டு தொலைபேசி அழைப்பு பதிவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட குறிப்புகளையே காவல்துறை சமர்பித்த குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றும் வினிதா காம்தே குற்றம் சாட்டினார்.

தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்புகளில் திருத்தம் காண்பித்து மஹராஸ்டிரா அரசு ஏதோ ஒன்றை மறைத்து வைக்க முயலுகிறது என்கிற சந்தேகமும் எழு தொடங்கியுள்ளது.

தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்புகள் கேட்டு வினிதா காம்தே முதன் முதலில் சமர்பித்த கோரிக்கையை மும்பை காவல்துறை தள்ளுபடி செய்தது,அதன்பின் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிக்கை சமர்பித்த பிறகு வினிதா காம்தேவின் கோரிக்கையை மும்பை காவல் துறை ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு 2009 நவம்பர் ஐந்தாம் தேதி முதல் தொலைபேசி அழைப்பு பதிவு குறிப்பு வினிதா காம்தேவுக்கு கிடைத்தது.

காவல் துறை எண் -100 விற்கு அழைத்த அழைப்புகளின் விபரங்கள் கேட்டபோதே இதே அழைப்புகளில் முன்பு கிட்டிய ஆதார குறிப்புகளில் இருந்து மாறுபட்ட ஆதார குறிப்புகள் வினிதா காம்தேவிற்கு கிடைத்திருக்கிறது.

புதிய குறிப்புகளில் கையெழுத்து குறிப்புகளும்.அழைத்த நேர வித்தியாசங்களும் மாறுப்பட்டு இருக்கிறது.2010ஆம் ஆண்டு இரண்டாவது குறிப்புகளை வினிதா காம்தே பெற்றிருக்கிறார்.

ஏப்ரல் 24ஆம் தேதி நிதிமன்றத்தில் வழக்கின் வாதங்கள் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் இது குறித்த கேள்விகளுக்கு காவல்துறை துனை இயக்குனர் என்.டி.பவாருக்கு பதில் சொல்ல இயலவில்லை எனபதும் குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தியாகும்.

http://www.thejasnews.com/#6552
http://www.thehindu.com/news/national/other-states/rti-reveals-two-different-call-log-records-for-2611-a-third-one-in-the-charge-sheet/article4807535.ece
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Three different call records for 26/11, reveals RTI

On the night of November 26, 2008 in Mumbai, every minute mattered. Frantic phone calls were being made from the South Control room which was the closest to the place where the brutal terror attacks started. The record of the call logs would have had the answer to what really transpired on the ground. However, RTI applications have revealed that the Maharashtra has three different records for the same set of calls made to and from the police officers who were in confrontation with the terrorists.

These records, accessed by slain officer Ashok Kamte's wife Vinita Kamte, have raised suspicions about the authenticity of any of the versions while also questioning the government's reason for having three separate records, which differ in hand writing and timing.

Ms Kamte has approached the State Chief Information Commissioner (SCIC). In an order dated April 2nd,2013, SCIC Ratnakar Gaikwad has directed the Additional Home Secretary to investigate into the matter and punish the individuals responsible for the alleged tampering. The order also underlines the seriousness of the discrepancy while saying, “This matter is very sensitive and it is important to establish that the information given to Ms Kamte is not with any ulterior motive.”

The call logs refer to the Cama Hospital incident in which two terrorists including Ajmal kasab opened fire. It was here that ATS chief Hemant Karkare, Additional Commissioner for Eastern Region, Ashok Kamte and encounter specialist Vijay Salaskar were killed by the terrorists. Speaking to The Hindu, Ms Kamte stated that the timing mentioned in the records differ by a few minutes, but even that was extremely crucial considering the seriousness of the incident.

“Was it because the officers weren't provided with the help of man force that they needed?,” Ms Kamte asked. “I want the government to answer why they felt the need to make two different records of the same calls,” she states. The documents which are in possession of The Hindu, also reveal a distinct difference in handwriting.

While the timings and handwriting differ in the two sets of records accessed under the Right to Information Act (RTI) on two separate occasions, the charge sheet carries an entirely different version, Ms Kamte has alleged. However, the motive of the alleged tampering remains unclear, raising the question whether the Maharashtra government is trying to hide something.

Ms Kamte stated that her earlier requests to access the call log records were turned down by the Mumbai police. It was only after the charge sheet in the case was filed in February 2009 that her requests were heeded to. Eventually, she got the first call log records on November 5, 2009.

“Incidentally, when I asked for records of calls to the police number 100, another set of the same call log was given to me, this time in a different handwriting, and the contents and timings were different too,” Ms Kamte said. The second document was given to her on February 8, 2010.

For example, the first record given to Ms Kamte in November 2008 states that at 23.54, on November 26 a phone call was made to the South Centre stating that there seems to be chaos and people are saying that a man (possibly one of the terrorists) is seen coming. However, the second record given in February 2009 does not carry a record of the phone call at all. In the chargesheet, the same phone call is listed at 23.50 hours, Ms Kamte explained.

In a hearing conducted on April 24, Additional Police Commissioner (Administration) ND Pawar failed to answer as to why there is discrepancy in information in the three sets of the same call log records.

In the appeal to the SCIC, Ms Kamte has said, “Since both the call log records pertain to the same channel i.e South Channel, there ought not to have been any difference between the two copies and both ought to have been the identical copies of the original call log register. It is thus evident that the public information officers, knowingly gave incorrect and misleading information to me and it is in these circumstances, that I have lodged the present complaint.”

“This raises many questions about the manner of investigation of the entire case that the government needs to answer,” she stated.

http://www.thehindu.com/news/national/other-states/rti-reveals-two-different-call-log-records-for-2611-a-third-one-in-the-charge-sheet/article4807535.ece



Inline image 2


செவ்வாய், 25 ஜூன், 2013

மலேசியா நண்பன் நாளிதழ் மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி சிறப்பு பேட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


மலேசியா நண்பன் நாளிதழ் மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி 
சிறப்பு பேட்டி


மலேசியா தொடரும் நல்லெண்ண சந்திப்புகள்

மலேசியா சற்றுப் பயணம் செய்து வரும் மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி அந்நாட்டு இந்தியர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். மலேசியா இந்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், மலேசியா ராஜ்யசபா உறுப்பினருமான டக்தோ இப்ராஹிம் அவர்களையும், அரசியல் சார்பற்ற இந்திய முஸ்லிம்கள் அமைப்பான பேர்மின் அமைப்பின் தலைவர் டாக்டர் செய்யது இப்ராஹிம் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், பாதிரிகையாளர்கள், அறிவு ஜீவிகள், வணிகர்கள், தொழிலார்கள் என சகல தரப்பினரையும் சந்திந்து வருகிறார்.



மமக பொதுசெயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மமக அமைப்பு செயலாளர் மௌலா நாசர் - புருனேயில் சந்திப்புகள்


புருனேயில் சந்திப்புகள்



தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான புருனேயில் கடந்த 16/6/2013 அன்று மமக பொதுசெயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மமக அமைப்பு செயலாளர் மௌலா நாசர் ஆகியோர் தேநீர் விருந்துடன் கூடிய சந்திப்பு ஒன்றை நடத்தினர். அதில் பல்வேறு துறைகளை சேர்ந்த இந்தியர்கள் வருகை தந்து கலந்துரையாடினர். மக்கள் உரிமை வார இதழின் வாசகர் சந்திப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது


ஞாயிறு, 23 ஜூன், 2013

சவூதி: வார விடுமுறை நாள்கள் மாற்றம்! Royal Order: Weekend is on Saturday and Friday

சவூதி: வார விடுமுறை நாள்கள் மாற்றம்!


Royal Order: Weekend is on Saturday and Friday

சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன்று வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றின் மூலமாக

சவூதி வார விடுமுறை நாள்களை வியாழன் வெள்ளி என்பதிலிருந்து வெள்ளி, சனி என்று மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.





அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1). அமைச்சகங்கள், நிதியகங்கள், அரசு அலுவலகங்கள்,
சவூதி மைய வங்கி, பங்குச் சந்தை, ஆகியவை இனி ஞாயிறு முதல் வியாழன் வரை இயங்கும். வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் இனி வார விடுமுறையாகக் கருதப்படும். இந்த மாற்றம் இம்மாதம் 29 ஜூன் முதலே நடைமுறைப்படுத்தப்படும்.

2). பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாட சாலைகள் ஆகியவை இந்த விடுமுறை நாள் மாற்றத்தை அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து இணைந்திருங்கள் கொள்ளுமேடு இணையதளம்


http://www.arabnews.com/news/455923

Change in official working days takes effect this week

ARAB NEWS
Sunday 23 June 2013
Last Update 23 June 2013 5:15 pm
JEDDAH: Starting this week, the official working days in the Kingdom will be from Sunday to Thursday and the weekly holiday on Friday and Saturday, according to a royal order carried by the official Saudi Press Agency (SPA).

Custodian of the Two Holy Mosques King Abdullah issued the royal order based on public interest, said the SPA, citing the need to synchronize work days with international and regional timings to optimize productivity.

For ministries and all government bodies and institutions, all financial institutions as well the Saudi Arabian Monetary Agency, the Capital Market Authority and the Saudi Stock Exchange, the change will take effect on Saturday, 20/08/1434 in the Islamic calendar, corresponding to June 29, 2013, in the Gregorian calendar.
For universities, schools and all institutions of public education and higher education, the order will take effect from the beginning of the next academic year (1434/1435 AH).

Economists have long suggested the Friday and Saturday weekend to give the Kingdom's business people more time for economic transactions.

Under the current setup, the Kingdom's official working days are from Saturday to Wednesday, while that of other Gulf states are from Sunday to Thursday and the international working days are from Monday to Friday.

That effectively leaves local businesses only Mondays to Wednesdays to transact with their counterparts in the international arena.


Royal Order: Weekend is on Saturday and Friday
RIYADH - SPA:
2013-06-23 15:08:43

    The Custodian of the Two Holy Mosques King Abdullah bin Abdulaziz Al Saud issued today a royal order saying that the official working days will be from Sunday to Thursday and the weekly holiday on Friday and Saturday.

The royal order said that the decision was taken based on what the requirement of the public interest , and what imposes by the economic position of the Kingdom and its international and regional obligations and its orientation towards optimal investment of its status for its interests and the prosperity of its citizens.

The decision was also taken due to the crucial importance to achieve the largest homogeneity of weekly working days between agencies, governmental departments, national institutions, and their counterparts at the regional and international levels, and also due to the obvious interests and significant gains for the Kingdom, particularly in the economic aspects. It was also taken for putting an end to the negative effects and lost economic opportunities consistently associated with variation based on some working days between those agencies, institutions and national bodies and their international and regional counterparts.

The King ordered the following:

First:

The official working days in all ministries, government bodies and institutions, financial institutions, the Saudi Arabian Monetary Agency, the Capital Market Authority, the Saudi Stock Exchange shall be from Sunday to Thursday, and the weekly holiday on Friday and Saturday.

Second:

Item (First ) shall be executed as follows:

1- With respect to the ministries, governmental bodies and institutions, all financial institutions, the Saudi Arabian Monetary Agency, the Capital Market Authority and the Saudi Stock Exchange, the order shall be executed starting from Saturday, 20/08/1434 corresponding to 29/6/2013.

2- With respect to universities, schools and all institutions of public education and higher education, the order shall be executed from the beginning of the next academic year (1434/1435 AH).


திமுக ஜெயிக்கட்டுமே!

திமுக ஜெயிக்கட்டுமே!


''ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி செய்த உதவிக்கு இப்போது ஜெயலலிதா பதில் மரியாதை செய்யப்போகிறார்'' என்றபடியே உள்ளே வந்து அமர்ந்தார் கழுகார். கேள்விக் குறியாய் நமது புருவம் உயர்ந்தபோது, ''கொஞ்சம் காத்திரும்... சொல்கிறேன்'' என்றபடியே குறிப்புப் புத்தகத்தைப் புரட்டியபடி செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். 

''ராஜ்யசபா தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியும்புதிய தமிழகமும் தி.மு.க. வேட்பாளரான கனிமொழியைத்தான் ஆதரிக்கப்போகிறார்கள் என்று நான் சொல்லியிருந்தேன். அதுதான் அரங்கேறுகிறது!''
''அ.தி.மு.க. தரப்பும் மனிதநேய மக்கள் கட்சியிடம் பேசிக்கொண்டு இருந்ததையும் சொன்னீரேஅந்தப் பக்கம் ஏன் விடுபட்டுப் போனது?''

''தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு ஆதரவைக் கேட்டு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும் நத்தம் விஸ்வநாதனும் மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகத்துக்கு வந்து போனதை சொன்னேன். அப்படி வந்தவர்களிடம் 'முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். கிட்னி பாதிக்கப்பட்டு சிறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கைதி அபுதாஹீரை பரோலில் விடுவிக்க வேண்டும்திருமணப் பதிவுச் சட்டத்தைத் திருத்த வேண்டும்பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலைசெய்ய வேண்டும்’ எனக் கோரிக்கைகளை வைத்தார்கள். 'இதெல்லாம் சின்ன விஷயங்கள்தான்... செய்துவிடலாம்’ என்று சொல்லிப் போனார்கள் ஓ.பி-யும் நத்தமும். அதன் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. 'முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது சிரமமான விஷயம். ஆனால் கொடுக்கக் கூடாது என நினைக்கவில்லை. பொறுமையாக இருங்கள்.. அம்மா செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் விரைவில் நிறைவேறும்’ என்று சொன்னாராம்

ஓ.பன்னீர்செல்வம்கோரிக்கைகளை எழுதிக் கொடுக்கச் சொல்லவேஎழுதிக் கொடுத்திருக்கிறார் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா. முஸ்லிம்கள் கல்வி கற்பதற்காக அலிகார் பல்கலைக்கழகத்தின் கிளையைத் தமிழகத்தில் உருவாக்க முடிவுசெய்திருக்கிறார்கள். அதற்காக நிலம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து மனுவாக எழுதினார்கள். 'அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களின் நிலை என்ன?’ என்று பன்னீர்செல்வத்திடம் கேட்டிருக்கிறார்கள் இவர்கள். 'இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.பி.பரதன் சந்தித்தபோதுகூட இதே கேள்வியை அவரும் அம்மாவிடம் கேட்டார். அதைப்பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்என்று அம்மா அவருக்குப் பதில் சொல்லிவிட்டார். அதே நிலைதான் உங்களுக்கும்’ என்று பதில் சொன்னாராம் பன்னீர்செல்வம். இப்படிப் பிடிகொடுக்காமல் நடந்து இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது.''

''இறுதி முறிவுக்கு வாரும்!''

''கடந்த செவ்வாய்க்கிழமை மூன்றாவது முறையாக ஓ.பி-யும் நத்தமும் ஜவாஹிருல்லா குழுவைச் சந்தித்தார்கள். அப்போது 'நீங்கள் கொடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறும். எனவே ராஜ்யசபா தேர்தலில் ஆதரியுங்கள்’ என்றனர். 'முதலில் ஐந்து வேட்பாளர்களை அறிவித்தீர்கள். அதன் பிறகு டி.ராஜாவுக்கு விட்டுக்கொடுத்தீர்கள். உங்களுக்குப் போதுமான அளவு ஆதரவு இருந்தும் எங்களை ஏன் ஆதரிக்கச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார் ஜவாஹிருல்லா. 'இந்த அணி சேர்ந்து இருக்க அம்மா விரும்புகிறார். அதோடு தேர்தலில் கூடுதல் ஓட்டுகள் பெற வேண்டும் என்பதும் அம்மாவின் ஆசை. அதனால் ஆதரியுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்கள். 'ஏற்கெனவே இரண்டு முறை நடந்த சந்திப்புகளில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை’ என்ற வருத்தம் இந்தக் கட்சிக்கு இருந்துள்ளது. பன்னீர்செல்வத்திடம் பேசிய ஜவாஹிருல்லா,

2011 சட்டசபைத் தேர்தலில் உங்கள் கூட்டணிக்கு வந்த முதல் கட்சி நாங்கள்தான். 
தொகுதிப் பிரச்னையில் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தனியாகக் கூட்டம் போட்டபோது அந்தக் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. 
உள்ளாட்சித் தேர்தலிலும் கடைசி வரையில் காத்திருக்கவைத்துவிட்டு கதவை மூடிவிட்டீர்கள். 
கூட்டுறவுத் தேர்தலிலும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. 
வக்ஃபு போர்டு பிரச்னையில் நாங்கள் நீதிமன்றம் வரையில் போக வேண்டியிருந்தது’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.


பொறுமையாகக் கேட்ட பன்னீர்செல்வமும் நத்தம் விஸ்வநாதனும், 'உங்கள் கோரிக்கைகள் எல்லாம் மைனர் பிரச்னைகள். அதை உடனே சரிசெய்துவிடலாம். மற்ற விஷயங்களை நாளை பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லிக் கிளம்பிப் போனார்களாம். இதைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பு இவர்களை அமுக்குவதற்கு வந்தது!''   ''ம்... சொல்லும்!''
''முன்னாள் அமைச்சர்கள் பொன்முடிஎ.வ.வேலுமைதீன்கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தனர். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்குத் தனி சின்னத்துடன் இடம் ஒதுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை தி.மு.க-விடம் வைத்தார்கள். அதை தி.மு.க-வும் ஏற்றுக்கொண்ட பிறகுதான் கருணாநிதியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி. தமிழக அரசுக்கு ஆதரவாக இருந்த ஒரு கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு அ.தி.மு.க-வே அனுப்பிவைத்ததுதான் ஆச்சர்யம்.

ஜூனியர் விகடன்
  


  • 2011 சட்டசபைத் தேர்தலில் உங்கள் கூட்டணிக்கு வந்த முதல் கட்சி நாங்கள்தான்.
  •  தொகுதிப் பிரச்னையில் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தனியாகக் கூட்டம் போட்டபோது அந்தக் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.
  •  உள்ளாட்சித் தேர்தலிலும் கடைசி வரையில் காத்திருக்கவைத்துவிட்டு கதவை மூடிவிட்டீர்கள்.
  •  கூட்டுறவுத் தேர்தலிலும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை.
  •  வக்ஃபு போர்டு பிரச்னையில் நாங்கள் நீதிமன்றம் வரையில் போக வேண்டியிருந்தது’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். 
''முன்னாள் அமைச்சர்கள் பொன்முடிஎ.வ.வேலுமைதீன்கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தனர். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்குத் தனி சின்னத்துடன் இடம் ஒதுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை தி.மு.க-விடம் வைத்தார்கள். அதை தி.மு.க-வும் ஏற்றுக்கொண்ட பிறகுதான் கருணாநிதியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி. தமிழக அரசுக்கு ஆதரவாக இருந்த ஒரு கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு அ.தி.மு.க-வே அனுப்பிவைத்ததுதான் ஆச்சர்யம்.



















புதுவை ஹாஷிம் 
தமுமுக அல்-கோபர் 
சவுதி அரேபியா   



சனி, 22 ஜூன், 2013

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150-வது ஆண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150-வது ஆண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. 

இதில் சமுதாய தலைவர்களான 

தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ். MBA.,MPhil.,PhD.,MLA., 

மற்றும் தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி, ம.ம.க 

அமைப்புச்செயலாளர் மவ்லவி நாசர் உமரி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இதில் அனைத்து இயக்கத்தினரின் தலைவர்களும் பங்குகொண்டார்கள்.

தமுமுக வின் லால்பேட்டை நகர 
ஆம்புலனஸூம் தயார் நிலையில் மாநாட்டு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.. .. 






அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.!!!



ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும் 
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டுமாக....ஆமீன்!