அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 9 ஜனவரி, 2014

முஸாபர் நகர் மக்களுக்காக வாரி வாரி வழங்கிட தயாராவீர்! வீதி வீதியாகச் செல்வோம்... வீடு வீடாக ஏறி இறங்குவோம்... கண்ணீரில் மிதக்கும் நம் மக்களுக்கு, கைக்குட்டைகளாய் மாறி அவர்களின் கண்ணீரைத் துடைப்போம்!

பேரன்புக்குரிய சமுதாய உறவுகளே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், கொள்கை சிந்தனையோடும் சந்திக்கட்டுமாக மிக அவசரமான சூழலில் இக்கடிதம் வழியாக உங்களை சந்திக்கிறோம். 

கண்ணீரும் & கவலையுமாக முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் வாடி வதங்கும் நம் சொந்தங்களின் துயர் துடைக்க போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 


காவிகள் ஏற்படுத்திய அந்த கலவரத்தில் மாண்டோரின் எண்ணிக்கை இன்றுவரை உயர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கொடும் பாவிகள், ‘ஊரைத் துறந்து; உற்றாரை இழந்து; உறவுகளைப் பிரிந்து; அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களையும் கூட தேடி வந்து தாக்கும் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அகதி முகாம்களில் அபலைப் பெண்களாக அழுது கொண்டிருக்கும் அவர்களைக் கூட கடத்திச் சென்று கற்பழிக்கிறார்களாம். என்ன ஒரு கொடுமை? 


அங்கு ஒரு அரசு செயல்படுகிறதா? என்ற ஐயம் ஏற்படும் அளவிற்கு, உ.பி. மாநில அரசு நிர்வாகம் நிலைமையைக் கையாளத் தெரியாமல், மேலும் மேலும் அம்மக்களுக்கு துன்பங்களைத் தந்துகொண்டே இருக்கிறது. மதச்சார்பின்மை வேடம் பூண்டிருந்த குள்ளநரி முலாயம்சிங்கும், அவர் மகனும் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவும் மக்கள் முன்னால் அம்பலப்பட்டு போயுள்ளனர். ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல்’ என்ற அவர்களது கேடுகெட்ட அணுகுமுறையால் உ.பி. மாநில முஸ்லிம்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை. 


உ.பி.யின் மேற்குப் பகுதியில் ஒருகாலத்தில் ஜாட் இன மக்களும், முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்தனர். முன்னாள் பிரதமர் சரண்சிங் தலைமையில் விவசாயத் தொழிலாளர்களாய் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். இன்றும் அப்பகுதியில் செல்வாக்கோடு ‘லோக் தள்’ என்ற பெயரில் அரசியல் நடத்திவரும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான அஜீத் சிங்கும் அதேபோன்று நல்லெண்ணம் கொண்டவர்கள் தான். 


ஆனால் சமீபகாலமாக பாஜக விஷமிகள் அப்பகுதியில் செய்துவந்த நச்சுப்பிரச்சாரங்களால் இப்போதும் நாசம் ஏற்பட்டிருக்கிறது. கொலைகளையும், கலவரங்களையும் தயக்கமின்றி செய்திடும் அந்த பயங்கரவாதிகளுக்கு இப்போது மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்ற பொறுப்பில்லாமல்; வெட்கமில்லாமல் இக்கலவரத்தை முன்னின்று நடத்திய தன் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக ‘பாராட்டு விழா’ நடத்தியிருக்கிறது. ஒருவேளை இவர்கள் மத்தியில் ஆட்சியைப் பிடித்தால், இந்த நாடு என்னவாகும் என்பதை நினைத்தாலே குலை நடுங்குகிறது. 


உறவுகளே... வடஇந்தியா கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. வீடு வாசல்களில் வாழும் மக்களே சிரமப்படும் போது, அகதி முகாம்களில் வாழும் முஸாபர் நகர் மக்களின் நிலையோ பரிதாபமாக இருக்கிறது. நிவாரணமாய் கிடைத்த ஒரு போர்வையை எத்தனைப் பேர் போர்த்திக் கொள்ள முடியும்? வாய்ப்பூட்டி அழுவதைத் தவிர அவர்களுக்கு இப்போது வேறென்ன தெரியும்?
இக்கொடுமை காரணமாக அவர்களின் அருமை செல்வங்களான பச்சிளம் குழந்தைகள் வரிசையாக உயிரிழந்து வரும் செய்தி, நம் நெஞ்சங்களை தீப்பிடிக்க செய்கிறது. ஷார்பூர், புதானா, மலர்பூர் மற்றும் சங்கதி முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கதி, இனி வேறு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என இறைவனிடம் பிரார்த்திப்போம். 


வடஇந்தியாவில் மார்ச் இறுதி வரை குளிர்காலம் நீடிக்கும் என்று நினைக்கும்போது நம் கண்கள் குளமாகின்றன. உறவுகளே... அங்கே அகதி முகாம்களில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் ஊருக்குத் திரும்ப முடியாத சூழலை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் திட்டமிட்டே செய்து வருகிறார்கள். அவர்களின் சொத்துக்களுக்கு அவர்கள் இனி உரிமை கொண்டாடக்கூடாது என்றும், அரசு தரும் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கு சம்மதம் என உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறார்களாம். பாவம் ‘அவர்கள்’. கரும்பு வயல்களில் இனிக்க, இனிக்க வாழ்ந்தவர்கள். சர்க்கரை கிண்ணம் போல் வைத்திருந்த தங்கள் வயல்கள், திட்டமிட்டு பறிக்கப்படுவதை எதிர்க்கக்கூட வழியின்றி அழுகின்றார்கள். அதைவிடக் கொடுமை என்னவெனில், அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களை, வன இலாகாவுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் அவர்கள் மீதே பொய் வழக்குகளையும் போடுகிறார்களாம். இதற்குப் பெயர்தான் ‘வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதோ’.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த அமைச்சர் ஷிவ்பால் யாதவ் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, தங்கள் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கில், உண்மைக்கு மாறான ஒரு அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதில், கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும், ஆனால் முஸ்லிம்கள் தங்கள் ஊர்களுக்கும் & வீடுகளுக்கும் திரும்ப மறுப்பதாகவும் ஒரு அபாண்டத்தைக் கூறியுள்ளார்கள். கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும் இதுவரை எதையும் உருப்படியாக செய்யவில்லை.

இதையெல்லாம் அறியும்பொழுது நமது கண்கள் உறக்கத்தை வெறுக்கின்றன. நமது மனமோ உதைக்கப்பட்ட பந்துபோல குதிக்கிறது. உறவுகளே... இப்படி முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அகதி முகாம்களில் படும் துன்பங்களை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. உணவுக்கும் & நல்ல குடிநீருக்கும் வழியில்லை. தரமான கூடாரத்திற்கும் & சுகாதாரமான கழிப்பிடத்திற்கும் வசதியில்லை. மாற்று ஆடைகளுக்கும் & போர்வைகளுக்கும் வழியில்லை. எப்போது வீடு திரும்புவோம் என்பதற்கும் உத்தரவாதமில்லை. வழக்காடுவதற்கு நிதி இல்லை. தட்டிக்கேட்க நாதி இல்லை.
இப்படி எத்தனையோ ‘இல்லை’கள் அவர்களை நிலைகுலைய வைத்துள்ளன.


பல சமுதாய அமைப்புகள் ஆரம்பத்தில் செய்த நிதியுதவிகளும் அவர்களுக்குப் போதவில்லை. பல தொண்டு நிறுவனங்களின் நிவாரணங்களும் தற்போது இல்லை. 


இந்நிலையில் இந்த அவலங்களை நாடெங்கிலும் அம்பலப்படுத்துவதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) களமிறங்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடெங்கிலும் மறுவாழ்வு நிதியைத் திரட்டுகிறார்கள். நாடெங்கிலும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்புணர்வைக் கடைப்பிடித்து, பொதுக்கூட்டங்களையும் நடத்துகிறார்கள். நமது துயரத்தில் பங்கேற்கும் அவர்களைப் போன்ற நல்லுள்ளங்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
உறவுகளே... சரி! நாம் என்ன செய்யப் போகின்றோம்... என்பதை நாடே எதிர்பார்த்திருக்கிறது. கலவரங்கள் நடைபெற்று மாதங்கள் சில கடந்துள்ள நிலையில்; அவர்களுக்கு தேவைகள் பல அதிகரித்துள்ள சூழலில்; அள்ளி அள்ளி கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
கோவை மக்களுக்கு வாரிக்கொடுத்த சொந்தங்களே... 
குஜராத் மக்களுக்கு வாரிக்கொடுத்த சொந்தங்களே... வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கும் வாரிக்கொடுத்த சொந்தங்களே... இப்போது முஸாபர் நகர் மக்களுக்காக வாரி வாரி வழங்கிட தயாராவீர்! வீதி வீதியாகச் செல்வோம்... வீடு வீடாக ஏறி இறங்குவோம்... கண்ணீரில் மிதக்கும் நம் மக்களுக்கு, கைக்குட்டைகளாய் மாறி அவர்களின் கண்ணீரைத் துடைப்போம்! எங்களுக்கு கதியில்லையே... என அம்மக்களை கதறி அழவிடாது, உங்கள் சகோதர சகோதரி நாங்கள் இருக்கிறோம் என உரத்து முழங்கி தமிழகத்திலிருந்து நிதிகளை சேகரித்து முஸாபர் முகாம்களுக்குச் செல்ல தயாராகுவோம். ஜனவரி 15 அதற்கான இறுதி தேதி என்பதை குறித்துக் கொள்ளுங்கள். அதுவரை ஓய்வின்றி நிவாரண நிதி தேடி களப்பணி ஆற்றுவோம் இன்ஷாஅல்லாஹ்.
கலங்கிய கண்களுடன், 


உங்கள் ஊழியன் ஜே.எஸ்.ரிபாயீ, தமுமுக தலைவர்

கடல் கடந்தாலும் கொள்கை மாற தமுமுகவுக்கு விருது


அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும்

கடல் கடந்தாலும் கொள்கை மாற தமுமுகவுக்கு விருது
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும்விழா இறையருளால் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ரியாத் மண்டல தமுமுக விற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவிக்கபட்டது.

Inline image 1

கலைஇலக்கியம்கலாச்சாரம் மற்றும் சமூக நலப் பணிகளை செய்து வரும் ரியாத் தமிழ்ச் சங்கம்ரியாத் நகரில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் ரியாத் நகரில் சிறப்பாக சமூகப் பணிகள் செய்து வரும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை கவுரவிக்கும் விதமாக நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டன.
ரியாத் நகரில் சிறப்பாக சமூகப் பணியாற்றும் தமுமுக மற்றும் ரியாத்பெஃர்டினிடி பஃர்ம் ஆகிய அமைப்புகளுக்கு நினைவுக் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
எங்களை தேர்வு செய்த தேர்வுக்கு குழுவிற்கும்சிறப்பித்த ரியாத் தமிழ்ச் சங்க நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் இறைவா! எங்களது சமூகப் பணிகளை ஏற்றுஎங்களது பாவங்களை மன்னித்துஈருலகிலும் நிறைவான நற்கூலிகளை வழங்குவாயாக.
எம். ஹூஸைன்கனிமத்திய மண்டல தமுமுகரியாத்.




::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
--
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)

 

 
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info
 
 
 
  
 
 



-- 
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)

 

 
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info