அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 16 மே, 2014

தமுமுகவிற்கு நினைவு சான்றிதழ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமுமுகவிற்கு நினைவு சான்றிதழ்

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் தம்மாம் மாநகரில் தமிழ் சங்கத்தின் சார்பில் கடந்த 13-05-2014 அன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பளைப்பாளராக இயக்குனர் அமீர் மற்றும் கவிஞர் சினேகன் கலந்து கொண்டனர்.

தமிழ் சங்கத்தின் அழைப்பிற்கு இணங்க சமுதாயப் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகமும் கலந்து கொண்டது.

மார்க்க அழைப்புப் பணியை பிரதானமாகச் செய்துவரும் தமுமுக கவிஞர் சினேகனுக்கு இறைமறை வழங்கி மார்க்க அழைப்பு பணியை வளமைபோல் செய்தது.

மேலும் சவூதிஅரேபியாவின் நிதாகத் சட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பாக பணி செய்த இயக்கங்களுக்கு நினைவு சான்றிதழ் வழங்கப்பட்டது.


இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக பணியாற்றிய தமுமுகவிற்கு வழங்கப்பட்ட சான்றிதழை அதன் விவகாரத்துரைச் செயலாளர் சகோ.சீனிமுஹம்மது பெற்றுக்கொண்டார்.


இக்கூட்டத்தில் தமுமுக சார்பாக அல்கோபர் கிளைச் செயலாளர் சகோ.ஹாஜாஷிர் மற்றும் மக்கள் தொடர்பாளர் சகோ.ஹாசிம் சேட் கலந்து கொண்டனர்.



திங்கள், 5 மே, 2014

வாகனம் ஓட்டிகொண்டே மொபைலில் பேசுவது ஹராம் !!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரபரப்பான மார்க்க தீர்ப்பு

***********************
வாகனம் ஓட்டிகொண்டே 
மொபைலில் பேசுவது ஹராம் !!
******************************


இன்று மொபைல்போன்கள் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது 


சாலைகளில் நடந்து செல்வோரும் வாகனம் ஓட்டி செல்வோரும் சில சந்தர்பங்களில் மொபைலில் கவனத்தை பறி கொடுத்து விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகள் பரவலாக நடந்து வருவதை நாம் செய்திகளில் பார்கிறோம் 


குறிப்பாக வாகனம் ஓட்டகுடியவர்கள் வாகனத்தை ஓட்டி கொண்டிருக்கும் நேரத்தில் மொபைலில் சிந்தனைகளை சிதறவிடுவதால் பல் வேறு வாகன விபத்துக்கள் நடந்துள்ளன


மனித உயிருக்கும் உயிர் பாது காப்பிர்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகிறது


வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுவது மனித உயிருக்கு அச்சுறுத்தல் தரும் அம்சமாக இருப்பதால் அந்த செயலை செய்யவது மார்கத்தின் அடிப்படையில் ஹராமாகும் 


இவ்வாறு சவுதி அரபியாவை சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் கலப் பின் முத்தலக் தனது மார்க்க தீர்ப்பில் கூறியுள்ளார்