அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 27 செப்டம்பர், 2014

பர்மா முஸ்லிம்களின் கசாப்புகடைகாரன்’ இலங்கை வருகை: முஸ்லிம்களே அவமானம்!

அன்பு உறவுகளுக்கு..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

பர்மா முஸ்லிம்களின் கசாப்புகடைகாரன் 
இலங்கை வருகை: முஸ்லிம்களே அவமானம்!


கொழும்பு: பொதுபல சேனாவின் உயர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரவிருக்கும் மியன்மார், 969 அமைப்பின் சர்சைக்குரிய தலைவர் அசின் விராது தேரரின் வருகை பயத்தினை உண்டுபண்ணுவதாக முஸ்லிம் கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் கவுன்சில் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பர்மா முஸ்லிம்களின் கசாப்புகடைகாரன்என்று வர்ணிக்கப்படும், மியன்மாரின் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பின் தலைவரான விராது தேரர் தலைமையில் நுற்றுக்கணக்கான பர்மா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுபல சேனாவின் எதிர்வரும் 28ம் திகதி உயர் சங்க சம்மேளன கூட்டத்துக்கே இவருக்கு விஷேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச டைம் சஞ்சிகை இவர் பற்றி அட்டைப் படக் கட்டுரை எழுதியபோது இவர் ஒரு பர்மாவின் பௌத்த தீவிரவாதி என விமர்சனம் செய்திருக்கும் நிலையில், அப்படியான விராது தேரர் இலங்கை வரும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும், இலங்கையின் சமாதானம் மற்றும் அமைதிக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்றும் முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் உலக நாடுகள் இவரை குற்றவாளியாகவே இனங்கண்டுள்ளன.

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடந்த ஜூன் மாதம் நிகழ்த்திய ஆவேசமான உரையே அளுத்கமை வன்முறையை தோற்றுவித்தது போன்று, பௌத்த அடிப்டைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் இவர், இலங்கை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினால் அதன் மூலம் இங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு மியன்மாரில் இவரைச் சந்தித்த ஞானசார தேரர் இவருடன் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஆகவே வன்முறைகளை தவிர்க்கும் பொருட்டு இவரை நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என முஸ்லிம் சமூகம் சார்பாக தாம் ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாகமுஸ்லி கவுன்சில் எழுதிய அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவனது வருகையை அனைத்து முஸ்லிம்களும் எதிர்க்க வேண்டும். Thanks:-திருச்சி முத்தலிப்

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

{{Mobile phone}} - அலைபேசி அருமைகளும், அவலங்களும் - அஷ்ஷேக். முபாரக் மதனி

அன்பு உறவுகளுக்கு..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

{{Mobile phone}} - அலைபேசி அருமைகளும், அவலங்களும்
- அஷ்ஷேக். முபாரக் மதனி

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி லிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன்,பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27ஆகிறது.

1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது.
மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12 ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப் பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா(Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4ஜி மொபைல்சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மொபைல் போனும் ஒன்று என்றே சொல்லலாம். இருப்பினும் இவ்வருட் கொடையைப் பயன்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் அது மிகப்பெரும் ஆபத்தாக மாறிவருகிறது. இஸ்லாத்தை தமது வாழ்க்கை திட்டமாக ஏற்று அதனடிப்படையில் வாழ விரும்பும் மக்களுக்கு மொபைல் போன் உபயோகத்தை எவ்வாறு இஸ்லாமிய முறையில் அமைத்துக் கொள்வது என்பதைத் தெளிவு படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கீழே குறிப்பிடப்படுபவை மொபைல் போனைப் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

1. தொடர்பு கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்ளல்

பொதுவாக இஸ்லாம் பிறருக்கு தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இந்த வகையில் மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக் கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக் கூடிய நேரங்கள், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது மார்க்கம் அனுமதிக்காத விஷயமாகும்.
2. தொடர்பு கொள்பவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது.

தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று அவர்களை அழைத்த போது, யார்? என்று நபியவர்கள் வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று பதில் சொன்னார்கள். அப்போது வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள் அவர் (பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தாமல்) ‘நான்’ என்று கூறியதை கண்டித்தார்கள். (புகாரீ,முஸ்லிம்)

எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார்?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப்படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் ஆகும். மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!
3. கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அதிகமாக மொபைலை பயன்படுத்துவது.

கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்து பவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள் இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
4. பள்ளிவாசலினுள் நுழையும் போது மொபைல் போனை ஆஃப் செய்தல்

தொழுகையில் இறையச்சத்துடனும் உயிரோட்டத்துடனும் ஈடுவது மார்க்கம் வலியுறுத்தியுள்ள விஷயமாகும். எனவே இவ்வாறு பயபக்தியுடன் தொழுது கொண்டிருப்போரையும், அதை வைத்திருப்பவரையும் திசை திருப்பும் அம்சமாக மொபைல் மாறிவிடாமல் இருப்பதற்காக பள்ளிவாசலினுள் நுழையும் போதே அதை ஆஃப் செய்துவிட வேண்டும்.
5. ரிங் டோனாக இசைகளையும், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்களையும் பயன்படுத்துவது

எனது உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுபானம் மற்றும் இசைக்கருவிகளை ஹலாலாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)இசையும் இசைக்கருவிகளும் தடை செய்யப்பட்டவை என்பதில் நான்கு மத்ஹபுடைய இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலும் ஸவூதி அரேபியாவின் ஆய்வுக்குழுவும் இசை ஹராம் என தீர்ப்புவழங்கியுள்ளது. எனவே நமது தேவைகளை பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல்களில் இவ்வாறான இசைகளை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

ஒருவர் பயன்படுத்தும் ரிங்டோனை வைத்தே அவரது ஆளுமையை புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெரியவர்களும் சில வேளைகளில் மார்க்க ஈடுபாடு கொண்டோரும் இவ்வாறான இசைகளுக்கு அடிமைப்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

அவ்வாறே சிலர் அல்குர்ஆன் வசனங்கள்,துஆக்கள் மற்றும் அதான் எனும் பாங்கு போன்றவற்றை ரிங் டோனாகப் பயன்படுத்துகின்றனர். இது பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களிடம் வினவப்பட்ட போது, இவற்றை ரிங்டோனாகப் பயன்படுத்துவது அவற்றை இழிவுபடுத்துவதாகவே அமையும் என்று பதிலளித்தார். எனவே,இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
6. வாகனத்தை ஓட்டும் போது மொபைலை உபயோகிப்பது.

வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில்28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும், தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் இஸ்லாம் தடைசெய்திருக்கும் பாவங்களாகும். எனவே வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மார்க்க ரீதியில் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
7. எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) அனுப்பும் போது பேண வேண்டியவை

மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில் மார்க்கமும் ஒழுக்கமும் பேணப்படாமல் பயன்படுத்துவோர் நடந்து கொள்வது வேதனை தரும் அம்சமாகும். ஆபாசமான, விரசமான செய்திகளையும் உறுதிப்படுத் தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக் கூடிய செய்திகளை பரப்புவதும் இஸ்லாம் தடைசெய்துள்ள பாவங்களாகும்.
‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

‘ஈமான் கொண்டவர்கள் மத்தியில் ஆபாசம் பரவ வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு’ (24:19) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

எனவே எஸ்எம்எஸ் அனுப்பும் போது அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும். மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மறுமையில் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
8.மொபைல் போன்கள் மூலமாக முஸ்லிம்களின் குறைகளைத் தேடுவதும் பரப்புவதும் கூடாது

பொதுவாக மனிதர்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மானம் புனிதமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிமின் குறைகளைத் தேடுவதும் அவனை மானபங்கப்படுத்துவதும் மார்க்கத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
‘நாவினால் ஈமான் கொண்டு உள்ளத்தில் ஈமான் நுழையாமல் இருக்கும் மக்களே! முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள்! அவர்களை மானபங்கப்படுத்தாதீர்கள்!

மேலும் அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள்! யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளைத் தேடுகிறாரோ அவரது குறைகளை அல்லாஹ் தேடுவான். மேலும் அவர்களின் உள் வீட்டில் வைத்தேனும் அவர்களை இழிவுபடுத்திவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது,அபூதாவூத், திர்மிதீ)

மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது. மேற்கூறப்பட்ட ஹதீஸில் வந்துள்ள வழிகாட்டல்கள் அனைத்தையும் மறந்து சிலர் செயல்படுவது வேதனை அளிக்கக் கூடியதாகும்.

மொபைல் போன்களில் உள்ள வீடியோ, போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும் இஸ்லாம் தடைசெய்துள்ள மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரிசெய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.

9. பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு

பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை மார்க்கப்பற்றுடனும் ஒழுக்கத் துடனும் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால் அவர்கள் மறுமையில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள், உங்கள் பராமரிப்புப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஓர் ஆண் தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவன். அதுபற்றி அவன் விசாரிக்கப்படுவான்..” என்று நபி(ஸல்) கூறினார் கள். (புகாரி)

மொபைல் போன் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற?நிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.

10. மொபைல் போனால் வீண் விரயங்கள் தவிர்க்கப் படல் வேண்டும்.

“உண்ணுங்கள் பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்” என்றும் “வீண் விரயம் செய்யாதீர் நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் தோழர்கள் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது. மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம், நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது,எனவே, வீண் விரயம் செய்வது மொபைல் விஷயத்திலும் ஹராம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆக, அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை இஸ்லாமிய வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.
- அஷ்ஷேக். முபாரக் மதனி

(நன்றி: சமுதாய ஒற்றுமை மாதஇதழ்)



Pray promptly and guide others to pray also.

வியாழன், 25 செப்டம்பர், 2014

காஷ்மீர் வெள்ள நிவாரணநிதி தாரீர்! உங்கள் குர்பானித் தோல்களை காஷ்மீர் மக்களுக்காக தந்து உதவுங்கள்​!​

அன்பு உறவுகளுக்கு..! 

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இறைவனின் திருப்பெயரால்...
காஷ்மீர் வெள்ள நிவாரணநிதி தாரீர்! 

பேரழகும் இளங்குளிரும் கொண்டாடி மகிழும் அழகிய காஷ்மீர், இப்போது பெரு வெள்ளத்தில் மூழ்கி சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இமயத்தின் அடிவாரத்தில், பார்புகழ் போற்றும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நம் இந்திய சகோதர, சகோதரிகள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு உதவிட இந்தியா வெங்கும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண நிதியை சேகரிக்கிறார்கள்.

1999ல் ஒரிஸ்ஸா புயல் நிவாரண நிதி, 2001ல் குஜராத் பூகம்ப நிவாரண நிதி என தேசிய பேரழிவுகளின் போது, நாட்டு மக்களுக்காக நிவாரண நிதி சேகரித்த தமுமுக இப்போது, ஜம்மு&காஷ்மீர் மக்களின் துயர் துடைக்கவும் மக்களை தேடி வருகிறது.
மனிதநேயம் கொண்டோரே... உங்கள் உள்ளங்களை திறந்து உதவிடுவீர்...!! 

 
உங்கள் குர்பானித் தோல்களை காஷ்மீர் மக்களுக்காக தந்து உதவுங்கள்​!​

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வசூல் நடைபெற்று வருவது தாங்கள் தெரிந்ததே. அனைத்துத் தரப்பு மக்களும் தமுமுகவின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி தந்து வருகிறார்கள். துண்டுப் பிரசுரங்களாகவும்பேனர்கள் வாயிலாகவும் மக்களிடத்தில் பரப்புரை செய்து வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் ஜமாஅத்தார்களும் இந்த நிதி வசூலுக்கு ஒத்துழைப்ப தருகிறார்கள்.
இந்நிலையில், ‘ஈதுல் அள்ஹா’ என்று சொல்லக்கூடிய தியாகத் திருநாள்’ வருகிறது. அந்த தியாகத் திருநாளில் அறுக்கப்படும் பிராணிகளின் தோல்களை காஷ்மீர் மக்களுக்காகத் தரும்படி மக்களிடம் கோரிக்கை வைக்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
இதுவரைக்கும் நீங்கள் கொடுக்கும் தோல்களின் மூலமாக ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளீர்கள். இம்முறை மட்டும் பொருளிழந்துவீடிழந்துசொத்து சுகங்களை இழந்து அன்றாட உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கக்கூடிய பரிதாபத்துக்குரிய காஷ்மீர் மக்களுக்காகஉங்கள் குர்பானித் தோல்களைத் தந்து உதவுங்கள். உங்கள் பகுதியில் அறுக்கப்படும் பிராணிகளின் தோல்களையும் கேட்டுப் பெறுங்கள்.
உங்கள் தொகைகளை அனுப்பவேண்டிய வங்கி விபரம்
A/C No:034811011900313TamilNadu Muslim Munnetra Kazhagam TrustAndhra Bank,Chennai Main Branch,Rajaji Salai,Chennai - 600 001
தலைமையக முகவரி:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்7, வடமரைக்காயர் தெரு,மண்ணடி, சென்னை -1போன்: 044-25247824
- தமுமுக, தலைமையகம்



சனி, 20 செப்டம்பர், 2014

ஜித்தாவில் மாபெரும் இஸ்லாமிய அமர்வு {{{-பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்-}}}

அன்பு உறவுகளுக்கு..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

"ஜித்தாவில் மாபெரும் இஸ்லாமிய அமர்வு" 
{{-பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்-}}




தன் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றுள்ள கண்ணியத்திற்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேற்று ஜித்தாவில் நடைபெற்ற மாலை நேர இஸ்லாமிய அமர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் தெளிவான உரைகளையும், கருத்துக்களையும் தந்துள்ளார்கள்.




சவூதி ஜித்தாவில் நடைபெற உள்ள இனிய இஸ்லாமிய மாலை அமர்வு நிகழ்சிக்காக தமுமுக வின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்று இருக்கிறார்.

இந்நிலையில் ஜித்தாவில் தலைமை கான்சலராக பொறுப்பு வகிக்கும் பி.எஸ். முபாரக் அவர்களை பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் சந்தித்து ஹஜ் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

சந்திப்பின் போது சவூதி ஜித்தாவில் செயல்படும் அய்டா அமைப்பின் பொறுப்பாளர்கள் ராஃபியா மற்றும் அஜ்வா நெய்னா உள்ளிட்ட தமுமுக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.



திங்கள், 15 செப்டம்பர், 2014

மதவெறிக்கு எதிராக என்றென்றும் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள் விபின் சந்திரா!

அன்பு உறவுகளுக்கு..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

மதவெறிக்கு எதிராக என்றென்றும் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள் விபின் சந்திரா!




மும்பையில் நிகழ்ந்த விஸ்வ இந்து பரிஷத் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இப்படிப் பேசினார்: “ஹிந்துஸ்தானம் என்பது இந்து நாடுதான்… நமது தேசத்தின் அடையாளம் இந்துத்துவாதான். அது பிறவற்றை (மற்ற மதங் களை) தன்னுள் ஸ்வாஹா செய்துவிட்டது.”

இதற்கும் சில நாட்களுக்கு முன்னர்தான் “நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், இந்தியா ஒரு இந்து நாடாக உருமாறும்” என்று கோவா அமைச்சர் தீபக் தபாலிகர் பேசினார். அதற்கும் கொஞ்ச நாட்கள் முன்னர்தான் சுப்பிரமணியன் சுவாமியும் அசோக் சிங்காலும் இதேபோன்ற வகுப்புவாத வார்த்தை களை உதிர்த்திருந்தார்கள்.

இந்தத் தருணத்தில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று மறைந்த, நாட்டின் குறிப்பிடத் தகுந்த வரலாற்றா சிரியரும், நேஷனல் புக் டிரஸ்டின் (என்.பி.டி) முன்னாள் தலைவருமான விபின் சந்திரா மீண்டும் மீண்டும் விடுத்துவந்த எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது.

வகுப்புவாதத்தின் ஆணிவேர்

“வகுப்புவாதத்தின் ஆணிவேராக இருப்பது மதமோ அல்லது மத வேறுபாடுகளோ அல்ல. மதம் வகுப்புவாதத்தின் அடிநாதமும் அல்ல. மதத்தைப் பரப்புவதற்காகவும் வகுப்புவாதிகள் கலவரத்தைத் தூண்டவில்லை. மதம் வகுப்புவாதிகள் பயணிக்கும் ஒரு வாகனம் மட்டுமே. அது ஒரு கருத்தியல்.

வகுப்புவாதம் என்பது பல்வேறு மதப்பிரிவுகளுக்கு இடையே பகைமையையும் வெறுப்பையும் வன் முறையையும் தூண்டிக்கொண்டேயிருக்கும். அதற்கு ஓய்வோ உறக்கமோ இருப்பதில்லை. எனவே, வகுப்புவாதத்தை முறியடிப்பது என்பது தொய்வில்லாத கருத்தியல் போராட்டம்” என்று கூறும் விபின் சந்திரா, மதச்சார்பின்மை மற்றும் வகுப்புவாதம் ஆகிய சொல்லாடல்களை மிகத் துல்லியமாக வரையறுக்கிறார்.

மதச்சார்பின்மையின் இந்திய வரையறை

மதச்சார்பின்மை என்பது ஐரோப்பியப் பொருத்தப்பாட்டில் அரசியல், அரசு மற்றும் மதம் தொடர்பற்ற அனைத்து மட்டங்களிலும் மதத்தை நீக்குவது எனப் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், பல மதங்களைச் சார்ந்த மக்கள், பல நூற்றாண்டுகளாக இணக்கமாக வாழும் இந்தியாவில் இது தனித்தன்மை பெறுகிறது என்கிறார் விபின் சந்திரா.

நேரு குறிப்பிடுவதைப் போல “மதச்சார்பின்மை பின்பற்றப்படும் ஒரு நாட்டில், அங்கு மதம் கீழ்மைப் படுத்தப்படும் என்ற மிகச் சாதாரண அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டாம். ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றாதிருக்கும் சுதந்திரம் உட்பட, அனைத்து மதங்களுக்கான சுதந்திரத்தையும் சுய விருப்பத்தையும் அது அர்த்தப்படுத்துகிறது” என்கிறார் விபின் சந்திரா. ஏனென்றால், காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்திய மக்களை ஒன்றுதிரட்டுவதில் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே மதச்சார்பின்மை என்ற கருத்தியல் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல, வகுப்புவாதம் என்ற கருத்தியலுக்கும் ஆழமாக அர்த்தம் கொடுக்கிறார். “இந்தியாவில் பல மதங்கள் ஒன்றையொன்று எதிர்த்தே வாழ்ந்துள்ளன. ஒன்றையொன்று அழிப்பதே அதன் இயக்கம். எனவே அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் போன்ற மதம் சாராத காரணங்களாக இருந்தாலும் மத அடையாள அடிப்படையில் மட்டுமே மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்ற நம்பிக்கையிலிருந்து வகுப்புவாதம் தொடங்குகிறது” என்கிறார்.

இன்று அவர் மறைந்துவிட்டபோதும் மீண்டும் வலதுசாரிக் கருத்தியல் வலுவடைந்துவரும் இன்றைய சூழலில், அதைக் கருத்தியலாக எதிர் கொள்வதற்கு அவரது வழிகாட்டுதல்கள் என்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்குப் பயனுள்ளதாக அமையும்.

- அப்பணசாமி, எழுத்தாளர், பத்திரிகையாளர், தொடர்புக்கு: jeon08@gmail.com​​

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

வாழ்த்துக்கள்! ::::::தமுமுக தலைவரின் வாழ்த்து செய்தி:::::

வாழ்த்துக்கள்! :::::: தமுமுக தலைவரின் வாழ்த்து செய்தி:::::


பெறுநர்
தமுமுக நிர்வாகிகள்
சவூதி அல் கோபர் மண்டலம்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நலம். நலம் பல விளைக!

சவூதி அல் கோபர் வாழ் தமுமுக சகோதரர்களை இக்கடிதம் மூலம் தொடர்பு கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.

சமீப காலங்களாக உங்களது மண்டலம் சார்பான மார்க்கப் பணிகளும், சமுதாயப் பணிகளும், அவற்றிற்காக மக்களைத் திரட்டும் உங்களது வேகமும் வியக்க வைக்கிறது.

குடும்பத்திற்காக, குடும்பத்தைப் பிரிந்து சென்று வாழும் நீங்கள், சொந்த மண்ணில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, அதற்காக ஆக்கப்பூர்வமாக உழைப்பது, எங்களை உற்சாகப்படுத்துகிறது. நாங்கள் உங்களது பொறுப்பாளர்களாக அதிக அக்கறையுடன் இங்கு செயல்படவும் எங்களைத் தூண்டுகிறது.

வல்ல இறைவன் உங்களது செயல்களை அங்கீகரித்து உங்களது நோக்கங்களை வெற்றியடையச் செய்வானாக! சமுதாய நலம் நாடும் நற்பணிகளில் நம்மை ஒருங்கிணைத்து வீரியமுடன் செயல்படச் செய்வானாக!

ஒவ்வொரு கழக உறுப்பினருக்கும், நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும், துஆக்களையும் தெரிவிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வரும் தியாகத் திருநாள் (ஈதுல் அள்ஹா) மகிழ்வுடன் அமையவும், தியாகத்தின் அடையாளமான குர்பானியை அனைத்து குடும்பத்தினரும் கொடுக்கவும் இப்போதிருந்தே முயல வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

(ஜே.எஸ்.ரிபாயீ)

Js Rifayee

South Indian group organizes blood donation campaign for Haj pilgrims ((ARAB NEWS))

அன்பு உறவுகளுக்கு..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

South Indian group organizes blood donation campaign for Haj pilgrims
 ((ARAB NEWS))



South Indian group organizes blood donation campaign for Haj pilgrims ((ARAB NEWS))

Tamil Muslim Munnetra Kazhagam (TMMK), a voluntary social services organization of South Indians, in collaboration with King Fahd Hospital, Dammam, organized a blood donation camp for Haj pilgrims in Akrabiya, Alkhobar, on Friday.

Ahmed Imthias, TMMK, member said: “Haj pilgrims will be the main beneficiaries of the blood donation camp organized in collaboration with King Fahd hospital of the Dammam University.”

The camp was sixth in the series of the campaign for blood donation, he added.
He said that a huge number of donors participated enthusiastically in the noble act of donating blood to save human lives during the once in a lifetime pilgrimage.

“The day-long camp attracted 180 people who donated 120 units of blood to the King Fahd hospital,” he added.

When asked if the group plans to continue the blood donation campaign in other parts of the Kingdom, Imthias said: “We joined King Fahd Hospital mainly to stock up for the needy patients during the Haj this year, but we wish to continue in the larger interest of the public as blood is urgently needed on many occasions.”

Commenting on the process, he observed that donors have to fulfill certain criteria before they can donate blood like sharing their medical history.

He further said that the collected blood is tested for different types of diseases as a precautionary measure and then stored in the blood bank for future use.   
He said that the TMMK has received acknowledgements from governments and various NGOs in India and Gulf countries for their involvement in humanitarian activities and working for the downtrodden communities.

சனி, 13 செப்டம்பர், 2014

சவூதியில் ஹாஜிகளுக்காக தமுமுக நடத்திய “மாபெரும் இரத்ததான முகாம்”. அல் கோபர் தமிழ் கூறும் சமுதாயம் இதுவரை காணாத மக்கள்" கூட்டம் - முகாம் சிறப்பாக நடக்க உதவிய வல்ல ரஹ்மானுக்கே எல்லாப் புகழும்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்ரும் நிலவட்டுமாக !

சவூதியில் ஹாஜிகளுக்காக தமுமுக நடத்திய “மாபெரும் இரத்ததான முகாம்”. அல்கோபர் தமிழ் கூறும் சமுதாயம் இதுவரை காணாத மக்கள்" கூட்டம் - ஏராளமானோர்கலந்து கொண்டு குருதி கொடையளித்தனர். இந்த முகாம் சிறப்பாக நடக்க உதவியவல்ல ரஹ்மானுக்கே எல்லாப் புகழும்.

​கடல் கடந்து தன் குடும்பத்திற்காக பொருள் ஈட்ட வந்து இருந்தாலும், கிடைக்கும்சொற்ப ஓய்வு நேரத்திலும் அயராது சமுதாயப் பணிகளை தமுமுக செய்து வருகிறது.அதன் முன் மாதிரியாக சவூதிஆரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் தமுமுக கிளைவருடந்தோறும் ஹாஜிகளுக்காக இரத்ததான முகாம்களை நடத்திவருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று 12-09 2014 கிங்ஃபகத் மருத்துவமனையுடன் இணைந்துஅல்கோபர் தமுமுக ஹாஜிகளுக்காக மாபெரும் இரத்த தான முகாமை சிறப்பாகநடத்தியது.பகல் சுமார் 12:30 "மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முகாம் மாலை 6 மணிவரைவிறுவிறுப்பாக நடைபெற்றது.இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு குருதி கொடையளித்தனர் 

"அல்கோபர்கிளையின் பணியில் கவரப்பட்ட மாற்று மத சகோதரர்கள் மற்றும் அரபு நாட்டைச்சார்ந்தவர்கள் தானாக முன்வந்து இரத்ததானம் செய்தது அனைவரையும்அகமகிழச்செய்தது.


Dear Brothers,

السلام عليكم ورحمة الله وبركاته ,,,,, وبعد

AL HAMDU LILLAH WITH THE GRACE OF ALLAHU JALLA JALAL, YESTERDAY'S OUR "TMMK & MMK" BLOOD DONATION CAMP PERFECTLY FINISHED AT 5.45 PM WITH GREAT SUCCESS.

WE WOULD LIKE TO "THANKS" ALL OUR BROTHERS WHOEVER PARTICIPATED IN THIS CAMP AND DEVOTED THEMSELVES FOR THIS SUCCESS.ALLAH SUBHANA WILL REWARD YOUR GOOD DEEDS AND EFFORTS.

"JAZZAKALLAH KHAIR" & ALLAHU BARIK FI KUM.