அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்-கோபர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இரத்ததான விருது.
தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காவும், மீனவ சமுதாயத்திற்காகவும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் தாயான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மார்கப் பணி, மற்றும் சமுதாய பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, 24 மணிநேர ஆம்புலன்ஸ் மற்றும் இரத்தான சேவை போன்றவற்றை தொடர்ந்து செய்துவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு நிகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமே என்றால் அது மிகையல்ல.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தாயகம் கடந்து தன் சமுதாயச் சேவையை நிலைநாட்டி வருகிறது. சவூதிஅரேபியா கிழக்கு மாகாணம் அல்-கோபர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த வருட ஹஜ் மாதத்தின் போது ஹஜ் பயனிகளுக்காக இரு இரத்ததான முகாம்களை நடத்தியது. மேலும் அவ்வப்போது அவசரத் தேவைகளுக்காக தம்மாம் மற்றும் அல்-கோபர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் இரத்ததானம் செய்து உயிர் காக்க உதவி வருகிறது. இதனை பாராட்டும் முகமாக அல்-கோபர் கிங் ஃபஹத் மருத்துவமனை தலைமை நிர்வாகிகள் கடந்த 14-6-2011 அன்று நடந்த மருத்துவமனை விழாவில் அல்-கோபர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
முகவை சீனிமுஹம்மது
s.seeni Mohamed