பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
பிற மதத்தவர்களைவிட முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழ்மையானவர்கள்: கணக்கெடுப்பு
டெல்லி: இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களில் முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக இருப்பதாக அரசு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அரசு கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் யார், யார் ஏழ்மையில் கஷ்டப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
கணக்கெடுப்பு முடிவு வருமாறு,
முஸ்லிம்கள்
இருப்பதிலேயே முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக உள்ளார்களாம். அவர்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.32.66 ஆகும்.
சீக்கியர்கள்
சீக்கியர்கள் பிற மதத்தவரை விட நன்றாக வாழ்கிறார்களாம். அவர்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.55.30 ஆகும்.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள்
இந்துக்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.37.50 ஆகவும், கிறிஸ்தவர்களின் செலவு ரூ. 51.43 ஆகவும் இருந்துள்ளது.
மாதச் செலவு
2009-2010ல் சீக்கியர்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 659, அதே சமயம் முஸ்லிம்களின் செலவு ரூ.980 ஆக இருந்துள்ளது.
கிராமங்கள்
கிராமப்புறங்களில் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.833, இந்துக்களுக்கு ரூ.888, கிறிஸ்தவர்களுக்கு ரூ.1, 296 மற்றும் சீக்கியர்களுக்கு ரூ.1, 498 ஆகும்.
நகர்ப்புறம்
நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 272,இந்துக்களுக்கு ரூ.1, 797, கிறிஸ்தவர்களுக்கு ரூ.2,053 மற்றும் சீக்கியர்களுக்கு ரூ.2,180 ஆகும்.