அஸ்ஸலாமு அலைக்கும்
"அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அல்கோபர் தமுமுக"
{{{இறைவனின் மாபெரும் கிருபையால் அல்கோபர் தமுமுகவின் ஹாஜிகளுக்கான மாபெரும் இரத்ததான முகாம்....}}}
முகாம் சிறப்பாக நடக்க பிரார்த்திப்பதோடு முகாமில் கலந்து
குருதி கொடைகொடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அல்கோபர் தமுமுக
போலி சித்தாந்தத்தைப் பரப்பி அதன் மூலம் வருமானம் ஈட்டிவருபவர்களுக்கு மத்தியில் பல போராட்டக்களங்களில் இரத்தம் சிந்தி மேலும் இரத்தக் கொடைகொடுத்து ஒரு கட்டத்தில் உயிர் தியாகம் செய்து மக்கள் நலப்பணியில் இறைப்பொருத்தத்தை மட்டும் எதிர் நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே மாபெரும் பேரியக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்றால் அது மிகையல்ல.
தமுமுகவின் மயில் கல்லாக விளங்கும் சவூதிஅரேபியா கிழக்கு மாகாண தமுமுகவின் உதயமாக விளங்கும் அல்கோபர் தமுமுக கிளை வருடாந்தோறும் ஹாஜிகளுக்காக இரத்ததானம் செய்து வருகிறது. இந்த சேவையை பாராட்டி சவூதிஅரேபியா அரசின் கிங் ஃபஹத் மருத்துவமனை பலமுறை அல்கோபர் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஷாஅல்லா அதன் தொடர்ச்சியாக 2014ஆம் ஆண்டு ஹஜ் பயணிகளுக்காக வரும் 12-9-2014 அன்று கிங் ஃபஹத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்த உள்ளது.
இந்த முகாம் சிறப்பாக நடக்க பிரார்த்திப்பதோடு முகாமில் கலந்து குருதி கொடைகொடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அல்கோபர் தமுமுக
கொஞ்சம் கொடுங்கள் பல நெஞ்சங் கள்
அன்புடன் வாழ்த்தும்.
** ** ** ** ** **
"எவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கின் றாரோ அவர் மானிடர்
யாவரையுமே வாழ வைத்வைத்தவர் போ லாவர் -
அல்-குர்ஆன்:5:32
** ** ** ** ** **