அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
"மாணவர் இந்தியா" வைச் சேர்ந்தவருக்கு சமூக சேவகர் விருது!
சென்னை புதுக்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய "மாணவர் இந்தியா"வைச் சேர்ந்த மாணவர் அதிரை ஷேக் அப்துல் காதருக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களில் இவருக்கு மட்டுமே மாநில அளவிலான இந்த விருது கிடைத்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. வி. ராமசுப்ரமணியன் வழங்கினார்.
ஜெனிவா மாநாட்டில் 64வது ஆண்டு விழாவையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற எஸ். ஷேக் அப்துல் காதர் மமக தலைமையகம் வந்து பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
- Thamimun Ansari
- Thamimun Ansari
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!