நியுபெத்லேகம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும், மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்
24.10.2013 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை: அஸ்லம் பாஷா-
வேலூர் மாவட்டம், ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா? மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலூர் மாவட்டம்,ஆம்பூர் நகரம், பெத்லகேம் பகுதியில் இரயில்வே மேம்பாலம் வைப்பு நிதி அடிப்படையில் மாநில அரசின் நிதியின்கீழ் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,பெத்லகேம் பகுதியில் ஏறத்தாழ40000 மக்கள் வசிக்கின்றனர்கள். ஆம்பூர் மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வசித்து வருகின்றார்கள், அந்த நகரத்திற்கான முக்கிய கல்லுôரியும் அந்தப் பகுதியில்தான் இருக்கின்றது: மருத்துவமனையும் அந்தப் பகுதியில்தான் இருக்கின்றது. மின்சார அலுவலகம் அந்தப் பகுதியில்தான் இருக் கின்றது. அதேபோல், ஆம்பூர் நகருக்கு குடிநீர் ஆதாராமாக இருக்கக்கூடிய தடுப்பணையும் அந்தப் பகுதியிலே இருக்கின்றது. மழைக்காலங்களில் அந்தப் பகுதிக்கு செல்வதற்கு வழி கிடையாது ஆகவேதான்,இதுகுறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய கனிவான கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது,பெத்லேகம் பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்ற நல்ல செய்திகளையும் அறிவிப்பு செய்தார்கள். அதற்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு சென்று இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நதி ஒதுக்கீடு பெற்றுத் தந்து அறிவிப்பு செய்த மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுமுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்தப் பகுதியில் செல்வதற்கு வழி இல்லை என்கின்ற காரணத்தினால் வெகு விரைவில் அந்தப் பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டித்தரப்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் ஒரு கோரிக்கையாக மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களிடத்தில் வைக்கின்றேன். எனது கோரிக்கையினை விரைவில் செயல்படுத்தித் தருவார்களா?என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலுôர் மாவட்டம்,ஆம்பூர் தொகுதி, ஆம்பூர் நகரத்தின் முக்கியப் பகுதியான பெத்லேகம் ரெட்டித் தோப்பு கே.எம். நகர் ஆசனம் பட்டு பகுதியிலே செல்வதற்கு இரயில்வே கடவு இல்லாத காரணத்தினால்,இவ்விடத்தில், இரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை பணப் பயன்கள் அடிப்படையில் மேற்கொள்ள இயலாது என்று இரயில்வே துறை தெரிவித்துவிட்டதால்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேலான கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றோம். மேலும் அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான அவசியம் கருதி,
மாண்புமிகு முதல்வர் அவர்களின் அனுமதியிமனைப் பெற்று, வைப்பு நிதி அடிப்படையில் மாநில அரசின் நிதியின் கீழ் 30 கோடி ரூபாய் செலவில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்