சவுதி கிழக்கு மண்டல நிர்வாகிகள் தேர்வு
கடந்த 09.03.12 வெள்ளியன்று, சவுதி கிழக்கு மண்டல நிர்வாகிகள் தேர்வும், பொதுக்கூட்டமும் ஜுபைல் மாநரிலுள்ள தனியார் வளாகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் முஸ்லிம்களின் பேராதரவு பெற்ற மக்கள் பேரியக்கமான
த. மு. மு. க சவுதி அரேபிய மண்ணிலும் 1996 முதலே செயல்பட்டு வருவது அனவரும் அறிந்ததே.
தமிழகத்தைப்போலவே இங்கும் அமைப்பு நிர்ணய சட்டத்தைப் பின்பற்றி கிளைத் தேர்தல்களும், அதனைத் தொடர்ந்து மண்டல நிர்வாகிகள் தேர்வும் நடைபெறுவது வழக்கம்.
அதனடிப்படையில், கடந்த 05.03.12 அன்று, இறுதியாக ஜுபைல் கிளைக் கழகத் தேர்தல் முடிவடைந்த பின்னர், 09.03.12 அன்று மண்டல செயற்குழு கூடி மண்டல நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறே, வெள்ளிக்காலை சுமார் 100 பேர் கலந்து கொண்ட மண்டல செயற்குழு துவங்கியது. ஜுபைல் த.மு.மு.க முன்னாள் தலைவர், மவ்லவி ஷெரீப் பாகவி வரவேற்புரை நிகழ்த்தி செயற்குழுவைத் துவக்கி வைத்தார்.
துவக்க உரையாற்றிய மாநில ம.ம.க துணைத்தலைவர், பொறியாளர் ஷபியுல்லாஹ் கான், இவ்வமர்வின் நோக்கம் குறித்தும், நடப்பு கிழக்கு மண்டல்த் தலைவராக தானும், பிற நிர்வாகிகளும் செயற்பட்டவற்றைக் குறித்தும் சுருக்கமாக எடுத்துரைததோடு, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்குமாறு அவையினரைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் நடப்பு நிர்வாக குழுவினரின் சார்பாக அனைவரது இராஜினாமாவையும்
சமர்ப்பித்து, குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றிற்கு தலைவர் எனும் அடிப்படையில் தான் மட்டுமே தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், நிறைகளை அனைவருக்கும் வல்ல அல்லாஹ்விற்கும் பொதுவாக்குவதாகவும் தழுதழுத்த குரலில் குறிப்பிட்டார்.
நடப்பு நிர்வகிகளின் பதவி விலகல்கள், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த, சவுதி மத்திய மண்டல பொதுச் செயலாளர் சகோ. ஹுஸைன் கனி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.
அதனைத் தொடர்ந்து, மண்டல நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டு மண்டலத் தலைவர், மண்டல த.மு.மு.க பொதுச் செயலாளர், மண்டல ம.ம.க பொதுச் செயலாளர், மற்றும் மண்டலப் பொருளாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.( விபரம் கீழே )
புதிய நிர்வாகிகளின் ஏற்புரையைத் தொடர்ந்து ஜும் ஆ மற்றும் மதிய உணவுக்கான இடைவேளை அறிவிக்கப்பட்டது.
நீண்ட காலத்திற்குப்பின் சவுதி திரும்பியுள்ள மவ்லவி அலாவுதீன் பாகவி அவர்களின் உணர்ச்சிமிகு குத்பாவைத் தொடர்ந்து சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
உணவு இடைவேளையின் போது புதிய நிர்வாகிகள் கூடி துணைப் பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை தெரிவு செய்தனர்.
அதன் பின்னர் தொடர்ந்த செயற்குழுவை புதிய நிர்வாகிகள் நடத்தினர்.
அதில், நமது மண்டலப் பொறுப்பிலிருந்து சமீபத்தில் மாநில ம.ம.க துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர். ஷபியுல்லாஹ் அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கப்பட்டது.
அல் கோபார் கிளையின் சார்பாக சகோ. ஹாஜா பஷீர், தம்மாம் கிளை சார்பாக சகோ. அபுல் கலாம், ஜுபைல் கிளை சார்பாக சகோ. நிஸார், ரஹீமா கிளை சார்பாக சகோ. அபுபக்கர், ஸிகாத் கிளை சார்பாக சகோ.ஷாஹுல் ஹமீத், அப்கெய்க் கிளை சார்பாக சகோ.அப்துல் மூமின், சவுதி மத்திய மண்டலம் சார்பாக சகோ.நூர் முஹம்மத் மற்றும் கிழக்கு மண்டல புதிய நிர்வாகிகள் சார்பாக கிழக்கு மண்டல துணைச் செயலாளர் ஷர்புதீன் பாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில ம.ம.க துணைத்தலைவர் ஏற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து த. மு. மு.க மூத்த தலைவர், பேராசிரியர். முனைவர். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கியதோடு, கிழக்கு மண்டலத்தின் செயல்பாடுகள் இன்னும் விரிவாகவும், வீரியமாகவும் விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, த. மு.மு.க தலைவருக்கு பிணை கிடைத்த விபரத்தை மாநில ம.ம.க துணைத்தலைவர் அவையில் அறிவிப்பு செய்த போது, கூடியிருந்த அனைவரும் ஒருமித்த குரலில் அல்ஹம்துலில்லாஹ் என இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.
இந்திய பன்னாட்டுப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருவதால், நிகழ்ச்சியை தேர்தல் தொடர்பான விஷயங்களோடு வரையறுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மண்டல தர்பியா மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர், மவ்லவி. அலாவுதீன் பாகவி அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.
அதன் பின், மண்டல துணைச் செயலாளர் சகோ. சீனி முஹம்மது நன்றியுரையை நிகழ்த்த கூட்டம் நிறைவுற்று நிர்வாகிகளும் உறுப்பினர்களும் புத்துணர்வுடன் சந்தோஷமாக கலைந்து சென்றனர்.
புதிய சவுதி கிழக்கு மண்டல நிர்வாகிகள்
தலைவர். சகோ. அப்துல் காதர் ( முன்னாள் மண்டல துணைத் தலைவர் )
த.மு.மு.க. பொதுச் செயலாளர். சகோ. இம்தியாஸ் ( முன்னாள் மண்டல துணைச் செயலாளர் )
ம.ம.க பொதுச் செயலாளர். சகோ.அப்துல் அளிம் (முன்னாள் மண்டல துணைச் செயலாளர் )
பொருளாளர். சகோ. நஸ்ருத்தீன் ஸாலிஹ் ( முன்னாள் மண்டலப் பொருளாளர் )
துணை நிர்வாகிகள்.
துணைத்தலைவர்கள்.
சகோ. இஸ்மாயீல் ( முன்னா ள் மண்டல பொதுச் செயலாளர்)
மற்றும் சகோ. ஷர்புதீன் பாய் ( முன்னாள் மன்டல துணைப் பொதுச் செயலாளர் )
துணைச் செயலாளர்கள்
சகோ. அஷ்ரப் (முன்னாள் மண்டல துணைச் செயலாளர் )
சகோ. சீனி முஹம்மது (முன்னாள் மண்டல துணைச் செயலாளர்)
சகோ. சதகத்துல்லாஹ் (முன்னாள் மண்டல துணைச் செயலாளர் )
சகோ. யூனுஸ் (முன்னாள் மண்டல துணைச் செயலாளர் )
சகோ. நிஸார் ( முன்னாள் ஜுபைல் கிளை துணைச் செயலாளர் )
சகோ. அப்துல் குத்தூஸ் ( முன்னாள் ரஹீமா கிளைத்தலைவர்)
சகொ. இபுறாஹீம் ஷா (முன்னாள் தம்மாம் கிளைத்தலைவர்)
புதிய நிர்வாகிகளின் பணி தொய்வின்றி தொடர துஆச் செய்வோம்.
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து கட்டுவோம்!
۞ ۞ ۞ ۞ ۞ ۞ ۞
۞ ۞ ۞ ۞
------------------------------ --------------