அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 24 ஏப்ரல், 2014

நெஞ்சார்ந்த நன்றிகள்

அன்பு உறவுகளுக்கு..!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நெஞ்சார்ந்த நன்றிகள்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தொகுதியில் சராசரியாக 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக்கடுமையாக களத்தில் போராடிய திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம், திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்துப் பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜமாத்தார்கள், உலமாக்கள், ஐ.என்.டி.ஜே., எஸ்.டி.பி.ஐ., தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை, பி.எப்.ஐ. மற்றும் சமுதாய அமைப்புகளுக்கும், மனசாட்சியுடன் பல இடங்களில் நடந்துகொண்ட ஏகத்துவ சொந்தங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பணிகளுக்காக எல்லா நிலையிலும் ஒத்துழைத்த நல்லுள்ளங்களுக்கும், பிரார்த்தனைகள் புரிந்த உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் சகோதர, சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினருக்காகப் பாடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களுக்கும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மயிலாடுதுறை தொகுதியில் ஓய்வின்றி உழைத்த மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களுக்கும் தேன்சிந்தும் வார்த்தைகளால் உளமாற நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவன் நம் அனைவரையும் உழைப்பையும் பொருந்திக் கொள்வானாக... எல்லாப் புகழும் இறைவனுக்கே...

- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி


வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்

வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இறைவனுடைய அருளால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினர் வினியோகிக்கும் ரூபாய் நோட்டுகளை மீறி மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

வெளிநாடு வாழ் சகோதரர்கள் மயிலாடுதுறை தொகுதியில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்குமெழுவர்த்திகள்சின்னத்தில் வாக்களிக்குமாறும், காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்யுமாறும் வேண்டுகிறோம்.

வேலூர் தொகுதியில்ஏணிசின்னத்திற்கும், சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில்மோதிரம்சின்னத்திற்கும்,

தென்காசி தொகுதியில்டிவிசின்னத்திலும், இதர தொகுதிகளில்உதயசூரியன்சின்னத்திலும்

வாக்களிக்குமாறு தொலைபேசி வாயிலாக உடனடியாக 
அறிவுறுத்த வேண்டுகிறோம்.


- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி




சனி, 19 ஏப்ரல், 2014

மனிதநேய மக்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? (நக்கீரன் ஏப்ரல் 16-18 இதழில் ம.ம.க. பொதுச்செயலாளர் எம்.தமிமுன்அன்சாரி எழுதிய சிறப்பு கட்டுரை)

இறைவனின் திருப்பெயறால் ...

மனிதநேய மக்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
(நக்கீரன் ஏப்ரல் 16-18 இதழில் ம.ம.க. பொதுச்செயலாளர் எம்.தமிமுன்அன்சாரி எழுதிய சிறப்பு கட்டுரை)
·         எமது அரசியல்
நாட்டை வழிநடத்தவும்மக்களுக்கு சேவையாற்றவும்அரசியல் களம் இன்றியமையாததாக இருக்கிறது.
இன்றைய அரசியல் வணிகம்சுயநலம்சாதியம்மதவாதம் போன்ற அழுக்குகளால் சூழப்பட்டுள்ள நிலையில்சேவை சார்ந்த அரசியலை முன்னெடுத்து தத்துவங்களை மையப்படுத்தி 2009 பிப்ரவரி அன்று மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.
• சமூக நீதி
• சமூக நல்லிணக்கம்
• சமத்துவ ஜனநாயகம்
என்ற கொள்கைகளை முன்னிறுத்திசிறுபான்மையினர்பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் ஜனநாயக உரிமைகளை முழங்கியும்அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை வழிநடத்தியும் எமது மனிதநேய அரசியலை நடத்தி வருகிறோம்.
·         பயிற்சியும்- முயற்சியும்
கொள்கை சார்ந்த நெறிமுறைகளின் வழியாக எமது தொண்டர்களை மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளாக வார்த்தெடுக்கிறோம். மக்களைத் திரட்டு - அரசியலை மாற்று” என முழங்குகிறோம்!
அவர்களுக்காக அரசியல் வழிகாட்டி முகாம்கள்பண்பு பயிற்சி முகாம்கள்பேச்சாளர் பயிற்சி முகாம்கள் ஆகியவைகளை நடத்திஒவ்வொரு தொண்டரையும் ஒரு தலைவரைப் போலவும்ஒவ்வொரு தலைவரையும் ஒரு தொண்டரைப் போலவும் பக்குவப்படுத்தி அவர்களை களமாட அனுப்புகிறோம்.
எமது மனிதநேய அரசியல் என்பது குரலற்ற மக்களின் குரலாகவும்தலைமைத்துவம் இல்லாத சமூகங்களின் தலைமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதன் விளைவாகவேவஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமூகத்தின் இதயத் துடிப்பாகவும்மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக் குரலாகவும்நசுக்கப்படும் தொழிலாளர்களின் போர்க்குரலாகவும்ஒடுக்கப்படும் மக்களின் இடிமுழக்கமாகவும் மனிதநேய மக்கள் கட்சி திகழ்கிறது.
போராட்ட களங்கள்
• முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டம்
• காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வுரிமை
• கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் எழுச்சி
• டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புக்கு எதிரான கலகங்கள்
• கல்பாக்கம் அணு மின் நிலைய எதிர்ப்புக் களம்
• நாகை மாவட்டத்தில் அனல் மின் நிலையங்களுக்கு எதிரான யுத்தம்
• ஆற்று மணல் கொள்ளைகளுக்கு எதிரான அறப்போர்
என தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களில் தீவிரமாய் களமாடிவரும் வரலாறு எமக்கு இருக்கிறது.
ஈழத்தமிழர் விவகாரத்தில் கட்சி தொடங்கிய நாள் முதல் ஒரே நிலைப்பாட்டில் சமரசமின்றி அம்மக்களுக்காகப் போராடி வருகிறோம்.
2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் கொன்றொழித்த சர்வாதிகாரி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற முதல் குரலை மனிதநேய மக்கள் கட்சிதான் எதிரொலித்தது.
ஆம்! மற்றவர்கள் தாமதமாய் சிந்திக்கும் யாவற்றையும்முன்கூட்டியே பிரகடனம் செய்வதுதான் எமது தனித்துவ அரசியலாகும்.
பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன்சிங்கள பேரினவாத ராணுவத்தில் இனப்படுகொலை செய்த துக்க செய்தி உறுதியான போதுஉலகத் தமிழர்கள் விம்மி அழுதபோதுஉலகிலேயே முதலில் களமிறங்கி சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பை பற்றவைத்த துணிச்சல் பலரும் வியந்த ஒன்றாகும்.
·         கொள்கை நிலைப்பாடு
ஃபாஸிஸம்சாதிய வெறிமத வெறிவன்முறைதீவிரவாதம் உள்ளிட்ட மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக மக்களை கட்டியெழுப்பும் விழிப்புணர்வு அரசியலை பொறி பறக்க பரப்புரை செய்கிறோம்.
தோழமையை உயிராக மதிப்பதும்பகைமையைக் கூட பக்குவமாக எதிர்கொள்வதும் நாங்கள் பின்பற்றும் பொதுவாழ்வின் இலக்கணக்கமாகும்.
இந்தியாவின் ராஜபக்சேவாகத் திகழும் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக இருந்தாலும் சரிஇலங்கையில் நரேந்திர மோடியாகத் திகழும் ராஜபக்சேவை எதிர்ப்பதாக இருந்தாலும் சரிநீதியின் நெறி பிறழாமல் எதிர்ப்பதே எம் கொள்கையாகும்.
·         அனைவருக்குமான அரசியல்
உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டவர்களும்சிறுபான்மையினரும் எமது சொந்தங்களாகும். அந்த வழியிலேயே இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை களங்களில் முதல் நிலை வீரர்களாய் அணிவகுக்கின்றோம்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான கட்சி அல்ல. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டபெரும்பான்மை சமூகங்களையும் அங்கத்தினர்களாகக் கொண்ட ஒரு ஜனநாயக பேரியக்கமாகும்.
மதச்சார்பின்மைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விளக்கங்கள் உண்டு. மதம் சார்ந்த நிலைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் கொள்கைதான் மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் மதச்சார்பின்மையாகும்.
ஆனால் நாம் முன்வைக்கும் மதச்சார்பின்மை என்பதற்கான அர்த்தம் என்பதுஅனைத்து மதத்தினருக்கும் மத்தியில் பொது ஒற்றுமையை கடைப்பிடிப்பதும்அதன்வழியே சிறுபான்மையினரின் வாழ்வுரிமைகளைக் காப்பது என்பதுமாகும்.அதன் ஊடாகவே எமது அரசியல் பயணம் தொடர்கிறது.
·         விமர்சனங்களுடன் கூடிய தோழமை
மாற்று அரசியலுக்காக குரல் கொடுக்கும் நாங்கள்களங்களில் சமூக நீதிக்காகவும்சமூக நல்லிணக்கத்திற்காகவும்சில சமயங்களில் சில சமரசங்களை செய்துகொள்வது தவிர்க்க முடியாததாகிறது.
இந்திய ஜனநாயக சூழலில் அரசியலையும்கொள்கைகளையும் கவனமாக ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ளாதவாறு கையாள வேண்டியிருக்கிறது.
நாங்கள் பாதைகளை மாற்றுவதில்லைஆனால் குதிரைகளை மாற்றுவதுண்டு. எமது அரசியல் பயணத்தில் நாங்கள் விமர்சனங்களுடன் கூடியதோழமைகளைப் பேணுகிறோம். அது ஆரோக்கியமான அரசியலுக்கும்தூய்மையான நட்புக்கும் வழிகாட்டுகிறது.
திராவிட இயக்க சிந்தனைகள்தமிழ் தேசிய சிந்தனைகள்இடதுசாரி & முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றோடு எப்போதுமே நட்பு பாராட்டும் அரசியலைப் பேணுகிறோம்.
·         அகண்ட பார்வை
ஏகாதிபத்திய எதிர்ப்புபன்னாட்டு பெரு நிறுவனங்களின் சுரண்டல்கட்டுப்பாடற்ற கலாச்சார சீரழிவுகள்இயற்கை&சுற்றுச்சூழலுக்கு எதிரான பன்னாட்டு சூழ்ச்சிகள் என உலக அரசியலையும் பேசுகிறோம்.
வணிக அரசியல்தேர்தல் சீர்திருத்தம்சிறுபான்மையினருக்கு எதிரான சதிகள்தலித்துகள் - பழங்குடிகளுக்கு எதிரான அடக்குமுறைகள்அரசு வன்முறைகள்மனித உரிமை மீறல்கள் என உள்நாட்டு அரசியலையும் பேசுகிறோம்.
·         நம்பிக்கையும் - கோரிக்கையும்
ஊழலின் நிழலைக்கூட நெருங்கக்கூடாது என்கிற உன்னத லட்சியத்தோடு: அரசியலை மாபெரும் சேவைக்கான களமாக கருதும் எண்ணங்களோடு: எமது களப்பணிகள் ஆண்டுகள் நிறைவு பெற்றுஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆலை முதலாளிகளும்பண்ணை ஜமீன்களும்பன்னாட்டு பண முதலைகளும் இந்திய அரசியலை ஆக்கிரமித்து வரும் சூழலில் மனசாட்சியுள்ள குடிமக்களை நம்பியே எங்களின் அரசியல் இருக்கிறது.
தூய்மையான எண்ணங்களோடும்நேர்மையான அணுகுமுறைகளோடும்உயர்வான கொள்கைகளுடனும் கண்ணியமாக அரசியல் பணியாற்ற துடிக்கும் மனிதநேய மக்கள் கட்சியை வலிமையாக்க எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.
ஆற்றலும் அறிவும் நேர்மையும் கொண்ட அடித்தட்டு மக்கள் யாவரும் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரலாம் என்கிற சுதந்திர விதிகளைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சிஅரசியல் அதிகாரத்தில் வலிமை பெற விரும்புகிறது.
ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்தவும்அரசியல் அதிகாரத்தை எளியவர்களுக்கும் விரிவுப்படுத்தவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தோள்கொடுங்கள் என உரிமையோடும் உணர்வோடும் கேட்கிறோம்.
தற்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடனும்நூற்றுக்கணக்கான உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடனும் ஊழலற்றநேர்மையான மக்கள் பணியை செய்துவரும் நாங்கள்இப்போது நாடாளுமன்றத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் டாக்டர் கலைஞரின் தலைமையில் திமுகமுஸ்லிம் லீக்விடுதலை சிறுத்தைகள்புதிய தமிழகம் ஆகியவை அங்கம் வகிக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்மனிதநேய மக்கள் கட்சியினர் முதல் நிலை வீரர்களாக களத்தில் நிற்கின்றனர்.
எமக்கு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு இறைவன் அருளால் நாங்கள் பெறக்கூடிய வெற்றி எமது அரசியலில் திருப்புமுனைகளையும்புதிய நம்பிக்கையையும் தரும் என எதிர்பார்க்கிறோம்.
·         தேசத்தை காப்போம்
ஐயா பெரியார்பேரறிஞர் அண்ணாகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்பெருந்தலைவர் காமராஜ்ஐயா முத்துராமலிங்க தேவர்தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் போன்ற தலைவர்கள் பக்குவப்படுத்திய தமிழ் மண்ணில் வட இந்திய அரசியல் கலாச்சாரம்’ ஃபாசிச வடிவில் வேர்விடத் துடிப்பதை எதிர்க்கிறோம்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கூட்டணியை புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்யும் யுக்திகளோடு புறப்பட்டிருக்கிறோம்.
எமது அரசியலை ஏற்று நாடே எங்கள் பின்னால் அணிவகுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. விதைகளைத் தூவுகிறோம். நாளை வரும் தலைமுறைகள் அதை அறுவடை செய்யும் என நம்புகிறோம்.
நாங்கள்தான் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று கூறவில்லை. ஆனால்நாங்கள் இல்லாமல் எந்த ஆட்சியும் இல்லை என்பதை அழுத்தி சொல்கிறோம்.
எளிய மக்கள் அரசியல் அதிகாரத்தில் வலிமை பெறவேண்டும் என்பதற்காககொள்கைப்பிடிப்புடனும்: லட்சிய வேட்கையுடனும் தேர்தல் களத்தில் நிற்கும் மனிதநேய மக்கள் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி
(கட்டுரையாளர் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராவார். மக்கள் உரிமை வார இதழின் ஆசிரியரும் கூட.)