அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 26 மார்ச், 2014

அன்பான சகோதரர்களே... சமுதாய சிந்தனையாளர்களே உங்களின் நன்கொடைகளை தேர்தல்பணிகளுக்கு அனுப்பி தாருங்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இம் மடல் தங்களை பூரண உடல் ஆரோக்கியத்துடனும் தூயஇஸ்லாமிய சிந்தனையுடனும்சந்திக்கட்டுமாக!

மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை முகைதீன்-- 

களப்பணிக்கு ஆயிரகணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்....தொகுதி முழுவதும் பரவலாக அண்ணன் ஹைதர் அலிக்கே ஆதரவலைவீசி வருகிறது....அதிகாலை முதல் இரவு வரை உணவை கூட நேரம் கடந்து உண்டு
(
சில நேரங்களின் உணவும் உண்ணவும் நேரம் கிடையாதுதீவிரமானகளப்பணியில் மாநில நிர்வாகி முதல் மாவட்ட நிர்வாகிகள் தொட்டுதொண்டர்கள் வரை ஓடி ஓடி உழைக்கிறார்கள்....வேட்பாளரோடு நான் உள்ளடக்கிய தலைமை மீடியா குழு எந்த நேரமும்சுத்திக்கொண்டு இருக்கிறது.உடனுக்குடன் செய்திகளை தொகுத்து மீடியாக்களுக்கும்பத்திரிகைகளுக்கும் வழங்கி வருகிறோம்...இன்னும் வீரியமாக களப்பணியாற்ற துடிப்போடு செயல்படுகிறோம்... 
மூத்த தலைவர் பேராசிரியர் MHJ அவர்கள் தலைமையில்மயிலாடுதுறை,சீர்காழி,பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளைஉள்ளடக்கி மயிலாடுதுறையை மைய்யமாக வைத்து ஒரு பெரிய டீமும்,மமக பொதுசெயலாளர் அண்ணன் மு.தமிமுன் அன்சாரி அவர்களின்தலைமையில் கும்பகோனம்,பாபநாசம்திருவிடைமருதூர் ஆகியமூன்று தொகுதிகளை உள்ளடக்கி கும்பகோணத்தை மைய்யமாககொண்டு ஒரு பெரிய டீமும் மிகப்பெரிய தேர்தல் பணிகளைஆற்றிவருகிறார்கள்...இதற்கிடையில் கூட்டணி கட்சியினரின் மகத்தான பணிகளும் அதிகம்அதிகம்.....ஆனால்.... ஆனால்.... மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுஇப்பணிகள் நடைபெற்று வருகின்றனஆகவே 
அன்பான சகோதரர்களே... 
சமுதாய சிந்தனையாளர்களே உங்களின் நன்கொடைகளை தேர்தல்பணிகளுக்கு அனுப்பி தாருங்கள்...எங்கள் சகோதரர்கள் நிதி கேட்டு வருகிறார்கள் அவர்களிடம் தாராளமாகதேர்தல் நிதிகளை அள்ளி தாருங்கள்....அதிகார அவையில் சமுதாய பணியாற்ற உதவிடுங்கள்....புகழ் அனைத்து அல்லாஹ்வுக்கே.... வெற்றி நமது அணிக்கே.....
அன்புடன் மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை முகைதீன்-- 





எழுச்சியை நோக்கி மயிலாடுதுறை!

எழுச்சியை நோக்கி மயிலாடுதுறை!

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மயிலாடுதுறையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களுக்கு வாக்கு கேட்டு திமுகவின் பொருளாளர் சகோதரர் திரு. மு..ஸ்டாலின் அவர்கள் நேற்று தொகுதிக்கு வருகை தந்து பெரும் எழுச்சியை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்.



மதியம் 4.30 மணிக்கு பாபநாசத்திலும், தொடர்ந்து கும்பகோணம், குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோயில் என மக்கள் வெள்ளத்தில் வேட்பாளருடன் பரப்புரை நிகழ்த்தினார்.

இறுதியாக, சீர்காழியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.

அவரது உரை வீச்சு முன்பை விட மெருகேறியுள்ளது. தங்கள் ஆட்சியின் கடந்த கால சாதனைகளை, அதிமுகவின் தவறுகளை புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

பதட்டமின்றி, சரளமாக, ஆணித்தரமாக அவர் பேசியது அனைவரையும் ஈர்த்தது.

சமீபத்தில் திருச்சி திமுக மாநாட்டில் அவர் பேசிய உரைதான், அவரது புதிய பயணத்தின் எழுச்சியாக அமைந்தது.

அதற்கு அடுத்த ஒரு எழுச்சிமிக்க உரையாக அண்ணன் ஹைதர் அலிக்காக அவர் வாக்கு சேகரித்து பேசிய உரை அமைந்திருந்ததாகக் கருதுகிறேன்.

இந்த அரை நாள் நிகழ்ச்சி, இங்கே முகாமிட்டு பணியாற்றி வரும் எனக்கும், பேராசிரியருக்கும், அப்துல் சமது, உமர், ராவுத்தர்ஷா, அமீன், சர்வத்கான், சரவண பாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் மனதிருப்தியை தந்துள்ளது.

ஏற்கனவே 2009 நாடாளுமன்றத் தேர்தலில், மமக இத்தொகுதியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களை நிறுத்தி களமாடியது. அப்போது கட்சி, இத்தொகுதி முழுக்க அறிமுகமானது.

அது இப்போது களத்தில் மிகவும் உதவியாக இருக்கிறது. ஜமாத்துகள், சிறுபான்மையினரைத் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களும் அங்கீகரிக்கும் கட்சியாக மீண்டும் மீண்டும் மமக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.

மதச்சார்பற்ற நம் நாட்டில், சிறுபான்மையினர் ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுக்கும் போது, அது பெரும்பான்மை மக்களின் நல்லெண்ணங்களையும் பெற்றுத்தான் வளர முடியும். வளர வேண்டும். அப்போது தான் நல்லிணக்கத்துடனும், புரிதலுடனும் கூடிய அரசியல் வெற்றியைப் பெற முடியும்.

அத்தகைய வெற்றியை மயிலாடுதுறை தொகுதியில் பெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. (இறைவன் நாடினால்...)