எழுச்சியை நோக்கி மயிலாடுதுறை!
மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மயிலாடுதுறையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களுக்கு வாக்கு கேட்டு திமுகவின் பொருளாளர் சகோதரர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தொகுதிக்கு வருகை தந்து பெரும் எழுச்சியை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்.

மதியம்
4.30 மணிக்கு பாபநாசத்திலும், தொடர்ந்து கும்பகோணம், குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோயில் என மக்கள் வெள்ளத்தில் வேட்பாளருடன் பரப்புரை நிகழ்த்தினார்.
இறுதியாக, சீர்காழியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.
அவரது உரை வீச்சு முன்பை விட மெருகேறியுள்ளது. தங்கள் ஆட்சியின் கடந்த கால சாதனைகளை, அதிமுகவின் தவறுகளை புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.
பதட்டமின்றி, சரளமாக, ஆணித்தரமாக அவர் பேசியது அனைவரையும் ஈர்த்தது.
சமீபத்தில் திருச்சி திமுக மாநாட்டில் அவர் பேசிய உரைதான், அவரது புதிய பயணத்தின் எழுச்சியாக அமைந்தது.
அதற்கு அடுத்த ஒரு எழுச்சிமிக்க உரையாக அண்ணன் ஹைதர் அலிக்காக அவர் வாக்கு சேகரித்து பேசிய உரை அமைந்திருந்ததாகக் கருதுகிறேன்.
இந்த அரை நாள் நிகழ்ச்சி, இங்கே முகாமிட்டு பணியாற்றி வரும் எனக்கும், பேராசிரியருக்கும், அப்துல் சமது, உமர், ராவுத்தர்ஷா, அமீன், சர்வத்கான், சரவண பாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் மனதிருப்தியை தந்துள்ளது.
ஏற்கனவே 2009 நாடாளுமன்றத் தேர்தலில், மமக இத்தொகுதியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களை நிறுத்தி களமாடியது. அப்போது கட்சி, இத்தொகுதி முழுக்க அறிமுகமானது.
அது இப்போது களத்தில் மிகவும் உதவியாக இருக்கிறது. ஜமாத்துகள், சிறுபான்மையினரைத் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களும் அங்கீகரிக்கும் கட்சியாக மீண்டும் மீண்டும் மமக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.
மதச்சார்பற்ற நம் நாட்டில், சிறுபான்மையினர் ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுக்கும் போது, அது பெரும்பான்மை மக்களின் நல்லெண்ணங்களையும் பெற்றுத்தான் வளர முடியும். வளர வேண்டும். அப்போது தான் நல்லிணக்கத்துடனும், புரிதலுடனும் கூடிய அரசியல் வெற்றியைப் பெற முடியும்.
அத்தகைய வெற்றியை மயிலாடுதுறை தொகுதியில் பெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. (இறைவன் நாடினால்...)