அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 30 ஆகஸ்ட், 2014

கோலாரில் சாக கோருகிறது ஒரு தலித் குடும்பம் - ‘எங்களை செத்துப்போக அனுமதியுங்கள்’ என்று கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர்.

அன்பு உறவுகளுக்கு..! 

கோலாரில் சாக கோருகிறது ஒரு தலித் குடும்பம்


ர்நாடகா மாநிலம் கோலாரில் சென்ற ஜனவரி மாதக் கடைசியில் போலீஸ் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் கூட்டத்திலிருந்து திடீரென்று கூச்சலிட்டவாறு ‘எங்களை செத்துப்போக அனுமதியுங்கள்’ என்று கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர்.

“எங்களுடைய பிரச்சினைக்கு மரணம் தான் ஒரே தீர்வு. அதனால் எங்களை சாக அனுமதியுங்கள்” – சங்கரப்பா – ரத்னம்மா.
கோலார் தாலுகா சியனுபோஹனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா, அவருடைய துணைவியார் ரத்னம்மா. இவர்களுடைய குழந்தைகள் ஆகாஷ், அனுசிறீ, அமலசிறீ ஆகியோருடன் சில உறவினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
கூட்டத்தில் ரத்னம்மா அழுதவாறு “எங்களுடைய ஊரில் சாதி இந்துக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களை துன்புறுத்தி வருகின்றனர், எங்களை பல்வேறு வித தண்டனைகளுக்குள்ளாக்கி வருகின்றனர், இனி அந்த தொல்லைகளை எங்களால் தாங்க முடியாது, அதிகாரிகளிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைக்கு மரணம் தான் ஒரே தீர்வு. அதனால் எங்களை சாக அனுமதியுங்கள்” என்று முறையிட்டுள்ளார்.
சங்கரப்பா குடும்பத்தினர் சாதி இந்துக்களுக்கு பயந்துகொண்டு தலைமறைவாக இருப்பதால் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை. இப்பிரச்சினையை விசாரித்த சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குனரக அதிகாரி தனது அறிக்கையில் சங்கரப்பா குடும்பம் சாதி இந்துக்களால் துன்புறுத்தப்பட்டிருப்பதையும், சங்கரப்பா குடும்பத்தை பாதுகாக்காமல் குற்றவாளிகளான சாதிவெறியர்களுக்கு போலீசு துணைபோயிருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பிரச்சினையில் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இருந்தாலும் இந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்தாலாவது இந்த பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்றெண்ணியே கூட்டத்திற்கு வந்ததாக கூறுகிறார் சங்கரப்பா.
இந்த சம்பவத்தை போலவே, பதினைந்து நாட்களுக்கு முன்பு இதே கோலார் மாவட்டத்தில் உள்ள கக்கனஹள்ளி என்கிற கிராமத்தில் உள்ள நான்கு தலித் குடும்பங்களை சாதி இந்துக்கள் ஊர்விலக்கம் செய்துள்ளனர். இக்கிராமத்தில் மொத்தம் பதினாறு தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. சங்கராந்தி பண்டிகை கொண்டாடியதையும், கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்கான வேலைக்கு ஒரு தலித் குடும்பத்திலிருந்து விண்ணப்பித்திருந்ததையும் கண்டித்து தான் ஆதிக்க சாதிகள் தலித் மக்களை சமூகப் புறக்கணிப்பு செய்திருக்கின்றனர்.
தலித் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் குடும்பங்களுக்கு 501 ரூபாய் அபராதமும், அவர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 1001 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது – சியனுபோஹனள்ளி கிராமம்.
இந்த குடும்பங்களுக்கு ஊரில் உள்ள கடைக்காரர்கள் எந்த பொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட தலித் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் குடும்பங்களுக்கு 501 ரூபாய் அபராதமும், அவர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 1001 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது. தலித் குடும்பங்கள் மாலை நேரத்தில் தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்கிற நிபந்தனை போடப்பட்டுள்ளது.
இந்த அநீதியை எதிர்த்து தலித் மக்கள் போலீசை அணுகினர். யார் வந்தாலும் ஊர்விலக்கம் ஜனவரி 22 முதல் நீடிக்கும் என்று ஆதிக்க சாதிகள் திமிராக அறிவித்தன. ஆனால் போலீசு வந்து விசாரித்த போது இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லையே என்று கூறி நழுவிக் கொண்டன.
இந்த பிரச்சினைகளில் வழக்கு விசாரணை ஒரு பக்கம் என்றால் அரசும் அதிகாரிகளும் சாதிவெறியர்களை கைது செய்யாமல் ஒடுக்குமுறைகளை ஏற்க வைக்கும் வேலைகளை சமரசம் என்கிற பெயரில் செய்துகொண்டிருக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உலகத்திலேயே இந்த நாடு தான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் ‘தேச பக்தர்கள்’, இத்தகைய ஜனநாயக மறுப்பு காட்டுமிராண்டித்தனங்களை கண்டு கொள்வதில்லை. ஆகவே ஒடுக்கப்பட்ட மக்களின் முதுகில் ஏறிக் கொண்டுதான் இவர்களுடைய ஜனநாயகம் உலாவருகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த சமூக அமைப்பால் நீதியையோ பாதுகாப்பையோ என்றும் வழங்க முடியாது என்பதையே இந்த செய்தி உணர்த்துகிறது. அதிகார வர்க்கம், ஊடகங்கள், சட்டம், காவல்துறை, நீதிமன்றங்கள் என்று அனைத்துமே சாதிவெறி, மதவெறி சக்திகளின் நேரடி மறைமுக கூட்டாளிகளாகவே செயல்படுகின்றன.
எனவே இந்த சுரண்டல் சமூக அமைப்பை வேரோடு பிடுங்கி எறிவது மட்டுமே உழைக்கும் மக்களுக்கும் அவர்களில் ஒரு அங்கமான தலித் மக்களின் விடுதலைக்கும் ஒரே வழியாக இருக்க முடியும்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இடைத்தேர்தல் முடிவுகள்; தேசம் திரும்புகிறது!

​​அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்


இடைத்தேர்தல் முடிவுகள்; தேசம் திரும்புகிறது!



கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க ஊடகங்களின் பின்னணியோடு மோடி அலை கட்டமைக்கப்பட்டது. காங்கிரஸ்-ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான அதிருப்தியும், எதிர்கட்சிகளின் பிளவும் பா.ஜ.கவுக்கு அருதிப்பெரும்பாண்மையை கொடுத்து மோடியை பிரதமராக்கியது.

உடனே நாட்டில் பாலாறும், தேனாறும் ஒடத் தொடங்கிவிட்டதுப்போல பலர் மாயைகளை உருவாக்கினார்கள்.

பா.ஜ.கதான் அடுத்த தேர்தலிலும் வெல்லும் என்றும், மோடிதான் ஆயுட்கால பிரதமர் என்றும் பாட்டுப் பாடினார்கள். எல்லாப் புகழ் மாலைகளும் எல்லை மீறின. இனி காங்கிரஸ் எழவே முடியாது என்றும், எங்களுக்கு எதிர்கட்சிகளே இல்லை என்றும் ஆடினார்கள். சவால்களுக்கு பஞ்சமில்லாமல் போனது.

இது ஜனநாயகவாதிகளுக்கும், பொது நலவாதிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

இதனிடையே போன மாதம் உத்தரகாண்டில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது எதிர்பாராத அதிர்ச்சியை அனைவருக்கும் தந்தது.

சென்ற வாரம் பீஹார், மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகி நாடெங்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தல்களில், பா.ஜ.க கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் 5, ராஷ்ரீய ஜனதா (லாலு)3, ஐக்கிய ஜனதா (நிதிஷ்) 2 என மொத்தம் 10 தொகுதிகளில் எதிர்கட்சிகள் வென்றுள்ளன.

பாஜக 7 தொகுதிகளிலும், அதன் கூட்டணியான அகாலிதளம் 1 தொகுதியிலும் வென்றுள்ளன.
பீஹார் முடிவுகள்தான் அதிகம் எதிர்பார்க்கப்பட்டன. அங்கு பாஜகவும், ராம்விலாஸ் பாஸ்வானும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

எதிரணியில் லாலு 4 தொகுதிகளிலும், நிதிஷ் 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

இதில் லாலு 3 தொகுதிகளிலும் நிதிஷ் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வென்று பாஜக அணியை சுருட்டிவிட்டனர். மீதி 4 தொகுதிகளிலும் குறைந்த ஓட்டுகளில் பாஜக வென்றுள்ளது. பிரபல துரோகி ராம்விலாஸ் பாஸ்வான் ஒரிடத்தில் கூட வெல்லவில்லை.
மத்திய பிரதேசத்தில் பாஜகவிடமிருந்து ஒரு இடத்தை காங்கிரஸ் மீட்டுள்ளது.
பஞ்சாபிலும் ஒரிடத்தை காங்கிரஸ் மீட்டுள்ளது.

கர்நாடகாவில் 3ல் 2 இடத்தை வென்றுள்ள காங்கிரஸ், பெல்லாரி தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதியில் இது பெரும் வித்தியாசமாகும். அங்கு தேவகொளடாவின் மதச் சார்பற்ற ஜனதாதளம் நின்று பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்துள்ள நிலையில் இச்சாதனை நிகழ்ந்துள்ளது.

பாஜக தற்போது இழந்துள்ள பல தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் போது அக்கட்சி அதிக வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் மூலம், மாயைகளை தகர்த்து நாட்டு மக்கள் தெளிவான மனநிலைக்கு வந்திருப்பது தெரிய வருகிறது. அடுத்து மஹராஸ்ட்ரா, அரியானா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களும் இதேபோல் விடைகளை தரும் என எதிர்ப்பார்க்கலாம்.

மோடி நிறைய பேசுகிறார்; மற்றப்படி முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்கள்&செயல்பாடுகளின் வழியாகவே பயணிக்கிறார்; அவர்களிடம் புதிய எதிர்ப்பார்ப்பபுகள் எல்லாம் பொய்ப்பித்துவிட்டன; என்ற கருத்துகள் வலிமையாகி வரும் நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் அதையே வழிமொழிந்துள்ளன.

இனி காங்கிரஸ் புத்துணர்வுடன் பயணிக்கும் என நம்பலாம். ஜனநாயக-சமூகநீதி சத்திகள் காங்கிரசுடன் கைக்கோர்க்கும் வாய்ப்புகளும் அதிகமாகும்.

இதை கம்யூனிஸ்ட் கட்சிகளும், மாநில கட்சிகளும் எப்படி புரிந்துக் கொள்ளப் போகின்றன என்பதில்தான், புதிய அரசியல் அடங்கியிருக்கிறது.

-
எம்.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி-- 

சனி, 23 ஆகஸ்ட், 2014

ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு

அன்பு உறவுகளுக்கு..! 

ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு


மோடி அரசு பதவி ஏற்ற அடுத்த நாள், அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் டுவிட்டர், பேஸ்புக், கூகிள், யூடியூப், வலைப்பதிவுகள் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகார பூர்வ கணக்குகளில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அகண்ட பாரதத்தை அமைப்பதற்கு முன், சிக்கிய இந்தியாவில் இந்தியைத் திணிக்கும் இந்துமதவெறியர்களின் இயல்பான முயற்சிக்கு நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டின் அனைத்து மொழிகளையும் பரப்புவதற்கு அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது” என்று டுவீட் செய்தார். உள்துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ, அனைத்து துறைகளிலும், பொது வாழ்க்கையிலும் ஹிந்தியை முன்னிறுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றாலும் அது மற்ற மொழிகளை பின்தள்ளுவதாக அமையாது என்று உறுதியளித்தார். வஞ்சப் புகழ்ச்சி போல இது சமத்துவத்தின் பெயரில் நடைபெறும் நாடகம் என்பதை எத்தனை பேர் அறிவர்?
இந்த சுற்றறிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில் “அலுவல் மொழிக்கான துறை 1963 அலுவல் மொழி சட்டத்தின்படியும் 1976 அலுவல் மொழிகள் விதிமுறைகளின் படியும் அவ்வப்போது அலுவல் மொழிக் கொள்கையை அமல்படுத்த சுற்றறிக்கைகள் அனுப்பி வருகிறது. அதன்படி சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய சுற்றறிக்கையின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் 10-ம் தேதி அனைத்து அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஹிந்தி அல்லது ஹிந்தி-ஆங்கிலத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி உள்துறை அமைச்சகம் மே 27 தேதியிட்ட சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.” என்று விளக்கம் சொல்லியிருந்தது.
இந்த சுற்றறிக்கை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு பொருந்தாது என்றும் கூறினார்கள்.
இந்தி மயமாகும் நேஷனல் புக் டிரஸ்ட் பேஸபுக் பக்கம்
உண்மையில் நடைமுறை மாறியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இந்தி பேசும், மற்றும் இந்தி பேசாதா மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவான மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (மனித வளத் துறை) கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் பேஸ்புக் கணக்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். இந்த நிறுவனம்தான் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட இதர தேசிய மொழிகளில் பல்வேறு நூல்களை வெளியிடும் மிகப்பெரும் மத்திய அரசு நிறுவனம்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான 100 நிலைத்தகவல்களை எடுத்து அவை எந்த மொழியில் இடப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தோம்.
இந்தி மொழி பயன்பாடு துலக்கமாக அதிகரித்த ஜூலை இறுதி வரையிலான கால கட்டத்துக்கு முன்னும் பின்னும் என இந்த நிலைத்தகவல்களை பிரித்துக் கொண்டால்,
ஜனவரி 27 முதல் ஜூலை 24 வரை (சுமார் 6 மாதங்களில்)
ஆங்கிலம்
53
72%
இந்தி
15
20%
மற்றவை
6
8%
மொத்தம்
74
ஜூலை 24 முதல் இன்று வரை (சுமார் 1 மாதம்) பேஸ்புக் நிலைத்தகவல்களின் நிலவரம்
ஹிந்தி
20
77%
ஆங்கிலம்
5
19%
மற்றவை
1
4%
மொத்தம்
26
அதாவது, மோடி நிர்வாகம் தனது முடிவுகளை செயல்படுத்த ஆரம்பித்த கால கட்டத்திலிருந்து பார்க்கும் போது அது வரை ஆங்கிலம் முதன்மையான மொழியாக (70%) இருந்த நிலை மாறி இந்தி முதன்மையான மொழியாக மாற்றப்பட்டு (77%), ஆங்கிலம் இரண்டாம் நிலைக்கு (19%) தள்ளப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்கு முன்பு இந்தி நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் இந்தியிலும், மற்ற நிலைத்தகவல்கள் ஆங்கிலத்திலும் இருந்தன. கடந்த ஒரு மாதத்தில் பொதுவான நிலைத்தகவல்கள் இந்தியிலும், ஆங்கில நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் மட்டும் ஆங்கிலத்திலும் என்று மாறியிருக்கிறது.

மோடி அரசு பதவி ஏற்ற நாளிலிருந்தே பார்த்தாலும், இந்தி, ஆங்கிலத்துக்கு நிகராக பாதிக்குப் பாதி இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த கால கட்டம் முழுவதிலும் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கு நேஷனல் புக் டிரஸ்டின் சமூக வலைத்தள தகவல் பரிமாற்றத்தில் இடமே இல்லை.
இந்த 100 நிலைத்தகவல்களில் பல ஆங்கில, இந்தி நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. ஒரு உருது மொழி புத்தகம் பற்றிய நிலைத்தகவல் உள்ளது. மற்ற எந்த இந்திய மொழி பற்றியும் எந்தத் தகவலும் இல்லை.
சரி, 2012-13 ஆண்டு மத்திய அரசிடமிருந்து (நாடு முழுவதும் வாழும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து) சுமார் ரூ 44 கோடி நிதி உதவி பெற்ற இந்நிறுவனம்  வெளியிடும் புத்தகங்கள் பற்றியவிபரங்களை ஆய்வு செய்தோம்.
2012-13ம் ஆண்டு வெளியிடப்பட்ட மொத்தம் 1,553 புத்தகங்களில் 25% மக்கள் பேசும் இந்தி (511), மராத்தி (460) மொழிகளுக்கு 63% இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (இந்தி மொழி பேசுபவர்களில் ராஜஸ்தானி, போஜ்பூரி, அவதி, சத்திஸ்கரி மொழி பேசுபவர்களை சேர்க்காமல்).
மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் (244) சுமார் 16% பங்கை பெற்றிருக்கிறது.
ஆங்கில தகவலுக்கு இந்தியில் பதில்.

26 கோடி மக்கள் (17% மக்கள் தொகை) பேசும் வங்க மொழி (83), பஞ்சாபி (56), அசாமிய மொழி (48), உருது (45), குஜராத்தி (34) ஆகிய மொழிகளிலான புத்தகங்கள் சுமார் 17% இடத்தை மட்டும் பிடித்திருக்கின்றன.
ஒடியா (19), தெலுங்கு (16), மலையாளம் (10), தமிழ் (9), கன்னடம் (9), ஆகிய மொத்தம் 24 கோடி மக்கள் (20% மக்கள் தொகை) பேசும் பெரிய தேசிய மொழிகளுக்கு மொத்தம் 63 புத்தகங்கள் (4%) என ஏதோ போகிற போக்கில் பங்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, தென்னிந்திய மொழிகளை புறக்கணித்து இந்தி, மராத்தி மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்தி, ஆங்கில மொழி புத்தகங்களைத் தவிர பிற மொழி புத்தகங்கள் குறித்து நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் பேஸ்புக்கில் பேசவே இல்லை என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 100 நிலைத்தகவல்களில் தெரிய வருகிறது.
அனைத்தையும் இந்தி மயமாக்குவதற்கான உதாரணமாக நிலைத்தகவல் ஒன்றை குறிப்பிடலாம். சென்ற மாதம், லூதியானாவிலிருந்து நேஷனல் புக் டிரஸ்ட்டின் நகரும் புத்தகக் கண்காட்சியை புகைப்படங்கள் எடுத்து, ஆங்கில தகவலுடன் அனுப்பி வைத்திருக்கிறார் ஜிதேந்தர் சிங் நேகி என்பவர். ஆனால், பேஸ்புக்கில் அதை பகிர்ந்து கொண்ட நேஷனல் புக் டிரஸ்ட் அதற்கான பதிலை இந்தியில் எழுதியிருக்கிறது.
இதிலிருந்து இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையை பின்பற்றும் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டில், பெரும்பான்மை மக்களின் தேசிய மொழிகள் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை தொடர்வதோடு, இந்தித் திணிப்பு இன்னும் தீவிரமாக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த தமிழ் விரோத, ஜனநாயக விரோத இந்துமதவெறி அரசைத்தான் திராவிடத்தை தனது கட்சி பெயரில் தக்க வைத்திருக்கும் வைகோ என்ற சந்தர்ப்பவாதி ஆதரித்தார், ஆதரிக்கிறார். இந்த பாஜகவைத்தான் விகடன், தினமலர், குமுதம், தினமணி, தி இந்து உள்ளிட்ட ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடுகின்றன. இன்னொரு புறம் இதே ஊடகங்கள்தான் தமிழுக்காக கவலைப்படுவதாக வேறு நடிக்கின்றன.
பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.
“இந்து ராஷ்டிரம்” என்பதற்கான முன்னறிவிப்புதான் இந்த இந்தித் திணிப்பு. இதை தமிழக மக்கள், தமிழார்வலர்கள், ஜனநாயக அமைப்புகள் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
பாஜக மற்றும் அதற்கு பல்லக்கு தூக்கும் துரோகிகளை இனம் காண வேண்டும்.
இணைப்பில் உள்ள சுவரொட்டிகளை பரவலாக பகிருமாறும், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஃபேஸ் புக் பக்கத்திற்கு சென்று கருத்து பதிவு செய்யுமாறும் கோருகிறோம்.
 

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

​போலி மோதல் புகழ் மோடியை காந்தியாக்கும் ஊடகங்கள் {{ பாம்புகள் எப்போதிருந்து எலியை வெறுத்து விட்டன? }}


{{ பாம்புகள் எப்போதிருந்து எலியை வெறுத்து விட்டன? }}

 12 வயது சிறுவன்தொலைந்து போன பசுவை தேடிப் போனவர்டீ குடிக்க போனவர்ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய போனவர்நண்பனை பார்க்கப் போனவர் இவர்கள்தான் மோடி அரசு சொல்லும் தலைமறைவு அமைப்புகள்.

  • சோராபுதீன் ஷேக் முதல் இஷ்ரத் ஜகான் வரை பல அப்பாவிகளை போலி மோதலில் கொன்ற, 30-க்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள் குஜராத் சிறையில் இருக்கின்றனர். இத்தகைய கொலைகார போலீசு படைக்கு தலைமை தாங்கிய அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்முதல்வர் நரேந்திர மோடியும் முறையே பா.ஜ.க தலைவர்பிரதமர் ஆகியிருக்கின்றனர். இப்பேற்பட்டவர்களது அரசு போலி மோதல் கொலைகள் மீது எந்த சகிப்புத் தன்மையும் காட்டாது” என்று அறிக்கை அளித்திருக்கிறதாம். நம்ப முடிகிறதாநம்பித்தான் தீர வேண்டும். தி இந்து நாளிதழும்டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதில் மத்திய அரசு சகிப்புத்தன்மை காட்டாது”, “Zero tolerance for fake encounters: Modi govt tells SC” என்று நான்கு காலம் தலைப்புச் செய்தியாக அறிவித்திருக்கின்றன.
​​போலி மோதல் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (2011-ம் ஆண்டு)

  • மோடி எப்போது ஜனநாயக காவலர் ஆனார்பாம்புகள் எப்போதிருந்து எலியை வெறுத்து விட்டன?
மணிப்பூரில் மத்திய ஆயுதப்படைகளாலும்மாநில காவல்துறையினாலும் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம்நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கமிஷனை நியமித்தது. அந்த கமிஷன் அளித்த ஆய்வறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதிலில் மத்திய அரசு போலி மோதல்கள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அத்தகைய சட்ட விரோதமான கொலைக்குற்றவாளி யாராயிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறது. இதன்படி பார்த்தால் மோடி ஆதரவு ஊடகங்கள் சொல்வது போல பாஜக அரசு ஜனநாயகக் காவலராக மாறியிருப்பதாக தோன்றும்.
னிமே நான் சத்தியமா லஞ்சம் வாங்க மாட்டேன்…” என்று ஒரு அரசு அதிகாரி சத்தியம் செய்வதான புல்லரிப்பு நமக்கு ஏற்படும். ஆனால்இது போல பல சத்திய பிரமாணங்களை கேட்டு பழகிய நமக்கு, “நான் என்ன சும்மா கொழுப்பெடுத்தா லஞ்சம் வாங்குறேன். மேலதிகாரிகளுக்கு கொடுத்தே ஆகணும்கிறதுக்காகத்தான் வாங்க வேண்டியியருக்கிறது. விக்கிற விலை வாசிபசங்க படிப்பு செலவுசொந்தமா வீடு கட்டுவதுன்னு நியாயம நான் வாழ்றதுக்கு வாங்குற சம்பளம் போதுமாயார் சார் இந்த உலகத்துல லஞ்சம் வாங்காமதப்பு செய்யாம இருக்காங்ககாசு வாங்குனாலும் வேலையை சுத்தமா செய்யறனா இல்லையா?” என்று பேசுவதை போலவேபோலி மோதல்கள் தொடர்பான மோடி அரசின் அறிக்கையும் பேசுகிறது.
ஆயுதப் படைகளால் கடைக்குள் அழைத்துச் செல்லப்படுபவர்மோதலில் கொல்லப்பட்டதாக சோடிப்பு.
இதெல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியாதி இந்து நாளிதழ்களுக்கு தெரியாதது அல்ல. இருப்பினும் மோடிக்கு கூஜா தூக்க வேண்டும் என்று வரும் போது அவர்கள் எந்தக் கூச்சமும் அடைவதில்லை.
மணிப்பூர் சட்ட விரோத கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சங்கம்” மற்றும் மனித உரிமை கண்காணிப்பு” ஆகிய தொண்டு நிறுவனங்கள், “கடந்த 30 ஆண்டுகளில் மணிப்பூரில் நிகழ்த்தப்பட்ட 1,528 சட்ட விரோத கொலைகளில் குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்திருந்தனர். இத்தகைய கொலைகளை செய்யும் ஆயுதப் படையினரை பாதுகாக்க ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) பயன்படுத்தப்படுகிறது என்றும்சமீபத்தில் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கும்படியும்அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களில் 12 வயது சிறுவனும் அடக்கம்.
இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் திரு ஜே.எம்.லிங்டோமற்றும் டாக்டர் அஜய் குமார் சிங் அடங்கிய விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர் போலி மோதலில் கொல்லப்பட்டதை எதிர்த்து போராட்டம்.
பொது நல வழக்கில் பட்டியலிடப்பட்டிருந்த போலி மோதல் கொலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமீபத்திய வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் ஆயுதப் படையினரின் சாட்சியங்களை விசாரித்தும்கொல்லப்பட்டவர்களுக்கு கடந்த கால குற்றப் பின்னணி உள்ளதா என்று கண்டறிந்தும்இந்தக் குழு 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
முதலாவது வழக்கில்ஆசாத் கான் என்ற 12 வயது சிறுவன் அவனது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாக அவனது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால்ஆயுதப் படையினர் தரப்பிலோ ஆசாத் கான் ஒரு பயங்கரமான தீவிரவாதி. நாங்கள் அவன் வீட்டை நெருங்கும் போது இன்னொரு சிறுவனோடு வீட்டின் பின்புறமாக தப்பித்து ஓடினான்ஓடும் போது மிமீ துப்பாக்கியால் எங்களை நோக்கிச் சுட்டான். தற்காப்புக்காக ஏகே 47 தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டதில் ஆசாத் கான் குண்டடி பட்டு விழுந்து விட்டான். இன்னொரு சிறுவன் தப்பி ஓடி விட்டான்” என்கின்றனர் ஆயுதப் படையினர்.
AFSPA சட்டத்தை எதிர்த்து கங்களா இல்லம் முன்பு பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (ஜனவரி 25, 2014)
ஏகே 47 துப்பாக்கி ஏந்திய 20 பாதுகாப்புப் படையினர் மிமீ கைத்துப்பாக்கியால் சுட்ட சிறுவனை தற்காப்புக்காக சுட்டுக் கொன்றனர் என்பது நம்ப முடியாதது. மேலும் சிறுவர்கள் தரப்பில் குண்டுகள் சுடப்பட்டதாக கூறும் ஆயுதப் படையினர் 65 முறை சுட்டிருக்கின்றனர். பட்டப் பகலில் நடந்ததாக கூறப்படும் இந்த மோதலில் ஆயுதப் படையினர் யாரும் காயமடையவில்லை. மணிப்பூர் காவல் துறை  அளித்த தகவல்களின்படி ஆசாத் கானுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு இருப்பதாகவோகுற்றப் பின்னணி இருப்பதாகவோ நிரூபிக்கப்படவில்லை.
எனவேமுகமது ஆசாத் கான் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு மோதல் இல்லை என்றும் படையினர் தற்காப்புக்காக சுட்டதில் அவன் கொல்லப்படவில்லை” என்றும் ஹெக்டே விசாரணை குழு முடிவு செய்திருக்கிறது.
இரண்டாவது வழக்கில், 20 வயதான கும்போங்மயூம் ஓர்சன்ஜியை நோக்கி ஏகே 47 முதலான கனரக ஆயுதங்களால் 41 முறை சுட்டு 10 குண்டு காயங்களை ஏற்படுத்திய பாதுகாப்புப் படையினர்அதற்கு காரணமாக கும்போங்மயூம் தங்களை நோக்கி மிமீ கைத்துப்பாக்கியால் சுட்டதாக (ஒரு முறை) கூறியிருக்கின்றனர். கும்போங்மயூமின் அம்மாசம்பவ தினத்தன்று தனது மகன் தனது ஸ்கூட்டரை ரிப்பேர் செய்ய வெளியில் போனதாகவும்வெளியூர் போவதற்கு முன்பு மகனுடன் தொலைபேசியில் பேசியதாகவும்வெளியூர் போன பிறகு அவர் கொல்லப்பட்டதாக தொலைபேசி தகவல் வந்ததாகவும் கூறியிருக்கிறார். கும்போங்மயூம் கொல்லப்பட்ட சம்பவம் மோதல் இல்லை என்றும் பாதுகாப்புப் படையினர் சுயபாதுகாப்புக்காக சுட்டனர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் விசாரணை குழு அறிக்கை அளித்திருக்கிறது.
2004-ம் ஆண்டு கொல்லப்பட்ட தங்ஜன் மனோரமா
மூன்றாவது வழக்கில்வெளியில் டீ குடிக்கச் சென்ற கோபிந்த் மேய்த்தேயும்அவரது உறவினர் நோபோ மேய்த்தேயும் வீடு திரும்பவில்லை என்கின்றனர் அவர்களது குடும்பத்தினர். ஆனால்தங்களை தாக்கிய இந்த இளைஞர்களை தற்காப்புக்காக தாங்கள் சுட்டதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் உண்மையான மோதல் இல்லைபாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு இவர்களை கொன்றிருக்கின்றனர் என்று ஹெக்டே கமிஷன் முடிவு செய்திருக்கிறது.
நான்காவது வழக்கில்காணாமல் போன பசு ஒன்றைத் தேடி மிதி வண்டியில் வெளியில் போன 20 வயதான கிரன்ஜித் சிங்இம்பால் மண்டல மருத்துவ நிலையத்தின் பிணவறையில் உயிரற்ற உடலாகத்தான் பார்த்ததாக கூறுகிறார் அவரது தந்தை. இந்த வழக்கிலும் தற்காப்புக்காக சுட்டதில் கிரன்ஜித் சிங் இறந்து விட்டார் என்று பாதுகாப்புப் படையினர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது ஹெக்டே கமிஷன் அறிக்கை.
ஐந்தாவதாகசொங்தாம் உமாகாந்தா அவரது நண்பரை பார்க்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்அவரை இம்பால் அரசு மருத்துவமனை பிணவறையில் அடுத்த நாள் பிணமாக பார்த்ததாகவும் அவரது அம்மா புகார் கூறியிருக்கிறார். அவரது நண்பரின் தாய் கொல்லப்பட்ட சொங்தாம் தன் மகனை சந்திக்க வந்தபோது அவருடன் ஆயுதம் ஏந்திய இரண்டு நபர்கள் வந்ததாகவும்சிறிது நேரத்தில் பாதுகாப்புப் படையினர் வந்து அவரை இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்திலும்பாதுகாப்புப் படையினர் மோதலில் தற்காப்புக்காக உமாகாந்தாவை கொன்று விட்டதாக  சொல்வதை நிராகரித்திருக்கிறது கமிஷன்.
ஆயுதப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட தங்ஜம் மனோரமாவின் உடல்.
ஆறாவது வழக்கில்ஊறுகாய்களுக்கான பாலிதீன் பைகள் வாங்கப் போன அகோய்ஜம் பிரியோப்ரதா வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் மாலையில் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததாக அவரது அம்மா புகார் தெரிவித்திருக்கிறார். இவரது மரணமும் மோதலில் நடக்கவில்லைபாதுகாப்புப் படையினர் அடித்ததில் இறந்திருக்கிறார் என்று ஹெக்டே அறிக்கை முடிவு செய்திருக்கிறது.
இந்த அறிக்கைக்கான பதிலில்தான் மோடி அரசு தனது தோலில் உள்ள வரிகளை அழித்துக் கொண்டு விசமற்ற சாது பாம்பாக மாறி விட்டதாக தி இந்து நாளிதழும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் பூரித்திருக்கின்றன. ஆனால்தலைப்புச் செய்தியைத் தாண்டி படிக்கும் போது மோடி அரசின் உண்மையான பாசிச முகம் தெரிகிறது.
போலி மோதல் கொலைகள் பற்றிய விசாரணை என்ற பெயரில் நல்ல எண்ணத்துடன்மோசமான நோக்கமின்றி பணியாற்றும் அப்பாவி பாதுகாப்புப் படையினர் அலைக்கழிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று தொடர்கிறது உள்துறை அமைச்சகத்தின் பதில். அதாவது நல்ல எண்ணத்துடன்’, ‘மோசமான நோக்கமின்றி’ பணியாற்றுவதற்கு இந்திய அரசால் ஏகே 47 துப்பாக்கிகள் கொடுத்து அனுப்பப்படும் ஆயுதப் படையினரை அவர்களது நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி கேட்டு தொந்தரவு செய்யக் கூடாதாம். அவ்வாறு செய்வதுமோடியோஅல்லது உயர் பதவிகளில் இருக்கும் ஏதாவது ஒரு கேடியோ உத்தரவிட்டால் கண்மூடித்தனமாக அடிபணிவதற்கு அவர்களுக்கு மனத்தடையை ஏற்படுத்தி விடுமாம்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்களை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தீக்குளித்த பேபாம் சித்தரஞ்சன்
pebam-chittaranjan-1chittranjan-4pebam-chittaranjan-2chittaranjan-3
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நோக்கத்துடன் பல தலைமறைவு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும்அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருப்பதாகவும்தீய வழிகளிலும்வெளிநாடுகளிலிருந்தும் திரட்டிய பணத்தை அதற்கு பயன்படுத்துவதாகவும் மோடி அரசின் பதில் தெரிவிக்கிறது. ஆனால்இந்திய அரசின் பாதுகாப்புப் படைகள் அப்படிப்பட்ட தலைமறைவு அமைப்புகளை எதிர்கொள்ளும் பெயரில் 
  • தங்ஜம் மனோரமா முதல் ஆசாத் கான் வரை ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்திருக்கின்றனர்.
பாதுகாப்புப் படைகள் இத்தகைய பாதிக்கப்பட்ட பகுதியில் இயங்கி வருகின்றனர். ஆனால்போராளிகளின் ஆதரவாளர்கள் எந்த ஒரு மோதல் கொலையையும் போலி என்று பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். இது போன்ற போலி’ மோதல் கொலைகளில் ஏதாவது அப்பாவி பாதுகாப்புப் படைவீரர் அலைக்கழிக்கப்பட்டால்அது ஆயுதப் படைகளின் மன உறுதியை குலைத்து விடும்.
  • ” 12 வயது சிறுவன்தொலைந்து போன பசுவை தேடிப் போனவர்டீ குடிக்க போனவர்ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய போனவர்நண்பனை பார்க்கப் போனவர் இவர்கள்தான் மோடி அரசு சொல்லும் தலைமறைவு அமைப்புகள். 
கொல்லப்பட்ட 1,528 பேரில் ரேண்டமாக எடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் போலி மோதல் என்று விசாரணை கமிஷன் முடிவு செய்திருக்கிறது. ஆயுதப் படையினர் சொல்லும் கதையின் அடிப்படையிலேயே கூட இந்த பயங்கரமான பயங்கரவாதிகள்’ ஏந்தியிருந்த ஆயுதம் மிமீ கைத்துப்பாக்கிகள்.
பேபாம் சித்தரஞ்சன் நினைவு
பேபாம் சித்தரஞ்சன் நினைவு
பகைமையானபாதுகாப்பற்ற சூழலில் இயங்கும் ஆயுதப் படையினருக்கு அடிப்படையானமிகக் குறைந்த சட்ட பாதுகாப்பை ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் வழங்குகிறது. எனவே ஆயுதப் படையினர் உள்ளூர் காவல்துறையிடமிருந்தும்குற்றவழக்கு விசாரணைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.” என்கிறது மோடி அரசின் அறிக்கை. உள்ளூர் சாதி வெறியன் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை பாலியல் குற்ற முதலைகளே தப்பித்து போய்க் கொண்டிருக்கும் அளவிலான ஓட்டைகளைக் கொண்ட காவல்துறை விசாரணை வலையில் கூட தங்கள் செல்ல ஆயுதப் படைகள் சிக்கி விடக் கூடாது என்பதுதான் மோடி அரசு மணிப்பூருக்கு வழங்கும் ஜனநாயகம்’. இதன்படி ஆயுதப் படைகளின் கொலைகொள்ளைவன்முறை உள்ளிட்ட எந்த குற்றச் செயலையும் மாநில காவல் துறை விசாரிக்க முடியாது.
மணிப்பூரில் அந்த சட்டத்தை நீட்டிப்பதற்கு மாநில சட்டசபையின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற பரிந்துரையையும் அரசு நிராகரித்திருக்கிறது. அப்படி செய்தால்தேவைப்படும் நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய் விடும்” என்றது. மணிப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் மாதக் கணக்கில் 144 தடையுத்தரவுக்கு உட்படுத்தப்படுவதும்கோவையில் புரட்சிகர அமைப்புகள் பொதுக் கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த விடாமல் தடுக்கப்படுவதும்கடலூர் மாவட்டத்தில் யாரும் பேரணி நடத்தக் கூடாது என்ற காவல் துறை அடாவடியும் ஆன இந்திய ஜனநாயக’ நடைமுறைகளின் அதி உயர்ந்த வடிவம்தான் மணிப்பூரில் இயங்கி வரும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்.
இவ்வாறுமணிப்பூரை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆட்சி செய்யும் தனது உத்தேசத்தை தெரிவித்திருக்கும் மோடி அரசுஅதற்கான நியாயமாக ஒரு காரணத்தை எடுத்து வெளியில் விடுகிறது.
இந்தியா ராணுவமேஎங்களை ரேப் செய்” – 2004-ல் தங்ஜம் மனோரமா படுகொலையைக் கண்டித்து கங்களா இல்லத்தின் முன்பு மணிப்பூர் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம்.
மனம் போன வன்முறையில் ஈடுபடும் போராளிகளின் முக்கிய இலக்காக அதிகாரிகள் இருக்கின்றனராம். 1,528 பேர் போலி மோதல் கொலைகளில் கொல்லப்படுவதற்கு காரணமான அதிகாரிகள் மீதான வன்முறை எப்படிப்பட்டதுகடந்த சில ஆண்டுகளில் 27 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல  ஐ.ஏ.எஸ்ஐ.பி.எஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த மனிதத் தன்மையற்ற கசாப்புக்கு உயிரை பலி கொடுத்திருக்கின்றனர். இந்த அபாயங்களுக்கு மத்தியில்தான் மணிப்பூர் நிர்வாகம் எப்படியோ செயல்பட்டு சாதாரண குடிமகனுக்கு அடிப்படை சேவைகளை வழங்க முடிந்திருக்கிறது.” 1,528 பேரைக் கொன்ற அடிப்படை சேவையை வழங்கும் பணியில் 27 அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தமது உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த சட்டத்தை எதிர்த்து 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மணிப்பூர் மாணவர் பேபாம் சித்தரஞ்சன் தீக்குளித்தார். முன்னதாகஅந்த ஆண்டு ஜூலை மாதம் தங்ஜன் மனோரமா பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மணிப்பூரின் பெண்கள் 17 அசாம் ரைஃபிள்ஸ் ஆயுதப்படையினர் ஆக்கிரமித்திருந்த கங்களா இல்லத்தின் முன்பு தமது ஆடைகளை களைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அசாம் ரைஃபிள்ஸ் படையினரின் முகாம் கங்ளாவிலிருந்து மாற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்துஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை பற்றி ஆய்வு செய்ய நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டி நியமிக்கப்பட்டது. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்த அந்த கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு குப்பைக் கூடையில் போட்டு விட்டது.
தற்போதுஹெக்டே கமிஷனின் விசாரணையின் போது பாதுகாப்புப் படையினருக்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படியான அடிப்படை உரிமைகள் கூட கொடுக்கப்படாமல்அவர்கள் தம்மைத் தாமே குற்றம் சாட்டிக் கொள்ளக் கூடிய வகையில் சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்கிறது. அதாவது, ‘குற்றம் புரிந்தவனை விசாரித்தால் உண்மை வெளிப்பட்டு விடும்எனவே விசாரணை கூடாது’ என்ற மகத்தான ஜனநாயக தத்துவத்தை மோடியிசத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக மத்திய அரசு முன் வைத்திருக்கிறது.
  • போலி மோதல் கொலைகள் பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க அது குறித்த செய்திக்கு,  முற்றிலும் எதிரானநேர்மறை டுவிஸ்ட் கொடுத்திருக்கும் ஊடகங்களின் அயோக்கியத்தனத்தைஅல்லது மொள்ளமாரித்தனத்தை பற்றி என்ன சொல்வது?
டைம்ஸ் ஆஃப் இந்தியாஜால்ரா ஆஃப் மோடி என மாறி நீண்ட காலம் ஆகி விட்டது தெரிந்த விஷயம் என்றாலும்முற்போக்குமனித உரிமை என்று சீன் போடும் தி இந்து நாளிதழின் ஆளும் வர்க்க சாய்வு இங்கு அம்பலமாகியிருக்கிறது. கூடவே இராணுவம்
  • போலீசின் அடக்குமுறையை வெளிப்படையாக ஆதரிக்கும் பாசிசத்தின் முன்னுரையும் மோடி அரசால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
-    செழியன் ((Thanks: வினவு!))
http://www.vinavu.com/2014/08/21/modi-government-defends-its-right-to-conduct-fake-encounters/