இஷ்ராக், லுஹாத் தொழுகைகள்!
இஷ்ராக் தொழுகை
சூரியன் உதிக்கும் நேரம், இஷ்ராக் என்று கூறப்படும். இஷ்ராக் தொழுகை என்று ஒருதொழுகை ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் நாமறிந்து இல்லை. "ஸுபுஹுத்தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவராகஅமர்ந்து, சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்க்கள் தொழுதால் ஒரு ஹஜ்ஜும் ஒருஉம்ராவும் செய்த கூலி கிடைக்கும்" என்ற கருத்தில் பலவீனமான சில அறிவிப்புகள்உள்ளன.
யாரேனும் ஜமாத்துடன் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுதுவிட்டு, சூரியன்உதயமாகும்வரை அல்லாஹ்வை நினைவு கூர்பவராக அமர்ந்து, பின்னர் இரண்டுரக்அத்கள் தொழுதால் ஒரு ஹஜ், ஒரு உம்ராச் செய்தது போன்ற கூலி அவருக்குஉண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதோடு, ''முழுமையாக, முழுமையாக,முழுமையாக'' (ஹஜ், உம்ராவின் கூலியைப் போன்று) கிடைக்கும் என்றும்கூறினார்கள். - அறிவிப்பாளர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் - திர்மிதீ 535).
மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபூ ளிலால் என்பவர்பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே, இது பலவீனமானஅறிவிப்பாகும்.
இதேக் கருத்திலும், "ஃபஜ்ருத் தொழுதுவிட்டு, சூரியன் உதயமாகும்வரை தொழுதஇடத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்" என்றும் மேலும் சில அறிவிப்புகள் தப்ரானிநூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் என்றுவிமர்சிக்கப்பட்டவர்களே இடம்பெற்றுள்ளனர். சுன்னத்தான தொழுகை என்றுகருதப்படும் இஷ்ராக் தொழுகைக்குச் சான்றாக ஸஹீஹான அறிவிப்புகள் இல்லை!
சுபுஹுத் தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும் வரை தொழுத இடத்திலேயேஅமர்வது,
நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் அவைகளில் அமர்ந்திருந்தது உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள்"ஆம், அதிகமாக(அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சூரியன்உதயமாகாதவரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன்உதயமானபின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம்குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
(இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) புன்னகைப்பார்கள்" என்று கூறினார்கள். - அறிவிப்பாளர்: ஜாபிர் பின் ஸமுரா(ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) (நூல்கள் - முஸ்லிம் 1188, 1189, 4641, திர்மிதீ,நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).
சுபுஹுத் தொழுகைக்குப் பின் சூரியன் உதயம்வரை நபி (ஸல்) அவர்கள் பள்ளியில்அமர்ந்திருப்பார்கள். அந்நேரத்தில் மக்கள் அறியாமைக் கால முந்தைய செய்திகளைக்குறித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்களும்புன்னகைப்பார்கள் என்று ஸஹீஹான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
"... இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால் உம்ராவும், ஹஜ்ஜும் செய்த நன்மை கிடைக்கும்"என்பது பற்றிய எந்தக் குறிப்பும் மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸில் இல்லை.
தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் அமர்ந்திருப்பதன் சிறப்பு.
ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போதெல்லாம் அவர்தொழுகையிலேயே இருப்பவராவார். உங்களுள் ஒருவர் பள்ளியில் இருக்கும்போதுஹதஸ் ஏற்படாதவரையில் (உளூ நீங்காதவரையில்) இறைவா! இவரைமன்னித்துவிடு! இறைவா! இவருக்கு அருள் புரிவாயாக! என்று வானவர்கள்அவருக்காக பிராத்தித்துக் கொண்டே இருக்கின்றனர். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - திர்மீதி 302, இப்னுமாஜா, அஹ்மத்).
ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்றிவிட்டு அடுத்த நேரத் தொழுகையைஎதிர்பார்த்துக் காத்திருந்தாலும் அதற்கும் தொழுகையில் இருப்பது போன்ற நன்மைகிடைக்கும்" என நபிமொழிகளிலிருந்து விளங்க முடிகிறது. கடமையானத்தொழுகையைப் பள்ளியில் நிறைவேற்றியபின் உளூ நீங்கும்வரை பள்ளியிலேயேஒருவர் அமர்ந்திருந்தாலும் அவருக்கு வானவர்களின் பிரார்த்தனை நன்மையும்கிட்டும். என்பதால் பொதுவாக பள்ளியில் அமர்ந்திருப்பது நன்மையாகும் என்றுவிளங்கலாம்!
லுஹாத் தொழுகை
லுஹா - முற்பகல் நேரத்தில் தொழும் சுன்னத்தான தொழுகையைக் குறித்துஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்பட்டுள்ளன.உங்களுள் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தம்) ஒவ்வொரு (உடலுறுப்பின்)மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு(சுப்ஹானல்லாஹ்) துதிச் சொல்லும் தர்மமாகும்.
ஒவ்வொரு (அல்ஹம்து லில்லாஹ்) புகழ்ச் சொல்லும் தர்மமாகும். ஒவ்வொரு (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஓரிறை உறுதிமொழியும் தர்மமாகும்; அவனைப்பெருமைப்படுத்தும் ஒவ்வொரு (அல்லாஹு அக்பர்) சொல்லும் தர்மமே! நல்லதைஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக)இரண்டு ரக்அத்கள் (ளுஹா)தொழுவது போதுமானதாக அமையும். - அறிவிப்பவர்அபூதர் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1181, அபூதாவூத்).
"ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் 'ளுஹா' நேரத்தில்இரண்டு ரக்அத்கள் தொழுமாறும் உறங்குவதற்குமுன் வித்ருத் தொழுகையைத்தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர் (ஸல்) அவர்கள் எனக்குஅறிவுறுத்தினார்கள்!" அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 1178, 1981,முஸ்லிம் 1303, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், தாரமீ).
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது, ளுஹாத் தொழுவது, வித்ருத்தொழாமல் உறங்கலாது, ஆகிய மூன்று விஷயங்களை நான் வாழ்நாளில் ஒருபோதும்கைவிடக் கூடாது என என் நேசர் (நபி- ஸல்) அவர்கள் அறிவுறித்தினார்கள்.அறிவிப்பாளர் அபூதர்தா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1304, அபூதாவூத், அஹ்மத்).
நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுதாக உம்முஹானி(ரலி)யைத் தவிர வேறு எவரும்அறிவிக்கவில்லை'நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு மக்காவெற்றியின்போது வந்து குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதைவிடச்சுருக்கமாக வேறு எந்தத் தொழுகைகளையும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை.ஆயினும் அவர்கள் ருகூவையும் ஸுஜூதையும் முழுமையாகச் செய்தார்கள்' என்றுஉம்முஹானி(ரலி) அறிவித்தார். அறிவிப்பவர் அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) (நூல்கள் - புகாரி 1176, 4292, முஸ்லிம் 1298, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்,இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரமீ).
லுஹாத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களிலிருந்து எட்டு ரக்அத்துக்கள்வரைதொழலாம் என்ற விபரத்தை முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களிலிருந்துஅறியலாம். நன்கு சூரியன் உதித்தபின் முற்பகல் நேரத்தில் தொழவேண்டியசுன்னத்தான லுஹாத் தொழுகையை இரண்டு, நான்கு, ஆறு, எட்டு ரக்அத்துக்கள்வரைவிரும்பியவாறு தொழுதுகொள்ளலாம்.
இஸ்திகாரா தொழுகை
நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத்தந்ததுபோல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும்கற்றுத் தந்தார்கள், ''உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால்கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர் 'இறைவா! உனக்குஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன்; உனக்கு வல்லமைஇருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன்; உன்னுடைய மகத்தானஅருளை உன்னிடம் வேண்டுகிறேன்! நீ அனைத்திற்கும் ஆற்றலுள்ளவன்; நான்ஆற்றல் உள்ளவன் அல்லன். நீ அனைத்தையும் அறிகிறாய்; நான் அறிய மாட்டேன்.மறைவானவற்றையும் நீ அறிபவன்!
இறைவா! எனது இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடையவாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதைஎளிதாக்கி, அதில் எனக்கு பரக்கத் செய்வாயாக! இந்தக் காரியம் என்னுடையமார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால்என்னைவிட்டு இந்தக் காரியத்தையும், இந்தக் காரியத்தைவிட்டு என்னையும் திருப்பிவிடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! அதில் எனக்குத்திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்."என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - புகாரி 1162, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத், அஹ்மத்).
எந்த ஒரு விஷயத்திலும் ஒரு நிலையான முடிவுக்கு வருவதில் தடுமாற்றம் ஏற்பட்டு,அந்தக் காரியத்தைச் செயல்படுத்திட மனக் குழப்பம் ஏற்படுமானால் நல்லதை நாடிஇரண்டு ரக்அத்துக்களைத் தொழுதுவிட்டு அதன் பின்னர் தமது சொந்தப்பிரச்சினையைப் பற்றிய கோரிக்கையை அல்லாஹ்விடம் முறையிட்டு அதில் ஒருமுடிவைத் தீர்மானிக்கவும் மேலும். தமது மேலதிகமானத் தேவையின் கோரிக்கையைஅல்லாஹ்விடம் முறையிடவும் மேற்கண்ட ஹதீஸ் வழிகாட்டுகின்றது.
கடமையான மற்றும் சுன்னத்தானத் தொழுகைகளையும் நிறைவேற்றி, நஃபில் என்னும்விருப்பமான தொழுகைகளையும் சலிப்பின்றி - சில குறிப்பிட்ட நேரங்கள் தவிர்த்து -எந்நேரமும் தொழுது அல்லாஹ்வை வழிபடலாம். இன்னின்ன சுன்னத்தானதொழுகைக்கு இன்னின்ன நன்மைகள் உண்டு எனக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் அதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளக்கம்பெறவேண்டும்! ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கு மட்டுமே மார்க்க அங்கீகாரம்உண்டு என்பதை விளங்கிச் செயல்படுவோம்!
லுஹாத் தொழுகையின் சிறப்பு!
416- நபி (ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சிலசமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்து அவர்களின் மீது அதுபாரமாகி விடுமே என்ற அச்சமே இதற்கு காரணம். நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும்லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன்.புஹாரி : 1128 ஆயிஷா (ரலி)
417- நபி (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுததாக உம்முஹானி (ரலி)யைத் தவிர வேறுஎவரும் அறிவித்ததில்லை. ‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது என்னுடையஇல்லத்தில் குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாகவேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும்ருகூவையும் ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானி (ரலி)குறிப்பிட்டார்கள்.புஹாரி: 1103 இப்னு அபீ லைலா (ரலி)
418-ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹாத்தொழுமாறும் வித்ருத் தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை நபி(ஸல்)அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றைவிடமாட்டேன்.புஹாரி: 1178 அபூஹூரைரா (ரலி)
(இறைவன் மிக்க அறிந்தவன்).
வித்ரு தொழுகை
"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும்
வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்"
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ
"இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்"
என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
"உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
"வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
வித்ரு தொழும் முறை
மூன்று ரக்அத் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் அமரக்கூடாது! அதாவது மக்ரிப் தொழுகையில் எப்படி இரண்டாம் ரக்அத்தில் அமருகிறோமோ அதைப்போன்று அமரக்கூடாது. மூன்றாம் ரக்அத்தின் இறுதியில் அமர்ந்து ஸலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருக்கூவிற்கு முன்போ, பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
"மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்" அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
ஐந்து ரக்அத்
ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் கடைசி ரக்அத்தான ஐந்தாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து சலாம் கூறி முடிக்க வேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்"
அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஏழு ரக்அத்
ஏழு ரக்அத் தொழும்போது இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் ஏழாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து ஸலாம் கூறலாம். அல்லது ஆறாம் ரக்அத்திலும் ஏழாம் ரக்அத்திலும் அமர்ந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கூறலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார்ந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஆறாவது ரக்அத்திலும் ஏழாவது ரக்அத்திலும் மட்டுமே உட்காருவார்கள். ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூத், நஸயீ
ஒன்பது ரக்அத்
ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் எட்டாவது ரக்அத்திலும் ஒன்பதாவது ரக்அத்திலும் அமர்ந்து ஒன்பதாம் ரக்அத்தில் மட்டுமே சலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக் கொள்ளவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து விட்டு ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ
குனூத் ஓதுதல்
வித்ரை ஒரு ரக்அத் முதல் ஒன்பது ரக்அத்கள் வரை ஒற்றைப்படையாக விரும்பியவாறு தொழலாம் என்பதையும், அப்படி தொழும்போது கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓத வேண்டுமென்பதையும் பார்த்தோம். இன்றைக்கு குனூத் என்ற பெயரால் சில துஆக்களை ஓதுகின்றனர்.
ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதிய துஆ:
நபி صلى الله عليه وسلم ஓதிய கூனூத்
اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْ مَنْ هَدَيْتَ وَعَافِنْيْ فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلََََّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِيْ فِيْمَا اَعْطَيْتَ وَقِنِيْ شَرَّ مَاقَضَيْتَ فَاِنَّكَ تَقْضِيْ وَلاَ ُيقْضى عَلَيْكَ اِنَّهُ لاَيَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதை(த்)த வஆஃபீனீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்லை(த்)த வபாரிக்லீ ஃபீமா அஃதை(த்)த வகினீ ஷர்ர மாகளை(த்)த ஃபஇன்னக தக்ளீ வலா யுக்ளா அலை(க்)க இன்னஹு லாயதில்லு மன் வாலை(த்)த தபாரக்த ரப்பனா வதஆலை(த்)த
அறிவிப்பவர்: ஹஸன் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா, நஸயீ
பொருள்: இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொருப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரகத்(விருத்தி) செய்வாயாக! என் விஷயத்தில் நீ விதியாக்கிய தீங்குகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! எதையும் விதியாக்குபவன் நீயே! உனக்கு எவரும் விதியேற்படுத்த முடியாது. நீ எவருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடைய மாட்டார்.
இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
"உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
No..No..Excuse s for Prayer