வாணியம்பாடியில் தமுமுக சார்பில் உருது மொழி பாதுகாப்பு பொதுக்கூட்டம்
வாணியம்பாடியில் நடந்த உருது மொழி பாதுகாப்பு பொதுக்கூட்டம்.
------------------
27/04/13 சனிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர் வாணியம்பாடி, ஜண்டாமேடு பகுதியில் தமுமுக சார்பில் உருது மொழி பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது,
இக்கூட்டத்திற்கு நகர தலைவர் அக்பர் ஜாஹித் தலைமை தாங்கினார், நகர செயலாளர் நூர் முஹம்மத் வரவேற்றார், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், கழக பேச்சாளரும், மாவட்ட து.செயலாளருமான CKசனாவுல்லா, பட்டேல் முஹம்மத் யூசுப், நமாஜி அப்துல் கரீம், மவ்லவி அப்துல் ரஹ்மான் மதானி, மவ்லவி வலியுல்லாஹ் ரஷாதி, மாவட்ட செயலாளர்V.Z அப்துல் ஷூகூர், மாவட்ட தலைவரும், மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மூத்த தலைவர் பேரா.முனைவர் MH ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்புரையாற்றினார், பேராசிரியர் அவர்கள் தனது உரையில், உருது மொழியின் வரலாறை மக்களுக்கு புரிய வைத்தார்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய மொழி உருது மொழிதான் என்றும் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி உருது மொழிக்கு தான் இருந்தது, ஆனால் சூழ்ச்சி செய்து ஹிந்தி மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது,
உருது மொழி 1200ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிட்ட அவர், திரைப்படத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஒரேயொரு ஹிந்தி திரைப்படமாவது உருது கலக்காமல் எடுக்க முடியுமா என சவால் விடுத்தார்,
உருது மொழி செய்தி பத்திரிகை முதன்முதலில் தமிழகத்தில் தான் வெளியானது, கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்தியார் பத்ரி என்பவர் தான் முதன்முதலில் திருக்குறளை உருதுவில் மொழிபெயர்த்தார்,
உருது மொழியில் புகழ்பெற்ற ஒன்றாக திகழும் 'முஷாஹிரா' என்ற கவியரங்கத்தை போலவே தமிழில் 'கவி இரவு' என்ற பெயரில் கவியரங்கத்தை அறிமுகம் செய்தார், இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது,
உருதுவை பற்றி இதுபோன்று பல அறிய தகவல்களை பேராசிரியர் அவர்கள் சொன்னார், இவ்வளவு சிறப்பான உருது மொழியை கடந்த 2006 ஆம் ஆண்டு, திமுக அரசு சட்டம் இயற்றி இருமொழி கொள்கையை தடைசெய்து,
மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சிக்கான பட்டியலிலுருந்து உருதுவை நீக்கியது, இதனால் மாணவர்கள் உருது படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இது லட்சோபலட்சம் உருது பேசும் முஸ்லிம்களுக்கு திமுக செய்த துரோகமாகும்,
இதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி அணைக்கட்டு தொகுதி தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது என்றார். உடனடியாக அதிமுக அரசு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்,
தவறும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்தார். இறுதியில் பேராசிரியர் அபுல் ஃபசல் அவர்கள் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
------------------
27/04/13 சனிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர் வாணியம்பாடி, ஜண்டாமேடு பகுதியில் தமுமுக சார்பில் உருது மொழி பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது,
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய மொழி உருது மொழிதான் : பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாணியம்பாடியில் த மு மு க நடத்திய உருது மொழி பாதுகாப்பு பொதுகூட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உரையாற்றுகையில்
இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி உருது மொழிக்கு தான் இருந்தது, ஆனால் சூழ்ச்சி செய்து ஹிந்தி மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது, உருது மொழி 1200ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிட்ட அவர், திரைப்படத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஒரேயொரு ஹிந்தி திரைப்படமாவது உருது கலக்காமல் எடுக்க முடியுமா என சவால் விடுத்தார், உருது மொழி செய்தி பத்திரிகை முதன்முதலில் தமிழகத்தில் தான் வெளியானது, கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்தியார் பத்ரி என்பவர் தான் முதன்முதலில் திருக்குறளை உருதுவில் மொழிபெயர்த்தார், உருது மொழியில் புகழ்பெற்ற ஒன்றாக திகழும் 'முஷாஹிரா' என்ற கவியரங்கத்தை போலவே தமிழில் 'கவி இரவு' என்ற பெயரில் கவியரங்கத்தை அறிமுகம் செய்தார், இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, உருதுவை பற்றி இதுபோன்று பல அறிய தகவல்களை பேராசிரியர் அவர்கள் சொன்னார்,
இவ்வளவு சிறப்பான உருது மொழியை கடந்த 2006 ஆம் ஆண்டு, திமுக அரசு சட்டம் இயற்றி இருமொழி கொள்கையை தடைசெய்து, மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சிக்கான பட்டியலிலுருந்து உருதுவை நீக்கியது, இதனால் மாணவர்கள் உருது படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இது லட்சோபலட்சம் முஸ்லிம்களுக்கு திமுக செய்த துரோகமாகும், இதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதி தவிர அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி தோல்வியை தழுவியது, எனவே அதிமுக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டும், தவறும் பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கான விலையை கொடுக்க வேண்டிவரும் என்றார்.
பேராசிரியர் அபுல் ஃபசல் அவர்கள் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் நகரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~