அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நிதாகத் விளக்கப் பொதுக்கூட்டம்-- தம்மாம்
தம்மாம் மாநகர தமுமுக/மமக வின் நித்தாகத் (NITAQATH) விளக்க பொதுக்கூட்டம் மண்டல தலைவர் பொறியாளர் அப்துல் காதர் அவர்கள்
தலைமையிலும் மாநகர பொருளாளர் பொறியாளார் பிலால் பீர் மிஹம்மது
அவர்கள் முன்னிலையிலும் சஃபா மெடிக்கல் ஹாலில் கடந்த வெள்ளிகிழமை
(25-04-2013) அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு 7 மணி முதல் 10.30
மணி வரை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக இந்திய பண்பாட்டு பள்ளியின் தலைவர் திரு.திருநாவுகரசர் அவர்கள் வருகை புரிந்தார்கள்.
தொடக்கமாக சகோ. பிலால் பீர் முஹம்மது அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடர்ந்து பொறியாளர் அப்துல்காதர் அவர்கள் சவுதி அரசாங்கம் கொண்டு வந்துள்ள நிதாகத் சட்டத்தினால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதையும் இச்சட்டத்தின் வரையறுக்குள் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் ஆழமாக எடுத்துரைதார்கள்.மேலும் தொழிலாளார் அமைச்சகம் கொடுத்துள்ள கால அவகாசம் ஜீலை 3 க்குள் நித்தாகத் சட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார்கள்.
தொடர்ச்சியாக மண்டலப் பொது செயலாளர் காயல் சகோ.இம்தியாஸ் புஹாரி அவர்கள் சவுதி தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள நிதாகத் சட்டத்தின் பிரிவுகளை புரஜக்டர் மூலம் திரையில் வெளியிட, மண்டல துணைத்தலைவரும் விவாகாரத்துறை பொறுப்பாளருமாகிய காயல் சகோ.செயது இஸ்மாயில் அவர்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கத்தை அளித்தார்கள்.
இஸ்மாயீல் அவர்களின் விளக்கத்தைத் தொடர்ந்து,சுமார் 30 சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விரிவான பதிலளித்தார். முதல் கேள்வி கேட்ட ஒரு மாற்றுமத நண்பர் தெளிவான விளக்கத்தை அளித்த மண்டல துணைத்தலைவருக்கும் இதனை ஏற்பாடு செய்த தமுமுக விற்கு தனது வாழ் முழுவதும் நன்றிகடன் பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் இந்திய தூதரகத்தில் ஏற்கனவே EC (Emergency Certificate) Apply செய்தவர்களுக்கு EC வந்துள்ளதா என்பதை உடனடியாக வலைதளத்தில் பார்த்து தகவல் சொல்லபட்டது.
இவ்விளக்க கூட்டத்தை நல்லவிதமாக பயன்படுத்தி கொள்ளும் பொருட்டும் தமது சந்தேகங்களுக்கு விளக்கத்தை பெற்று கொள்ளும் பொருட்டும் சுமார் 200 பேர் இதில் கலந்து கொண்டனர்.
EC Apply செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு, அதே இடத்தில் உடனடியாக மாநகர தமுமுக துணைச்செயலாளர்களால் EC படிவம் வினியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டது. இவ்முகாமில் 13 நபர்களின் விண்ணப்பம் பெற பட்டன.
அதனை தொடந்து வேலை வாய்ப்பினை அளிக்க Star Of Kingdom Service , Naser Al Hajri மற்றும் Gammatechஆகிய மூன்று நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்திற்கு வேலைகளின் அடிப்படையில் தேவையான தொழிலாளர்கள் பற்றி கூறினார்கள். அப்பிரதிநிதிகளின் அலைபேசி எண்கள் புரஜக்டர் மூலம் திரையில் காண்பிக்கபபட்டது .பலரும் அவர்களின் நிறுவனத்தில் சேர விருப்பம் தெறிவித்து இவ்விளக்க பொதுக்கூட்டத்தை பயன்படுத்தி கொண்டன்ர்.
இறுதியாக மாநகர து.செயலாளர் சிங்கை ஜாகிர் ஹுசேன் அவர்கள் நன்றியுறை நிகழ்த்தியபின் விளக்க கூட்டம் துவா ஓதி இனிதே நடைபெற்று முடிந்தது.
தொகுப்பு
சேகைமைந்தன்
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com
Join: facebook.com/tmmk.khobar
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com
Join: facebook.com/tmmk.khobar
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~