அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வானவர்களின் நற்சாட்சியை விரும்புவோர்.. இதைக் கடைபிடியுங்கள்
வானவர்களின் நற்சாட்சியை விரும்புவோர்..
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவாக்ளும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர்.
'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்" என்று அவர்கள் விடையளிப்பார்கள்.
-என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி:-555
என்னதான் எதிரி ஆயினும்... பதில் சலாம் சொல்லி விடுகிறோம். எவ்வளவுதான் கருத்து வேறுபாடு என்றாலும்... நோயுற்றால் விசாரித்து விடுகிறோம்.
அடி பிடி சண்டை அளவுக்கு விரோதி ஆயினும் அவரின் ஜனாஸாவுக்கு சென்று விடுகிறோம்.
யாராவது தும்மி 'அல்ஹம்துலில்லாஹ்' சொல்ல, அதை காதால் கேட்ட மாத்திரத்திலேயே... தும்மியவர் யார் என்றே பாராமல் 'யர்ஹமுக்கல்லாஹ் ' சொல்லி விடுகிறோம். ஆனால்...
ஆனால்... என்னதான் நட்பு/சொந்தம்/இரத்த பந்தம் என்றாலும்... விருந்து அழைப்பை வேண்டுமென்றே புறக்கணிக்கிறோம். அதிலும்... 'வலிமாவை புறக்கணிப்பவர் என்னைச்சார்ந்தவர் அல்லர்' என்ற நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையையும் மீறி துணிந்து விருந்து அழைப்பை புறக்கணிக்கிறோம்..!
விருந்து அழைப்பில் முதன்மையானது வலிமா. அதைக்கூட கூட்டமாக புறக்கணிப்போர் அவசியம் சிந்தித்துப்பார்க்க வேண்டிய ஹதீஸ் இது..!
நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது..!

_____________________________________________________________________________________________
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~