அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத, ஊழல் செய்யாத
சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்றால் அது
தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சியின்
சட்டமன்ற உறுப்பினர்களான இருவர் மட்டுமே.
ஒன்று பேரா.டாக்டர்.ஜவாஹிருல்லாஹ் MLA.,
அவர்களும் மற்றொன்று ஆம்பூர் அஸ்லம் பாஷா MLA.,
அவர்களும் தான் என்பதை
பகிரங்கமாக அறிவிக்கிறோம்.
இப்படி அறிவிக்க
அ.தி.மு.க வுக்கு தைரியம் உண்டா?
தி.மு.க வுக்கு தைரியம் உண்டா?
தே.மு.தி.க வுக்கு தைரியம் உண்டா?
காங்கிரஸூக்கு தைரியம் உண்டா?
பா.ம.க வுக்கு தைரியம் உண்டா?
இன்னும் மற்ற கட்சிகளுக்கு தைரியம் உண்டா?
ஜவாஹிருல்லாஹ் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் விருது! - ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
செய்தி: காயல்பட்டணம்.காம்
தமிழகத்தில் உள்ள முன்னணி ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது சென்னையில் வழங்கப்பட்டது. இந்த விருதினை தெற்கு மதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை (சி.பி.எம்.), பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜே. புஷ்பலீலா ஆல்பன் (தி.மு.க.), ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (ம.ம.க.) மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டியராஜன் (தே.மு.தி.க.) ஆகியோர் பெற்றனர். இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொது செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆம், வரலாறு படைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஆறு அமைப்புகளின் ஊழல் எதிர்ப்பு போராளிகள், ஊழலுக்கு எதிரான நேர்த்தியான கூட்டணி அமைத்து, நான்கு நேர்மையான உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விருதுகளும் வழங்கியுள்ளனர். சென்னை எதிராஜ் சாலையில் உள்ள பெண்களுக்கான எதிராஜ் கல்லூரியின் கேளரங்கில் - பரிசளிப்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 11, 2012 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. பெருந்திரளானவர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். 90 வயதை தாண்டிய - திருப்பூர் பஞ்சாயத் யூனியனின் முன்னாள் தலைவர் - திரு வி.பொன்னுலிங்கம் - இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இலக்கிய செல்வர் திரு குமரி அனந்தன் - நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மூன்று உறுப்பினர்களுக்கு பொன்னாடை போத்தி, நினைவு பரிசுகளையும் வழங்கினார். அவர் - தனது வாழ்த்துரையில் - நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரை பற்றி குறிப்பிட்டார். இந்த கால அரசியல்வாதிகள் - காமராஜரின் வாழ்கையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர் போல் வாழ முயற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
திரிபுரா மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் திரு பி.எஸ். ராகவன் IAS - ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் வடிவமைத்துள்ள பரிசளிப்பு திட்டத்தை மிகவும் பாராட்டி பேசி, இதனை நாட்டிலேயே ஒரு முன்னோடியான முயற்சி என கூறினார். ஒரு நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முனைந்திடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்து கூறிய அவர், விருதுகளை வென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுதல் தெரிவித்தார்.
புதிய தலைமுறை ஊடகத்தின் ஆசிரியர் மாலன் மற்றும் பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் - ஊழலையும், லஞ்சத்தையும் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாது என கூறி, அதை எதிர்த்து எதையும் செய்ய துணியாத பொது மக்களின் நிலைப்பாட்டை கண்டித்தனர். ஊழல் எதிர்ப்பு போராளிகளின் தற்போதைய முயற்சி மக்களின் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
விருதுகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் - தற்போது போல், எப்போதும் சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்க முயற்சி செய்வோம் என்றும், இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களாக தொடர்ந்து செயலாற்றுவோம் என்றும், இந்த விருதுகளுக்கு பின்னால் உள்ள நெறிகளை உயர்த்தி பிடிப்போம் என்றும் உறுதி கூறினர்.
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பொது செயலாளர் திரு எஸ்.எம். அரசு - தனது வரவேற்புரையில் மூன்று விசயங்களை - சம்மந்தப்பட்ட அனைவரின் பரிசீலனைக்கும் எடுத்து வைத்தார்.
1) மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளும், பிற கட்சிகளின் அரசியல்வாதிகளும், தொண்டர்களும் - நாட்டுக்கும், மக்களுக்கும் தன்னலமற்ற சேவை புரிய தியாகம் செய்யவேண்டிய துறையாகவே அரசியலை பார்க்க வேண்டும். பொருளாதார வசதிகளை தேடுவோர் அரசியலை தேர்வு செய்ய கூடாது. அதனை நாடுவோர் - அதற்கு என உள்ள பிற பாதைகளை தேடி கொள்ளட்டும்.
2) ஒதுங்கிவிட்டு, பின்னர் வெளியில் இருந்து புலம்பாமல், நல்ல, சரியான சிந்தனைக்கொண்ட, நேர்மையானவர்கள் - இந்த நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றிட துணிந்து வரவேண்டும். தீயவர்களால் தீமை நடப்பதில்லை; தீயவர்கள் தீவிரமாக செயலாற்றும்போது, அதனை எதிர்த்து ஒன்றும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் (தீமை) நடக்கிறது.
3) நாட்டினர் முன் மிக கடினமான பணி உள்ளது. தங்களின் பிரதிநிதிகளாக செயல்பட நல்ல, நேர்மையானவர்களை அடையாளம் கண்டு, தேர்தலின் போது, அந்த நாட்டு பற்று மிக்கவர்களுக்கு - அவர் எந்த கட்சியினராக இருந்தாலும், யார் தலைவராக இருந்தாலும், எந்த கொடியினை கொண்டவராக இருந்தாலும், எந்த சின்னத்தை கொண்டவராக இருந்தாலும் - அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
பிரதிநித்துவ மக்களாட்சியில் - ஊழலற்ற நிர்வாகத்தினை நடத்திட இந்த மூன்று கொள்கைகளும் மிகவும் அவசியம்.
நிகழ்ச்சியினை நெறிப்படுத்திய ஐந்தாம் தூண் (5th Pillar) அமைப்பின் தலைவர் திரு விஜய் ஆனந்த் பேசுகையில் - தெளிவான முடிவுகள் கிடைக்கும் வரை இந்த ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார். ஊழல் எதிர்ப்பு அமைப்பின் கோவை பிரிவை சார்ந்த திரு சேலக்கரைச்சல் ஏ.ஸ்ரீதர் - ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, அதனை கூட்டத்தினர் ஒன்றாக வழிமொழிந்தனர்.
இந்த திட்டத்திற்கான வேலைகள் - மே மாதம் துவங்கியது. இறுதி பரிசளிப்பு நிகழ்ச்சிகளை - ஐந்தாம் தூண் அமைப்பின் செயல் இயக்குனர் திரு கே. பானுகுமார், தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் தலைவர் திரு எல்.எஸ். ஜெகநாதன், தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் திரு சந்திர போஸ், அதன் தலைமை நிலைய செயலாளர் திரு வி.ஆர்.சந்திரன், அதன் மக்கள் தொடர்பு செயலாளர் திரு ஏ.நபீஸ் அஹமத், அதன் செயல் திட்டங்கள் செயலாளர் திரு ஜேம்ஸ் ராஜநாயகம், அலுவலக மேலாளர் திருமதி தில்சத் பேகம் ஆகியோர் திறனாக ஏற்பாடு .செய்திருந்தனர்.
நேர்மை குறித்த அக்கறை இந்நாட்டில் - குறிப்பாக அரசியலில் - மிகவும் குறைவாக உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சிறப்பியல்புகள் பற்றி விவரிக்கும் ஐக்கிய நாட்டு சபையின் ஓர் ஆவணத்தில் - இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, "நேர்மை என்ற சொல்லுக்கு இந்தியர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை" என பதியப்பட்டிருப்பதாக கூறுவர். எவ்வளவு வெக்கப்படவேண்டிய விஷயம்!
இந்த கூட்டமைப்பானது - தமிழக சட்டமன்றத்தின் நேர்மையான உறுப்பினர்களை அடையாளம் காண ஒரு வழிமுறையை வடிவமைத்து, அவர்களை கவுரவிக்க முடிவுசெய்தது. நேரடி மற்றும் ஆழமான 26 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் நிரப்பி அனுப்பும்ப்படி, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அது அனுப்பப்பட்டது.
பதில் அளிக்க விரும்பாத நேர்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என ஒத்துக்கொண்டாலும், நல்ல உறுப்பினர்கள்:ஊழல்புரியும் உறுப்பினர்கள் விகிதம் - மிகவும் வருந்தக்கூடிய அளவில் உள்ளது. மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், அரசு சாரா அமைப்புகளின் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டியது கடமை என்று கருதி, பதில் கூறிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் கவுரவிக்க முடிவுசெய்யப்பட்டது.
ஊழல் போக்கை தடுத்து நிறுத்த ஒரு புரட்சி அவசியம். அதன் பிறகு கலாசார மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இந்த விருது வழங்கும் திட்டம் - அந்த திசையில் ஒரு சிறு முயற்சி. இது பலரின் பாராட்டுதலையும், சிலரின் எதிர்ப்பினையும் பெற்றுள்ளது. இது நேர்மையான உறுப்பினர்களை உற்சாகபடுத்தும் என்றும், நேர்மை மற்றும் தன்னலமற்ற எண்ணத்தை பிற அரசியல்வாதிகளிடம் விதைத்திட இது உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். நடப்புகள் கண்டிப்பாக - இன்றில்லாவிட்டாலும், ஓர் நாள் மாறும்.
இந்த நிகழ்ச்சிக்கு தொடர்பாக - கல்லூரி மாணவர்களுக்கு என ஆங்கிலத்திலும், தமிழிலும் - அரசியல் ஊழலை எதிர்க்க மாணவர்களிடம் உள்ள செயல்திட்டம் (Students Strategy in combating Political Corruption) என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள திட்டமிட்டும், நாட்டு பற்றுடனும் செயல்படும் அனைத்து அமைப்புகளுக்கும் எழுச்சியூட்ட வேண்டும் என விரும்புகிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
" Peace Be Upon You "
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~