அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
“நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு"
சிறப்புடன் நடைபெற்ற பொது கூட்டத்தின் படங்கள்.
நிதாகத் -- த.மு.மு.க கிழக்கு மண்டலம் நடத்திய விழிப்புணர்வு முகாம்கள்.
இந்திய தூதர் மேதகு ஹமீத் அலி ராவ் கடந்த 19.04.13 அன்று தமாமிற்கு வருகை தந்து நிதாகதின் விபரீதங்கள் குறித்து விளக்கியதன் பின், தொடர்ந்து தனியறையில் நடைபெற்ற ஆலோசனையிலும் கலந்து கொண்ட, ம.ம.க மாநிலத் துணைத்தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் கிழக்கு மண்டல தமுமுக இச்செய்தியை இந்திய சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் பாரிய பணியில் தன்னை ஏடுபடுத்தி வருகிறது.
இந்திய தூதரின் வருகைக்குப்பின், தமுமுக சுற்றறிக்கை மூலம் இச்செய்தியை மக்களுக்கு வினியோகித்து வந்தது.
பின்னர், கடந்த 17.05.13 அன்று நடைபெற்ற செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தன்னார்வ தொண்டர்களுடன் கிழக்கு மண்டல துணைத்தலைவர் மவ்லவி இஸ்மாயில் ஸாஹிப் இந்திய பன்னாட்டுப்பள்ளியில் நடைபெற்ற ஆலோசனை அமர்வில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து இச்செய்தியை இந்திய சமூகத்தினரிடம் சேர்ப்பிக்கும் பணி முன்னிலும் துரிதமாக முடுக்கி விடப்பட்டது.
திட்டமிட்டபடி கடந்த 24.05.13 அன்று தம்மாம் மாநகரில் ஸஃபா மருத்துவமனையின் அரங்கத்தில் சுமார் 200 பேர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை தம்மாம் கிளைப் பொருளாளர் சகோ. பிலால் ஒழுங்கமைத்தார். வுருகையாளர்களை பதிவு செய்ததுடன் அவர்களுக்கான சிற்றுண்டி மற்றும் குடிபானங்களை சகோ சேகை ஷஹுல் ஹமீதும், மருத்துவர் அணிச்செயலாளர் சகோ. ஜகிர் ஹுஸைனும் சிறப்பாக செய்தனர்.
நிதாகத் விளக்கத்தை கிழக்கு மண்டல துணைத்தலைவர் மவ்லவி இஸ்மாயில் ஸாஹிப், மண்டலச் செயலாளர் சகோ. இம்தியாஸுடன் இணைந்து ஒளிப்படத்துடன் அளித்ததுடன், விருந்தினர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தார்.
தம்மாமைத் தொடர்ந்து, 27.05.13 திங்களன்று, ஜுபைல் மாநகரிலுள்ள தஃவா சென்டர் ஊடாக, இதே நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கும் மவ்லவி இஸ்மாயில் ஸாஹிப், மண்டல துணைச் செயலாளர் சகோ. நிஸாருடன் இணைந்து ஒளிப்படத்துடன் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து எழுப்பட்ட சந்தேகங்களுக்கு இஸ்மாயில் மற்றும் அப்துல் காதர் விளக்கமளித்தனர். நிகழ்ச்சியை மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி ஒழுங்கமைத்தார்.
பின்னர் கடந்த 29.05.13 புதன்று இந்நிகழ்ச்சி அல் கோபர் மாநரில் தமுமுக கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. தம்மாமைப்போலவே இங்கும் சிறப்பாக நடைபெற்றதுடன், இங்கு நிகழ்ச்சி ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. சகோ. இம்தியாஸ் சிறப்பாக மொழிபெயர்த்தார். இங்கு முன்னர் மருத்துவ முகாம் நடைபெற்ற ர்ஃபா மருத்துவமனையின் முதல் மாடியில் மருத்துவமனை நிர்வாகிகளுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமுமுக வின் நிதாகத் விழிப்புணர்வு பிரச்சாரம், மொழி கடந்து பலரையும் சென்றடைந்துள்ளது பாராட்டுக்குரியது என பலரும் பாராட்டினர்.
~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~