அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 7 ஜூன், 2013

தொழுகையை கெடுக்கும் தூக்கம்!!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தொழுகையை கெடுக்கும் தூக்கம்!!!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
Inline image 1
இன்றைக்கு நம்முடைய தொழுகைகளை பெரும்பாலும் தூக்கம் அலைகழித்துவிடுகிறது. லுஹர் தொழுகைக்கு வருகின்ற கூட்டம் ஃபஜர் தொழுகைக்கு வருவதில்லை. காரணம் தூக்கத்தை உதரிவிட்டு வருவதற்கு சிரமமாக இருக்கிறது.

கடமையானத் தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கியவனுக்குரிய தண்டனையை நாம் அறிந்து கொண்டால் நிச்சயம் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டுவிட்டால் நமக்கு தூக்கம் வராது..

நபி (ஸல்) அவர்கள் கணவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்துக் கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று விளக்கமளித்தார்கள்.அறிவிப்பவர் : ஸமுரா (ர­) அவர்கள்  நூல் : புகாரி (1143)
நம்மில் மிகவும் சொற்ப நபர்கள் மாத்திரம் தான் ஃபஜர் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். ஃபஜர் தொழுகைக்காக எழுந்து தொழுவது என்னவோ மலைபோன்ற காரியத்தைப் போல் நமக்குத் தெரிகிறது. ஆனால் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் இறைவனுடைய பொருத்தத்தைப் பெற விரைந்து ஓடி வரவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களுக்கு ஃபஜர் மற்றும் இஷா தொழுகைகள் பெரும் சுமையாக இருந்தன. எனவே அந்த நயவஞ்சர்களைப் போன்று நாம் ஆகக்கூடாதென்றால் ஃபஜர் தொழுகையை விட்டுவிடக் கூடாது. பெருமானாரின் காலத்தில் இருந்த நயவஞ்சகர்கள் கூட ஒரு நாளைக்கு 3 வேளை சரியாகத் தொழுதுவிடுவார்கள்.

ஆனால் முஸ்­
லிம் என்று தன்னைக் கூறிக்கொண்டு ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட தொழாமல் இருக்கின்றவர்கள் தங்கள் நிலையை சற்று உணர வேண்டும்.

நயவஞ்சகர்களுக்கு மிகக் கடினமானத் தொழுகை இஷா தொழுகையும் ஃபஜர் தொழுகையுமாகும். அவ்விரண்டில் உள்ள (நன்மையை) அவர்கள் அறிந்துகொண்டால் தவழ்ந்தாவது அவ்விருதொழுகைகளுக்கு வந்துவிடுவார்கள்.அறிவிப்பவர் : அபூஹரைரா (ர­) அவர்கள்நூல் : முஸ்­ம் (1041)
ஃபஜர் தொழுகை பலருக்கு தவறிவிடுவதைப் போல் அஸர் தொழுகையும் பெரும்பாலும் தவறிவிடுகிறது. ஏனென்றால் இந்த இரண்டு நேரங்களிலும் நாம் உறங்கிக்கொண்டிருப்போம். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தொழுகைகளை குறிப்பிட்டுக் கூறி இவைகளை நிறைவேற்றியவர் சொர்க்கம் செல்வார் என்று கூறினார்கள்.
பக­ன் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது ஃபஜ்ர் அஸர் தொழுகைகளை) யார் தொழுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ர­) அவர்கள்நூல் : புகாரி (574)


இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், 

மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே!!

Inline image 1


~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~