அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 31 ஜூலை, 2013

பஹ்ரைன் மண்டல தமுமுக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பஹ்ரைன் மண்டல தமுமுக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

 Category: பஹ்ரைன்

Published on Tuesday, 30 July 2013 09:17
Written by Abdul Cader

மனாமா:- வளைகுடா நாடுகளுள் ஒன்றான பஹ்ரைனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 27/07/2013 சனிக்கிழமை மாலை இஃப்தார் நிகழ்ச்சி டிஸ்கவர் இஸ்லாம் ஹூரா (பரக்கா பில்டங்) முதல் மாடியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பஹ்ரைன் மண்டல த மு மு க செயலாலர் டாக்டர் ஜெஹபர் அலி வரவேற்புரைஆற்றினார். சவுதி அரபியா அல்கோபரிலிருந்து வருகைதந்த பொறியாளர் ஜக்கரியா சிறப்புரை ஆற்றினார். மமக, தமிழ்நாடு துணைத் தலைவர் மற்றும் வளைகுடா ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சபியுல்லாஹ்கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்
.இந்நிகழ்ச்சியில் நூற்றிஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என த மு மு க பஹ்ரைன் மண்டலம் தெரிவித்தது.
thanks : Inneram




ஞாயிறு, 28 ஜூலை, 2013

கல்லூரிமாணவர்களுக்கு வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



கல்லூரிமாணவர்களுக்கு வகுப்பு

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் ஐக்கிய அரபு அமீரக துணை தலைவர் சகோதரர் ஹூசைன் பாஷா MBA,MA,Mphil அவர்கள் மோகனுரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மத்தியில் ஆளுமைதிறன்,மேலான்மை குறித்து வகுப்பு நடத்தினார் இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்
























T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

வெள்ளி, 19 ஜூலை, 2013

ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்




'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படவேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்கவேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமலான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீளவேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

ஆனால் எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, அந்த உன்னத இலட்சியத்தை நாம் மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து நடந்துக்கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்துக் கொள்ளவேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கண‌ப்பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். கோள், புறம், பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமலான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ்படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமலான் மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள் வெறும் பூஜ்யமாகவே இருக்கும். எனவே நபி(ஸல்) அவர்களிள் எச்சரிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் பாழ்படுத்திவிடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ளமாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான்.

இறை திருப்தியை மட்டும் நாடி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:

'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்'. அல்குர்ஆன் 2:183

இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக்காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும்.

நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கண‌மும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நம்பிக்கை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை.

இதேபோல் ரமலான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமலானில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்துக்கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம். இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்)அவர்களும் விளக்கியுள்ளார்கள். 'பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்' என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

-: பொய் பேசாமை :-

பொய் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது.

"ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; ''என் இறைவன் அல்லாஹ்வே தான்!'' என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.'' அல்குர்ஆன் 40:28

"..(நபியே!) நீர் கேளும்: மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்" (அல்குர்ஆன் 6:144) என அருள்மறை குர்ஆன் கூற, புனிதமிக்க ரமலானில் பொய்களை சிலர் அதிகமாகப் பேசுகின்றனர். மார்க்கம் என்ற பெயரால் புனைந்துரைத்து, சிறப்புக்கள் என சில 'அமல்'களையும் அதற்கான கூலிகளையும் அள்ளி வீசுகின்றனர். இறை இல்லங்களில் அல்லாஹ்வின் வேதமும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையானப் போதனைகளும் பேசப்படுவதற்குப் பதிலாக இல்லாத‌ போலிகளை உலவ விடுகின்றனர் நம்மில் பலர். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதில்லை.

'உண்மையைக் கடைப்பிடியுங்கள். உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே தொடர்ந்து இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன் உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான். பொய்யைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்யுரைத்து அதில் மூழ்கியிருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்படுகின்றான்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி); நூல்: புகாரி, முஸ்லிம்

பொய் பேசுகிறவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்பெறுவதுடன், அவன் செல்லுமிடம் நரகமாகவும் இருக்கும். இன்று நம்மவர்கள் மத்தியில் பொய் பேசுவது மலிந்துள்ளது. எவ்வளவோ பேர் மார்க்கத்தின் பெயரால், எத்தனையோ பொய் சொல்கிறார்கள். நம்மில் அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான் சர்வ சாதாரணமாக, சளைக்காமல் பொய் சொல்லும் கலையில் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றார்கள். பொய் சொல்வதைப் பெரிய திறமையாகவும் கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக் காலத்தில் எப்படி வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும் நிலை! பொய் சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமும் சில‌ முஸ்லிம்களிடம் எடுபட்டுப் போய்விட்டது.

'எவனிடம் நான்கு விடயங்கள் இருக்கின்றனவோ, அவன் நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி உள்ளவனாவான். அதை விடும்வரை நயவஞ்சகனாவான்.

1. பேசினால் பொய்யுரைப்பான்

2. வாக்களித்தால் மாறு செய்வான்

3. வழக்காடினால் அநீதியிழைப்பான்

4. உடன்படிக்கைச் செய்தால் அதை மீறுவான்.

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இன்று எமது வியாபாரம், கொடுக்கல், வாங்கல், குடும்ப விவகாரம், அண்டை அயலவர்கள் தொடர்பு என்று எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களிடம் பொய் மிகைத்து நிற்கிறது. எனவே இந்த நோன்பின் மூலம் பயிற்சிபெற்று, பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுத்துக் கொள்ளவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை, வெறும் பட்டினிதான் கிடந்துள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ரமலான் காலங்களில் மார்க்கம் அதன் சிறப்பு என்ற பெயரால் பொய் பேசுவது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும். தமக்குத் தோன்றியதையெல்லாம் மார்க்கம் என்று பேசும் மடமை நிலை மாற வேண்டும்.

'கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பேசுவது அவன் பொய்யன் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்:முஸ்லிம்

மார்க்கம் என்ற பெயரில் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்படுவதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக மக்களுக்கு ஒலி-ஒளி பரப்பப்படுவதும் சிலருக்கு ஆதாரமாகிவிட்டது. தமது வாயில் வந்ததெல்லாம் மார்க்கம் என்று பேசி தூய்மையான இஸ்லாத்தை மலினப்படுத்துகிறார்கள். எங்கோ கேட்டதெல்லாம் மார்க்கம் என்று ஒரு சாரார் பேசும்போது மற்றொரு சாரார் பக்தி சிரத்தையோடு கேட்கின்றனர். இது ரமலான் காலங்களில் அதிகரித்து வருகிறது. நபி(ஸல்)அவர்களின் மீது இட்டுக் கட்டுவதும், பொய் கூறுவதும் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்வதற்குரிய கொடிய குற்றமாகும். மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி இவ்வாறு நடப்பது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு இறையில்ல நிர்வாகங்கள் (பள்ளிவாயில்கள்) தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'மாபெரும் சதியாதெனில், மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்:அஹ்மத்
எனவே நாவை அடக்குவது அவசியம். நாவினால் ஏற்படும் பெரிய தீமை பொய்யாகும். ஆகவே பொய்யுரைக்காது நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொய், வாழ்க்கையின் எந்தத் துறையிலும் நுழைந்துவிடாதவாறு இஸ்லாம் மிகக் கவனமாக வழி நடத்துகிறது.

பொய், பொய் சாட்சி, பொய் சத்தியம், பொய் வாதம், மார்க்கத்தின் பெயரால் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுதல் போன்ற தீய கொடூரங்களை, துரோகங்களைத் தவிர்ப்பதற்காக நோன்பு என்கிற ஆன்மீக பயிற்சிக் கூடத்தை இஸ்லாம் ஒரு மாத காலம் ஏற்பாடு செய்து தந்துள்ளது. அடியான் பட்டினி கிடப்பதால் எஜமானனுக்கு எந்தவித நன்மையும் ஏற்பட்டு விடுவதில்லை. கடமையான நோன்பினை ஒரு மாத காலம் இறை நம்பிக்கையாளர்களிடம் நோற்கச் செய்துவிட்டு, அவர்கள் பொய் சொல்லாமல், பொய்யான, தீமையான நடவடிக்கைளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இந்தப் பண்புகளை தன் அடியார்களிடமிருந்து வெளிப்படுத்தவே நோன்பைக் கடமையாக்கியுள்ளான். ரமலானுக்குப் பின்னரும் இந்த நல்ல பண்புகள் தொடருமானால், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ இணக்கம், நம்பிக்கை, நல்லுறவு நிலவும்.

'எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், அல்லது மௌனமாக இருக்கட்டும்'என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி, முஸ்லிம்

-: தீய நடவடிக்கையிலிருந்து ஒதுங்குதல் :-

நாம் நோற்கும் நோன்பு, நம்மைத் தீய நடவடிக்கையிலிருந்து தடுக்க வேண்டும். இது நம்மை நல்ல வழிகளில் செல்லத் தூண்டவேண்டும். ரமலானிலும் நாம் நமது தீய செயல்களை மாற்றவில்லை என்றால், நமது ஈமானை நாம் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 'இபாதத்' செய்வதற்கும், மன அமைதி பெறுவதற்கும் நோன்பு ஓர் அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்தவில்லையெனில் நாம் துர்பாக்கியசாலிகள். குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் அதிகமான தீமைகளில் ஈடுபடுகின்றனர். மற்றவர்களின் தூக்கத்திற்கு இடையூறாக நடந்து கொள்கின்றனர். இளைஞர்களின் பெற்றோர்கள் கூட இவர்களைக் கண்டிக்க முடியாத நிலை. அல்லது கண்டிக்கத் தவறுகின்றனர்.

'ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், "உண்மையான ஓட்டாண்டி (நஷ்டவாளி) யார் என்பதை நீங்கள் அறிவீர்களா?" எனக் கேட்க, அதற்குத் தோழர்கள் "யாரிடம் திர்ஹமோ, பொருட்களோ அற்ற வறுமை நிலை தோன்றுகின்றதோ அவரே ஓட்டாண்டியாவான்" என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "என் சமூகத்தில் உண்மையான ஓட்டாண்டி யாரெனில், அவர் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளையும் அதிகமாக நிறைவேற்றியவராக மறுமையில் வருவார். அதே நேரம் அம்மனிதர் ஒருவரை ஏசியிருப்பார், இன்னொருவரைப் பற்றி அவதூறு கூறியிருப்பார், வேறொருவரின் சொத்துக்களை (அநியாயமான முறையில்) சாப்பிட்டிருப்பார், அடுத்தவரின் இரத்தத்தை (நியாயமற்ற முறையில்) ஓட்டியிருப்பார், மற்றொருவரை அடித்திருப்பார். (இவ்வாறான நிலையில், இவரால்) குறித்த அநியாயத்திற்குட் படுத்தப்பட்டவர்கள் தமது முறையீடுகளை (அல்லாஹ்விடம்) தெரிவித்து விண்ணப்பிப்பர். அவ்வேளை அவர்களின் மத்தியில் இவரது (இபாதத் மூலம் கிடைத்த) நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும். குறித்த அநியாயக்காரன் பற்றிய (குற்ற) முறையீடுகள் முடிவடையும் முன்னர் அவரது நன்மைகள் முடிவடைந்துவிடும். எனவே முறைப்பாடு செய்பவர்களின் தீமைகளிலிருந்து எடுத்து, இவன் மீது சுமத்தப்படும். பின்னர் நரகில் எறியப்படுவான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம்

ஆக, ரமலானில் இறையச்சத்தையும், இபாதத்களையும் நம்மிடம் அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டவாளிகள். ரமலானில்தான் முஸ்லிம்கள் மத்தியில் சண்டையும், சச்சரவும் இப்போதெல்லாம் அதிகமாக ஏற்படுகிறது. சமூகம் பிளவுண்டு சின்னாபின்னமாகிறது. அதுவும் மார்க்கம் அல்லாததை மார்க்கம் என்று கருதி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. வீண் வம்பு கூடாது என்ற மார்க்கத்தில் அதுவும் மார்க்கம் என்ற பெயரால், மற்றவர்களின் இரத்தத்தைக் கூட ஓட்டத் துணியும் அயோக்கியத்தனம் மாறவேண்டும். இறை இல்லங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அங்கு தூய முறையில் வணங்கவும், வழிபடவும் முஃமீன்கள் அனைவருக்கும் உரிமையுண்டு. அதைத் தடுக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமையில்லை. சுதந்திரமாக வழிபட எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆகவே பள்ளியில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும்போதுதான் பிரச்னைகள் எழுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. மக்கள் உண்மைக்குத் தலைவணங்கும் காலம் கனிந்து வருகிறது. எனவே, தவறான சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் இந்த ரமலானிலாவது தமது நிலையை மாற்றிக்கொள்ள முனைவதோடு தவறான அணுகுமுறைகளை விட்டு அறிவு வழியில் அமைதியான விஷ‌யங்களைக் கருத்தாடலுக்கு வழிவகுக்க உடன்பட வேண்டும்.

'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால், நான் நோன்பாளி என்று கூறட்டும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி, திர்மிதி

நம்முடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், அல்லது திட்டினால் பொறுமை செய்வது அவசியமாகும். ரமலானில் நோன்பு நோற்று பயிற்சி பெற்றவர்கள், நோன்பை நிறைவு செய்தவுடன் பெருநாள் அன்று இஸ்லாம் ஹராமாக்கிய காரியங்களில் (அதாவது திரைப்படங்களை பார்ப்பது, மது அருந்துவது, இன்னும் பல கேலிக் கூத்துக்களில் ஈடுபடுவது) ஈடுபடவும் செய்வார்கள் என்றால், இவர்கள் வீணாக பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமேத் தவிர, இவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமலானுக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இனியும் இருக்கப் போகிறார்கள் என்றால் புனித ரமலானால் எந்தவித பயனையும் பெறவில்லை என்பதுதான் இதன் பொருள்.

அதேபோல் நம் சமுதாயத்தின் இளம் யுவதிகள் அரட்டை அடிப்பதிலும், புறம்பேசுவதிலும், கோள் சொல்வதிலும், தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒலி-ஒளி பரப்பப்படும் மெகாத்தொடர்கள் முதல் கெகாத் தொடர்கள்வரை பார்ப்பதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதிலும் கழிப்பார்கள் என்றால் அவர்கள் நோற்ற நோன்பால் எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை. இன்று நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி, இலஞ்சம், ஊழல், போன்ற தீய செயல்களில் ஈடுபடுவது பொய், புறம், பேசுவது ஆகிய காரியங்களில் சர்வ சாதாரணமாக சில‌ முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஈடுபடுவர்கள் தாம் பசியோடு இருப்பது மட்டும்தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகிறார்களா?

-: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் :-

ஹதீஸின் இறுதிப்பகுதி அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்று கூறி நிறைவடைகிறது. பல ஹதீஸ்களும், ஹதீஸ் குத்ஸியும் அல்லாஹ் மனிதர்களிடமும், ஏனையவற்றிடமும் தேவையற்றவன் என்று பிரகடனப்படுத்துகின்றன. நாம் நோன்பு நோற்பதால் அல்லாஹ்வின் மாட்சிமையில் எதுவும் கூடிவிடுவதுமில்லை; நாம் நோன்பு நோற்காததால் அவனது ஆட்சி அதிகாரத்தில் எதுவும் குறைவதுமில்லை.

' அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.' அல்குர்ஆன் 112:2

நாம் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, வழிபட்டு நடப்பது நமது நலனுக்குத்தான். உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்விடம் தமது தேவையை வேண்டி, அவன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கினாலும், அவனது அருளில் ஒரு ஊசிமுனையளவு கூட குறைந்து விடாது. அதேபோல் அனைவரும் ஈமான் கொண்டு பயபக்தியுடன் வணங்கினாலும் அவனுக்கு எதுவும் கூடப்போவதுமில்லை. எனவே தூய்மையான எண்ணமில்லாத, வணக்கவழிபாடுகளில் எத்தகைய பயனும் இல்லை. முழுமையாக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று வழிபட்டு நடந்து மறுமையில் அல்லாஹ் வழங்கக் காத்திருக்கும் சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நாம் மாற முனையவேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் தமது காலத்தையும், நேரத்தையும் வீணடித்துவிடாது இந்த ரமலானை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தனக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள முஃமீனாக வாழ்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த விதத்தில் நிலைநாட்டவேண்டும்.

எனவே நோன்பு நம்மிடம் எதிர்பார்க்கும் இலட்சியத்தை அடைந்து கொள்ள ஆவண செய்வோமாக!

'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்'. அல்குர்ஆன் 2:183

புனிதமிகு ரமலான் நம்மிடம் இறையச்சத்தை வேண்டி நிற்கிறது. அடுத்த ரமலானை நாம் அடைவோமா இல்லையா என்பதை யாரும் அறியோம்.எனவே இந்த ரமலானை சிறந்த முறையில் பயன்படுத்தி, நல்லமல்கள் செய்து நல்லவர்களாக வாழ பயிற்சி பெறுவோமாக....!

(உதவிக்கு: எம். ஏ. ஹபீழ் ஸலபி அவர்களின் தொகுப்பு)
Thanks:-

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

  • பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
     
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான்இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்கூறினார்கள்.

اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்யவஅபூ[B]வு ல(க்)க பி[B]தன்பீ[B] [F]க்பி[F]ர்லீப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)

இதன் பொருள் :

இறைவாநீயே என் எஜமான்உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லைஎன்னை நீயே படைத்தாய்நான் உனது அடிமைஉனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன்நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்எனவே என்னை மன்னிப்பாயாகஉன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்புகாரி 6309




-- 

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

சனி, 13 ஜூலை, 2013

1997 - 1998 - 2013 தமுமுகவின் வரலாற்றில் போராட்டக் களங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



1997 - 1998 - 2013 தமுமுகவின் வரலாற்றில் போராட்டக் களங்கள்

1995 முதல் 1998 வரை தமுமுகவின் வரலாற்றில் போராட்டக் களங்கள் மறக்க முடியாதவை அடக்குமுறைகள், கைதுகள், சிறைச்சாலைக் கொடுமைகள், வாழ்க்கையாகவே மாறிப் போனது.

அன்று இயக்கத்தில் இருந்தவர்களில் 99 சதவீதம் பேரை “தியாகிகள்” எனலாம். அந்தப் போரட்டக் களங்கள்தான் அனுதாபிகளை உறுப்பினர்களாகவும், உறுப்பினர்களை நிர்வாகிகளாகவும், நிர்வாகிகளை சிறந்த தலைவர்களாகவும் உருவாக்கியது.

குறிப்பாக 1997 மற்றும் 1998ஆம் வருடங்களில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டங்கள் உச்சக்கட்ட நெருக்கடுகளோடு தடையை மீறி நடைபெற்றுது. அவை ஒரு வாரத்திற்கு முன்பாகவே கைதுகள் தொடங்கிய கொடும் நிகழவுகளாகும், எல்லா சிறைகளும் நிறைந்து, மண்டபங்களுகம் தமுமுகவினரால் நிரப்பப்பட்டன.

அதையும் மீறி சென்னைக்குள் நுழையும் வாகனங்கள் தடுக்கப்பட்டு, அதிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதையும் மீறி போராட்டங்கள் பெரும் மக்கள் திரளோடு நடத்தப்பட்டது.
இதுவெல்லாம் இயக்கத்தில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள், மாணவர்களுக்குத் தெரியாது. அவர்களூக்கு ஜூலை 6 போராட்டக்களம் ஒரு வாய்ப்பாக அமைந்தவிட்டது.

பேரணியில் “கொடி” ஏற்படுத்திய அழகு..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பேரணியில் “கொடி” ஏற்படுத்திய அழகு..


இந்தியாவிலேயே முதன்முறையாக தமுமுகவின் ஜூலை 6 போராட்டக் களத்தில்தான் வித்தியாசமான கொடி வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்தில் பயன்படுத்தும் கையடக்க கொடி வடிவம் தமுமுக கொடி வடிவத்தில் தயாரிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் மெளலா நாசர் தனது சொந்த செலவில் வெளிநாட்டிலிருந்து இக்கொடிகளை வாங்கி வந்தார்.

அக்கொடிகள் அசைவதை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் அதன் அழகைக் கண்டு வியந்தனர்.

இனி “தமுமுக”வைப் பின்பற்றி எல்லா கட்சிகளும் அமைப்புகளும் இதே வடிவ கொடிகளைத் தயாரிப்பாரிகள் என்பது திண்ணம். ஆக இதற்கும் தமுமுகவே வழிகாட்டியாக இருக்கிறதோ?

வெள்ளி, 12 ஜூலை, 2013

பெங்களூர் சிறையில்,,, அப்பாவி முஸ்லிம்கள்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பெங்களூர் சிறையில்,,, அப்பாவி முஸ்லிம்கள்..
====================================

ஏப்ரல் 17 ல் பி ஜே பி அலுவலகத்திற்கு அருகில் குண்டு வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி தமிழக இளைஞ்சர்களை பெங்களூர் மத்திய சிறையில் தமுமுக மூத்த தலைவர் பேரா: ஜவாஹிருல்லா தலைமையில் 04,07,13 அன்று சந்தித்த போது போலிஸ் காவலில் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளை சொன்னபோது அனைவரும் கண்கலங்கினோம்,தமிழகத்தில் அவர்களுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பிறகே சித்திரவதைகள் குறைந்ததாக சொன்னார்கள். 

(கர்நாடக முதல்வர் சித்த ராமையாவை இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பின் சார்பில் சந்தித்த போது விரிவாக எடுத்து சொல்லி மனு கொடுக்க பட்டுள்ளது).

சிறைக்கு வெளியில் வந்தபோது ஒரு மெல்லிய தேகம் கொண்ட இளைஞ்சரை சந்தித்தோம் அவர்தான் சிலமாதங்களுக்கு முன்பு "லஸ்கர் தொய்ப" தீவிரவாத அமைப்பை சேர்ந்த வர்கள் என்று கைது செய்யப்பட்ட 14 முஸ்லிம் பட்டதாரிகளில் ஒருவர், டி ஆர் டி ஒ வில் இளம் விஞ்சாணியாக பணியாட்டிரிய "எஜாஸ் அஹ்மத் மிர்சா" 14 பேரில் 3 பேர் அப்பாவிகள் என்று விடுதலையாகி இருதனர், இன்னும் 11 பேர் சிறையில் உள்ளனர் அவர்களை பார்க்க சிறைக்கு வந்திருதார் மிர்சா, 11 பேரில் மிர்சாவின் உடன்பிறந்த தம்பியும் ஒருவர்.

எஜாஸ் அஹ்மத் மிர்சா செய்த தவறு நன்றாக படித்து இந்தியாவின் பாதுகாப்பு துறையில் விஞ்சானிய பணியாற்றியதுதான்,

இவரை இங்கிருந்து வெளியேற்ற சதிசெய்த சதிகாரர்கள் இந்த இளம் விஞ்சானிக்கு கொடுத்த பட்டம் "முஸ்லிம் தீவிரவாதி" இன்று வேலை இழந்து சிறை வாசலில் நின்று கொண்டிருக்கிறார், இவரை டி ஆர் டி ஒ வில் மீண்டும் வேலைக்கு சேர்த்துகொள்ளவேண்டும் என்று முன்னால் உச்ச நீதி மன்ற நீதிபதியும் அகில இந்திய பிரஸ் கவன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு அவர்கள் பிரதமருக்கு கோரிக்கை வைத்ததும் நினைவிருக்கும்.

ஆனால் உண்மையான தீவிரவாதியான மலேகான் மற்றும் ஜாம் சவ்தா எக்ஸ்பிரஸில் குண்டு வைத்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் 5 ஆண்டுகளாக சிறையில் இருந்தவாரே பணியில் இருப்பது போன்று சம்பளம் பெற்று வருகிறார்,

இந்தியாவின் நீதி பரிபாலனம் நினைத்தாலே சிலிர்க்க வைக்கிறது, இந்நேரத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது "இந்திய தேசத்தில் முஸ்லிம்களாக வாழ்வதுதான் ஆபத்தானது"

பெங்களூர் சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலைக்காக புனிதமிகு ரமலானில் பிரார்த்திப்போம்.




Tmmk july 6 தமுமுக ஜூலை 6 thamim ansari



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

த.மு.மு.க - சென்னையை திணறடித்த ஜூலை 6 - பேரணி......



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

புதன், 10 ஜூலை, 2013

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

.S.ரிஃபாயி ரஷாதி ,, மாநில தலைவர் தமுமுக அவர்கள் சிறப்பு பேட்டி !





இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அன்பிற்கினிய கழகச் சகோதரர்கள் அனைவரும் நலம். நலம் பல விளைக...

முப்பெரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி, தலைமை அறிவித்த, கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி வெற்றியடைய கடந்த இரண்டு மாதங்களாக, இரவு பகலாக உழைத்து, ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிவர கடும் முயற்சி மேற்கொண்டீர்கள். தமிழகமெங்கும் நமது பேரணி பற்றிய பேச்சாகவே இருந்தது என்றால் மிகையாகாது.

இந்நிலையில், அரசின் வஞ்சகத்தால், முதலில் அனுமதியளித்து, கடைசி தினங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. நாம் நீதிமன்றப் படியேறினாலும், அரசின் சூழ்ச்சியும், காவல்துறையின் அநீதியுமே வென்றதால், பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின் தடையை மீறுவது என்று முடிவெடுத்து, உங்களுக்கு அறிவிப்பு தந்தோம்.

இறையருளால், தடை உடைத்த பேரணியில் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு கைதானாலும், வரும் வழியிலேயே ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு, சென்னையில் மட்டும் 34 மண்டபங்களில் அடைக்கப்பட்டாலும், சென்னை மாநகரே ஒரு முஸ்லிமும் நுழைந்துவிட முடியாத அளவுக்கு கெடுபிடிகள் செய்யப்பட்டாலும், தமுமுக தொண்டன் என்றைக்கும் போராளிதான் என்றும், சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் தமுமுகதான் முதல் இயக்கம் மட்டுமல்ல, முதன்மை இயக்கம் என்பதையும் நிரூபித்து விட்டீர்கள்.

எந்த கமிஷனர் அலுவலகத்திலிருந்து தடையாணை பிறப்பிக்கப்பட்டதோ, அதே அலுவலகம் முன்னால் மக்கள் திரண்டதும், கமிஷனர் அலுவலக வாயில் பூட்டப்பட்டதும், நூற்றுக்கணக்கான காவலர்கள் நிறுத்தப்பட்டதும் விந்தையிலும் விந்தை. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

மீடியாக்களில் புறக்கணிக்கப்படும் நமது இயக்க நிகழ்ச்சிகள், போராட்டங்கள், உங்களது அயராத முயற்சியால், தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்கால் பேரணி முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது மாறிவிட்ட சூழலையே காட்டுகிறது.

பேரணித் தடையால் மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை கவனித்த திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கூட தடையைக் கண்டித்து அறிக்கை விட்டதும் நாம் கவனிக்கத்தக்கது.

தலைமையின் கட்டளைக்கிணங்க நீங்கள் செயல்பட்டதும், கைது நடவடிக்கைக்கும் கலங்காமல் பேரணியில் பங்கேற்றதும், மிகுந்த பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியதாகும்.

தலைமையின் சார்பாக உங்கள் மாவட்ட நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் ஆயிரம் உரித்தாகட்டும்.

ஜஸாக்குமுல்லாஹு ஹைரா

இறைவனுக்கும் நன்றி செலுத்துங்கள்.

அன்புக்குரிய சகோதரர்களே... பேரணியில் வெற்றிபெற்றுவிட்ட நாம், நம் ஒவ்வொருவரின் ஆன்மீக பலத்தையும் அதிகரிக்க இதோ ரமழான் வந்துவிட்டது. இதன் முழுப்பலனையும் அடைவதுதான் மாபெரும் வெற்றியாகும்.

ரமழானில் 1) பகலில் நோன்பு, 2) இரவில் சிறப்புத் தொழுகை (ஜமாத்துடன்), 3) நோன்பாளிகளுக்கு நோன்பு துறக்க முயற்சிப்பது, 4) குர்ஆன் ஓதுதல், 5) தவறானவற்றைப் பேசுவது, பார்ப்பது, கேட்பது அனைத்தையும் தவிர்த்தல், 6) பிந்திய 10 இரவுகளில் பள்ளிவாசலில் (இஃதிகாப்) தங்குவது, லைலத்துல் கத்ர் இரவைத் தேடுவது, 7) தான தர்மங்கள் செய்வது பெருநாளை முன்னிட்டு ஃபித்ரா ஸதகா கொடுப்பது, அதை சேகரித்துக் கொடுக்க முயல்வது அதிகமான பிரார்த்தனைகளில் ஈடுபடுவது போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டுமென உங்களை அன்போடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது தனித்தனி பணிகளும், சமுதாயப் பணிகளும் மறுமை வெற்றியை முன்னிறுத்தியே செய்யப்பட வேண்டும் என்பதை மறந்துவிட மாட்டீர்கள் என நம்புகிறோம்.

வல்ல இறைவன் நம் அனைவரின் நற்செயல்களையும் அங்கீகரிப்பானாக!

பாவங்கள், குற்றங்களை விட்டும் பாதுகாப்பானாக!

ரமழானின் முழுப்பலனையும் அடையச் செய்வானாக!

அன்புடன்

ஜே.எஸ்.ரிபாயீ

தலைவர், தமுமுக

======

குறிப்பு: இதை நகலெடுத்து ஒவ்வொருவரிடம் கொடுக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


திங்கள், 8 ஜூலை, 2013

ரமலான் மாதம் புதன்கிழமை, 10 ஜூலை முதல் தொடக்கம்:"First day of Ramadan fasting be on Wednesday 10-July-2013. InshaAllah"

ஏகஇறைவனின் திருப்பெயரால்... 

அஸ்ஸலாமு அலைக்கும்.

10 - July-2013 புதன் கிழமை ரமலான் - நோன்பு பிறை ஒன்று 
என அறிவிக்கப் பட்டுள்ளது.... இன்ஷா அலலாஹ்!

ரமலான் மாதம் புதன்கிழமை, 10 ஜூலை முதல் தொடக்கம்:

சவூதி அரேபியாவில் கடுமையான மணல் காற்று வீசுவதால் இன்று பிறை தென்படவில்லை ஆகவே நாளை [செவ்வாய் கிழமை] சஃபான் மாதத்தின் முப்பது நாட்கள் பூர்த்தியாகிறது. செவ்வாய் இரவு [09 ஜூலை] முதல் ரமலான் மாதம் தொடங்குகிறது. புதன் கிழமை ரமலான் மாதத்தின் முதல் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் படி சவூதி அரேபியா, குவைத், கத்தார், UAE, ஓமன், மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் இன்ஷா அல்லாஹ் புதன் கிழமை ரமலான் முதல் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"First day of Ramadan fasting be on Wednesday 10-July-2013. InshaAllah"

Ramadan in Saudi to start on Wednesday, 10 July

It is confirmed that Muslims in Saudi Arabia will welcome the Holy month of Ramadan on Wednesday. In an announcement made by the Supreme court of Saudi Arabia, it is sure now that the holy fasting month will not start tomorrow.

The Ramadan crescent was not sighted this evening. In parts of the kingdom, the chances to sight the moon were low because of a sandstorm that obscured the skies. Tuesday is the thirtieth day for the month of Sha’aban.

This year, Ramadan will begin on the evening of Tuesday, 9 July. Wednesday will be the first day of Ramandan in Saudi Arabia, Kuwait, Qatar, the UAE, Oman, and Bahrain.



-- 

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

த.மு.மு.க போராட்டம் : தடை செய்து மூக்குடைபட்ட தமிழக அரசு - பேராசிரியர் மார்க்ஸ் அந்தோணிசாமி

த.மு.மு.க போராட்டம் : தடை செய்து மூக்குடைபட்ட தமிழக அரசு - பேராசிரியர் மார்க்ஸ் அந்தோணிசாமி

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்தல் {அண்ணா பிறந்த நாளில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட போதெல்லாம்முஸ்லிம் கைதிகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை},முஸ்லிம்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு அளவைஅதிகரித்தல், தமிழக அரசின் திருமணப்பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள்செய்தல் என்கிற 3 கோரிக்கைகளை வைத்து (ஜூலை 6, 2013) பேரணி நடத்தக்கோரிய அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு.

த.மு.மு.க நீதிமன்றத்திற்குச் சென்ற போது அங்கும் நீதி கிடைக்கவில்லை.
தடையை மீறிப் பேரணி செல்வதென அவர்கள் முடிவு செய்தனர். காவல்துறைகெடுபிடி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்தவேன்கள், லாரிகள் எல்லாம் திண்டிவனம் தொடங்கி ஆங்காங்குநிறுத்தப்பட்டன, நகரத்திற்குள்ளும் அடையாறு, பூந்தமல்லி எனப் பல்வேறுநுழை வாயில்களில் பஸ்கள் நிறுத்திச் சோதனைகள் இடப்பட்டன.



அப்படியும் தடையை மீறி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கூடஇருந்தவர்கள் மீது அடக்குமுறை மேற்கொண்டு கலைக்கப்படுவார்கள்என்பதுபோலச் செய்திகள் பரவியதை ஒட்டி மனித உரிமை அமைப்புகள்சார்பாகச் சிலர் பார்வையாளர்களாக வந்தால் நல்லது எனச் சிலர் கருத்துத்தெரிவித்தனர்.



சுமார் 11 மணி வாக்கில்தான் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடிந்தது. பேரா.மு.திருமாவளவன், தோழர் நட்ராஜ், சுற்றுச் சூழல் ஆர்வலர் வி.சீனிவாசன்,வழக்குரைஞர் கி. நடராசன் ஆகியோர் உடன் வரச் சம்மதித்தனர்.



சுமார் 2.30 மணி வாக்கில் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு எதிரில்அண்ணாமலைப் பல்கலைக் கழக தூரக் கல்வி அலுவலகத்திற்கு வேளியேகூடினோம். கடுமையான போலிஸ் குவிப்பு. கைது செய்துஅகற்றப்படுவோர்களைக் கொண்டு செல்ல ஏராளனமான MTC பஸ்கள்குவிக்கப்பட்டிருந்தன. பத்திரிக்கையாளர்கள் சிலர் காமராக்களுடன்நின்றிருந்தனர்.



பேரணிக்கு அனுமதி இல்லை எனவும், நீதிமன்றமும் அனுமதி மறுத்துவிட்டதுஎனவும், எனவே இங்கு கூடுவது சட்ட விரோதம் எனவும் மைக்கில் போலீசார்அறிவித்துக் கலைந்து செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர்.



சுமார் 200 த.மு.முகவினர் அங்கு நின்றிருந்தனர். திடீரென அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டனர். அதே நேரத்தில்பெருந்திரளில்மக்கள் எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகில் உள்ள ரவுண்டானவைச் சுற்றித்திரண்டிருப்பதாக யாரோ சொன்னார்கள்.



போலீஸ் காவல் இருந்ததை ஒட்டி ராஜரத்தினம் ஸ்டேடியத்தைப் பின்புறமாகச்சுற்றி வந்து ம.தி.மு.க அலுவலகம் முன்பு போலீஸ் வாகனங்களுக்கு மத்தியில்எங்கள் டூ வீலர்களை நிறுத்திவிட்டு அப்படியே நகர்ந்து ரவுன்டானாவை ஒட்டிப்பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்த த.மு.மு.க தொண்டர்கள் மத்தியில்கலந்துகொண்டோம்.



ஏகப்பட்ட போலீஸ் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒன்றும்தீவிரம் காட்டாமல் அமைதியாகவே தடிகளுடன் நின்றிருந்தனர். கருப்புவெள்ளைக் கொடிகள் அப்பகுதியை நிறைத்திருந்தன. "நாரே தக்பீர் !அல்லாஹூ அக்பர்" என்கிற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.



சுமார் 3.30 மணிவாக்கில் த.மு.மு.க தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வந்தார். வேன் ஒன்றில் ஏறி நின்று முழக்கங்களை இட்டார். தொண்டர்கள்அவ்வழியே செல்லும் பொது மக்கள், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்புஅளித்தனர்.



எனக்குச் சரியாக மதிப்பிட இயலவில்லை. சுமார் 5,000 பேர்கள் இருக்கலாம்.ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ள காலி பஸ்களில் ஏறி அமைதியாகக் கைதாகுமாறுதலைவர்கள் கேட்டுக் கொண்டனர். கைதானவர்களை ஏற்றிக் கொண்டு பஸ்கள்ஊர்ந்தன.



சுமார் 5 மணி வாக்கில் பேராசிரியர் மைக்கில் மீண்டும் பேசினார். மேலும் அங்குகூடி இருந்தவர்களைக் கைது செய்து கொண்டு போகத் தம்மிடம் வாகனங்கள்இல்லை எனப் போலீசார் கைவிரிப்பதாகவும் எனவே மற்றவர்கள்அமைதியாகக் கலையுமாறும் வேண்டிக்கொண்ட பின் கூடியிருந்தோர்கலைந்தனர்.


த.மு.மு.க 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது என நினைக்கிறேன். அதிலிருந்துஅவர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும்ஒருவன். 


அமைதியான வழியில் தமது கோரிக்கைகளுக்காக உறுதியாகப்போராடுபவர்கள் அவர்கள். எந்தக் காலத்திலும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைஏதும் அவர்களால் ஏற்பட்டதாக நான் அறிந்ததில்லை. சிறைக் கைதிகள்தொடார்பான கோரிக்கை எல்லாம் மிக நியாயமானவை. 



பேசாமல் பேரணியை நடத்தி விட்டுப் போக அனுமதி அளித்திருந்தால்ஊர்வலமாகச் சென்று மனு அளித்துவிட்டுச் சென்றிருப்பார்கள்.



இப்படித் தடை செய்து தமிழக அரசு மூக்கை உடைத்துக் கொண்டிருக்கவேண்டியதில்லை.
எப்படியோ த.மு.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வீடு திரும்பினர்.



ம.தி.மு.க அலுவலகம் முன்பிருந்த கடையில் ஒரு சூடான டீயையும்போண்டாவையும் 

சாப்பிட்டுவிட்டு நாங்களும் கலைந்தோம்.-- 




:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::