அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்
புனித ரமலான் 1434 (2013) தமுமுக சார்பாக ஒரு கோடியே 43 லட்சம் ருபாய் மதிப்பிலான ஃபித்ரா வினியோகம்.
2013ஆம் ஆண்டில் தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் 1 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை முஸ்லிம்கள் பயன் அடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் வாழும் தமிழக சகோதரர்கள் சிறப்பாகப் பணியாற்றி சுமார் 13 லட்சம் ரூபாய் வசூலித்து அளித்த தொகையையும், தமிழகத்தில் மாவட்டம் முதல் கிளைகள் வரை உள்ள கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மிகச்சிறப்பாகப் பணியாற்றி வசூலித்த 1 கோடியே 30 லட்சம் ரூபாயையும் கொண்டு 1 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட அதிகப்படியான தொகையாகும்.
ஏழைகள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் ரமலான் மாதத்தில் குறிப்பாக ரமலானின் கடைசி நாட்களில் சிறப்பாகப் பணியாற்றி, உரியவர்களுக்கு ஒன்றுக்கு பலமுறை நினைவூட்டி அவர்களிடமிருந்து ஃபித்ரா தொகையைப் பெற்று பெருநாளுக்கு முன்னதாக தலைமையகத்திற்கு தகவல் தந்து வழங்கிய வளைகுடா வாழ் தமுமுக நிர்வாகிகளுக்கும்,
அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தமிழக சகோதரர்களுக்கும், உள்ளூரில் சரியான முறையில் திட்டமிட்டு ஃபித்ரா தொகையை வசூலித்து, தலைமையகத்தின் அறிவுறுத்தலின்படி பணியாற்றிய மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகளுக்கும், உறுதுணையாக இருந்த உறுப்பினர்களுக்கும் தலைமையகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வல்ல இறைவன், நமது பணிகளை அங்கீகரித்து, அதற்குரிய கூலியை வழங்கிட பிரார்த்தனை செய்வோம்.
அன்புடன்
(ஜே.எஸ்.ரிபாயீ)
தலைவர்
- இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
- இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
- நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
தமுமுக" அல்-கோபர் கிளை