அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமுமுக வின் சுதந்திர தின கொடியேற்று மற்றும் மருத்துவ சேவைகள்
- ஏனங்குடி கிளை தமுமுக சார்பில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
- கோவை செல்வபுரம் தமுமுகவின் சார்பாக 67 வது சுதந்திர தின விழா
நடைபெற்றது இதில் தமுமுகவின் மாநில செயளாலர் கோவை செய்யது அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார் அருகில்.கோவை சதாம்
- திருப்பூர் மாவட்டம் சேரன்காடு TMMK கிளை சார்பில் சதந்திர தின விழா
திருப்பூர் மாவட்டம் சேரன்காடு கிளை சார்பில் தேசிய கொடியை ம.ம.க மாவட்ட செயலாளர் எம்.ஜே.அபுசாலிஹ் அவர்கள் ஏற்றிவைத்தார், தமுமுக மாவட்ட செயலாளர் ஜே.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட துணைசெயலாளர் ஏ.செய்யது, ம.ம.க மாவட்ட துணை செயலாளர் ஏ.ஷாஜஹான் மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- கடலூர் மாவட்ட தமுமுக செயலாளர் V.M.ஷேக் தாவுத் அவர்கள் டொமினிக் பள்ளியிலும், நகராட்சி அலுவலகத்திலும் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்
- தோப்புத்துறை ஆறுமுச்சந்தியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தோப்புத்துறை (கிளை) சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது...
- நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி கிளையில் சார்பாக இன்று 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசியில் 3 இடங்களில் த.மு.மு.க சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இராயபுரத்தில்.....
இன்று 67 வது (15/08/2013) சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை இராயபுரத்தில் தமுமுக தலைவர் ஜே எஸ் ஆர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
- மதுரை புறநகர் மாவட்ட தமுமுக சார்பில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- புளியங்குடி த.மு.மு.க கீழப்பள்ளிவாசல் கிளை சார்பாக நடந்த ரத்ததான முகாமில் 20 கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர் ..30 கும் மேற்பட்டவர்கள் ரத்தவகை கண்டறிந்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வினியோகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகள் அனைவருக்கும் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை மமகவின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், வக்பு வாரிய உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் Dr.நூர்சய்யித், மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், Dr.முஸ்தாக் அஹ்மத், Dr.பரத், து.தலைவர் சாதிக், து.செயலாளர்கள் அப்ரோஸ், அஷ்ரப் அலி, மருத்துவ சேவை அணி து.செயலாளர் நபீல் அஹ்மத், பொருளாளர் பாருக். இளைஞரணி செயலாளர் அன்வர் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்,
- வாணியம்பாடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வினியோகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகள் அனைவருக்கும் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு வழங்கினர்.
தென் சென்னை மாவட்ட மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை ஆசாத் நகர் கிளை கலெக்டர் காலனியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா MLA கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது தென் சென்னை மாவட்ட தமுமுக, மமக, மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டர்
ஆம்பூர், 15- ஆகஸ்ட்: 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடியை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், வக்பு வாரிய உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா ஏற்றிவைத்தார், நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், மமக நகர செயலாளர் ஹமீத், து.தலைவர் சாதிக், து.செயலாளர்கள் அப்ரோஸ், அஷ்ரப் அலி மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
டெல்டா மாவட்டங்களில் தமுமுக சார்பாக சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி..
- மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில்
மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில் சுகந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மமக செயலாளர் E.S.M.ராசிக்,தமுமுக செயலாளர் E.S.M.ராசிக்,பொருளாளர் இலியாஸ்,மாவட்ட பேச்சாளர் பவாஸ்,பொருப்பாளர்கள் ராசிக்,ரியாஸ்,அமீரக பொருப்பாளர் பைசல் அகமது ஆகியோர் முன்னிலையில் அமீரக பொருப்பாளர் என்.சர்புதீன் அவர்கள் கொடியேற்றி சிறப்பு செய்தார்.
- கட்டிமேடு தமுமுக கிளை சார்பில் சுதந்திர தினக்கொடி யேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கொடியினை மருத்துவர் ஹனீபா அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
- கொடிக்கால்பாளையம், திருவாரூர் நகர தமுமுக
கொடிக்கால்பாளையம், திருவாரூர் நகர தமுமுக சார்பில் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி காலை 9 மணி அளவில் கொடிக்கால்பாளையம் தமுமுக அலுவலகம் முன்பு நடைபெற்றது. கொடியை தமுமுக அபுதாபி மண்டல பொருப்பாளர் அப்துல் காதர் அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார். உடன் தமுமுக நகர செயலாளர் ஹலிலூர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி நகர மன்ற உறுப்பினர் கலிபுல்லா, மனிதநேய ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் தலைவர் ஆபிதின், முன்னால் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் செய்யது அப்துல் பத்தாஹ் அகியோர் உடன் இருந்தனர். கொடி ஏற்றி முடிந்தவுடன் தமுமுக அபுதாபி மண்டல பொருப்பாளர் அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர் பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது.
- நாகப்பட்டினம் நகர தமுமுக சார்பாக தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டம்.
- குவைத் இந்தியதூதரகத்தில் இந்தியசுதந்திரதின நிகழ்ச்சி தமுமுக பங்கேற்பு
இறைவன் துணையோடு இன்று காலை குவைத் இந்தியதூதரகத்தில்
இந்தியசுதந்திரதின நிகழ்ச்சியில் தமுமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சகோதரர் கொள்ளுமேடு சலீம் ரப்பானி, சகோதரர் நெல்லை தாழையூத்து பீர் மரைக்காயர்
சகோதரர் எருமைப்பட்டி கமருத்தீன் சகோதரர் திருமங்கலம் இலாஹி ஆகியோர் படத்தில் உள்ளனர்.
இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!
சுதந்திர தின சிந்தனைகள்!
என் தாய்நாடு 67 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. வற்றாத ஜீவா நதிகள், அழகான மலை தொடர்கள், எழில்மிகு கடற்கரைகள், கொஞ்சும் வயல்வெளிகள், பசும் காடுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய தேசம் இது.
பல்வேறு மொழிகள், மதங்கள் இனங்கள் பல்வேறு தோற்றங்களை உடைய மனிதர்கள் என வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றி நடக்கும் தேசம் இது! இங்கே நரேந்திர மோடி, பிரவின் தொகாடியா, போன்ற மதவெறியர்களும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அது சார்ந்த பயங்கரவாத அமைப்புகளும் என் தேசத்தின் கரும்புள்ளிகள். ஆனால் அவர்கள் மிகவும் சிறுபான்மையினர். ஆறுதல் அளிக்கும் வகையில் எமது பெரும்பான்மை இந்து சொந்தங்கள் மனிதநேயத்தை மதிப்பவர்கள். நாங்கள் எல்லோரும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதில் பூரிப்படைகிறோம்.
நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக மோடி போன்றவர்கள் பிரதமராக வந்தாலும், அவரை போன்றவர்களை ஜனநாயக வழியில் எதிர்த்து போராடும் உரிமையும், துணிச்சலும் எனக்கு உண்டு. என் கருத்துக்கு ஆதரவாக திரண்டு எழு, பெரும்பான்மை இந்திய மக்கள் தயாராக உள்ளனர். காரணம் சமய நல்லிணக்கமும், மனிதநேயமும் பெரும்பான்மை இந்தியர்களின் உணர்வுகளாகும்.
பல அரபு நாடுகளில் கோலைகளாக வாழும் அரபு மன்னர்களை எதிர்த்து அங்குள்ள குடிமக்களால் ஒரு கேள்வி கூட கேட்க முடியவில்லை. ஆனால் என் தாய் நாட்டில் நான் யாரை எதிர்த்தும் கேள்வி கேட்க முடியும். பல முஸ்லிம் நாடுகளில் பள்ளிவாசல்களில் சுதந்திரமாக வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவாற்ற முடியவில்லை. ஆனால் எனது நாட்டில் அதற்கு முழு சுதந்திரம் உண்டு. வழிபாட்டு தளங்களின் அருகில் ஒரு மதுக்கடையோ, விபசார விடுதியோ இருந்தால் அதை மக்கள் சக்தியோடு அப்புறப்படுத்த முடியும். இந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை. என்னால் இங்கு எந்த சர்வாதிகாரத்தையும், ஏகாதிபத்தியத்தையும், அரச வன்முறைகளையும் எதிர்த்து போராட முடியும்.
என்னோடு கரம் கோர்க்க சமூக நீதி போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள், நேர்மையான அதிகாரிகள், பண்பு மிக்க பொதுமக்கள் என பலரும் உண்டு.
அதனால்தான் சொல்கிறேன். நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன்.
இந்த தருணத்தில் நாட்டு விடுதலைக்காக போராடிய குஞ்சாலி குட்டி, மருதநாயகம், பூலித்தேவன், ஹைதர் அலி, திப்பு சுல்தான், கட்டபொம்மன். சின்ன மருது - பெரிய மருது, தீரன் சின்னமலை, சிராஜித் தௌலா, இரண்டாம் பகதூர்ஷா, ஜான்சி ராணி லட்சுமிபாய், ஹஜரத் பேகம், பகத் சிங், அபுல் கலாம் ஆசாத், நேரு, நேதாஜி, காந்திஜி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தியாகிகளை நினைவில் ஏந்துவோம்.
ஊழல், மத பயங்கரவாதம், சாதி பயங்கரவாதம், வன்முறை போன்றவற்றை எதிர்காலத்தில் ஒழிக்க சபதம் ஏற்போம்.
நமது நாட்டில் ஏத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இது ஒரு சிறப்பான தேசம் என்பதில் ஐய்யமில்லை. எனவே போலி தேச பக்த வெறியை தூண்டும் திருடர்களை இனம் கண்டு நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கி தேசத்தை வழிநடத்த தயாராவோம்.
இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!
வாழ்த்துக்களுடன்,
எம். தமிமுன் அன்சாரி