அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்

நியுபெத்லேகம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும், மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில் 


24.10.2013 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை: அஸ்லம் பாஷா- 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா? மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலூர் மாவட்டம்,ஆம்பூர் நகரம், பெத்லகேம் பகுதியில் இரயில்வே மேம்பாலம் வைப்பு நிதி அடிப்படையில் மாநில அரசின் நிதியின்கீழ் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,பெத்லகேம் பகுதியில் ஏறத்தாழ40000 மக்கள் வசிக்கின்றனர்கள். ஆம்பூர் மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வசித்து வருகின்றார்கள், அந்த நகரத்திற்கான முக்கிய கல்லுôரியும் அந்தப் பகுதியில்தான் இருக்கின்றது: மருத்துவமனையும் அந்தப் பகுதியில்தான் இருக்கின்றது. மின்சார அலுவலகம் அந்தப் பகுதியில்தான் இருக் கின்றது. அதேபோல், ஆம்பூர் நகருக்கு குடிநீர் ஆதாராமாக இருக்கக்கூடிய தடுப்பணையும் அந்தப் பகுதியிலே இருக்கின்றது. மழைக்காலங்களில் அந்தப் பகுதிக்கு செல்வதற்கு வழி கிடையாது ஆகவேதான்,இதுகுறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய கனிவான கவனத்திற்குக் கொண்டு சென்றோம். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது,பெத்லேகம் பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்ற நல்ல செய்திகளையும் அறிவிப்பு செய்தார்கள். அதற்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு சென்று இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நதி ஒதுக்கீடு பெற்றுத் தந்து அறிவிப்பு செய்த மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுமுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்தப் பகுதியில் செல்வதற்கு வழி இல்லை என்கின்ற காரணத்தினால் வெகு விரைவில் அந்தப் பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டித்தரப்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் ஒரு கோரிக்கையாக மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களிடத்தில் வைக்கின்றேன். எனது கோரிக்கையினை விரைவில் செயல்படுத்தித் தருவார்களா?என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலுôர் மாவட்டம்,ஆம்பூர் தொகுதி, ஆம்பூர் நகரத்தின் முக்கியப் பகுதியான பெத்லேகம் ரெட்டித் தோப்பு கே.எம். நகர் ஆசனம் பட்டு பகுதியிலே செல்வதற்கு இரயில்வே கடவு இல்லாத காரணத்தினால்,இவ்விடத்தில், இரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை பணப் பயன்கள் அடிப்படையில் மேற்கொள்ள இயலாது என்று இரயில்வே துறை தெரிவித்துவிட்டதால் 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேலான கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றோம். மேலும் அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான அவசியம் கருதி,

மாண்புமிகு முதல்வர் அவர்களின் அனுமதியிமனைப் பெற்று, வைப்பு நிதி அடிப்படையில் மாநில அரசின் நிதியின் கீழ் 30 கோடி ரூபாய் செலவில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்


சனி, 19 அக்டோபர், 2013

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சென்னையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 

சென்னை டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் தமுமுக வின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பில் தியாகத்திருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.


மனித நேய மக்கள் கட்சியின் ராமநாதபுர சட்ட மன்ற உறுப்பினரும், சட்டமன்ற குழு தலைவரும் தமுமுகவின் மூத்த தலைவரும்
Prof. M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்தலைமையில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் 

தொழுகையின் முடிவில் மூத்த தலைவரின் உரையும் நடந்தது ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பெருநாள் வாழ்த்து செய்தியை பரிமாறிக் கொண்டனர்.










மேலப்பாளையம் பகுதி இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில்



மேலப்பாளையம் பஜார் திடலில் ஹஜ்ஜிப் பெருநாள் தொழுகை 16/10/2013 காலை 7:30 மனிக்கு நடைபெற்றது தமுமுக தலைவர் ஜெ.எஸ்.ரிபாயீ ரசாதி அவர்கள் இபராகிம் நபியின் தியாகத்தை விளக்கி பேசினார்கள் இதில் எராளமான ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.










கோவையில் தமுமுகவின் IPP சார்பில் பெருநாள் தொழுகை

கோவையில் தமுமுக சார்பில் தொழுகை தியாகத் திருநாள் அன்று கோவை ஆயிஷா மஹால் திடலில் சுமார் 5000 த்திற்க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட கலந்து கொண்டார்கள் இதில் மாநில துணை பொது செயலாளார் இ உம்மர் மாநில செயலாளார் கோவை செய்யது மாநகர்மாவட்ட நிர்வாகிகள் அணி ,பகுதி, கிளை கழக மற்றும் பொதுமக்கள் பெருதிரளனோர் தொழுகையில் பங்கேற்றனர் கழக பேச்சாளரும் மாவட்ட இஸ்ஸலாமிய பிரச்சார பேரவையின் (IPP) துணை செயலளார் ரெக்ஸ் ரபீக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.










செவ்வாய், 15 அக்டோபர், 2013

நல்லிணக்கம் தழைத்தோங்க உறுதி எடுப்போம்! ...வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும்... (( தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக் செய்தி ))

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நல்லிணக்கம் தழைத்தோங்க உறுதி எடுப்போம்! ...வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும்... (( தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக் செய்தி ))

நல்லிணக்கம் தழைத்தோங்க உறுதி எடுப்போம்! 


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்றஉறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக் செய்தி 

தியாகத் திருநாளாம் பக்ரீத் என்னும் ஈதுல் அழுஹா நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இறைத்தூதர் இப்றாஹீம் மற்றும் அவர்களின் புதல்வர் இறைத்தூதர் இஸ்மாயீல் ஆகியோரின் ஒப்பற்றதியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் முஸ்லிம்களால்கொண்டாடப்படுகின்றது. 

இந்த திருநாள் கொண்டாடப்படும் தருணத்தில் இறைத்தூதர் இப்ராஹீமும்அவரது புதல்வர் இஸ்மாயீலும் மக்கா நகரில் எழுப்பிய காபா ஆலயத்திற்கு உலகமெங்கிலிருந்தும் இலட்சக்கணக்கான முஸ்லிம் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள். 

எந்த நிறமுடையவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த குலத்தில் பிறந்தாலும்,மனிதர்களிடையே எத்தகைய வேற்றுமை இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களேஎன்பதை இந்த தியாகத் திருநாள் நமக்கு எடுத்துரைக்கின்றது. 

இதே போல் மன இச்சைகளை அடக்கிதியாகம் செய்வதின் சிறப்பையும் இந்த தியாக திருநாள் உணர்த்துகின்றது. இத்தகைய உணர்வுகளை உள்வாங்கி அனைத்து மனிதர்களையும் சகோதரர்களாக உளமாற நேசித்து, 

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டின் நலனுக்காக நம்மை அற்பணித்துக் கொள்ள இந்த திருநாளில்உறுதி எடுத்துக் கொள்வோமாக. 

நாட்டில் அனைத்து மக்களுக்கிடையில் நல்லிணக்கம்தழைத்தோங்குவதற்கும் வறட்சி நீங்கி தமிழகம் வளம் பெறுவதற்கும் இந்த திருநாளில் இறைவனிடம்பிரார்த்திப்போமாக. 

-எம்.எச்.ஜவாஹிருல்லா




வறட்சி நீங்கி மலர்ச்சி பெருகட்டும்... 


தமுமுக தலைவரின் தியாக திருநாள் வாழ்த்து மனித சமூகம் தியாகத்தை நினைவு கூறும் உன்னத நாளாக தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் என்றும் அழைக்கப்படும் ஈதுல் அள்கா விளங்குகிறது. 

தியாகத்தின் மேன்மையை பறை சாற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் அனைத்து நலன்களும் பெற்று நல்வாழ்வு பெற வாழ்த்துகிறேன். 

முஷாபர் நகர் பகுதியில் இன்றுவரை லட்சத்திற்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிவாரண முகாம்களில் வாடும் அவல நிலை , சர்வதேச சந்தையில் இந்திய நாணய மதிப்பின் வீழ்ச்சி , விலைவாசி ஏற்றம் , பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரிப்பு, மது விலக்கு ஒழிக்கப்படாதது உள்ளிட்டவை நம் மனதை வருத்தி வருகின்றன. 

இது போன்ற துயர நிகழ்வுகளை, தீமைகளை முறியடித்து மக்கள் நலம் பேண நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் உறுதி பூணவேண்டும் இந்திய திருநாட்டில் ஒற்றுமை பேணி வாழும் மக்களின், 

மத்தியில் சண்டை , பிளவு , பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்த மத வாத பாசிச சக்திகள் முயன்று வருகின்றன. அதனை நாம் ஒன்றுபட்டு முறியடிக்க இந்த தியாக திருநாளில் சபதம் ஏற்போம் 

-J.S.ரிஃபாயி ரஷாதி மாநில தலைவர் தமுமுக





திங்கள், 14 அக்டோபர், 2013

இனிய தியாக பெருநாள் நல்வாழ்த்துக்கள் "Eid Mubarak"! 2013 - 1434


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


"இனிய தியாக பெருநாள் நல்வாழ்த்துக்கள்"







உலகெங்கும் பரந்து வாழும் உறவுகளுக்கு சமுதாய சொந்தங்கள் 
அனைவருக்கும் உள்ளம் நிறைந்த தியாகப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..."இனிய தியாக பெருநாள் நல்வாழ்த்துக்கள்!"

ஈத் முபாரக்! குல்லு ஆமின் வ அன்(த்)தும் பி ஃகைர்

தகப்பல்லல்லாஹு மின்னா வ மின்(க்)கும் ஸாலிஹல் அஃமால்....


عيدكم مبارك وكل عــــام وأنتم بخيـر 
"Eid Mubarak"! 2013 - 1434  
                  

T M M K AL-KHOBAR. K.S.A I visit : www.tmmk.info

www.tmmk-ksa.com I Join: facebook.com/tmmk.khobar

வெள்ளி, 11 அக்டோபர், 2013

பேரன்புமிக்க அன்பர்களே! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் பேரருள் நிலவட்டுமாக...It was a major accident but we escaped with minor bruises. (அது ஒரு பெரும் விபத்து ஆனால் நாங்கள் சிறு சிராய்ப்புகளுடன் உயிர் பிழைத்தோம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்;. ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, "இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!" உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:78,79)

பேரன்புமிக்க அன்பர்களே

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் பேரருள் நிலவட்டுமாக.

கடந்த அக்டோபர் 9 அன்று இராமநாதபுரத்திலிருந்து சென்னை நோக்கி சைலோ மகிழுந்தில் வரும் போது மதுராந்தகம் அருகில் ஒரு பெரும் விபத்தில் நானும் ஒட்டுனரும் சிக்கிக் கொண்டோம். நான் மேலே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனத்தில் நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! என்று இறைவன் குறிப்பிடுகிறான். மரணத்தின் நுழைவாயிலுக்குச் சென்ற என்னையும் எனது ஒட்டுனராக கடந்த 2001 முதல் இருந்து வரும் சகோதரர் ஆதிலையும் இறைவன் தான் காப்பாற்றினான். பலமான கோட்டையில் அல்ல மிக பலவீனமான நிலையில் நாங்கள் இருந்த போதினும் இறைவன் நினைத்தால் மனிதர்களை காப்பாற்றலாம் என்பதற்கு நாங்கள் உதாரணமாகி விட்டோம். ஏனெனில் நாங்கள் பயணம் செய்த வண்டியினை பார்த்தவர்கள் யாரும் அதில் பயணம் செய்தவர்கள் சிறிய சிராய்ப்புகளுடன் உயிர் தப்பியதை நம்ப மாட்டார்கள். It was a major accident but we escaped with minor bruises. (அது ஒரு பெரும் விபத்து ஆனால் நாங்கள் சிறு சிராய்ப்புகளுடன் உயிர் பிழைத்தோம்) இதற்கு இறைவனுக்கு மிகப் பெரும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஒரு புதிய வாழ்வை இறைவன் அளித்துள்ளான் என்பதே பேரூண்மையாகும்.


எனது இராமநாதபுரம் தொகுதியில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களும் முன்பே திட்டமிடப்பட்டிருந்து ஆய்வு பணிகளுக்காக சென்றிருந்தேன். வாலந்தரவை, தனுஸ்கோடி மற்றும் இராமேஸ்வரத்தில் அந்த பணிகளை முடித்து விட்டு செவ்வாய் மாலையே சென்னைக்கு திரும்பியிருக்க வேண்டும். புதன் அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பார்வையாளர் முன்னிலையில் நடைபெறும் அதில் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்குக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பங்குக் கொண்டேன். கூட்டம் முடிந்த பிறகு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்து சில அலுவல்களை முடித்து விட்டு பகல் 12.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டேன்.

வழியில் சமயபுரத்தில் உள்ள அன்வாருல் உலூம் ஐடிஐ பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றி விட்டு அதன் பிறகு ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பயணம் தொடர்ந்தது. வழியில் கடுமையான காற்றுடன் மழை பொழிந்தது. மிக மிதமான வேகத்தில் பயணம் தொடர்ந்தது. சுமார் 7 மணியளவில் கும்பகோணம் டிகிரி காபி கடையில் வண்டியை நிறுத்தி காபி சாப்பிட்டு விட்டு 15 நிமிடங்கள் ஒய்விற்கு பிறகு எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது. 

மதுராந்தகம் ஏரி கரை அருகே வண்டி சென்றுக் கொண்டிருந்த போது தான் இப்போது நினைத்தாலும் நெஞ்சை பதற வைக்கும் அந்த சம்பவம் ஒரு நொடி பொழுதில் நடைபெற்று முடிந்தது. சாலையில் மழை நீர் வழிந்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு முன்பு சென்ற ஒரு டிரைலர் சரக்குந்து தனது தடத்திலிருந்து நாங்கள் சென்ற தடத்திற்கு தீடீரென திரும்ப எனது ஒட்டுனர் மோதலை தவிர்ப்பதற்காக பிரேக்கை அழுத்தினார். ஆனால் பிரேக் வேலைச் செய்வில்லை. அந்த நேரத்தில் வண்டி பறக்க ஆரம்பித்தது. நமது வாழ்வு முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் அல்லாஹ் எங்களை காப்பாற்று அல்லாஹ் எங்களை காப்பாற்று என்று குரல் எழுப்பினேன். வண்டி சாலையை கடந்து பக்கவாட்டிலிருந்து புதரில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது. ஒரே இருட்டு. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆதில் முனங்கிக் கொண்டிருந்தான். எனக்கு பின் பக்கம் பார்த்தேன். வலது புறம் உள்ள நடு கதவின் கண்ணாடி உடைந்து இருந்தது. தவிழ்ந்துக் கொண்டு கண்ணாடி வழியாக வெளியே வந்தேன். உடனே வாகனத்தில் சென்றவர்கள் நிறுத்தி விட்டு எனது உதவிக்கு வந்தார்கள். வண்டியில் ஒட்டுனர் இருப்பதை சொன்ன போது அவர்களில் இருவர் ஆதிலை மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். இதன் பிறகு உதவிக்கு வந்தவர்கள் எங்கள் செல்பேசிகளை உள்ளேச் சென்ற எடுத்துக் கொடுத்தார்கள். உடனடியாக நான் தகவல்களைச் சொல்ல அருகில் உள்ள மதுராந்தகம் தமுமுக சகோதரர்கள் விரைந்து வந்தார்கள். பிறகு காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாங்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு பிறகு இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பினோம்.

தொலைக்காட்சிகளில் இந்த விபத்து குறித்து செய்திகள் பரவ தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள சகோதரர்கள் பதறி போய் செல்பேசி வாயிலாக நலம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அனைவரது அழைப்பிற்கும் பதில் சொல்ல இயலவில்லை. இவர்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், உலமா பெருமக்கள் என்று பட்டியல் நீளுகின்றது. அந்த தருணத்தில் அவர்கள் காட்டிய பரிவு நெஞ்சில் என்றும் பசுமையாக பதிந்து இருக்கும். இலட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் செய்தி அறிந்து செய்த பிரார்த்தனைகளுக்கு எப்படி கைமாறு செய்வது?

இந்த விபத்தில் பெற்ற படிப்பினைகள்:

1. நான் முதன் முதலாக 2003ல் ஜெனிவாவிற்கும் அதன் பின் வளைகுடா நாடுகளுக்கும் சென்ற போது தான் அங்கு மகிழுந்தில் செல்பவர்கள் கட்டாயமாக சீட்பெல்ட் என்னும் இருக்கை வளையம் அணிவதை கண்டேன். அப்போது முதல் நாடு திரும்பிய பிறகு சீட் பெல்ட் அணிந்தே பயணம் செய்கிறேன். காரில் ஏறி அமர்ந்ததும் நான் செய்யும் முதல் வேலை சீட் பெல்ட் அணிவது தான். விபத்து நடைபெற்ற அன்றும் சீட் பெல்ட் அணிந்தே பயணம் செய்தேன். இதன் விளைவாக இறைவனின் பேரருளால் கார் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையிலும் நான் அமர்ந்திருந்த முன் இருக்கையின் இடது பக்கம் மிகப் பெரிய அளவில் கார் அடிப்பட்டிருந்தாலும் நான் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி கூட கீழே விழவில்லை. எனக்கு உடலில் எங்கும் காயம் ஏற்பட வில்லை. காலில் ஏற்பட்ட சீராய்ப்பு கூட கீழே இறங்கும் போது சிதறி கிடந்த கண்ணாடி துகள்களினால் ஏற்பட்டது தான். இந்தியாவில் பல மாநிலங்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது சீட்பெல்ட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வெட்டுத் தீர்மானம் கூட முன்மொழிந்தேன். எனவே நீங்கள் முன்சீட்டில் அமர்ந்தாலும் பின் சீட்டில் அமர்ந்தாலும் ஒட்டுனர் உட்பட அனைவரும் சீட் பெல்ட் அணிவது பாதுகாப்பானது அறிவுடமையானது.

2. மழை நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அல்லது மிக குறைவான வேகத்தில் 40 கி.மீ. அளவில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த சூழலில் வண்டிகளில் பிரேக் உட்பட பிற உபகரணங்களின் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது.


3. பயணம் செய்யும் போது கண்டிப்பாக ஒரு துண்டு சீட்டில் முக்கிய தொலைபேசி எண்களை எழுதி வைத்திருக்க வேண்டும். செல்பேசி மட்டும் நம்பக் கூடாது. 
4. பயணத்தின் போது பிறருக்கு விபத்து ஏற்பட்டிருக்கும் போது அவர்களுக்கு உடனடியாக அந்த தருணத்தில் உதவிடும் பண்பு மகத்தானது. எனக்கு அந்த நேரத்தில் உதவிய பெயர் தெரியாத அந்த அன்பர்களுக்கு இறைவன் எல்லா வளங்களையும் தருவானாக.

ரன் அவுட் ஆகாமல் வாழ்க்கை என்னும் இன்னிங்க்சை தொடர்வதற்கு இறைவன் அருள் செய்துள்ளான். இது என்னை பொருத்த வரை ஒரு எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ் தான். இன்சா அல்லாஹ் முன்பை விட வீரியாமாக இறையுணர்வுடன் வாழ்வதற்கும் மக்கள் சேவை செய்வதற்கும் உறுதி எடுத்துக் கொள்கிறேன். எனது நலனில் அக்கறைக் கொண்டு எல்லா வகையிலும் உதவி செய்த அன்பர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும் என்று நெஞ்சுறுக பிரார்த்திக்கின்றேன்.

முதல் படம்: மீண்டும் பிறந்தேன்


இரண்டாவது படம்: சென்னையிலிருந்து இராமநாதபுரத்திற்கு அக்டோபர் 6 மதியம் புறப்பட்ட போது சீட் பெல்டுடன் எடுத்த படம்



மூன்றாவது படம்: தனுஸ்கோடியில் அக்டோபர் 7 அன்று ஒட்டுனர் ஆதிலுடன் எடுத்த படம். புகைப்படக் காரரிடம் என்னுடன் தனியாக படம் எடுக்கவில்லை என்று ஆதங்கத்தை ஆதில் வெளிப்படுத்தி எடுத்துக் கொண்ட படம்


எஞ்சிய படங்கள்: தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் நான் பயணம் செய்த கார்

          

--அல்ஹம்துலில்லாஹ்....தமுமுக மூத்ததலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் அவரது கார் ஓட்டுனர் சகோதரர்  வளமுடன்! நலமுடன்! வாழ..வல்ல ரஹ்மான் துணை நிற்பான்...யாரப்பல் ஆலமீன். . .உனது பேரருளையும் கருணையையும் பொழிவாயாக ! பூரண உடல் நலத்துடனும் மிகுந்த உற்சாகத்துடனும் வாழ.இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்கிறோம்.! 
சவூதி கிழக்கு மண்டல  தமுமுக" அல்-கோபர் கிளை