அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பரபரப்பான மார்க்க தீர்ப்பு
***********************
வாகனம் ஓட்டிகொண்டே
மொபைலில் பேசுவது ஹராம் !!
******************************
இன்று மொபைல்போன்கள் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது
சாலைகளில் நடந்து செல்வோரும் வாகனம் ஓட்டி செல்வோரும் சில சந்தர்பங்களில் மொபைலில் கவனத்தை பறி கொடுத்து விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகள் பரவலாக நடந்து வருவதை நாம் செய்திகளில் பார்கிறோம்
குறிப்பாக வாகனம் ஓட்டகுடியவர்கள் வாகனத்தை ஓட்டி கொண்டிருக்கும் நேரத்தில் மொபைலில் சிந்தனைகளை சிதறவிடுவதால் பல் வேறு வாகன விபத்துக்கள் நடந்துள்ளன
மனித உயிருக்கும் உயிர் பாது காப்பிர்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகிறது
வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுவது மனித உயிருக்கு அச்சுறுத்தல் தரும் அம்சமாக இருப்பதால் அந்த செயலை செய்யவது மார்கத்தின் அடிப்படையில் ஹராமாகும்
இவ்வாறு சவுதி அரபியாவை சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் கலப் பின் முத்தலக் தனது மார்க்க தீர்ப்பில் கூறியுள்ளார்