அன்பு
உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்
வெளிநாடுகளில்
(வளைகுடாவில்) வேலை செய்யும் சகோதரர்களே! ஷைத்தானின் வலையில் விழுந்து
விடாதீர்கள்!
நாம்
சுவனம் செல்வோமா? இல்லை
நரகம் செல்வோமா? என்று
தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த
பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு
சரியான வழியைக் காண்பிக்கும் நபரை அவர்களின் பெற்றோர்கள் காண்பிக்க தவறுவதுதான் இதற்கு முக்கிய
காரணம்.
சிறு
வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூட வெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான
நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர். சொந்த தேசத்தில்
திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு இவருக்கும் திருமணம்
ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக
இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று
தான் சொல்லிக் கொள்வார். இந்த வாழ்க்கை மிகவும் சிரமமான கசப்பான வாழ்க்கை என்பது
அயல் நாட்டில் வாழும் அனைவரும் அறிந்ததே.
இங்கே
நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்தான் பெரும் பாக்கியசாலி. ஜும்ஆ நாட்கள் மற்றும்
பெருநாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொழாத தீனின் வாடையே நுகராத நபர்களை
நண்பர்களாக தேர்ந்தெடுத்தவர் நிலை மிகவும் கவலைக்குறிய நிலையாகும்.
இது
முதலில் தொழுகையின் அருமை பெருமையை மறக்ககடிக்கச் செய்யும். அதன் பின் வீணான
காரியங்களில் ஈடுபட வைக்கும்.குறிப்பாக தொலைக்காட்சில் சினமா ஆடல் பாடல் என்று
கேளிக்கைகளில் காலங்கள் நகரும். இதன் விளைவு காலப் போக்கில் அல்லாஹ்வின்
அச்சமின்றி அன்னியப் பெண்களை காண மனம் கிடந்தது துடிக்கும்.
பொதுவாகவே
மனிதனின் மனம் தீமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும். இதில் தனிமையில்
இணையத்தில் மூழ்கும் நம் இளைஞர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இவர்கள்ஷைத்தானின் வலையில் மிகவும் எளிதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள்.]
வெளிநாடுகளில்
வேலை செய்யும் என் சகோதரர்களே!
அஸ்ஸலாமு
அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்
பாசத்திற்குரிய
அயல்நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களே உங்களில் ஒருவனாக அரபு நாடுகளில் ஒன்றான
அரபு அமீரகத்தில் ஷார்ஜாஹ், துபை, ஃபுஜைராஹ் போன்ற நகரங்களில் பத்து ஆண்டு
காலங்களை கழித்தவன் என்ற அனுபவத்திலும் நம் சகோதரர்கள் மேல் உள்ள அக்கறையினாலும்
ஒரு சில உண்மைகளையும் அதற்குரிய பரிகாரங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.அனைவரும் அவசியம் படியுங்கள்.
சகோதரர்களே
நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை என்பதை நாம்
அறிவோம்.இங்கே எதை விளையச் செய்கிறோமோ அதைத்தான் நாளை மறுமையில் அறுவடை செய்ய
இருக்கின்றோம்.இவ்வுலகம் மறுமையின் விளை நிலமாக இருக்கின்றது.
நல்ல
அமல்களை அதிகமதிகம் செய்ய முடிகின்ற வயது வாலிப வயதுதான். இந்த வாலிபப் பருவத்தை
நாம் உலக விஷயங்களுக்காகவும் உலக சம்பாத்தியத்திற்காகவும் செலவு செய்கின்ற அளவிற்கு
மார்க்க விஷயங்களுக்காகவும் மறு உலகிற்காகவும் செலவு செய்வது மிகவும் அரிதாகி
கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களைப்
பற்றியது தான் என் கவலையெல்லாம்.
நாம்
இளமைப் பருவத்தில் தான் சம்பாத்தியம் செய்ய முடியும் எனவே இந்த வயதில் நாம் ஓடி
ஓடி உழைக்க கடமைப் பட்டுள்ளோம். அதே நேரம் ஹலாலான சம்பாத்தியமாக அது இருக்க
வேண்டும். இது விஷயத்தில் எவரிடமும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கும் பேச்சிற்கே
இடமளிக்கக் கூடாது.
மேலும்
இவற்றிற்கிடையே நமக்குரிய ஐங்கால கடமைகளான தொழுகைகளையும் காலம் தவறாமல் நாம்
நிறைவேற்றிட கடமைப்பட்டுள்ளோம். இரவு பகல் பாராது கடுமையாக உழைக்கும் பல
சகோதரர்கள் வேலையை முடித்து விட்டு இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய
பொழுதின் அனைத்து தொழுகைகளையும் தொழுதிருப்பார்களா? என்றால் அதற்கு பெரும்பாலும் பதில் இல்லை
என்று தான் வரும்.இவ்வுலகின் உன்னத செயல்களான தொழுகைகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டிய இவ்வாலிப பருவத்தை நம் எதிரியான ஷைத்தானின் தூண்டுதளுக்கு துணையாக
தியாகம் செய்து கொண்டிருக்கின்றோம். எப்படி இது சாத்தியம் என கேட்கிறீர்களா?
ஆம்
இன்று துபை, மலேசியா
போன்ற நாடுகளில் லாட்டரிகள் அதிகம் விற்பனையாகின்றது. துபை டூட்டி ஃப்ரீ கூப்பன்,மற்றும் மில்லினியர் கூப்பன்,என்று ஏராளமான பெயர்கள் அவைகளுக்கு
உண்டு.மலேசியா போன்ற நாடுகளில் இந்த லாட்டரிகளை நம் முஸ்லிம்கள் அதிகம் விரும்பி
வாங்குவதாகவும் அதில் கிடைக்கும் பரிசுகளால் மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாகவும்
கேள்விபடுகிறேன். இதெல்லாம் ஷைத்தானுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியவை.
நம்
மறுமை வாழ்க்கையை வருமையாக்கி நாளை நரகிற்குள் நம்மை இழுத்து செல்லும் தீய
செயல்களாகும். இப்படி இன்னும் பல தீய காரியங்களால் நம் முஸ்லிம் சகோதரர்கள்
ஷைத்தானின் தூடுதளுக்கு துணை போகின்றார்கள். அவற்றையெல்லாம் பட்டியல் போடுவதற்காக
நான் இதை எழுத வில்லை.மாறாக இவற்றையெல்லாம் விட என் மனதை அதிகம் பாதித்தவை
ஒன்றுள்ளது. அதை பகிர்ந்து அது தொடர்புடைய நபர்களுக்கு இந்த செய்தி சென்று சேர
வேண்டும் என்பதற்காகத் தான் இதை எழுதுகிறேன்.
வாலிபப்
பருவனும் சோதனை
நாம்
சுவனம் செல்வோமா? இல்லை
நரகம் செல்வோமா? என்று
தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த
பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு
சரியான வழியைக் காண்பிக்கும் நபரை அவர்களின் பெற்றோர்கள் காண்பிக்க தவறுவதுதான்
இதற்கு முக்கிய காரணம்.சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூட
வெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி
சென்று விடுகின்றனர்.சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு
வந்த பிறகு இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு
குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார். இந்த வாழ்க்கை
மிகவும் சிரமமான கசப்பான வாழ்க்கை என்பது அயல் நாட்டில் வாழும் அனைவரும் அறிந்ததே.
இங்கே
நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்தான் பெரும் பாக்கியசாலி. ஜும்ஆ நாட்கள் மற்றும்
பெருநாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொழாத தீனின் வாடையே நுகராத நபர்களை
நண்பர்களாக தேர்ந்தெடுத்தவர் நிலை மிகவும் கவலைக்குறிய நிலையாகும்.இது முதலில்
தொழுகையின் அருமை பெருமையை மறக்ககடிக்கச் செய்யும்.அதன் பின் வீணான காரியங்களில் ஈடுபட
வைக்கும்.குறிப்பாக தொலைக்காட்சில் சினமா ஆடல் பாடல் என்று கேளிக்கைகளில் காலங்கள்
நகரும். இதன் விளைவு காலப் போக்கில் அல்லாஹ்வின் அச்சமின்றி அன்னியப் பெண்களை காண
மனம் கிடந்தது துடிக்கும்.
தனிமை
ஓர் பெரும் சோதனை
அயல்
நாட்டில் வசிக்கும் ஓர் வாலிபன் தனிமை என்னும் சோதனையை சில அல்லது பல
சந்தர்பங்களில் சந்தித்தே ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாதவர்
பாக்கியசாளி என்றே சொல்லலாம்.ஆனால் அது கிடைத்து அதில் திறம்பட வெற்றி பெற்றவர்
அல்லாஹ்வின் அருளைப் பெற்றவராவார். ஒரு இளைஞன் பாவங்களை சம்பாதித்துக் கொள்ள
பெரிதும் துணை நிற்பது அவன் கையில் உள்ள கைபேசிதான்.
தற்போதைய
காலச் சூழலில் இணையம் (INTERNET) உபயோகிக்காத
நபர் இல்லை என்றுதான் சொல்லலாம். கணினி இல்லாதவர் கூட கைபேசியில் (Mobile Phone) இணையத்தை உபயோகிக்கின்றார். வெளிநாடுகளில்
வாழும் நம் (BACHELOR) வாலிபர்கள்
இப்படிப்பட்ட கைபேசிகளினால் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி வருகின்றனர்.அதில் ஆபாச
உலகமும் அடங்கும். YOU TUBE ,FACEBOOK போன்றவை இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதில் எந்நேரமும்
மூழ்கிக் கிடக்கும் பல சகோதரர்கள் தனிமை விரும்பிகளாகவே மாறி விடுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்? இது தொடர்பாக மார்க்கம் நமக்கு என்ன
சொல்கின்றது?என்பதை
வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் இளைஞரும் அறிந்து வைத்திருப்பதும் அதன்படி
அமல் செய்வதும் கட்டாயமாகும்.
ஐந்து
வருவதற்குள் ஐந்தை (நல்வழியில்) அனுபவித்துக் கொள்ளுங்கள்.நோய் வரும் முன்
ஆரோக்கியத்தையும்,வேலை
வரும் முன் ஓய்வையும்,வறுமை
வரும் முன் செல்வத்தையும்,முதுமை
வரும் முன் வாலிபத்தையும்,மரணம்
வரும் முன் இந்த வாழ்வையும்.(நல்வழியில்) அனுபவித்துக் கொள்ளுங்கள்.என்று கண்மணி
நாயகம் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.(நூல்:நஸாயீ)
நமக்கு
கிடைத்த இந்த வாலிப பருவத்தை ஓய்வு நேரங்களில் எந்த நோக்கமும் இல்லாமல் வெறுமெனே
எந்நேரமும் TV யிலும்
INTERNET லும் காலங்களை போக்காமல் நல்ல முறையில்
பயன்படுத்துவதற்காக ஒரு அட்டவணையை நமக்கு நாமே மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். தொழுகை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் குர்ஆன் ஓதுவது,அல்லது ஓதக் கற்பது, அல்லது கற்பிப்பது,ஹதீஸ்களை படிப்பது, உழு எப்படிச் செய்தல்? கடமையான குளிப்பு எப்படி குளித்தல்?போன்ற ஏராளமான சட்டங்களை அருகில் இருக்கும்
ஆலிம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதை அனைவரும் அவசியம்
செய்ய வேண்டும்.அப்படி அவசியம் செய்ய வேண்டிய காரணம் என்ன?
''மனிதனின்
இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் நிச்சயமாக ஷைத்தானும் ஓடிக் கொண்டிருக்கின்றான்''என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறுகிறார்கள். (நூல் புகாரி)
நமது
அறியாமையும் பலகீனமும் தனிமையும் தான் ஷைத்தானின் மிகப் பெரும் பலம். நம்மை
எப்படியும் வழிகெடுக்க வேண்டும் என்று காத்திருக்கும் ஷைத்தானின் கூட்டங்களுக்கு
நாம் எளிதில் வாய்ப்புகளை வழங்கிடக் கூடாது.தவறான முறையில் நேரங்களை
பயன்படுத்துவது நம் மன இச்சைகளை கட்டவிழ்த்து விட்டுவிடும்.தீய காட்சிகளை
பார்ப்பதும் அன்னியப் பெண்களை ஆபாசமாக நோக்குவதுமாக நம்மை வெட்கமில்லாத ஜடமாக
மாற்றிவிடும். இறையச்சமற்றவனாகவும் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கையையும்
சீரழித்த பாவியாக கெட்டழியச் செய்து விடும்.
பொதுவாகவே
மனிதனின் மனம் தீமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும். இதில் தனிமையில்
இணையத்தில் மூழ்கும் நம் இளைஞர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இவர்கள் ஷைத்தானின் வலையில் மிகவும் எளிதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள்.
இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு சில ஆலோசனைகள்.
சிரமமில்லாத
வேலையில் உள்ளவர்கள் ரமலான் மாதம் மட்டுமல்லாது மற்ற மாதங்களிலும் பிறை 13,14,15,ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதும் மேலும்
சாத்தியமென்றால் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் போன்ற நாட்கள் நோன்பு
நோற்பதும் சிறந்தது. சிரமமான வேலையில் இருக்கும் வாலிபர்கள் மனம் எப்போதெல்லாம்
தீய எண்ணங்களில் அலை பாய்கின்றதோ அப்போதெல்லாம் நோன்பை அவசியமாக்கிக் கொள்ள
வேண்டும்.
இதை
கடை பிடிக்கும் காலமெல்லாம் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதெல்லாம்
நடைமுறைக்கு சாத்தியமா? என்றொரு
வினா உங்கள் உல் மனதில் எழுந்தால்.அந்த எண்ணத்தை குழி தோண்டி
புதைத்திடுங்கள்.இந்தியாவில் இருந்து ஆகாய மார்க்கமாக கடல் கடந்து அந்நிய
தேசத்திற்கு வந்து சம்பாத்தியம் செய்வது சாத்தியெமென்றால் அங்கே கர்ப்பொழுக்கமாக
நாம் வாழ இந்த நபிவழியை கடைபிடிப்பதும் சாத்தியமே என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
வாலிபர்களே
உங்களில் வசதியுள்ளவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்.நிச்சயமாக அது அவரின் பார்வையை
(அன்னியப் பெண்களை விட்டும்) தாழ்த்திடும். மேலும் அவரின் மர்ம உறுப்பை (கர்ப்பை)
பாதுகாத்திடும். திருமணம் செய்ய வசதியில்லாதவர் நோன்பை பற்றிப் பிடிக்கட்டும் அது
அவருக்கு பாதுகாப்பாகும். என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அழகிய வழி காண்பித்துள்ளார்கள்.(நூல் புகாரி,முஸ்லிம்)
நம்
பெற்றோர்கள் மற்றும் நம் மனைவி மக்களுக்காக குடும்ப கஷ்டத்தை நீக்கிட அயல்
நாட்டிற்கு வந்துள்ள நாம், கர்ப்பொழுக்கத்தை
கடை பிடிப்பது கட்டாயமாகும்.அதை மீறினால் பெற்றோருக்கும் நமக்காக தன் இளமையை
தியாகம் செய்து அடுத்த முறை கணவன் எப்போது வருவார் என்று காத்திருக்கும் நம்
மனைவிக்கும் துரோகம் செய்ததோடு படைத்த ரப்புல் ஆலமீனின் கடும் சினத்திற்கும் ஆளாக
நேரிடும்.விளைவு துன்யாவிலும் கைசேதம். ஆகிரத்திலும் நஷ்டம் என்ற இழி நிலைக்கு
ஆளாகுவோம். அல்லாஹ் இதிலிருந்து நம்மை பாதுகாப்பானாக.
எனவே
இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டம் வெளிநாட்டில் வாழும் நம் இளைஞர்களுக்கும்
பொருத்தமானதாக இருப்பதனால் இது போன்ற நோன்புகளை கடைபிடித்து கர்ப்பை பாதுகாத்திட
நம் வாலிபர்கள் தயாராக வேண்டும். இதற்கு தயாராவது யாருக்கெல்லாம் சிரமமோ அவர்
திருமணம் ஆனவரா? மனைவியை
உடன் அழைத்துக் கொள்ளுங்கள்.அதற்கு பொருளாதார வசதி இல்லையா? திருமணமானவராக இருந்தாலும் சரி, அல்லது திருமணம் ஆகாதவராக இருந்தாலும் சரி
இது போன்றதோர் வாழ்க்கையை தூர தள்ளிவிட்டு தாயகம் திரும்ப முன்வாருங்கள். உண்மையாக
உழைத்தால் எங்குவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.நிச்சயம் உணவு வழங்குபவன் அந்த ஏக
இறைவனாகும்.நாம் எங்கே இருந்தாலும் நமக்கு அவன் உணவு (ரிஸ்க்) வழங்குவான்.
வஸ்ஸலாம்:
மவ்லவி
N.சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில் மன்பயீ
ஃபுஜைராஹ்.
U A E .
நன்றி:
நீடூர் இன்போ.