அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 26 ஜூலை, 2014

"யூதர்கள் குறைஷிகளுடன் தந்திரமாகக் கைகோர்த்துக் கொண்டு செய்த சூழ்ச்சிகளைத் தகர்தேரிந்தார்கள் அண்ணலார்."

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"யூதர்கள் குறைஷிகளுடன் தந்திரமாகக் கைகோர்த்துக் கொண்டு செய்த 
சூழ்ச்சிகளைத் தகர்தேரிந்தார்கள் அண்ணலார்."


முக்கியமான கட்டத்தில் யூதர்கள் அண்ணலாருக்குத் துரோகம் செய்தார்கள். முஸ்லிம்களுடன் நல்ல உறவுடன் இருக்கும் பொழுதே அவர்கள் எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆதரவு தருவதாக வாக்களித்தார்கள்.


மதீனாவுக்கெதிராக எதிரிகள் தாக்குதல் தொடுத்தால் முஸ்லிம்களோடு ஒன்றிணைந்து போராடுவோம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள் யூதர்கள். இந்த ஒப்பந்தம் நிலவில் இருக்கவே எதிரிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் பனூகுறைழாக்கள்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் யாரெல்லாம் பகைமை கொண்டிருந்தார்களோ அத்தனை கூட்டத்தாரையும் ஒன்றிணைத்து முஸ்லிம்களுக்கெதிராக ஒரு பெரும் படையை குறைஷிகள் திரட்டிக்கொண்டு மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் பனூகுறைழாக்கள் இந்தத் துரோகத்தைத் செய்தார்கள்.

மனம் தளரவில்லை மார்க்கத்தை இதயத்தில் ஏந்தியவர்கள். மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டினார்கள். முடியாத இடங்களில் காவலுக்கு நின்றார்கள் இப்படி மதீனாவுக்குப் பார் போற்றுமளவுக்குப் பாதுகாப்பு அரணைக் காட்டி எழுப்பினார்கள் முஸ்லிம்கள்.

யூதர்கள் குறைஷிகளுடன் தந்திரமாகக் கைகோர்த்துக் கொண்டு செய்த சூழ்ச்சிகளைத் தகர்தேரிந்தார்கள் அண்ணலார். மதீனாவை ஆக்கிரமிக்க முடியாமல் தோல்விமுகத்தோடு எதிரிகள் திரும்பிப் போய் விட்டார்கள். ஆனால், தங்களுக்குத் துரோகமிலைத்தவர்களை அண்ணலார் சும்மா விட்டுவிடவில்லை.

நெஞ்சில் வஞ்சத்தை வைத்து வலம் வரும் யூதர்கள் மதீனாவில் குடியிருப்பது முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் ஆபத்து தான் என்று அண்ணலார் உணர்ந்தார்கள்.

எதிர்கள் திரும்பிப் போனவுடன் அண்ணலார் அடுத்த கட்ட நடவடிக்கையை யூதர்கள் மேல் திருப்பினார்கள். முஸ்லிம்கள் யூதர்களின் கோட்டையை முற்றுகையிட்டார்கள் பனூகுறைழாக்கள் வெளியே வரவில்லை.

மிக நீண்ட நாட்கள் முற்றுகை நீடித்தது. இருதியில் வழிக்கு வந்தார்கள் யூதர்கள். தங்களுடைய விவகாரத்திற்கு தீர்ப்பு சொல்ல முஸ்லிம்களிலிருந்தே ஒரு நடுவரை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவர்தான் ஸஃத் இப்னு முஆத் (ரலி) மதீனாவில் வாழும் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவர் தான் ஸஃது இப்னு முஆத் (ரலி), பனூ குறைழா கோத்திரம் அவ்ஸ் கோத்திரதொடு நல்ல உறவுடன் இருந்ததும் எனவே ஸஃதிடமிருந்து தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பே வரும் என்று யூதர்கள் நம்பினார்கள். ஸஃதின் குடும்பமும் செய்ய வேண்டும் என்று ஸஃதை வலியுறுத்தினர்.

"அல்லாஹ்வின் விஷயத்தில் அநீதி இழைத்து விடக் கூடாது" என்பதுதான் ஸஃதின் சிந்தனையாக இருந்தது. தன்முன் கொண்டுவரப்பட்ட இந்த விவகாரத்தில் அவர் தீர்மானம் எடுத்து தீர்ப்பு கூறினார். அது தன் கோத்திரத்தாரின் நண்பர்களான பனூகுறைழாவுக்கு எதிராக இருந்தது. அவர்களின் படையினருக்கு ஸஃத் இப்னு மூஅத் (ரலி) அவர்கள் மரணதண்டனை அளித்து தீர்ப்பு கூறினார்.

எல்லோருக்கும் பொதுவான விவகாரங்களில் சகோதர உறவுகளைப் புறந்தள்ளிவிட்டு நடுநிலையான முடிவெடுப்பது என்பது நன்மையின் பாற்ப்பட்டதாகும். இந்தத் தத்துவத்தை ஸஃதும் கடைபிடித்தார்.

கழுத்து முறிந்து கிடக்கும் தற்போதைய சமூக, அரசியல் விவகாரங்களில் இந்தத் தத்துவம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றி: தேஜஸ் - நாளிதழ்.--