அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இறைவனின் திருப்பெயரால்...காஷ்மீர் வெள்ள நிவாரணநிதி தாரீர்!
பேரழகும் இளங்குளிரும் கொண்டாடி மகிழும் அழகிய காஷ்மீர், இப்போது பெரு வெள்ளத்தில் மூழ்கி சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இமயத்தின் அடிவாரத்தில், பார்புகழ் போற்றும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நம் இந்திய சகோதர, சகோதரிகள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு உதவிட இந்தியா வெங்கும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண நிதியை சேகரிக்கிறார்கள்.1999ல் ஒரிஸ்ஸா புயல் நிவாரண நிதி, 2001ல் குஜராத் பூகம்ப நிவாரண நிதி என தேசிய பேரழிவுகளின் போது, நாட்டு மக்களுக்காக நிவாரண நிதி சேகரித்த தமுமுக இப்போது, ஜம்மு&காஷ்மீர் மக்களின் துயர் துடைக்கவும் மக்களை தேடி வருகிறது.
மனிதநேயம் கொண்டோரே... உங்கள் உள்ளங்களை திறந்து உதவிடுவீர்...!!
உங்கள் குர்பானித் தோல்களை காஷ்மீர் மக்களுக்காக தந்து உதவுங்கள்!
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வசூல் நடைபெற்று வருவது தாங்கள் தெரிந்ததே. அனைத்துத் தரப்பு மக்களும் தமுமுகவின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி தந்து வருகிறார்கள். துண்டுப் பிரசுரங்களாகவும், பேனர்கள் வாயிலாகவும் மக்களிடத்தில் பரப்புரை செய்து வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் ஜமாஅத்தார்களும் இந்த நிதி வசூலுக்கு ஒத்துழைப்ப தருகிறார்கள்.
இந்நிலையில், ‘ஈதுல் அள்ஹா’ என்று சொல்லக்கூடிய ‘தியாகத் திருநாள்’ வருகிறது. அந்த தியாகத் திருநாளில் அறுக்கப்படும் பிராணிகளின் தோல்களை காஷ்மீர் மக்களுக்காகத் தரும்படி மக்களிடம் கோரிக்கை வைக்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
இதுவரைக்கும் நீங்கள் கொடுக்கும் தோல்களின் மூலமாக ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளீர்கள். இம்முறை மட்டும் பொருளிழந்து, வீடிழந்து, சொத்து சுகங்களை இழந்து அன்றாட உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கக்கூடிய பரிதாபத்துக்குரிய காஷ்மீர் மக்களுக்காக, உங்கள் குர்பானித் தோல்களைத் தந்து உதவுங்கள். உங்கள் பகுதியில் அறுக்கப்படும் பிராணிகளின் தோல்களையும் கேட்டுப் பெறுங்கள்.
உங்கள் தொகைகளை அனுப்பவேண்டிய வங்கி விபரம்
தலைமையக முகவரி:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்7, வடமரைக்காயர் தெரு,மண்ணடி, சென்னை -1போன்: 044-25247824
- தமுமுக, தலைமையகம்