அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
தன் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றுள்ள கண்ணியத்திற்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேற்று ஜித்தாவில் நடைபெற்ற மாலை நேர இஸ்லாமிய அமர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் தெளிவான உரைகளையும், கருத்துக்களையும் தந்துள்ளார்கள்.
சவூதி ஜித்தாவில் நடைபெற உள்ள இனிய இஸ்லாமிய மாலை அமர்வு நிகழ்சிக்காக தமுமுக வின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்று இருக்கிறார்.
இந்நிலையில் ஜித்தாவில் தலைமை கான்சலராக பொறுப்பு வகிக்கும் பி.எஸ். முபாரக் அவர்களை பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் சந்தித்து ஹஜ் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
சந்திப்பின் போது சவூதி ஜித்தாவில் செயல்படும் அய்டா அமைப்பின் பொறுப்பாளர்கள் ராஃபியா மற்றும் அஜ்வா நெய்னா உள்ளிட்ட தமுமுக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.