அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
குர்ஆன் ஓதுவதன் சிறப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
குர்ஆன் ஓதுவதன் சிறப்பு
✔(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது.
இறைவேதம் குர்ஆன் 36:70
✔நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனைப் பின்பற்றாமல் விட்டுவிட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி), நூல் : முஸ்லிம்
✔குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி), நூல் : புகாரி
✔குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல் : திர்மிதி குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். “அலீஃப்,லாம், மீம்“ ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி), நூல் : திர்மிதி, தாரமி
✔குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஓதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி), நூல் : திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா
✔குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணியமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஓதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி),நூல் : புகாரி, முஸ்லிம்
✔குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் ‘இறைவா இவருக்கு ஆடையை அணிவி’ என்று சொல்லும். அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். ‘இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக!’ என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான்.அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி), நூல் : திர்மிதி,இப்னு குஸைமா
✔நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்;எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? இறைவேதம் குர்ஆன் 54:32
--✔மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?இறைவேதம் குர்ஆன் 47:24
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)