அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 5 ஜூலை, 2013

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ தேர்வு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ தேர்வு!





சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரை தேர்வு செய்ய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. அஸ்லம் பாஷா போட்டியின்றி தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை 28.06.2013 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது இந்நிகழ்வின் போது தமுமுக துணைத் தலைவர் குணங்குடி அனீபா, வடசென்னை மாவட்ட தலைவர் எப்.உஸ்மான் அலி, காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாகூப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
T M M K AL-KHOBAR. K.S.A I visit : www.tmmk.info
www.tmmk-ksa.com I Join: facebook.com/tmmk.khobar
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::