அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 5 மே, 2013

தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத, ஊழல் செய்யாத சட்டமன்ற உறுப்பினர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்காத, ஊழல் செய்யாத 
சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்றால் அது 
தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சியின் 
சட்டமன்ற உறுப்பினர்களான இருவர் மட்டுமே. 
ஒன்று பேரா.டாக்டர்.ஜவாஹிருல்லாஹ் MLA., 
அவர்களும் மற்றொன்று ஆம்பூர் அஸ்லம் பாஷா MLA., 
அவர்களும் தான் என்பதை 

பகிரங்கமாக அறிவிக்கிறோம். 

இப்படி அறிவிக்க 

அ.தி.மு.க வுக்கு தைரியம் உண்டா? 

தி.மு.க வுக்கு தைரியம் உண்டா? 

தே.மு.தி.க வுக்கு தைரியம் உண்டா?

காங்கிரஸூக்கு தைரியம் உண்டா? 

பா.ம.க வுக்கு தைரியம் உண்டா? 

இன்னும் மற்ற கட்சிகளுக்கு தைரியம் உண்டா?


ஜவாஹிருல்லாஹ் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் விருது! - ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை

E-mailPrintPDF
செய்தி: காயல்பட்டணம்.காம்
தமிழகத்தில் உள்ள முன்னணி ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது சென்னையில் வழங்கப்பட்டது. இந்த விருதினை தெற்கு மதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை (சி.பி.எம்.), பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜே. புஷ்பலீலா ஆல்பன் (தி.மு.க.), ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (ம.ம.க.) மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டியராஜன் (தே.மு.தி.க.) ஆகியோர் பெற்றனர். இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொது செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆம், வரலாறு படைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஆறு அமைப்புகளின் ஊழல் எதிர்ப்பு போராளிகள், ஊழலுக்கு எதிரான நேர்த்தியான கூட்டணி அமைத்து, நான்கு நேர்மையான உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விருதுகளும் வழங்கியுள்ளனர். சென்னை எதிராஜ் சாலையில் உள்ள பெண்களுக்கான எதிராஜ் கல்லூரியின் கேளரங்கில் - பரிசளிப்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 11, 2012 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. பெருந்திரளானவர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். 90 வயதை தாண்டிய - திருப்பூர் பஞ்சாயத் யூனியனின் முன்னாள் தலைவர் - திரு வி.பொன்னுலிங்கம் - இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இலக்கிய செல்வர் திரு குமரி அனந்தன் - நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மூன்று உறுப்பினர்களுக்கு பொன்னாடை போத்தி, நினைவு பரிசுகளையும் வழங்கினார். அவர் - தனது வாழ்த்துரையில் - நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரை பற்றி குறிப்பிட்டார். இந்த கால அரசியல்வாதிகள் - காமராஜரின் வாழ்கையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர் போல் வாழ முயற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
திரிபுரா மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் திரு பி.எஸ். ராகவன் IAS - ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் வடிவமைத்துள்ள பரிசளிப்பு திட்டத்தை மிகவும் பாராட்டி பேசி, இதனை நாட்டிலேயே ஒரு முன்னோடியான முயற்சி என கூறினார். ஒரு நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முனைந்திடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்து கூறிய அவர், விருதுகளை வென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுதல் தெரிவித்தார்.
புதிய தலைமுறை ஊடகத்தின் ஆசிரியர் மாலன் மற்றும் பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் - ஊழலையும், லஞ்சத்தையும் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாது என கூறி, அதை எதிர்த்து எதையும் செய்ய துணியாத பொது மக்களின் நிலைப்பாட்டை கண்டித்தனர். ஊழல் எதிர்ப்பு போராளிகளின் தற்போதைய முயற்சி மக்களின் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
விருதுகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் - தற்போது போல், எப்போதும் சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்க முயற்சி செய்வோம் என்றும், இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களாக தொடர்ந்து செயலாற்றுவோம் என்றும், இந்த விருதுகளுக்கு பின்னால் உள்ள நெறிகளை உயர்த்தி பிடிப்போம் என்றும் உறுதி கூறினர்.
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பொது செயலாளர் திரு எஸ்.எம். அரசு - தனது வரவேற்புரையில் மூன்று விசயங்களை - சம்மந்தப்பட்ட அனைவரின் பரிசீலனைக்கும் எடுத்து வைத்தார்.

1) மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளும், பிற கட்சிகளின் அரசியல்வாதிகளும், தொண்டர்களும் - நாட்டுக்கும், மக்களுக்கும் தன்னலமற்ற சேவை புரிய தியாகம் செய்யவேண்டிய துறையாகவே அரசியலை பார்க்க வேண்டும். பொருளாதார வசதிகளை தேடுவோர் அரசியலை தேர்வு செய்ய கூடாது. அதனை நாடுவோர் - அதற்கு என உள்ள பிற பாதைகளை தேடி கொள்ளட்டும்.
2) ஒதுங்கிவிட்டு, பின்னர் வெளியில் இருந்து புலம்பாமல், நல்ல, சரியான சிந்தனைக்கொண்ட, நேர்மையானவர்கள் - இந்த நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றிட துணிந்து வரவேண்டும். தீயவர்களால் தீமை நடப்பதில்லை; தீயவர்கள் தீவிரமாக செயலாற்றும்போது, அதனை எதிர்த்து ஒன்றும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் (தீமை) நடக்கிறது.
3) நாட்டினர் முன் மிக கடினமான பணி உள்ளது. தங்களின் பிரதிநிதிகளாக செயல்பட நல்ல, நேர்மையானவர்களை அடையாளம் கண்டு, தேர்தலின் போது, அந்த நாட்டு பற்று மிக்கவர்களுக்கு - அவர் எந்த கட்சியினராக இருந்தாலும், யார் தலைவராக இருந்தாலும், எந்த கொடியினை கொண்டவராக இருந்தாலும், எந்த சின்னத்தை கொண்டவராக இருந்தாலும் - அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

பிரதிநித்துவ மக்களாட்சியில் - ஊழலற்ற நிர்வாகத்தினை நடத்திட இந்த மூன்று கொள்கைகளும் மிகவும் அவசியம்.
நிகழ்ச்சியினை நெறிப்படுத்திய ஐந்தாம் தூண் (5th Pillar) அமைப்பின் தலைவர் திரு விஜய் ஆனந்த் பேசுகையில் - தெளிவான முடிவுகள் கிடைக்கும் வரை இந்த ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார். ஊழல் எதிர்ப்பு அமைப்பின் கோவை பிரிவை சார்ந்த திரு சேலக்கரைச்சல் ஏ.ஸ்ரீதர் - ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, அதனை கூட்டத்தினர் ஒன்றாக வழிமொழிந்தனர்.
இந்த திட்டத்திற்கான வேலைகள் - மே மாதம் துவங்கியது. இறுதி பரிசளிப்பு நிகழ்ச்சிகளை - ஐந்தாம் தூண் அமைப்பின் செயல் இயக்குனர் திரு கே. பானுகுமார், தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் தலைவர் திரு எல்.எஸ். ஜெகநாதன், தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் திரு சந்திர போஸ், அதன் தலைமை நிலைய செயலாளர் திரு வி.ஆர்.சந்திரன், அதன் மக்கள் தொடர்பு செயலாளர் திரு ஏ.நபீஸ் அஹமத், அதன் செயல் திட்டங்கள் செயலாளர் திரு ஜேம்ஸ் ராஜநாயகம், அலுவலக மேலாளர் திருமதி தில்சத் பேகம் ஆகியோர் திறனாக ஏற்பாடு .செய்திருந்தனர்.
நேர்மை குறித்த அக்கறை இந்நாட்டில் - குறிப்பாக அரசியலில் - மிகவும் குறைவாக உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சிறப்பியல்புகள் பற்றி விவரிக்கும் ஐக்கிய நாட்டு சபையின் ஓர் ஆவணத்தில் - இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, "நேர்மை என்ற சொல்லுக்கு இந்தியர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை" என பதியப்பட்டிருப்பதாக கூறுவர். எவ்வளவு வெக்கப்படவேண்டிய விஷயம்!
இந்த கூட்டமைப்பானது - தமிழக சட்டமன்றத்தின் நேர்மையான உறுப்பினர்களை அடையாளம் காண ஒரு வழிமுறையை வடிவமைத்து, அவர்களை கவுரவிக்க முடிவுசெய்தது. நேரடி மற்றும் ஆழமான 26 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் நிரப்பி அனுப்பும்ப்படி, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அது அனுப்பப்பட்டது.
பதில் அளிக்க விரும்பாத நேர்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என ஒத்துக்கொண்டாலும், நல்ல உறுப்பினர்கள்:ஊழல்புரியும் உறுப்பினர்கள் விகிதம் - மிகவும் வருந்தக்கூடிய அளவில் உள்ளது. மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், அரசு சாரா அமைப்புகளின் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டியது கடமை என்று கருதி, பதில் கூறிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் கவுரவிக்க முடிவுசெய்யப்பட்டது.
ஊழல் போக்கை தடுத்து நிறுத்த ஒரு புரட்சி அவசியம். அதன் பிறகு கலாசார மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இந்த விருது வழங்கும் திட்டம் - அந்த திசையில் ஒரு சிறு முயற்சி. இது பலரின் பாராட்டுதலையும், சிலரின் எதிர்ப்பினையும் பெற்றுள்ளது. இது நேர்மையான உறுப்பினர்களை உற்சாகபடுத்தும் என்றும், நேர்மை மற்றும் தன்னலமற்ற எண்ணத்தை பிற அரசியல்வாதிகளிடம் விதைத்திட இது உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். நடப்புகள் கண்டிப்பாக - இன்றில்லாவிட்டாலும், ஓர் நாள் மாறும்.
இந்த நிகழ்ச்சிக்கு தொடர்பாக - கல்லூரி மாணவர்களுக்கு என ஆங்கிலத்திலும், தமிழிலும் - அரசியல் ஊழலை எதிர்க்க மாணவர்களிடம் உள்ள செயல்திட்டம் (Students Strategy in combating Political Corruption) என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள திட்டமிட்டும், நாட்டு பற்றுடனும் செயல்படும் அனைத்து அமைப்புகளுக்கும் எழுச்சியூட்ட வேண்டும் என விரும்புகிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

" Peace Be Upon You "
      
   

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!

  இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

வெள்ளி, 3 மே, 2013

இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)


Inline image 1

[ ''யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்'' அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் அபூதாவுத். ]
அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.

பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.
அவைகள்:

1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.

2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)

இதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.

அதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.

ஜோதிடக் கலை:

இரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும் ஒரு கல்வியாகும்.

ஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்:

1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.

இது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.

2) நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.
இத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.
இராசிப்பலன்கள்:

ஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.
படைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.

எந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: -

1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு
2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.

ஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.

ஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று நம்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.

ஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். 

இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ?

ஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின் இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.

ஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:
ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 30:60)

உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
(அல்-குர்ஆன் 10:106-107)

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ''உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ''அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்' என்று அல்லாஹ் கூறினான்'' எனக் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)

அல்லாஹ் நட்சத்திரங்களை 3 காரணங்களுக்காக படைத்துள்ளான்.

1) வானத்தை அலங்கரிப்பதற்காகவும்
2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும்
3) கப்பலில் வழி காட்டியாகவும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

''யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்'' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.

''யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் அபூதாவுத்.)

''குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் ''மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே'' என்று வலியுறுத்திக் கூறுகிறது.
எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது ''இறைவனைத்'' தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்'' என கூறுவது போலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
(இன்னும்) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார். (அல்-குர்ஆன் 27:65)

அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்

                     

வழிக்காட்டுவோம் வருங்கால தலைமுறைக்கு; 
வாழ்ந்து காட்டுவோம்! சொர்க்கம் புகம்படி!
இன்ஷா அல்லாஹ்!!




வியாழன், 2 மே, 2013

TMMK vin mooththa Porali .. .. Dua seihirar.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


TMMK vin mooththa Porali (83) Salem Husain avarhal, Thalaivar JSR matrum Manila seyalalar Kovai Syed udan. 
Ivar Delhi Perani utpada TMMK vin anaiththu porattankalilum pankeduththullar. Inrum TMMK medaihalil mulanki varuhirar. 
Islamia arasu varavendum enpade thanathu Valnal letchiyam enrum ,athu TMMK val mudiyum enru nampuhirar , Dua seihirar.




அல்லாஹ் நாடினால் நாளைய ஆட்சி அதிகாரம் நம்மவர் கையில் இன்ஷா அல்லாஹ்.அல்லாஹ் கருணையாளன்.





~~~~~~~~~~~~~~~~~~~~~
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 

எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10


~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A

~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!  
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
   

புதன், 1 மே, 2013

மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா MLA கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா MLA கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:



29.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 25 ஆம் தேதி மரக்காணம் பகுதியிலே நடைபெற்றது உண்மையிலேயே மிகவும் துயரமான சம்பவமாக விளங்குகிறது. குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன: கூனிமேடிலே உள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. 

அரசு பேருந்துகளும் எரிக்கப்பட்டு ஒரு பதற்றமான சூழல் உருவாயியிருப்பது நாம் அனைவரும் அறிந்தது. இதற்கு முக்கிய காரணமாக நாங்கள் கருதுவது, வெறுப்புணர்வை ஊட்டக்கூடிய பேச்சுகள், சாதி மோதல்களாக இருக்கட்டும் அல்லது வகுப்புவாத மோதல்களாக இருக்கட்டும், 

இவற்றுக்கு அடிப்படையாக விளங்குவது எந்தவிதமான வரம்பும் இல்லாமல் பொறுப்புணர்வும் இல்லாமல் மேடைகளிலே பிற சாதியினரையும், மதத்தைச் சார்ந்தவர்களையும் புண்படுத்தக்கூடிய வகையிலே அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வகையிலே உரைகள் ஆற்றப்பட்டு வருகின்றன. 

எதிர்காலத்திலே, இதுபோன்ற வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளை யார் பேசினாலும் அவர்கள்மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நிச்சயமாக இந்த அரசு பாரபட்சம் இல்லாமல் கடந்த காலங்களிலே கையாண்டிருக்கின்றது. எதிர்காலத்திலும் அப்படி கையாளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

அந்த அடிப்படையிலே இந்த விஷயத்தையும் கையாண்டு சாதி பிளவுகள், மத ரீதியான பிளவுகள் இல்லாத சமூக நல்லிணக்கம், மிக சிறப்பான முறையிலே இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இருக்கின்றது என்ற அடிப்படையிலே நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி பராபட்சம் இல்லாமல் விசாரணைகளை நடத்தி, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். 

1987 ல் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களை இப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இநத் அளவிற்கு அல்ல, இதைவிட மிகப் பெரிய அளவில் நடைபெற்றப்போது அனைத்து சமூகத் தலைவர்களையும் ஒன்று சேர்த்து அவர்களிடம் நீண்ட நேரம் பேசி, ஒரு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்கள். 

அதுபோன்று நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இந்த அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென்று கேட்டு அரசாங்கத்தினுடைய கவனத்தை ஈர்த்து அமர்கின்றேன்.
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!  
இறைத் தூதர் போதனையை..யுகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    

நெல்லிக்குப்பத்தில் நகரமன்றத்தில் மமக நகரமன்ற உறுப்பிணர்கள் கோரிக்கை!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நகரமன்றத்தில் மமக நகரமன்ற உறுப்பிணர்கள் கோரிக்கை!

நெல்லிக்குப்பத்தில் 30/04/2013 அன்று நடைப்பெற்ற நகரமன்ற கூட்டத்தொடரில் மமக நகரன்ற உறுப்பினர்கள் அப்துல் ரஹீம், முஜிபுர்ரஹ்மான் அவர்கள் பேசியதாவது குண்டு வெடிப்பு எங்கு நடந்தாலும் இஸ்லாமியர்கள் மீது உடனடியாக பழிபோட்டு செய்திகளை வெளியிடும் சில உடகங்களை மமக சார்பில் கண்டிப்பதாக கூறினார்கள்.

நெல்லிக்குப்பத்தில் இரவு 10 மணிக்கு மேல் எந்த மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் இல்லை எனவும் இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளார்கள் உடனடியாக இதற்க்கு நகரமன்றத்தில் தீர்மானம் போட்டு மாவட்ட ஆட்சியாளரின் மூலமாக தீர்வு கான வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தாகள்.




~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!  

இறைத் தூதர் போதனையை..யுகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~