அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

தமிழ்நாடு சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களின் உரையும் மாண்புமிகு முதலமைச்சரின் பதிலும்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  • கோவை நீலகிரி மாவட்டங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் உரையாற்றியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

  • 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைச் செய்யப்பட வேண்டும்

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை


23.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களின் உரையும் மாண்புமிகு முதலமைச்சரின் பதிலும்

  • எம் எச் ஜவாஹிருல்லா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
டெல்லியிலே பெண்களுக்கு எதிராக, சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு ஒரு 13 அம்ச செயல் திட்டத்தை தமிழக அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இதுபோன்ற குற்றங்களை காவல்துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறும் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்காக மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற அந்த அம்சங்களையெல்லாம் நான் வரவேற்கின்றேன்.

அதேநேரத்தில் தமிழகத்திலே சில இடங்களிலே எளிதாகக் கிடைக்கக்கூடிய ஆசிட்களை வைத்துக்கொண்டு பெண்கள் மீதான தாக்குதல் அங்கொன்றும்,இங்கொன்றுமாக நடக்கக்கூடிய சூழலிலே பெண்களைப் பாதுகாப்பதற்காக இந்த எளிய ஆயுதமான ஆசிடை எல்லோருக்கும் கிடைக்காத வகையிலே உரிய சட்டத்தைக் கொண்டுவருதற்கு இந்த அரசு முயற்சி செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  • மாண்புமிகு முதல்வர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,முனைவர் ஜவாஹிருல்லா பேசுகின்ற போது பெண்கள் மீது திராவகம் வீசி நடைபெறும் குற்றங்களைப் பற்றி குறிபிட்டு, அந்த திராகவம் விற்பனையை கட்டுப்பத்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கோரிக்கையை வைத்தார். திராவகம் வீசி தாக்கும் குற்றங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றன. இதன்மீது விசாரணை முடிந்து நீதிமன்றங்கள் அளிக்கும் உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா :மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,தமிழக மக்களுடைய உணர்வுகளையெல்லாம் புரிந்து, கொந்தளிப்பான சூழலிலே சாந்தப்படுத்தி சமூக அமைதியை நிலை நாட்டுவதற்காக டேம்1999 சம்பவத்திலும், விஸ்வரூபம் சம்பவத்திலும், இலங்கையிலே நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக தன்னெழுச்சியுடன் தமிழகத்திலே மாணவர்கள் போராட்டம் களத்திலே வந்தபோதும் மிகச் சாதுரியமாக இந்த அரசு சமூக அமைதியை நிலை நாட்டியிருக்கின்றது.அதை நான் வரவேற்கின்றேன்.

சிறுபான்மையின மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள இந்த அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கையை நான் வைக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 2001 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி முஸ்லிம்களுடைய மக்கள் தொகை 5.6 சதவிகிதம் என்று சொல்லப்படுகிறது ஆனால் தமிழக காவல்துறையில் முஸ்லிம்கள் 1சதவிததிற்கும் குறைவாகத்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை சரிக் கட்டுவதற்கு முஸ்லிம்களுடைய பங்களிப்பு காவல் துறையில் அதிகப்படுத்துவதற்கு இந்த அரசு சிறப்பான முறையிலே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்திலே, முஸ்லிம் இளைஞர்கள் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விசாரணைகளை காவல்துறையினுடைய சிறப்புப் பிரிவு மேற்கொள்கின்றது. அதிலே பல இடங்களிலே, பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக, சொல்ல வேண்டுமென்றால் 107சி.ஆர்.பி.சி. போன்ற வழக்குகள், அது குற்ற வழக்கே இல்லை ஆனால் காவல் ஆய்வாளர் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செய்யக்கூடிய நடவடிக்கையாகும் அப்படி 107 சி.ஆர்.பி.சி. இருந்தாலும்கூட அந்த பாஸ்போர்ட் விசாரணை நீடிக்கப்பட்டு பாஸ்போர்ட் கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதைபோல் ஒரு குற்றம் செய்தததாக கருதப்பட்டு,கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று, விடுதலையானப் பிறகும் கூட அப்படிப்பட்டவர்கள் பாஸ்பார்ட்க்கு விண்ணப்பம் செய்யும்போதுகூட,அவர்களுக்கு அந்த விசாரணையிலே தடைகள் ஏற்பட்டு இருக்கக்கூடிய சூழலைப் பார்கின்றோம்.

இந்தப் பாஸ்பார்ட் விசாரணைக்காக சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில மாவட்டங்களிலே, இராமநாதபுரம் மாவட்டம் உட்பட, பெண்கள் உள்பட எல்லோரையும் காவல்நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது.இதையும் சீர்படுத்துவதற்கு இந்த அரசு முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

  • (மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனது பதிலுரையில் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்
மாண்புமிகு முதல்வர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,முனைவர் ஜவாஹிருல்லா பேசுகின்ற போது பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் கூட காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர் என்று கூறினார். சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக்கூடாது காவல்நிலையத்திற்கு அழைக்கக்கூடாது அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்றுதான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடைபெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு இதுபோன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா :மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக இந்த அரசு நல்ல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது அதைப் பற்றி கொள்கை விளக்கக் குறிப்பிலும்கூட மாண்புமிகு முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்கள். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது சாலை விபத்திற்கு மிகு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது, அதுபோன்று மது அருத்தி விட்டு வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டுப்பிடிப்பதற்காக புதிதாக Breath Analysis என்ற கருவியை 100 கருவிகளை வாங்கப் போகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதேபோல் உடனடியாக Golden Hours ல் புதிதாக ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு,செயலிழந்த அந்த விபத்து காப்பகங்களை மீண்டும் இந்த ஆட்சி உருவாக்கும் என்று சொல்லியிருப்பதையும் நான் வரவேற்கின்றேன்.

இராமேஸ்வரம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய ஒரு நகரம்,அங்கே யாத்திரைப் பணியாளர்கள் என்று சொல்லக்கூடியவகையிலே அங்கிருக்ககூடிய முக்கிய இடங்களையெல்லாம் வழிகாட்டியாக காட்டக்கூடிய அந்தச் சங்கத்திலே உறுப்பினர்கள் சேர்வதில் இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலே ஒரு மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு நிலை, அது தொடர்ந்து வரக்கூடிய ஒரு சூழலிலே சமீபத்திலே அங்கு அமைதிக் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.இருந்தாலும் மிக வலுவான நடவடிக்கைகளை எடுத்து அங்கே அமைதி திரும்புவதற்கும், சகஜ நிலை திரும்புவதற்கும் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.ஆறுமுகம் அவர்கள் உரையாற்றும் போது கோவை போன்ற பகுதிகளிலே இருக்கக்கூடிய பதட்ட நிலையை பற்றிக் குறிப்பிட்ட போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதட்டத்தை தணிப்பதற்காக இந்த அரசு எடுத்து வரக்கூடிய முயற்சிகளை எல்லாம் சொன்னார்கள். 1997லும் 1998லும் நடைபெற்ற கொடூர சம்பவங்கள் நிச்சயமாக மான்செஸ்டர் ஆர் இந்தியா என்று சொல்லப்படக்கூடிய கோவை மாநகரத்தினுடைய எல்லாத் தரப்பினருக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது அதற்கு அடிப்படை என்ன என்று பார்க்கும்போது அரசியல் இலாபத்திற்காக அரசியல் காரணங்களுக்காக வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளை சில அரசியல்வாதிகள் சில மதவாத அமைப்புகள் செய்து வருகிறார்கள். செல்வபுரம் பகுதியிலே ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த ஒருவர் 20ஆம் தேதி பேசும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பற்றி முஸ்லிம்களைப் பற்றி மிகச் கொச்சையாக பேசுகின்றார். அதோடு நின்றுவிடாமல், அவர் திராவிட அமைப்புகளுடைய தலைவர்களையும் சேர்த்து இணைத்து மிகக் கொச்சையாகப் பேசியுள்ளார்.அப்படிப்பட்ட HATE SPEECH என்று சொல்லக்கூடிய வெறுப்புணர்வைத் துôண்டக்கூடிய வகையிலே பேச்சுகள் நடைபெறும்போது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், நீலகரி மாவட்டத்திலே இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பதட்டத்தினுடைய அடிப்படையைப் பார்க்கும் போது கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஏ.டி.எஸ். சுதந்திரத் திடதில் அங்கு நடைபெற்ற ஒரு தீவிர மதவாத அமைப்பினுடைய ஒரு கூட்டத்திலே மிகச் கொச்சையாக மிக மோசமாக நா கூசக்கூடிய வகையிலே பேச்சுகளும் அதேபோல காந்தியடிகளையும்,பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களையும் பேறிஞர் அண்ணா அவர்களையும் முஸ்லிம்களுடன் இணைத்து மிக மோசமாகப் பேசியிருக்கிறார்கள். பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றார்கள். ஆனால், அதுகுறித்து உரிய நேரத்திலே நடவடிக்கை எடுக்காதததன் காரணமாக, இந்தச் சம்பவங்கள் தொடருகின்றன. கடந்த சனிக்கிழமை கோவையிலே அன்னபூர்ணா ஒட்டலிலே மாலையிலே 5நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன அந்த ஒட்டலில் இருக்கக்கூடியGas Chamber- ல் நல்லவேளை அது விழவில்லை மாலை நேரம் ஏராளமானோர் சாப்பிட்டுக்கொண்டிருக்கக்கூடிய நேரத்திலே Gas Chamber நோக்கி அந்த வெடிகுண்டு வீசப்பட்டது. நல்லவேளை அந்த ஒட்டலில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்ததன் காரணமாக சரவணப்பட்டியைச் சேர்ந்த பா.ஜ.க.வைச் சார்ந்த 3 பேர்களை உடனடியாக காவல்துறை கைது செய்கின்றது. எனவே நிச்சயமாக அபார்ட்மென்டுகளில் இது போன்ற ஒட்டல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதைக் கட்டயமாக இந்த அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு முதல்வர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொது இடங்களிலும், பொதுமக்கள் கூடுகின்ற இடங்களிலும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே இந்த அரசு உத்திரவிட்டுள்ளது. அது கொள்கை விளக்கக் குறிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

  • எம் எச் ஜவாஹிருல்லா: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அறிவிப்புக்கு நன்றி மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைக்கு தமிழகத்திலே வேலூர் சிறையில் 3 தமிழர்கள் தூக்கை எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நிலையிலே அரசியல் சாசன சட்டத்தின் 161 வது பிரிவை பயன்படுத்தி அமைச்சரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாண்புமிகு மாநில ஆளுநர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.இதனைகடந்த திமுக ஆட்சியினர் அப்போதே செய்திருக்கலாம்,செய்வதற்குத் தவறிவிட்டார்கள்.

இந்த ஆட்சியிலே தமிழர்களைப் பற்றி தமிழக மக்களின்மேல் அக்கறைகொண்டு ஏராளமாக நாம் செய்திருக்கின்றோம். 161 வது பிரிவின் கீழ் இந்த மூவரின் உயிரைக் காப்பதற்கு இந்த அரசு முன்வரவேண்டும் அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனைக் கைதிகளாக தமிழக சிறையிலே இருக்கக்கூடிய அனைவரையும் 161வது பிரிவின் கீழ் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

https://www.facebook.com/tmmkwebnews