அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 23 ஜூன், 2013

திமுக ஜெயிக்கட்டுமே!

திமுக ஜெயிக்கட்டுமே!


''ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி செய்த உதவிக்கு இப்போது ஜெயலலிதா பதில் மரியாதை செய்யப்போகிறார்'' என்றபடியே உள்ளே வந்து அமர்ந்தார் கழுகார். கேள்விக் குறியாய் நமது புருவம் உயர்ந்தபோது, ''கொஞ்சம் காத்திரும்... சொல்கிறேன்'' என்றபடியே குறிப்புப் புத்தகத்தைப் புரட்டியபடி செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். 

''ராஜ்யசபா தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியும்புதிய தமிழகமும் தி.மு.க. வேட்பாளரான கனிமொழியைத்தான் ஆதரிக்கப்போகிறார்கள் என்று நான் சொல்லியிருந்தேன். அதுதான் அரங்கேறுகிறது!''
''அ.தி.மு.க. தரப்பும் மனிதநேய மக்கள் கட்சியிடம் பேசிக்கொண்டு இருந்ததையும் சொன்னீரேஅந்தப் பக்கம் ஏன் விடுபட்டுப் போனது?''

''தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு ஆதரவைக் கேட்டு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும் நத்தம் விஸ்வநாதனும் மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகத்துக்கு வந்து போனதை சொன்னேன். அப்படி வந்தவர்களிடம் 'முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். கிட்னி பாதிக்கப்பட்டு சிறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கைதி அபுதாஹீரை பரோலில் விடுவிக்க வேண்டும்திருமணப் பதிவுச் சட்டத்தைத் திருத்த வேண்டும்பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலைசெய்ய வேண்டும்’ எனக் கோரிக்கைகளை வைத்தார்கள். 'இதெல்லாம் சின்ன விஷயங்கள்தான்... செய்துவிடலாம்’ என்று சொல்லிப் போனார்கள் ஓ.பி-யும் நத்தமும். அதன் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. 'முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது சிரமமான விஷயம். ஆனால் கொடுக்கக் கூடாது என நினைக்கவில்லை. பொறுமையாக இருங்கள்.. அம்மா செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் விரைவில் நிறைவேறும்’ என்று சொன்னாராம்

ஓ.பன்னீர்செல்வம்கோரிக்கைகளை எழுதிக் கொடுக்கச் சொல்லவேஎழுதிக் கொடுத்திருக்கிறார் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா. முஸ்லிம்கள் கல்வி கற்பதற்காக அலிகார் பல்கலைக்கழகத்தின் கிளையைத் தமிழகத்தில் உருவாக்க முடிவுசெய்திருக்கிறார்கள். அதற்காக நிலம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து மனுவாக எழுதினார்கள். 'அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களின் நிலை என்ன?’ என்று பன்னீர்செல்வத்திடம் கேட்டிருக்கிறார்கள் இவர்கள். 'இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.பி.பரதன் சந்தித்தபோதுகூட இதே கேள்வியை அவரும் அம்மாவிடம் கேட்டார். அதைப்பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்என்று அம்மா அவருக்குப் பதில் சொல்லிவிட்டார். அதே நிலைதான் உங்களுக்கும்’ என்று பதில் சொன்னாராம் பன்னீர்செல்வம். இப்படிப் பிடிகொடுக்காமல் நடந்து இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது.''

''இறுதி முறிவுக்கு வாரும்!''

''கடந்த செவ்வாய்க்கிழமை மூன்றாவது முறையாக ஓ.பி-யும் நத்தமும் ஜவாஹிருல்லா குழுவைச் சந்தித்தார்கள். அப்போது 'நீங்கள் கொடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறும். எனவே ராஜ்யசபா தேர்தலில் ஆதரியுங்கள்’ என்றனர். 'முதலில் ஐந்து வேட்பாளர்களை அறிவித்தீர்கள். அதன் பிறகு டி.ராஜாவுக்கு விட்டுக்கொடுத்தீர்கள். உங்களுக்குப் போதுமான அளவு ஆதரவு இருந்தும் எங்களை ஏன் ஆதரிக்கச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார் ஜவாஹிருல்லா. 'இந்த அணி சேர்ந்து இருக்க அம்மா விரும்புகிறார். அதோடு தேர்தலில் கூடுதல் ஓட்டுகள் பெற வேண்டும் என்பதும் அம்மாவின் ஆசை. அதனால் ஆதரியுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்கள். 'ஏற்கெனவே இரண்டு முறை நடந்த சந்திப்புகளில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை’ என்ற வருத்தம் இந்தக் கட்சிக்கு இருந்துள்ளது. பன்னீர்செல்வத்திடம் பேசிய ஜவாஹிருல்லா,

2011 சட்டசபைத் தேர்தலில் உங்கள் கூட்டணிக்கு வந்த முதல் கட்சி நாங்கள்தான். 
தொகுதிப் பிரச்னையில் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தனியாகக் கூட்டம் போட்டபோது அந்தக் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. 
உள்ளாட்சித் தேர்தலிலும் கடைசி வரையில் காத்திருக்கவைத்துவிட்டு கதவை மூடிவிட்டீர்கள். 
கூட்டுறவுத் தேர்தலிலும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. 
வக்ஃபு போர்டு பிரச்னையில் நாங்கள் நீதிமன்றம் வரையில் போக வேண்டியிருந்தது’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.


பொறுமையாகக் கேட்ட பன்னீர்செல்வமும் நத்தம் விஸ்வநாதனும், 'உங்கள் கோரிக்கைகள் எல்லாம் மைனர் பிரச்னைகள். அதை உடனே சரிசெய்துவிடலாம். மற்ற விஷயங்களை நாளை பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லிக் கிளம்பிப் போனார்களாம். இதைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பு இவர்களை அமுக்குவதற்கு வந்தது!''   ''ம்... சொல்லும்!''
''முன்னாள் அமைச்சர்கள் பொன்முடிஎ.வ.வேலுமைதீன்கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தனர். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்குத் தனி சின்னத்துடன் இடம் ஒதுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை தி.மு.க-விடம் வைத்தார்கள். அதை தி.மு.க-வும் ஏற்றுக்கொண்ட பிறகுதான் கருணாநிதியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி. தமிழக அரசுக்கு ஆதரவாக இருந்த ஒரு கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு அ.தி.மு.க-வே அனுப்பிவைத்ததுதான் ஆச்சர்யம்.

ஜூனியர் விகடன்
  


  • 2011 சட்டசபைத் தேர்தலில் உங்கள் கூட்டணிக்கு வந்த முதல் கட்சி நாங்கள்தான்.
  •  தொகுதிப் பிரச்னையில் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தனியாகக் கூட்டம் போட்டபோது அந்தக் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.
  •  உள்ளாட்சித் தேர்தலிலும் கடைசி வரையில் காத்திருக்கவைத்துவிட்டு கதவை மூடிவிட்டீர்கள்.
  •  கூட்டுறவுத் தேர்தலிலும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை.
  •  வக்ஃபு போர்டு பிரச்னையில் நாங்கள் நீதிமன்றம் வரையில் போக வேண்டியிருந்தது’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். 
''முன்னாள் அமைச்சர்கள் பொன்முடிஎ.வ.வேலுமைதீன்கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தனர். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்குத் தனி சின்னத்துடன் இடம் ஒதுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை தி.மு.க-விடம் வைத்தார்கள். அதை தி.மு.க-வும் ஏற்றுக்கொண்ட பிறகுதான் கருணாநிதியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி. தமிழக அரசுக்கு ஆதரவாக இருந்த ஒரு கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு அ.தி.மு.க-வே அனுப்பிவைத்ததுதான் ஆச்சர்யம்.



















புதுவை ஹாஷிம் 
தமுமுக அல்-கோபர் 
சவுதி அரேபியா