அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 30 ஜூன், 2013

தம்மாம் மாநகர பொதுக்கூட்டம் - "தமிழகத்திலிருந்து நமது மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான முனைவர் சகோ. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்."

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தம்மாம் மாநகர பொதுக்கூட்டம்

தம்மாம் மாநகர பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(28-06-2013) அன்று மாநகர தலைவர் கமுதி சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் ரோஸ் உணவகத்தில்  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மதியம் 1.00 முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற்றது

தமுமுக செயலாளர் மதுக்கூர் சகோ.அஜ்மல்கான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மாநகர பொருளாளர் வந்தவாசி சகோ. பிலால் பீர்முகம்மது அவர்கள் வரவேற்புரை நடத்தினார்கள்.

தொடக்கமாக இளவல் சகோ. ஜக்கரியா பிலால் அவர்களின் துவா வுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது

அதனைத் தொடர்ந்து மண்டலத்திலிருந்து வருகை புரிந்த மண்டல துணைச் செயலாளர் சகோ. நிசார் அவர்கள் ஜூலை 6 ல் பேரணி ஏன் என்று விளக்கினார்கள். மேலும் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தூபம் போட்டவர்கள் நம் முன்னோர்கள் என வரலாற்று நிகழ்வினை எடுத்து விளக்கினார்கள்.அதன் வடிவமாக கிபி 1800 ஜூலை திங்கள் 9ம் நாள் வேலூரில் நடைபெற்ற மாவீரன் திப்பு சுல்தானின் இளைய மகள் திருமணத்தில் நம்து சிப்பாய்கள் ஆலோசனை நடத்திய பிறகு மறு நாள் அதாவது ஜூலை 10 ம் நாள் இந்திய வரலாற்றிலே முதன் முறையாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நமது சிப்பாய்கள் கிளர்ச்சியை தொடங்கினார்கள்..இந்த கிளர்ச்சியினால் நமது இஸ்லாமிய சிங்கங்கள் 200 மேற்பட்டோரை நாம் இழந்தோம். அதே ஜூலை திங்களில் நமது உரிமைக்கான போரட்டமும் நடைபெற இருக்கிறது என்று விளக்கினார்கள்.

அதனை தொடர்ந்து தமிழகத்திலிருந்து நமது மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான முனைவர் சகோ. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

நாம் ஏன் திமுகவை ஆதரித்தோம் என்பதை பற்றி விளக்கினார்கள்.இஸ்லாமியருக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள திருமண பதிவு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும்.நமது மக்களின் விகிதாச்சார அளவிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

அலிகார் பல்கலைகழகத்தின் கிளை தமிழகத்தில் தொடங்க நிலம் வழ்ங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அதிமுக விடம் முன்வைத்தோம். அதிமுக அமைச்சர்கள் திரு.பன்னீர் செல்வம் திரு நத்தம் விஸ்வநாதன் அவர்களுடன் மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடை பெற்றது .இந்த மூன்று கட்ட பேச்சு வார்த்தையிலும் அவர்கள் நமது கோரிக்கைக்கு  செவி சாய்க்கவும் இல்லை.

எந்த ஒரு உறுதி மொழியையும் நமக்கு கொடுக்கவில்லை. மேலும் அடுத்து வருகிற மக்களவை தொகுதிக்கான மமகவுடன் கூட்டணி பற்றி கேட்ட போது அன்றைய தேதியில் பார்த்து கொள்ளலாம் என்று மழுப்பலான பதிலை கூறியதால் நாம் திமுக வை ஆதரிப்பதற்கு அவர்களே வழிவகை கொடுத்தனர் என்று கூறினார்கள்..மேலும் திமுகவுடன் ,நமது சமுதாய நலன்களை நன்மை விளைவிக்கும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நாம் திருமதி கனிமொழியை ஆதரித்தோம் என்று கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் இருமேனி மவ்லவி அலாவுதீன் பாகவி அவர்கள் ஃபித்ரா எனும் கடமையை சரியாக செய்ய நாமே தமிழகத்தில் அனைத்து நகர கிராமங்களிலும் சரியான மக்களுக்கு வசூலிக்கப்பட்ட ஃபித்ராவை விநியோகம் செய்தோம். மேலும் நமது உரிமைக்கான ஜூலை 6 பேரணி பற்றி எடுத்து கூறினார்கள்.கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு கூடுதலாக ஃபித்ரா வசூலிக்க வேண்டும் .

வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாது என்ற தானத்திற்கு இந்த தமுமுகவின் ஃபித்ரா விநியோகமே பொருள் வடிவம் என்று கூறினார்கள்.ஆதலால் அர்ஷின் நிழலை நாம் எல்லாரும் பெற  வேண்டும் என்று கூறினார்கள்

மேலும் நமது இந்திய திருநாட்டில் சுதந்திரத்துக்காக முதன் முதலில் தூபம் போட்டவர்களும் மேலும் அனைத்தையும் இழந்தவர்களும் நம் முன்னோர்களென்றும் கூறினார்கள.கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா அவர்கள் சிறையில் இருக்கும் போது ஒருமுறை பசிக்கிறது உணவு தாருங்கள் என்று கேட்ட போது ஆங்கிலயே கவர்னர் , 


மன்னின் மகனின் தலையை வெட்டி கொண்டு வந்து பட்டு போர்த்திய தட்டில் கொண்டு வந்து கொடுத்தனர்.அச்சூழ்நிலையில் ஒரு  தகப்பனாக எவ்வாறு இருந்திருக்கும் என்று கூறும் போது கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் கண்கள் கலங்கின. இவ்வாறு நாம்தான் சுதந்திர போரட்டதின் தலைவர்களாகவும் முன்னோடிகளாகவும் இருந்தோம்.ஆனால் ஆரிய , பார்ப்பண சதியால் நமது வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்கள்.

அதன் பிறகு மண்டலப் பொருளாளர் அதிரை சகோ. நஸுரூத்தின் சாலிஹ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

அதனை தொடர்ந்து அனைவருக்கும் ஃபித்ரா படிவம் வழங்க பட்டது.

இறுதியாக செயற்குழு உறுப்பினர் நெல்லை-வீராணம் சகோ.காசிம் முஹம்மது அவர்கள் நன்றியுரையுடன் துவா ஓதி கூட்டம் இனிதே முடிந்தது

வந்திருந்த அனைவருக்கும் மதியஉணவு மற்றும் தண்ணிர் ஏற்பாடுகள்  மருத்துவஅணி செயலாளர் கள்ளக்குறிச்சி சகோ. ஜாகிர்பாட்ஷா அவர்களால் சிறப்பாக செய்யப்பட்டது.
 

தொகுப்பு:
சேகை மைந்தன்.



Inline image 1