அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

த மு மு க வின் தொடக்கமும்... கோவையில் அதன் செயல்பாடுகளும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இறைவனின் திருப்பெயரால்

த மு மு க வின் தொடக்கமும்... கோவையில் அதன் செயல்பாடுகளும்.


இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சிறை கொட்டகையில் வதை அனுபவித்து கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில் த மு மு க என்னும் ஒரு அமைப்பு இருந்து கொண்டு இருக்கிறது. பலர் கேட்கலாம் இவுங்கெல்லாம் அமைப்பை வைத்து கொண்டு என்ன கிழித்தார்கள் என்று .

அத்தகைய வாதிகளின் நினைவிற்காக இந்த பதிவு :

அது ஒரு கால கட்டம் . ஆம்.... இஸ்லாமியர் இந்தியாவின் சுதந்திரத்துக்காக வெள்ளையர்களை கடுமையாக எதிர்த்து போராடி கொண்டு இருந்தனர். போராட்டம் என்றால் காலையில் தொடங்கி மாலையில் முடிவது போல் அல்ல...... காலையில் தொடங்கும் போராட்டம் எப்போது முடியும் என்று கூட யாருக்கும் தெரியாது.... காந்தி சொன்னார் “ஆங்கிலேயரின் தயாரிப்புகளை வாங்காதீர் என்று ஆனால் அதற்க்கு முன்னரே இந்திய முஸ்லிம்கள் யாரும் எந்த தலைவர்களும் சொல்லாமலே எதிரி பேசும் ஆங்கில மொழியை நாம் கற்க வேண்டாம் என்று அந்த மொழியை கூட நாம் புறக்கணித்தோம். பிரிட்டிஸ்க்காரன் ஒரு விசியத்தில் தெளிவாக இருந்தான் யாரை வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்கி விடலாம் . 

ஆனால் இந்த முஸ்லிம்களை மட்டும் விலை பேச முடியாது. ஆகவே அவர்களுக்கு சலுகை என்ற அளவில் இடஒதுக்கிட்டை கொடுப்போம். அப்பொழுதாவது அவர்களின் போராட்டம் குறையுமா என்று பார்ப்போம் என்று நினைத்து அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் இடஒதுக்கிடு அளித்தது. ஆனால் முஸ்லிம் சமூகம் அதை பற்றி ஏதும் கவலை படாமல் உறுதியாக போராடியது. என்ன காரணம்..... இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் . நம்முடைய அரசை நாமே தீர்மானிக்க வேண்டும். இந்தியர்களே ஆளும் நிலை வர வேண்டும். என்று நினைத்து .....

காலங்கள் சென்ற போராட்டங்கள் வென்றன.. அரசியல் சதி ஆரம்பித்தது. நம்பி இருந்தவர்களை இந்துத்துவாதிகள் கழுத்தருப்பு செய்தனர். பாகிஸ்தான் உருவாகியது. ஆனாலும் நாங்கள் இந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள் நாங்கள் இங்கேயே இருப்போம் என்று நாம் இங்கேயே இருந்தோம். இருந்தும் வருகிறோம்.

காலங்கள் செல்ல செல்ல துரோகங்கள் அதிகமாக நடந்தது. ஆம்... நமக்கான சலுகையை கூட பறித்துக்கொண்டனர். இரண்டாம் தர குடிமக்களாக நம்மை நினைக்க ஆரம்பித்தனர். நடுநிலை வாதிகள் கூட நமக்கு ஆதரவு தரக்கூடாது என்று தீவிரவாத முத்திரையை நம் மீது குத்தினர். கலங்க வில்லை நாம்... ஓய்ந்து போக வில்லை நாம்...... போராடியே பழகிய நமக்கு போராட தடை விதித்தனர். தடைகளை உடைக்க முடியாமல் திணறினோம். அந்த காலகட்டங்களில் நாம் 1000 கணக்கான முஸ்லிம்களை இழந்தோம். நம்மை வழிநடத்த யாரும் இல்லாத நிலை..... நிலை குலைந்து நின்றோம்.

தமிழ்நாட்டில் மண்டைக்காடு கலவரத்தில் நம்மை நோக்கிய அந்த பாசிச அம்புகள் வந்து விழுந்தன. என்ன செய்வது என்று தெரியாமல் எந்த எந்த அரசியல் வாதிகளியோ நாம் நம்பினோம். அவர்கள் நம்மை ஓட்டாக பார்த்தனர். மனிதராக பார்க்க மறந்தனர்.

வரலாற்றின் கருப்பு நாளாக 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் இறை இல்லத்தை பாசிச வெறி பிடித்த மிருகங்களால் இழந்தோம். நீதியை கேட்டோம் . அதனாலே சிறைக்கு சென்றோம். இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். காவல் துறையோ நம்மீது வழக்குகளால் மென்று தின்றனர்.

கேட்பதற்கு நாதி இல்லை..... நர வேட்டை மனிதர்களுக்கு கொளுத்த வேட்டை......

வருடங்கள் சென்றது..... இந்திய முஸ்லிம்களின் இந்த நிலையை நினைத்து இஸ்லாமியகளுக்காக குரல் கொடுக்க சமரசம் இல்லாத ஒரு அமைப்பு நமக்கு தேவை என்ற நோக்கில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் 1995 ஆகஸ்ட் மாதம் அன்று ஏக இறைவனின் திருநாமத்தை சொல்லி துவங்கினோம்.......

முதலில் முஸ்லிம்களிடையே நம்முடைய வரலாற்றை கொண்டு சென்றோம். நம்முடைய அவல நிலையை எடுத்து சொன்னோம் . நமக்கான உரிமைகளை பற்றி அரசியல் பாடம் நடத்தினோம். வீட்டில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தோம். முடங்கி கிடந்தவர்களை முழக்கம் எழுப்ப வைத்தோம்.

முதல் போராட்டமாக 1995 பாபர் மசூதி இடிப்பை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினோம்.

இக்பால் திடலில் மாபெரும் பொது கூட்டம் நடத்தினோம்
இட ஓதுக்கிடு தேவையை வலியுறுத்தி வின்சென்ட் ரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தினோம்.

இஸ்லாமியர்கள் மீது தடா என்ற கொடிய சட்டத்தை எதிர்த்து போராட துணிந்தோம். அதற்காக

1996 கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நடத்தினோம். யார் வருவார்கள் என்று நினைத்து ஓய்வாக இருந்த கவர்னர் மாளிகையை நாம் முற்றுகை இட்டோம். அரசுகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். எப்படி இவ்வளவு பேர் வந்தார்கள் என்று வியந்தனர்.

1997 சஹீத் பழனி பாபா படுகொலையை கண்டித்து அமைதி பேரணி

1997 நவம்பர் கோவையில் முஸ்லிம்கள் மீது கடுமையான வன்முறை தாக்குதல். துப்பாக்கி சூடு..... கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2.75 கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்தோம்.

பள்ளி செல்லும் ஏழை மாணவர்களுக்காக கல்வி உதவி தொகை, நோட்டு புத்தகம் விநியோகம் இன்று வரை கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

1999 சென்னையில் முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி அனைத்து அரசியல் கட்சிகளையும் மிரள வைத்தோம்.

2001 ரத்த தான முகாம்களை நடத்தி இந்திய அளவில் சேவை விருதுகளை வாங்கினோம். இன்று வரை தமிழகத்தில் அதிகமான ரத்த தானம் செய்வது த மு மு க சகோதர்களே....

தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடத்தி கொண்டு வருகிறோம்.
2 ௦0 0 2 தஞ்சையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடத்தினோம்.
2004 டிசம்பர் 6 பாபர்மசூதி மீட்க கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது த மு மு க.

2004 சுனாமியில் தமிழகம் பாதிக்கப்பட்ட போது நிவாரண பணிகளையும் மீட்பு பணிகளையும் த மு மு க சகோதர்கள் பணியாற்றிய விதத்தை யாரும் மறுக்க முடியாது.

2006 பிப்ரவரி 28 சிறைவாசிகள் விடுதலை செய்ய கோரி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் செய்தோம். கோவையில் மட்டும் சுமார் 10000 மேல் கைதாகினோம்.

2 0 0 7 மார்ச் 7 இட ஓதுக்கிடு கோரி டெல்லியில் பேரணி மட்டும் பொதுக்கூட்டம் . பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம்.

த மு மு கவின் தொடர் போராட்டங்களினால் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கிடு 3.5 சதவீதம் அப்போதைய முதல் கருணாநிதியால் வழங்கப்பட்டது. அதற்காக அவருக்கு முதல்வருக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தினோம்.

அரசியல் உரிமையை நாமே பெரும் வண்ணம் முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக 2 0 0 9 சென்னை தாம்பரத்தில் மக்கள் வெள்ளத்தில் மனிதநேய மக்கள் கட்சி என்று பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கினோம்.

அதை தொடர்ந்து தனித்தே தேர்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை வாங்கி ஆளும் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தோம்.

2 0 1 0 திருப்பூரில்இடஒதுக்கிடு, மது விலக்கு , விலைவாசி உயர்வு போன்ற மூன்று கோரிக்கையை முன்வைத்து மாபெரும் மாநாட்டை நடத்தினோம்.

சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டு மூன்று இடங்களில் போட்டி இட்டு ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு இடங்களை வென்றோம்.
சட்ட சபையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ம்குரலாய் ம ம க ஒலித்து கொண்டு இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கிடு கேட்டு பல முறை நம்முடைய மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

பின்பு நடந்த உள்ளாட்சி தேர்தலை தனியே எதிர்கொண்டு தமிழ்நாடு முழுவதும் 600 க்கும் மேற்ப்பட்ட இடங்களை பெற்றோம். அதில் கோவை மாநகராட்சி 8 6 வது வார்டில் ம ம க வின் சாதிக் அலி அவர்கள் வெற்றி பெற்றார்.

அவருடைய சேவை பணிகளை இந்து நாளிதழ் முதற்கொண்டு பாராட்டி வருகிறது. அவருடைய வார்டில் இன்றுவரை சுமார் 3 கோடிக்கும் மேல் வளர்ச்சி பணிகளை கொண்டு வந்துள்ளார்.

கோவை த மு மு க சார்பில் குனியமுத்தூர் அப்துர் ரஹீம் மருத்துவமனை சாரமேடு ரோட்டில் சம்சுகனி மருத்துவமனை கஸ்துரி கார்டன் பகுதியில் ஒரு மருத்துவமனை என மாநிலத்திலே மூன்று இலவச மருத்துவ மனைகளை பொது மக்களுக்காக அர்பணித்து சேவை புரிந்தோம்

முல்லைபெரியறு பிரச்சனையை முன்னிறுத்தி விவசாய மக்களை ஒன்றிணைத்து முண்டாசு கட்டி போராட்டம் நடத்தினோம்.
அசாம் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

பூரண மதுவிலக்கை வலிறுத்தி ஒரு கோடி மக்களை சந்தித்து பரப்புரை.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து பல போராட்டங்கள். அதன் தீமைகளை மக்களுக்கு விளக்கி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிரச்சாரம்..

கூடங்குளம் அணு உலையை மூட கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள்....

கூடங்குளம் மக்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

இறைத்தூதரை இழிவு படுத்தி எடுக்கப்பட்ட திரைபடத்தை தடை செய்ய கூறி உலகே வியக்கும் வண்ணம் போராட்டம்.

மதுக்கடைகளை மூட கோரி பூட்டு போடும் போராட்டம்.

ஈழத்தில் தமிழர்களை கொண்டு குவித்த ராஜபக்சே வை தண்டிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்.

கோவையில் நிலவிய மின்வெட்டை கண்டித்தும் ஊழலை எதிர்த்தும் , மது விலக்கை வலியுறித்தியும், அந்நிய முதலிட்டை எதிர்த்தும், மிக முக்கியமாக இட ஒதுக்கிட்டை வலியுறித்தியும் கோவை மாநகர் மாவட்டம் சார்பில் வ.உ.சி மைதானத்தில் பிரம்மாண்ட மாநாட்டை ம ம க சார்பில் மக்கள் வாழ்வுரிமை மாநாடு நடத்தினோம். தடைகளை தாண்டி மாபெரும் பேரணியை நடத்தினோம். ஆட்சியாளர்களுக்கு நம்முடைய பலத்தை நிருபிதோம்.

தீவிரவாதி முத்திரை குத்தி அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து தமிழ்நாடு ஹோட்டல் முன்பு தடைகளை மீறி போராட்டம் நடத்தினோம்.

கோவையில் கலவர அபாயம் உருவாக்கி நர வேட்டை ஆட நினைத்தவர்களின் சதி செயலை முறியடித்தோம்.

இரண்டு சிறுநிரகமும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கோவை சிறைவாசி அபுதாகிரை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தோம்

அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் காவல்துறை போக்கை கண்டித்து லாரிப்பேட்டை பகுதியில் அனைத்து அமைப்புகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தி உண்மைகளை மக்கள் முன்னே கொண்டு சென்றோம்.

2 0 1 3 ஜூலை 6 அன்று பல தடைகளை எதிர்கொண்டு முப்பெரும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணியை நடத்தினோம்......

இன்னும் இன்னும் விழித்திருக்கும் நேரமெல்லாம் சமுதயதிற்காக உழைக்கும் த மு மு க – ம ம க வளர்ச்சி என்பது எங்களுடைய தியகங்ககள் மட்டும் அல்ல உங்களின் ஆதரவும் தான் . கேட்க ஆளில்லாமல் இருந்த இந்த சமுதாயத்தை இன்று பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலைக்கு கொண்டு வந்தது த மு மு க வும் அதன் போராட்டங்களும்.....

இஸ்லாமிய அமைப்பெல்லாம் இஸ்லாமியர்களுக்காக என்ன செய்கிறது என்று கேள்வி கேட்பவர்கள் இதெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் கேள்வி கேட்க கூட உரிமை இல்லாமல் இருந்த சமூகம். இன்று அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்களை புறகணிக்க முடியாத சக்தியாக மாற்றி இருக்கிறது த மு மு க........

நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள்..... உங்களின் பங்களிப்பும் எங்களுக்கு இன்னும் தேவை.... ஆம் நிதியாகவோ.... அல்லது உடல் உழைப்பாகவோ..... தாருங்கள்... தாருங்கள்....

நாம் வாழும் வாழ்கையை எதிர்காலத்திற்கு கொடுத்து செல்லாமல் புதிய எதிர்காலத்தை நம்முடைய பிள்ளைகளுக்காக உருவாக்குவோம்.........

இன்னும் நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகமாக இருக்கிறது. அதை ஒற்றுமை என்னும் கயிறை பற்றி ஒருங்கிணைந்து செல்வோம். வாய்ப்புள்ளவர்கள் வந்து இணையுங்கள். வாய்ப்பற்றவர்கள் நிதி அளித்து உதவுங்கள் .......

வஸ்ஸலாம்.....

அக்சயா நிசார்
ம ம க துணை செயலாளர்,
பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி தொடர்பாளர்
கோவை மாநகர் மாவட்டம்...