அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இடைத்தேர்தல் முடிவுகள்; தேசம் திரும்புகிறது!

​​அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்


இடைத்தேர்தல் முடிவுகள்; தேசம் திரும்புகிறது!



கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க ஊடகங்களின் பின்னணியோடு மோடி அலை கட்டமைக்கப்பட்டது. காங்கிரஸ்-ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான அதிருப்தியும், எதிர்கட்சிகளின் பிளவும் பா.ஜ.கவுக்கு அருதிப்பெரும்பாண்மையை கொடுத்து மோடியை பிரதமராக்கியது.

உடனே நாட்டில் பாலாறும், தேனாறும் ஒடத் தொடங்கிவிட்டதுப்போல பலர் மாயைகளை உருவாக்கினார்கள்.

பா.ஜ.கதான் அடுத்த தேர்தலிலும் வெல்லும் என்றும், மோடிதான் ஆயுட்கால பிரதமர் என்றும் பாட்டுப் பாடினார்கள். எல்லாப் புகழ் மாலைகளும் எல்லை மீறின. இனி காங்கிரஸ் எழவே முடியாது என்றும், எங்களுக்கு எதிர்கட்சிகளே இல்லை என்றும் ஆடினார்கள். சவால்களுக்கு பஞ்சமில்லாமல் போனது.

இது ஜனநாயகவாதிகளுக்கும், பொது நலவாதிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

இதனிடையே போன மாதம் உத்தரகாண்டில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது எதிர்பாராத அதிர்ச்சியை அனைவருக்கும் தந்தது.

சென்ற வாரம் பீஹார், மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகி நாடெங்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தல்களில், பா.ஜ.க கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் 5, ராஷ்ரீய ஜனதா (லாலு)3, ஐக்கிய ஜனதா (நிதிஷ்) 2 என மொத்தம் 10 தொகுதிகளில் எதிர்கட்சிகள் வென்றுள்ளன.

பாஜக 7 தொகுதிகளிலும், அதன் கூட்டணியான அகாலிதளம் 1 தொகுதியிலும் வென்றுள்ளன.
பீஹார் முடிவுகள்தான் அதிகம் எதிர்பார்க்கப்பட்டன. அங்கு பாஜகவும், ராம்விலாஸ் பாஸ்வானும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

எதிரணியில் லாலு 4 தொகுதிகளிலும், நிதிஷ் 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

இதில் லாலு 3 தொகுதிகளிலும் நிதிஷ் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வென்று பாஜக அணியை சுருட்டிவிட்டனர். மீதி 4 தொகுதிகளிலும் குறைந்த ஓட்டுகளில் பாஜக வென்றுள்ளது. பிரபல துரோகி ராம்விலாஸ் பாஸ்வான் ஒரிடத்தில் கூட வெல்லவில்லை.
மத்திய பிரதேசத்தில் பாஜகவிடமிருந்து ஒரு இடத்தை காங்கிரஸ் மீட்டுள்ளது.
பஞ்சாபிலும் ஒரிடத்தை காங்கிரஸ் மீட்டுள்ளது.

கர்நாடகாவில் 3ல் 2 இடத்தை வென்றுள்ள காங்கிரஸ், பெல்லாரி தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதியில் இது பெரும் வித்தியாசமாகும். அங்கு தேவகொளடாவின் மதச் சார்பற்ற ஜனதாதளம் நின்று பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்துள்ள நிலையில் இச்சாதனை நிகழ்ந்துள்ளது.

பாஜக தற்போது இழந்துள்ள பல தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் போது அக்கட்சி அதிக வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் மூலம், மாயைகளை தகர்த்து நாட்டு மக்கள் தெளிவான மனநிலைக்கு வந்திருப்பது தெரிய வருகிறது. அடுத்து மஹராஸ்ட்ரா, அரியானா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களும் இதேபோல் விடைகளை தரும் என எதிர்ப்பார்க்கலாம்.

மோடி நிறைய பேசுகிறார்; மற்றப்படி முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்கள்&செயல்பாடுகளின் வழியாகவே பயணிக்கிறார்; அவர்களிடம் புதிய எதிர்ப்பார்ப்பபுகள் எல்லாம் பொய்ப்பித்துவிட்டன; என்ற கருத்துகள் வலிமையாகி வரும் நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் அதையே வழிமொழிந்துள்ளன.

இனி காங்கிரஸ் புத்துணர்வுடன் பயணிக்கும் என நம்பலாம். ஜனநாயக-சமூகநீதி சத்திகள் காங்கிரசுடன் கைக்கோர்க்கும் வாய்ப்புகளும் அதிகமாகும்.

இதை கம்யூனிஸ்ட் கட்சிகளும், மாநில கட்சிகளும் எப்படி புரிந்துக் கொள்ளப் போகின்றன என்பதில்தான், புதிய அரசியல் அடங்கியிருக்கிறது.

-
எம்.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி--