அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 3 செப்டம்பர், 2014

காவி மயமானது ஆசிரியர் தினமும் - பரதேசி பண்டாரங்களாய் நாளைய மாணவர் சமூகம்.

அன்பு உறவுகளுக்கு..! 

காவி மயமானது ஆசிரியர் தினமும் - பரதேசி பண்டாரங்களாய் நாளைய மாணவர் சமூகம்.




நரந்திர மோதியின் தலைமையிலான புதிய இந்துத்வ பயங்கரவாத அரசு, மக்களின் வாழ்வாதாரத்தை சரி செய்து, பொருளாதாரத்தை முன்னேற்றுகின்றதோ இல்லையோ,

தனது நூற்றாண்டு இந்து மய கனவை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றுகின்றது. நரேந்திர மோதிக்கும் அவர்கள் சகாக்களுக்கும் பாராளமன்றத்திலோ வெளியிலோ வேறு வேலையே இல்லையா.


பண வீக்கத்தைக் குறைப்பது, கருப்பு பணத்தை எடுப்பது, வேலை வாய்ப்பைக் கூட்டுவது, தொழில்களை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவது, இந்திய தேசத்தின் ஒற்றுமையை கட்டமைப்பது என எவ்வளவோ நல்ல காரியம் இருக்கின்ற போது. மோதி & கோ தொடர்ந்து இந்தியாவை இந்தி மயமாக்கும் முயற்சிகளை செய்து வருவது, இந்தி பேசாத மக்களை, குறிப்பாக தமிழர்களை கலக்கத்தில் ஆற்றியுள்ளது.


இதுவரைக் காலமும் எதாவது ஒரு தமிழக கட்சி மத்தியில் கூட்டாட்சி செய்தது, தமிழக உறுப்பினர்களின் தேவை மத்தியில் இருந்தோருக்கு தேவைப்பட்டது, அப்படி பட்ட காலத்தில் கூட மீனவர் பிரச்சனை, காவிரி பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் மீது மிளகாய் அரைத்தவர்கள் மத்திய அரசாங்கம். இப்போது அதுவும் இல்லை, அதுவும் பெரும்பான்மை ஆட்சி. அதனால் தொடர்ந்து தமது சந்தடி சித்து வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டனர்.

மத்திய அரசுப் பணியாளர்கள் பேஸ்புக், ட்விட்டரில் இந்தியிலேயே எழுத வேண்டும் என நிர்பந்தித்தனர். அடக் கொய்யாலே ! இந்தி தெரியாதவன் எப்படி இந்தியில் எழுத முடியும், இந்தி தெரிஞ்சவன் கூட பேஸ்புக், ட்விட்டரில் இந்தியில் எழுத மாட்டான், டுபாக்கார் தேவநகரில் கூட்டெழுத்துக்களைக் கூட்டி கூட்டி எழுதுவதற்குள் ரோமநகரியில் ஒரு பாராகிராபே எழுதிவிடலாம். அப்புறம் தமிழ்நாட்டுக்காரர்கள் எதிர்ப்புக் காட்டியதும்,


மத்திய அரசு இந்தி உத்தரவு இந்தி மாநிலத்துக்கு மட்டுந்தேன் என ஜகா வாங்கியது.

மத்திய அரசுப் பணித் தேர்வு ( IAS, IPS ) எழுத்த வக்கிலாத கொஞ்சம் மாணவர்களை உசுப்பிவிட்டு, அந்த தேர்வுகளில் கேட்கப்படும் அடிப்படை ஆங்கில திறனுக்கான கேள்விகளைத் தூங்கி எறிந்தது மத்திய அரசு. ஆனால் மாணவர்கள் கேட்டதோ தேர்வில் அதிகம் எஞ்சினியரிங்க் கேள்விகள் இடம்பெறுகின்றன கலை அறிவியல் பாடங்களைப் படித்தோருக்கு அவற்றை எழுத கஷ்டமாக இருக்கின்றது என்பதே. ஆனால் அரசாங்கமோ ஆங்கிலத் திறன் பகுதியை மட்டும் நீக்கி ஆங்கிலத்துக்கு சங்கூத பிள்ளையார் சுழி போட்டது.

இதோடு நின்றார்களா, இந்தியாவில் எவனுமே பேசாத செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசுப் பள்ளிகளில் ஒருவாரம் விழா எடுக்க சுற்றறிக்கை அனுப்பினார்கள். இந்தியாவில் எத்தனையோ வளமான மொழி இருக்க, இந்த சமஸ்கிருதத்துக்கு மட்டும் அரசு வால்பிடிப்பது வேடிக்கை. எவனும் பேசாத இந்த மொழியை அட்டவணை மொழிகளாக்கி, ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இந்த மொழியை வளர்க்க செலவிடுகின்றது. கருநாடகம் மத்தூர், மத்திய பிரதேசம் போபால் என சில ஊர்களில் இதை பேச்சு மொழியாக்க காசு கொடுத்தும் முயன்றார்கள், கடைசியில் இதை எவனும் பேசவே இல்லை..


அப்படி பட்ட சம்ஸ்கிருத மொழியை தூக்கி வைத்து கொண்டாடியது. இந்திய பாரம்பரிய மொழிகளை கொண்டாடுவோம் என்றால் சமஸ்கிருதத்தோடு, பாளி, பிராகிருதம், தமிழ் போன்றவைகளை கொண்டாடலாமே, ஆனால் கொண்டாட மாட்டார்கள் பாளி பவுத்தர்களின் சமய மொழி, பிராகிருதம் சமணர்களின் சமய மொழி, தமிழ் திராவிடர்களின் பெருமொழி இவற்றுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்தால் இந்துத்வாக்களுக்கு தினமும் ஒழுங்காக கக்கூஸ் கூட போகாது..

குஜராத்தின் பள்ளி பாடங்களில் வேத காலத்தில் மகாபாரத்தில் டெஸ்ட் டுயுப் பேபி இருந்ததாம், ஏவுகணைகள் இருந்தனவாம், ஏரோபிளேன் இருந்தனவாம் என புராணக் கப்சாக்களோடு பாடங்களை நடத்துகின்றனர். இதனைக் கற்பவர்கள் வளரும் போது மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்களாகவே வளருவார்களோ ஒழிய புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கும் வல்லமை வரப் போவதில்லை. இதைத் தான் இந்த அரசு செய்து வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக வரலாறுகளை அழிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.


சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை பிராமண நாகரிகமாக காட்டவும், ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல திராவிடர்களே வந்தேறிகள் என்ற விஷத் தன்மை மிக்க பிரச்சாரம் செய்வோர்கள் இன்று மத்திய அரசின் பாடத்திட்டங்களை வகுப்பவர்களாக பதவி ஏற்றும் உள்ளனர். இதே குஜராத்தில் ஆதிவாசிக் குழந்தைகள் ஆற்றுக்குள் அரைமணி நேரம் நீந்தி தினமும் பள்ளிக்கூடம் போறாங்க, ஓ ! இது தான் வளர்ச்சியோ. என்ன கண்றவியோ.

அப்படித் தான் இந்தியாவின் பெயர் ஆங்கிலத்தில் இந்தியா எனவும், இந்தியில் பாரத் எனவும் இருக்கின்றது, ஆனால் காவி வெறித் தலைவர் மோகன் பாகவத்துக்கு மட்டும் இந்தியா இன்னும் இந்துஸ்தான் என்ற பெயரில் இருக்கின்றதாம், அதனால் இந்தியர்கள் என்பதை இனி இந்துக்கள் என மாற்றிக் கொள்ள வேண்டுமாம். நாஷமாப் போச்ச்சு..

அதைத் தாண்டி இப்போது ஆசிரியர் தினத்தை குரு உற்சவ் என மாற்றியுள்ளது மத்திய அரசு. குரு உற்சவ் என்ற பெயரையே அனைத்து மொழியினரும் பயன்படுத்துமாறு திணிக்கின்றது. இது அப்பட்டமான சமஸ்கிருத திணிப்பல்லவா, ஏன் வேறு மொழிகளில் ஆசிரியர் தினம் என்பதற்கு என்ன சொல் பஞ்சமா? இல்லை? குரு உற்சவ் என சொன்னால் மாணவர்கள் மண்டைக்குள் பாடங்கள் எளிதாக நுழைந்துவிடுமா என்ன? அதுவும் சமஸ்கிருதத்தோடு சம்மந்தமில்லா தமிழ் போன்ற மொழிகள் ஏன் சமஸ்கிருத சொல்லை கையாள வேண்டும்.


குரு உற்சவ் என சொல்லும் நமக்கு எது நியாபகம் வருகின்றது? கல்வி என்பது பூணூல் இட்டவருக்கு மட்டுமே, மற்றவன் எல்லாம் குலத் தொழில் பயில மட்டுமே லாயக்கு என கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வியை மறுத்து வந்த குருகுலத்தை அல்லவா நினைவூட்டுகின்றது. இன்று செருப்புத் தைப்பவனின் மக்கள் கூட நல்ல கல்வியை பெறுகின்றனர், கல்விச் சாலைகளில் கல்வி பயில பிறப்பும், குலமும், கோத்திரமும், மூத்திரமும் தடை இல்லை என்றல்லவா இருக்கின்றது. இவற்றை மாற்றி மீண்டும் இந்தியாவை இருண்ட காலத்துக்கு தள்ளும் விதமாகவே இந்த அரசு இவ்வாறான செயல்களை செய்து வருகின்றது.

இவர்கள் இவ்வாறே ஆரிய மொழியையும், ஆரிய மதங்களையும் தொடர்ந்து திணிப்பார்களானால், இந்தியாவின் ஒற்றுமையும் வளர்ச்சியும் நிலைகுலையும் வாய்ப்பு நிறையவே உள்ளது. உலகப் பொருளாதார மொழியான ஆங்கிலத்தையும், உள்ளூர் மொழிகளான தமிழ் உட்பட பல மாநில மொழிகளையும் அழிப்பதன் மூலம் குருட்டுச் சமூகத்தையே இவர்கள் உருவாக்க நினைக்கின்றனர்.


இது இந்தியாவை பாகிஸ்தான், எகிப்து, இலங்கை, இராக், வடகொரியா போன்ற தேசங்களாக மாற்றக் கூடும். இங்குள்ள பிரிவினை சக்திகளை ஊக்கப்படுத்தி தேசத்தை தவறான பாதைகளுக்கு கொண்டு செல்லக் கூடும். இதே நிலைத் தொடர்ந்தால் வருங்கால இளைய இந்தியா பரதேசி பண்டாரங்களாக பிச்சை எடுத்து கஞ்சா அடிச்சு காசி, ராமேசுவரம் என சுத்த வேண்டியது தான்.

பொறுத்திருந்து பாருங்கள் ! மோதியின் இந்தியா மோசமான இந்தியாவாக உருமாறக் கூடும்.

நன்றி : கோடங்கி​ ​இந்நேரம்.காம்...