ரஹீமா த.மு.மு.க.-ம.ம.க.கிளை நிர்வாகிகள் கூட்டம் 10.05.13
http://www.tmmk-ksa.com/iyakkam1/i-velinadu/i-valaiguda/i-saudiarabia/1363-10-05-
13.htmlhttp://www.tmmk-ksa.com/iyakkam1/i-velinadu/i-valaiguda/i-saudiarabia/1363-10-05-13.html
ரஹீமா த.மு.மு.க.-ம.ம.க.கிளை நிர்வாகிகள் கூட்டம்
கடந்த 10-05-2013 அன்று ரஹீமா த.மு.மு.க.-ம.ம.க.கிளை நிர்வாகிகள் கூட்டம் கிளைப் பொருளாளர் சகோ. அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் கிளைத் தலைவர் சகோ. இஜாவுதீன் அவர்களின் அறையில் நடைபெற்றது.
அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
1. லெப்பைக் குடிக்காடு ம.ம.க. விற்கு நமது கிளை சார்பாக வழங்கப்பட்ட நிதியுதவிக்கு நன்றிக் கடிதம் லெப்பைக் குடிக்காடு ம.ம.க. கிளைச் செயலாளர் அவர்கள் மூலம் வந்ததை நிர்வாகிகளிடம் காட்டப்பட்டது.
2. ரஹீமாவைச் சார்ந்த மும்பை சகோதரர் ஒருவரின் மனைவிக்கு தம்மாம் அல்-மானா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ததற்கு இரத்தம் அல்-கோபார் கிளையின் சார்பாக சகோ. காஜா பஷீர் அவர்கள் மூலம் வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
3. வாகன விபத்தில் அடிபட்ட சகோதரர் அப்துல் காதர் அவர்கள் நல்ல முறையில் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டதை நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
4. லால்பேட்டை சகோ. ஹபீபுல்லாஹ் அவர்களின் மருத்துவ செலவிற்கு SR. 1100 அவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது..
5. இன்ஷா அல்லாஹ் வரும் 17-05-2013 அன்று அல்-ஜுபைலில் நடைபெற இருக்கும் மண்டல செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
6. அடுத்த கிளைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் 12 ம் தேதி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தங்கள்,
அபூபக்கர்
ம.ம..க. - கிளைச் செயலா
ம.ம..க. - கிளைச் செயலா