அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கர்நாடகா தேர்தல்
முடிவுகள்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகத்தில் வாழக்கூடிய தமிழர்கள் உட்பட அனைத்து சமூக மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து அக்கட்சி ஆட்சி அமைக்கின்ற வகையில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அதற்காக கர்நாடகத்தில் வாழக்கூடிய மக்களுக்கும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கர்நாடக மாநிலத் தேர்தலை முன்னிலைப்படுத்தி நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருந்திருந்தது. தற்போது தேர்தல் முடிந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்க இருப்பதால் காவிரி நீர் பகிர்வு தொடர்பாக தாமதம் இல்லாமல் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் முறைப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குகின்ற பணிகளை நடுவண் அரசும் அமையவிருக்கும் காங்கிரஸ் அரசும் கர்நாடக தமிழக மக்கள் ஒற்றுமைக்கு பாதுகாப்பு அளித்து அதற்கான ஏற்பாடுகளை முனைப்போடு செய்திட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கர்நாடக மக்கள் பாஜகவுக்கு அளித்த வெற்றியைத் தொடர்ந்து பாஜகவினர் தன்னிலை மறந்து ஆட்டம் போட்டனர். சிறுபான்மையின மக்களைத் துன்புறுத்தி, அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினரும் தன்னிலை மறக்காமல் மாநிலத்தை முன்னேற்றுவதிலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்துவதுடன், பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சிறுபான்மையின மக்களை விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
(ஜே.எஸ்.ரிபாயீ)
_____________________________