அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமிழகத்தில் பல முஸ்லிம் சமுதாய அமைப்புகள் இருந்தாலும் மனிதநேயப்பணிகளில் த மு மு க விற்கு நிகர் த மு மு க வே என்றால் அது மிகையாகாது.
சவூதி அரேபியாவில் கிழக்கு மாகாணப்பகுதியில் உள்ள அல் ஹஸா என்ற பகுதியில விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுக்கா பிள்ளையார்நத்தம் என்ற ஊரைச்சேர்ந்த ராஜு சம்பத் என்ற சகோதரர் அல் ஹஸாவில் அல் சக்கரன் என்ற தனியார் கம்பெனியில் இரண்டு வருடகாலமாக பணியாற்றிவருகிறார்.
கடநத 24-02-2013 மாலை 05 மணி அளவில் தனது சம்பள பணத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு மகாசின் என்ற இடத்தில் சைக்கிளில் ரோட்டை கடக்கமுயன்றபோது எதிரே வந்த வாகனத்தில் அடிப்பட்டு நினைவிழந்தார். சுயநினைவின்றி கிடந்த நிலையில் அவசர ஊர்தி அழைக்கப்பட்டு அவசர ஊர்தி வர தாமதித்ததால் வாகனத்தை ஒட்டி வந்த சவுதியே மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக இராணுவ மருத்துவமனையில் icu ல் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பின் தான், அல்லாஹ்வின் மிகப்பெரிய அருளால் சுயநினைவு திரும்பியது.
அதன்பிறகு சாதாரண வார்டுககு மாற்றப்பட்டாலும் இவரால் எழுந்து நடக்கவோ உட்க்காரவோ முடியாத சூழலில் , இவருக்கு மருத்துவர்கள் ஓய்வும் பயிற்சியும் தேவையிருக்கின்ற காரணத்தால் தாயகத்துக்கு அனுப்ப முடிவு செய்து 17-04-2013 இரவு 11.50 சவுதியா ஏர்லைன்ஸ் மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டு விமானநிலையம் வரைசென்று சில ஏற்பாடுக்குறைகளினால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிட்சைப்பெற்றுவந்தார்.
மீண்டும் இவருக்கு 01-05-2013அன்று ஏற்பாடு செய்யப்பட்டு அன்றும் செல்லமுடியாதகாரணத்தால் பிறகு 03-05-2013அன்று எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கொச்சின் சென்று அங்கிருந்து விருதுநகர் சென்று மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறறு வருகிறார்.
இவர் ஊர் சென்றவுடன் இவரது மனைவி சாந்தி அல் ஹஸா மாநகரத்தலைவர் அஹ்மத் சுகர்னோ அவர்களை அலைப்பேசி மூலம் தொடர்ப்புக்கொண்டு "தங்களுடய இந்த மனிதநேயம்மிக்கப்பணி எங்களுடைய வாழ்நாளில் மறக்கமுடியாதது"என்றும், "தினமும் சிரமம் பாராமல் இரவு மருத்துவமனைக்குசென்று என்னுடைய கணவரைப்பர்த்து ஆறுதல் சொல்லிய உங்களுக்கும் த மு மு க நிர்வாகிகளுக்கும் எங்கள் குடும்ப்பத்தின் சார்பாக பிரார்த்திக்கின்றோம்" என்றும் சொன்னார்.
காரணம் இவர் விபத்து நடந்த மறுநாள் இவர்கள் தொடர்ப்புக்கொண்டது த மு மு க சகோதரர்களைத்தான். அன்று முதல் 67 நாள்கள் மருத்துவமனைக்குச்சென்று அவரைப்பார்த்து நலம் விசாரித்தும் மருத்தவர்களோடு தொடர்புக்கொண்டு இவருடைய உடல்நிலை குறித்து அவ்வப்போது இவருடைய குடும்ப்பத்தார்களுக்கு தெரிவித்தனர்.
அல்லாஹ் அக்பர் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே