அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
திருமண பதிவுச் சட்டத்தில் மாற்றம் தேவை - சட்டப்பேரவையில் மமக கோரிக்கை
6.05.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்ற திமுக ஆட்சியில் தமிழ்நாடு கட்டாய திருமண பதிவுச் சட்டம் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏராளமான ஆட்சேபனைகள் இருந்தது. நாங்கள் முறையிட்டும் அவை திருத்தப்படவில்லை இந்த ஆட்சி வந்த பிறகு இந்தக் கோரிக்கையை பல முறை நம்முடைய அதிமுக ஆட்சியிடம் நாங்கள் முறையிட்டு இருக்கின்றோம். இன்று, இந்து கோயில்களிலே நடைபெறக்கூடிய திருமணங்களிலே அறங்காவல் துறை அலுவலர்கள் பதிவு செய்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு, பதிவுத் துறை சான்றிதழ்களை கொடுக்கின்றது. அதேபோன்று, முஸ்-ம் திருமணங்களை தமிழ்நாடு அரசு தலைமை காஜியால் நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய திருமணத்தை நடத்தி வைக்கக்கூடியவர்கள் அதை பதிவு செய்தால் அந்தப் பதிவை மட்டும் ஏற்றுக் கொண்டு அரசாங்கம் சான்றிதழ் வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்நாடு கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தின் 5வது பிரிவின்கீழ் ஒரு திருமணம் நடந்து முடிந்தபிறகு 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மேலும் 60 நாட்களுக்குள் அபராதத்துடன் பதிவு செய்யலாம். ஆனால் 90 நாட்கள் முடிந்தபிறகு பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றால், பதிவு செய்வதற்கு மறுக்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல, கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலேயே திருமணம் முடிந்து தம்பதிகள் நேரடியாக பதிவாளர் அலுவலகத்திற்கு வரலாம் அல்லது தபா-ல் அந்த தம்பதிகள் அனுப்பலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கட்டாயமாக அந்தக் தம்பதிகள் பதிவாளர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள், இது பல்வேறு சமூகரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் திருமணம் முடித்துவிட்டு மாப்பிளை வெளிநாட்டுக் போய்விடுவார். மனைவி மட்டும் இங்கே இருப்பார். இந்தச் சிக்கல்களையெல்லாம் நீக்கக்கூடிய வகையில் திருத்தங்களை செய்ய வேண்டும்.
" Peace Be Upon You "
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!