அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 18 மே, 2013

கொள்கையிலே உள்ள ஈடுப்பாட்டின் காரணமாக மமகவினர் மதுவிலக்கு கோருகின்றனர்: சட்டபேரவையில் அமைச்சர் பாராட்டு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கொள்கையிலே உள்ள ஈடுப்பாட்டின் காரணமாக மமகவினர் மதுவிலக்கு கோருகின்றனர்: சட்டபேரவையில் அமைச்சர் பாராட்டு








தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் மதுவிலக்குத் துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரையும் அமைச்சரின் பதிலும்:

கடந்த 1967 ல் திமுக பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே ஆட்சியைப் பிடிக்கக்கூடிய தேர்தல் நேரத்தில் படி அரிசி ரூ 3க்கு தருவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலிலே கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஆனால் கஜானா கா-யாக இருந்தது அரசு அதிகாரிகள் தமிழகத்திலே இருந்த மது விலக்கை நீக்கிவிட்டால் அரசாங்க கஜானாவிற்கு பணம் வரும் நாம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றலாம் என்று பேரறிஞர் அண்ணா அவர்களிடம் ஆலோசனை சொன்னபோது அரச கஜானாவை நிரப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் மதுவின் தீமையினால் பல்லாயிரக்கணக்கான கோடி குடும்பங்களின் வாழ்க்கை நாசமாவதை நான் விரும்பவில்லை என்று சொல்லி உறுதியாக மதுவிலக்கு கொள்கையிலே இருந்தார். ஆனால் அவர் வழியில் வந்த தம்பி என்று சொன்னவர்தான் முதன்முதலாக கள்ளு என்றால் என்னவென்று தெரியாத சாராயம் என்றால் என்னவென்று தெரியாத தமிழகத்திலே மதுபானக் கடைகளைத் திறந்து வைத்தார்கள். இன்றைக்கு மற்ற மாநிலங்களிலே தடையில்லாவிட்டாலும்கூட தமிழகத்திலே நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான் லாட்டரியைத் தடை செய்தார்கள் கந்து வட்டியைத் தடை செய்தார்கள், சென்ற வாரம் சுவைக்கும் புகையிலையாக இருக்கக்கூடிய பான்பராக்கையும் தடை செய்தார்கள். அதேபோல் இவர்கள் ஆட்சியிலே இந்த மதுவை முழுமையாக ஒழிக்கவேண்டும்.

மாண்புமிகு நத்தம் ஆர். விஸ்வநாதன்(மதுவிலக்குத் துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் சொல்வது உண்மையிலேயே எல்லோரையும் கவரக்கூடிய கவர்ச்சிகரமான ஒரு கொள்கை தான். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட வேண்டும் என்று சொல்வது உங்களைப் போன்றவர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னால் உள்ளபடியே கொள்கையிலே ஈடுப்பாட்டின் காரணமாக நீங்கள் சொல்கிறீர்கள். வன்முறையை மட்டும் கையில் எடுத்திருக்கிற சில அரசியல் கட்சிகள் இப்படி ஏதாவது மதுவிலக்கு அமல் செய்துவிட்டால் அந்த தொழிலை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் சில கட்சிகள் என்று மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறார்கள், அப்படிப்பட்ட நிலையிலே இன்னும் வெளிப்படையாகவே சொன்னால் மதுவின் தீமையை அனைவரையும்விட நன்றாக உணர்ந்தவர்கள் நமது முதலமைச்சர் அவர்கள் அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை மதுவிலக்கு அமல்படுத்துவதற்கு நமது முதலமைச்சர் அவர்களுக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. ஒன்றேயொன்றுதான் பக்கத்திலே இருக்கின்ற மாநிலங்களியெல்லாம் இன்றைக்கு மதுவை விற்பனை செய்து கொண்டிருக்கின்ற பொழுது ஒரு தீவுத்திடல்போல் இங்கே மட்டும் மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச் சந்தைக்காரர்களுக்கும் சமுதாய விரரோதிகளுக்கு இது ஒரு தளமாக அமைந்துவிடும் அரசு கஜானாவிற்கு வருகின்ற பணம் மீண்டும் ஒரு சமூக விரோதியின் கையிலே சென்றுவிடும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தேவையில்லாமல் அங்கே சமூக விரோதிகளிடம் செல்கின்ற பணத்தை இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு கஜானாவிற்கு திருப்பிவிட்டிருக்கிறார்கள். அதுதான் உண்மையே தவிர, மற்ற இந்த திட்டத்தை ஒன்று வேண்டும்மெனால் செய்யலாம் மத்திய அரசு இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்திவிட்டு எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படுகின்ற வருவாய் இழப்பை ஈடுசெய்துவிட்டு, ஒட்டுமொத்தமாக அமல்படுத்தலாம் அப்படி செய்கின்ற பொழுது முதல் மாநிலமாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற தமிழகமே அதை முதன்முதலாக வரவேற்று அதை அமல்படுத்தும் அதுவரை தனியாக, ஏற்கெனவே பழைய முதல்வர் கருணாநிதியே ஒன்றை சொல்லியிருக்கிறார் சுற்றி நெருப்பு வளையத்திற்குள்ளே ஒரு கற்பூரம் இருந்தால் இது சரியாக வருமா? அதைபோல் இன்றைக்கு சுற்றியிருக்கிற மாநிலங்களில் எல்லாம் மதுவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றபொழுது மதுவிலக்கை இங்கே அமல்படுத்துவது நடைமுறை சாத்தியமில்லை என்பதால்தான் இதைச் சொல்கிறோமே தவிர கொள்கைக்கு எதிர்ப்பு இல்லை கொள்கை ரீதியாக மதுவிலக்கை நமது முதல்வர் அவர்கள் வரவேற்கிறார்கள் வேறு நடைமுறை சாத்தியமில்லை என்பதால்தான் அதை இங்கே கசப்புணர்வோடு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராஜாஜி அவர்கள் சேலம் நகராட்சித் தலைராகப் பொறுப்பேற்றவுடன் சுற்றிப் பார்த்த எல்லா ஊர்களிலும் மது இருந்தது. தன்னுடைய நகராட்சியிலே இராஜாஜி மதுவை தடை செய்தார்கள் அதைபோன்று தமிழகத்தில் மதுவை தடைசெய்ய வேண்டும்.

மாண்புமிகு நத்தம் ஆர். விஸ்வநாதன்(மதுவிலக்குத் துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதைச் சொல்வதற்கும், பேசுவதற்கும் கவர்ச்சிகரமாக இருக்கும், ஏனென்றால் இதை எதிர்த்துயாரும் சொல்ல முடியாத அல்லவா, அதனால் இதை யார் வேண்டுமானாலும் இதை வலியுறுத்திச் சொல்லலாம் ஆனால் நடைமுறை சாத்தியம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும் என்று நான் பலமுறை சொல்கிறேன். நீங்கள் எந்த இடத்திலே பார்த்தாலும், பக்கத்திலே இருக்கிற பாண்டிச்சேரி மாநிலம், இங்கே அமல்படுத்தினால் அடுத்த நிமிடம் அந்த பாண்டிச்சேரி மாநிலம்கூட சில நேரங்களில் எவ்வளவுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும்கூட சில நேரங்களிலே அதையும் மீறி கள்ள மதுபானங்கள் உள்ளே வந்துவிடுகிறது. இவ்வளவு வசதி இருக்கும்போது கள்ள மதுவும் கடத்தல்காரர்களும் உள்ளே வந்துவிடுகிறார்கள் என்று சொன்னால் இன்றைக்கு பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் தமிழகத்திலே கள்ளச் சாராயச் சாவுகள் அதிகரிக்கும் இப்போது 5, 6 வருடங்களாக கள்ளச்சாராய சாவுகளே கிடையாது இதை வலியுறுத்துவதற்குப் பதிலாக என்னுடைய மேலான ஆலோசனை ஒன்றை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் நீங்கள் அரசை மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று வற்புறுத்துவதைக் காட்டிலும் ஒரு சட்டத்தைப் போட்டு அவர்களை கட்டாயப்படுத்துவதைக் காட்டிலும் அவர்கள் மத்தியில் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த மது அருந்துபவர்கள் மத்தியிலே ஒரு பிரச்சார யுகத்தை செய்யுங்கள் மது அருந்துவதால் உடம்புக்கு கேடு ஆகவே மக்கள் மத்தியிலே விடுதலை இயக்கமாக மாற்றி மது அருந்துவதிலே ஏற்படுகின்ற தீமையை மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி, மக்கள் மனதிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் அது நன்றாக இருக்கும் அரசு அதைத்தான் செய்து வருகிறது நம்முடைய அரசு மதுவின் தீமைகளை பற்றி மிகத் தெளிவாக விளக்கி பிரச்சாரங்கள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் அந்த வகையில் மது அருந்துபவர்களுடைய மனமாற்றத்தை ஏற்படுத்துவதான் உண்மையிலேயே மதுவிலக்கு கொள்கையிலே வெற்றி கிடைக்கும் என்பதைக் தெரிவித்துக்கொள்கிறேன்.

பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை நிச்சயமாக நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் இன்றைக்கு தமிழக மக்களுடைய எதிர்பார்பு இந்த ஆட்சியிலே பூரண மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும். மிகத் திறமையான காவல்துறை இருக்கின்றது நிச்சயமாக நாம் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்றுஎன்று சொல்லி ஒரு குறளுடன் என்னுடைய உரையை முடிக்கின்றேன்.

"துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுஉண்பார் கள்உண் பவர்"