அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 18 மே, 2013

கிழக்கு மண்டல தமுமுகவின் 48 வது செயற்குழு

ஏகஇறைவனின் திருப்பெயரால்..

கிழக்கு மண்டல தமுமுகவின் 48 வது செயற்குழு



















   


அஸ்ஸலாமு அலைக்கும்..

கிழக்கு மண்டல தமுமுகவின் 48 வது செயற்குழு


த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல 48 வது செயற்குழு
 
 த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல 48 வது செயற்குழு 17-05-2013வெள்ளிக்கிழமை அல்-ஜுபைல் எஸ்.கே.எஸ். கேம்பில்  நடைபெற்றது.

கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் அபிராமம் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் கூட்டம் சரியாக காலை 10 :45 மணி அளவில் தொடங்கியது.  அல்-ஜுபைல்  கிளைத் தலைவர்  சகோ. ஷேக் அப்துல்லாஹ்  அவர்கள் வரேவேற்புரை நிகழ்த்திகூட்டத்தைத் துவக்கி வைத்தார

அடுத்து தலைமை உரை நிகழ்த்திய பொறியாளர் அபிராமம் அப்துல் காதர்அவர்கள் தனது உரையில் நாம் 18 வருட காலமாக இங்கு நடத்திவரும் இந்த மாபெரும் இயக்கத்தின் செயல்பாடுகள் இங்கு மட்டுமல்லாமல் நமது தாயகத்திலும் எதிரொலிக்கின்றன. மேலும் கடந்த ஒருவருட காலமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகத்தின் செயல்பாடுகளை அலசி ஆராய வேண்டிய கட்டத்தில் நாம் இருப்பதாகவும் அதில் தலைமையகத்திலிருந்து வந்த அதி முக்கியமான மூன்று கோரிக்கைகளான 

1. எம்பெருமானார் ரசூல்(ஸல்) அவர்களை கேவலமாக சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை தடை செய்யக்கோரி சென்னையில் அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகை இட்டதையும், 2. 1000 கிராமங்களுக்கு மேலாக சென்று ஒரு கோடி பேரை சந்தித்து விழிப்புணர்வு ஊட்டிய மது ஒழிப்பு பிரச்சாரத்தையும் 3. கோடைக்கால பயிற்சி முகாம்பற்றியும்  எடுத்துவைத்து அதற்கான நமது பங்களிப்பையும் குறிப்பிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து மண்டலப் பொருளாளர் அதிரை நஸ்ருத்தீன் சாலிஹ் அவர்கள் ஒரு வருட நிதி அறிக்கையை வாசித்தார் மேலும் நாமெல்லாம் இங்கு கூடியிருப்பதன் நோக்கம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே ஆகும் எனவும்,  தமிழகத்தில் மக்கள் பணிகள் அதிகரிப்பதனால் அதற்கான பொருளாதார தேவைகள் அதிகமாக உள்ள காரணத்தால் தங்களின் தாராள பொருளாதார உதவிகளை தந்துதவுமாறு வேண்டினார்.


தொடர்ந்து கிளைவாரியான அறிக்கைகள் கடந்த செயற்குழுவிலிருந்து இன்றுவரை கிளைகளில் நடந்த செயல்பாடுகளை வாசிக்க அந்த அந்த கிளை பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டனர்.   அதை மண்டலச் செயலாளர் சகோ. இம்தியாஸ் அவர்கள் வழிநடத்தினார். அவற்றில் உள்ள குறை, நிறைகளையும் தமது ஆலோசனைகளையும்  எடுத்துரைத்தார்.

இத்துடன் முதல் அமர்வு ஜும்ஆ தொழுகைக்காகவும் உணவு இடைவேளைக்காகவும் முடித்து கொள்ளப்பட்டது.
ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் தொடங்கிய இரண்டாம் அமர்வில் கிளை செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும், நம்மை நாம் எவ்வாறு மேம்படுத்தி கொள்வது என்பது பற்றியும் மண்டல ம.ம.க. செயலாளர் சகோ. அப்துல் அலீம் அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்.  அதில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே, நாம் பல சோதனைகளை கடந்துதான் இந்த நிலையை அடைந்திருக்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும், நம் தலைவர்களின் நல்ல பல  வழிகளை பார்த்து நமது பயணத்தை அமைத்து கொள்ளவேண்டும், நமக்கு கீழுள்ள பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கவேண்டும், மேலும் நமது குறிக்கோள் (Gole) என்ன என்பதை தெளிவாக முடிவு செய்துகொண்டு அந்த இலக்கை அடைய தைரியத்துடனும் (Spirit), உத்வேகத்துடனும் (Inspiriation) முயற்சி செய்யவேண்டும் அவ்வாறு செய்வோமானால் நமது இலக்கை இலகுவாக அடைய முடியும் என்பதை எடுத்து வைத்தார்.
மேலும் இழந்ததை மீட்போம், இருப்பதை காப்போம் என்னும் நமது இயக்கத்தின் தாரக மந்திரத்தை செயல்படுத்த முயற்சி செய்யவேண்டும் மேலும் நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்களை பொதுமக்களிடம் பரப்பவேண்டும் (Spread) நாம் நம்பிக்கையுடன் கண்டிப்பாக சாதிப்போம் என எண்ணம் கொள்ளவேண்டும் எனவும்,   நமது குறிக்கோள் (Gole) களுக்கு கால வரையறை (Deadline) வைத்து அடைய முயற்ச்சிக்க வேண்டும் எனவும், ஒவ்வொருவரிடம் ஒரு திறமைகள் இருக்கும் அவற்றை வெளிக்கொணர்ந்து நமது இலக்கை எட்டவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.  
அதை தொடர்ந்து நமது மண்டலத்தின் அணிகளின் பொறுப்பாளர்கள் தங்களது அணியின் செயல்பாடுகளை எடுத்துரைக்க அழைக்கப்பட்டனர் அதில் தர்பிய்யா பொறுப்பாளர் பொறியாளர் ஜக்கரியா அவர்கள் நம் அனைவருக்கும் தர்பிய்யா என்பது மிகவும் அவசியமானது என்பதையும் அதை கிளை வாரியாக விரிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுகொண்டார், அல்-ஹுஜராத்துடைய 10வது வசனத்தை மேற்கோள் காட்டி நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் எனவும் இதனால் நன்மையை அடைய முடியும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் விவகாரங்கள் அணி  பொறுப்பாளர் சகோ. காயல் இஸ்மாயில் அவர்கள் தாங்கள் செய்த பொது விவகாரங்களைப் பற்றி எடுத்துரைத்தார்கள் மேலும் தற்போதைய சவுதி அரேபியாவில் நிலவிவரும் நிதாகாத் சட்டத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளைப்  பற்றிய விழிப்புணர்வையும் எடுத்து வைத்தார் நாம் இதை பொது மக்களுக்கு எடுத்துச் சென்று  நமது சேவையை தொடரவேண்டும் என வேண்டிகொண்டார்.

அடுத்து நமது கிழக்கு மண்டல உறுப்பினர்கள் எண்ணிக்கையையும், அதை இன்னும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும்,   காலாவதியான  உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்க வேண்டியும் உறுப்பினர் அட்டை பொறுப்பாளர்  சகோ. அப்துல் குத்தூஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கடந்த ஒருவருட காலமாக கிளைகளின் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து மூன்று கிளைகளை தேர்ந்தெடுத்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது அதில் பொது விவகாரங்களில் அதிகம் தங்களை ஈடுபடுத்தி கொண்ட அல்-ஹஸா கிளைக்கு சான்றிதழை பொது விவகார பொறுப்பாளர் சகோ. காயல் இஸ்மாயில் அவர்கள் வழங்க அதை அல்-ஹஸா தலைவர் சகோ. அஹமது சுகர்னோ பெற்றுகொண்டார்.

அடுத்து உறுப்பினர் அட்டைகளை முறைபடுத்தி தொடர்ந்து புதுப்பித்தும், புதிய உறுப்பினர்களை சேர்த்தும் சிறப்பாக பணியாற்றிய அல்-கோபார் கிளைக்கு சான்றிதழை உறுப்பினர் அட்டை பொறுப்பாளர் சகோ. இராஜகிரி அப்துல் குத்தூஸ் அவர்கள் வழங்க அல்-கோபார் கிளைச் செயலாளர் சகோ.  காஜா பஷீர் அவர்கள் பெற்றுகொண்டார்.

அடுத்து அனைத்து செயல்பாடுகளிலும் சிறப்பாக செயல்பட்ட ரஹீமா கிளைக்கு சகோ. அப்துல் அலீம் அவர்கள் சான்றிதழை வழங்க ரஹீமா கிளைத் தலைவர் சகோ. இஜாவுதீன் பெற்றுகொண்டார் இந்த சான்றிதல் என்பது மற்ற கிளைகளும் தங்களின் செயல்பாடுகளை இன்னும் மேம்படுத்திக்கொள்ள ஆவலை தூண்டும் விதமாகவே வழங்கப்பட்டதாக மண்டலத் தலைவர் எடுத்துரைத்தார். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் அனைத்து கிளைகளும் சிறப்பாக செயல்பட்டு சான்றிதழ் களை வாங்க முயற்சி செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
அசர் தொழுகைக்காக கூட்டம் இடை நிறுத்தப்பட்டு பின்னர் தேநீருடன் தொடங்கியது.
தொடர்ந்து சபையோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது குறிப்பாக நிதாகத் சட்டத்தைப் பற்றியான சந்தேகங்களுக்கு சகோ. காயல் இஸ்மாயில் அவர்கள் தெளிவான விளக்கத்தை வழங்கினார்.
பின்னர் தாயகத்திலிருந்து அலைபேசியில் மாநில மூத்தத் தலைவர் சகோ. ஹைதர் அலி சாஹிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.  அதில் கடந்த 1995 முதல் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இந்த பேரியக்கத்தின் கடும் முயற்சியினால் 2009 ம் ஆண்டு முஸ்லிம்களுக்கென்று 3.5 சதவிகித இட ஒதுக்கீடு  கிடைக்கப் பெற்று நமது சமுதாய மக்கள் பயனடைவதை காணும்பொழுது பெருமகிழ்ச்சியளிக்கின்றது. வரும் ஜூலை மாத போராட்டத்தின் மூலம் நமக்கு கிடைத்த இந்த  3.5 சதவிகித இட ஒதுக்கீடு போதாது என்பதையும் இதை அதிகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீண்டகாலமாக சிறைக்கொட்டடியில் வாடும் நமது சமுதாய சொந்தங்களை விடுதலை செய்யக்கோரியும் போராட இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.  மேலும் ஏன் என்று கேட்பதற்கு நாதியில்லாத நேரத்தில் தொடங்கிய இந்த அமைப்பு உங்களின் ஊக்கத்தோடும், ஆக்கத்தோடும், இன்னும் அதிகமதிக பயன்களை இந்த சமுதாயம் பெற ஒத்துழைப்போடும் தொடர வேண்டும் என கேட்டுகொண்டார்.
தொடர்ந்து மௌலவி ஆத்தங்கரை அலாவுதீன் பாக்கவி அவர்கள் நமது செயல்பாடுகள் சகோதர வாஞ்சையுடனும், ஈமானின் சுவையை உணர்ந்ததாக இருக்க வேண்டும் எனவும் மூமினின் காரியங்கள் அனைத்திலும் நன்மை உண்டு ஏனென்றால் துன்பம் வந்தால் அதை சகித்து கொள்கின்றான், நன்மை வந்தால் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றான் மேலும் ஈமானின் சுவையை உணர்ந்தவர் யார் என்றால் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் உலகத்தில் உள்ளோர்களைவிட நேசிக்கக் கூடியவன், ஒரு சகோதரனை மற்ற சோதரன் அல்லாஹ்விற்காக நேசிப்பவன், ஒருவன் அல்லாஹ்விற்கு இணை வைக்கும் விஷயத்தில் நெருப்பில்  வீசப்படுவது போன்று உணரக்கூடியவன் என ரசூல்(ஸல்) அவர்கள் எடுத்துரைத்த நபிமொழியை நினைவூட்டினார், மேலும் நமது சமுதாயத்தின் தாக்கம் அரசு பொறுப்புகளில் இருக்கவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அனைத்து கிளைகளுக்கும் குவைத் த.மு.மு.க. மூலம் வெளியிடப்பட்ட சட்ட மன்றத்தில் மனித நேயத்தின் குரல் என்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களின் உரை தொகுப்பு புத்தகம் வழங்கப்பட்டது.
இறுதியாக த.மு.மு.க. மண்டல துணைத் தலைவர் சகோ. சர்புதீன் பாய் அவர்கள் நன்றியுரை கூறினார் மேலும் இந்த செயற்குழுவை சிறப்புடன் நடத்த இடம் மற்றும் உணவு உபசரிப்பு வழங்கிய எஸ்.கே.எஸ். நிறுவனத்தாருக்கு மண்டலம் சார்பாக நன்றி கூற துஆவுடன் கூட்டம் அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் இனிதே நிறைவுற்றது.
செயற்குழுவிற்கு வந்த அனைவருக்கும் அல்- ஜுபைல் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பும்உணவு மற்றும் தேநீர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
எல்லாப் புகழும் வல்ல நாயனுக்கே.
செய்திதொகுப்பு:
அப்துல் குத்தூஸ்

~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்

அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 

எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A

~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
   இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~