ஏகஇறைவனின் திருப்பெயரால்..
நிடாகத் சட்டம் - சவூதியில் அறிவிக்கப்பட்டுள்ள கருணை காலத்தையும் பொது மன்னிப்பையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் படி இந்தியச் சமூகத்தைக் குறிப்பாக தமிழ்ச் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்
சவூதியில் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் நிடாகத் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை அமுல் படுத்தி அதை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மெற்கொண்டவருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் பல லட்சம் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை இருந்தது. தீர்வுக்கான பல் வேறு உயர்மட்ட ஆலோசனைகள் சவூதி அதிகாரிகளுடன் தூதரக ஆதிகாரிகள் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர். தூதரக அதிகாரிகள் இந்தியச் சமுகத்தின் தமுமுக உட்பட பல சமுக நல ஆர்வளர்களிடம் பல்வேறுகட்ட ஆலாசனைகளை மேற்கொண்டர் வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று மத்திய அமைச்சர் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் குழுவும் சவூதி அமைச்சகத்திடம் பேசி சுமூக தீர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவை, இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ் அவர்களால் ஏற்கப்பட்டு கருணை காலம் மற்றும் மன்னிப்பு தீர்வாகக் கிடைக்கப்பட்டுள்ளன. எல்லாப்புகளும் இறைவனுக்கே.
சவூதிக்கு முறையாக வந்துள்ள அனைவரும் இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி தங்களது பணிகளை உறுதி செய்து கொள்ளவும் அல்லது எந்த கட்டணமும் தண்டனையும் நிபந்தனையும் இன்றி தாயகம் செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
சவுதி அரசாங்கத்தால் 10.05.2013 அன்று அறிவிக்கப்பட்ட சலுகைகளின் குறிப்பிட்ட விவரங்கள்.
சவுதி அரசால் அறிவிக்கப்பட்ட சலுகை காலம் 03.07.2013 அன்று முடியும் முன்பாக, சலுகைகளை பயன்படுத்தி தங்கள் நிலையை சரி செய்து கொள்ளுமாறு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டவர்களை சவுதி உள்துறை, தொழிலாளர் அமைச்சகங்கள் கேட்டு கொள்கின்றனர். சலுகை காலம் முடிந்த பிறகு உடனே அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற் கொண்டு சட்டத்தை மீறும் நிறுவனங்கள், வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இது சம்பந்தமான சலுகைகள் பின் வருமாறு:
1. சவுதி அரேபியாவில் தொடர்ந்து பணி புரிய விரும்பும் வெளி நாட்டவர் அபராதமும் சிறை தண்டனையும் இன்றி சலுகைகாலத்தில் தங்கள் நிலையை சரி செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இது 6.4.2013 க்கு முன்பாக விதிகளை மீறியவர்களுக்கு பொருந்தும்.
2. சலுகை காலம் முடியும் முன்பாக தாயகம் திரும்பும் பணியாளர்களின் விரல் ரேகைகள் எடுக்கப்பட்டு அவர்கள் தண்டனை,அபராதம் மற்றும் இகாமா கட்டணம் இன்றி நாடு திரும்ப அனுமதிக்கபடுவர். இந்த முறையில் நாடு திரும்புவோரின் விரல் ரேகைகள் எடுக்கப்பட்டாலும், அவர்கள் சவுதி அரேபியா மீண்டும் திரும்பி வர அனுமதிக்கபடுவர்.
3. சட்ட விரோதமாக சவுதி அரேபியாவிற்குள் வந்தவர்களுக்கு சலுகை கால விதி முறைகள் பொருந்தாது.
4. தங்கள் சவுதி எஜமானரிடம் இருந்து ஓடிப்போனவர்கள்(ஹுரூப்) மற்றும் இகாமா இல்லாதவர்கள், சலுகை காலம் முடியும் முன்பு தங்கள் எஜமானரிடம் வேலைக்கு திரும்பவோ அல்லது வேலையை இன்னொருவருக்கு மாற்றிக்கொள்ளவோஅனுமதிக்கபடுவர் . இது சம்பந்தமான வழக்குகள் நீதி மன்றத்தின் மூலமாக தீர்க்கப்படும். இது சம்பந்தமான விதி முறைகள் :
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளகள் உள்ள நிறுவனங்கள் புதிய பணியாளர்களை சேர்ப்பதன் மூலமாக பச்சை நிற நிலையில் இருந்து கீழே செல்ல இயலாது.
ஒன்பது பணியாளர்கள் அல்லது அதற்கு குறைவாகவும் குறைந்தது ஒரு சவுதி பிரஜை உள்ள சிறிய பச்சை நிற நிறுவனங்கள், நான்கு பணியாளர்களுக்கு மேல் சேர்த்துக்கொள்ள அனுமதி இல்லை. புதிய பணியாளர்களை சேர்த்த பின்னரும் இந்த சிறிய நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கை அதிக பட்சமாக ஒன்பது மட்டுமே இருக்கலாம்.
5. தங்களுடைய சவுதி எஜமானரிடம் இருந்து ஓடிச்சென்ற(ஹுரூப்) வீட்டு பணியாளர்கள் அல்லது இகாமா இல்லாத வீட்டு பணியாளர்கள் தங்களுடைய முதல் எஜமானரிடம் திரும்பி வேலைக்கு செல்லவோ அல்லது வேறு ஒரு சவுதி எஜமானரிடம்வேலையை மாற்றி கொள்ளவோ அனுமதிக்கபடுவர். இது சம்பந்தமான வேலைகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் (ஜவசாத்) செய்யப்படும். மேலும் இவர்கள் தங்கள் முதல் எஜமானரின் அனுமதி இன்றி தங்கள் வேலையை ஒரு தனியார் நிறுவனத்திற்குமமாற்றிகொள்ளலாம் . வேலையை மாற்றுவதற்கான வரைமுறைகள் பின் வருமாறு :
• ஒரு சவுதி குடும்பத்தின் மொத்த வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை நான்கிற்கு மேல் இருக்கக் கூடாது.
• புதிய வீட்டுப் பணியாளர்களை சேர்ப்பதன் மூலம் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளார்கள் உள்ள பச்சை நிற நிறுவனங்கள் பச்சை நிற நிலையில் இருந்து கீழே வரக் கூடாது.
• ஒன்பது பணியாளர்கள் அல்லது அதற்கு குறைவாகவும் குறைந்தது ஒரு சவுதி பிரஜை உள்ள சிறிய பச்சை நிற நிறுவனங்கள்,நான்கு பணியாளர்களுக்கு மேல் சேர்த்துக்கொள்ள அனுமதி இல்லை. புதிய பணியாளர்களை சேர்த்த பின்னரும் இந்த சிறிய நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கை அதிக பட்சமாக ஒன்பது மட்டுமே இருக்கலாம்.
6. 3.7.2008 க்கு முன்பாக ஹஜ் அல்லது உம்ராவில் வந்து சட்ட ரீதியற்ற முறையில் வீட்டுப் பணியாளராக அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் , தங்கள் நிலையை சரி செய்து கொள்ள அனுமதிக்கபடுவர். இவர்கள் முதலில் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று பதிவு செய்த பின் லேபர் ஆபீஸ் செல்லவேண்டும்.
• இந்த முறையில் புதிய பணியாளர்களை சேர்த்து கொள்ளும் சவுதி குடும்பத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை நான்கிற்கு மேல் இருக்கக்கூடாது.
• புதிய பணியாளர்களை சேர்ப்பதன் மூலம் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளார்கள் உள்ள பச்சை நிற நிறுவனங்கள் பச்சை நிற நிலையில் இருந்து கீழே வரக் கூடாது.
• ஒன்பது பணியாளர்கள் அல்லது அதற்கு குறைவாகவும் குறைந்தது ஒரு சவுதி பிரஜை உள்ள சிறிய பச்சை நிற நிறுவனங்கள், நான்கு பணியாளர்களுக்கு மேல் சேர்த்துக்கொள்ள அனுமதி இல்லை. புதிய பணியாளர்களை சேர்த்த பின்னரும் இந்த சிறிய நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கை அதிக பட்சமாக ஒன்பது மட்டுமே இருக்கலாம்.
7. சவுதி பிரஜைகளுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்ட தொழில்களை கருத்தில் கொண்டு, தொழிலாளர் அமைச்சகத்தின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வெளி நாட்டு பணியாளர்கள் தங்கள் தொழில் நிலையை சரி செய்து கொள்ள அனுமதிக்கபடுவர். சவுதி பிரஜைகளுக்கு ஒதுக்கப்பட்ட தனியான தொழில்கள்:
தலைமை நிர்வாக அதிகாரி
மேனேஜர்
தொடர்பு அதிகாரி
தனி விவகார நிபுணர்
பல வகை அலுவலக உதவியாளர்கள் (CLERKS)
காசாளர்
பாதுகாப்பு உழியர்
நகல் எடுப்பவர்
சுங்க விவகார ஊழியர்
மகளிர் ஆடைகள் மற்றும் பொருட்கள் கடைகளில் பணி புரியும்
பெண் ஊழியர்கள்.
Executive HR manager,
HR manger,
labor affairs manager,
staff relations manager,
staff relations specialist,
staff relations clerk,
recruitment clerk,
staff affairs clerk,
attendance control clerk,
receptionist (general),
hotel receptionist,
health receptionist,
claims clerk,
treasury secretary,
security, broker,
key specialist,
customs broker and female sales specialists (women only).
8. சலுகை காலத்தில் கட்டணம் இன்றி எல்லா வெளிநாட்டு பணியாளர்களும் தங்கள் தொழிலை மாற்றிகொள்ளலாம்.
9. சலுகை காலத்தை பயன்படுத்தி தங்கள் நிலையை சரி செய்ய எல்லா வெளி நாட்டு பிரஜைகளுக்கும் வாய்ப்பு அளிக்கபடுகிறது.
10. சலுகை காலத்தில், புதிய பணியாளர்களை சேர்க்கும் நோக்கத்தில், தனியார் நிறுவனங்கள் சவுதி தொழிலாளர் அமைச்சகத்தின் பணியாளர் சதவிகித விதிகளை பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
* * * * * * * *
சவுதி அரசாங்கத்தால் 10.05.2013 அன்று அறிவிக்கப்பட்ட சலுகைகளின் பொது விதிகள்:
1. சட்டத்திற்கு மீறி இந்த நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பது, வேலை அளிப்பது மற்றும் போக்குவரத்து வசதி அளிப்பது சட்டத்தை மீறும் செயலாகும். இச் செயலை செய்பவர்களுக்கு இரண்டு வருட சிறை தண்டனையும் 1,00,000 ரியால் அபராதமும் விதிக்கப்படும். சட்டத்தை மீறி இருக்கும்வெளிநாட்டவர்களின்எண் ணிக்கையை பொறுத்து தண்டனை அதிகமாக்கப்படும்.
2. சட்டத்தை மீறி தங்கி இருப்போர் காலதாமாக வெளியேறினால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
3. ஜூலை 3 தேதி வரை உள்ள சலுகை காலத்தில் ஒரு சவுதி எஜமானரின் அனுமதி இன்றி பணியாளரை வேலைக்கு அமர்த்தும் இன்னொரு சவுதி எஜமானர் முதல் மூன்று மாத காலங்களுக்கு, அப்பணியாளர் தாயகம் திரும்ப அல்லது திரும்பி சென்று வர விசா வழங்க மாட்டார். ஒரு வேளை அவ்வாறு வழங்கும் பட்சத்தில், முதல் சவுதி எஜமானரிடம் இருந்து பணியாளர் மீது இருக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாவார் .
4. சட்ட ரீதியாக வேலை செய்யும் வீட்டு பணியாளர்கள் தங்களுடைய எஜமானரின் அனுமதியோடு வேலையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். இது சம்பந்தமான கார்யங்கள் தொழிலாளர் அலுவலகங்களில் (லேபர் ஆபீஸ்) செய்யப்படும்.
5. சவுதி அரேபியாவில் பணி புரியும் வெளிநாட்டு பணியாளரின் சரியான இகாமா மற்றும் வேலை செய்வதற்கான அனுமதி பத்திரம் பெற்று கொடுப்பது சவுதி எஜமானரின் பொறுப்பாகும். இது சரியான முறையில் செய்யப்படாத பட்சத்தில் வெளி நாட்டு பணியாளர் தனது வேலையை சவுதி எஜமானரின் அனுமதி இன்றி இன்னொருவருக்கு மாற்றி கொள்ளலாம். இந்த விதி சலுகை காலத்திற்குப் பிறகும் அமலில் இருக்கும்.
6. ஒரு சவுதி எஜமானர் சரியான ஆவணங்களை வழங்கா விட்டாலும், வெளி நாட்டு பணியாளர் தன்னுடைய வேலையை இன்னொருவருக்கு மாற்றிக் கொள்வதில் இருந்து தடுக்கப்படமாட்டார்.
7. சலுகை காலத்தில் தங்களுடைய வேலையை மாற்றிக்கொள்ள விரும்பும் பணியாளர்கள், சலுகை காலம்தொடங்கியபின்(6.4.2013 மு தல்) ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களில் வேலையை மாற்றிக்கொள்ள இயலாது.
8. தொழிலாளர் அமைச்சகம் மூலமாக எலக்ட்ரானிக் சர்வீஸ் பயன்படுத்தும் நிறுவனங்கள் பணியாளர்களின் வேலைநிலைகளை(வேலை மாற்றம், தொழில் மாற்றம் ..) இதன் மூலமாக சரி செய்து கொள்ளலாம்.
9. வெளி நாட்டு முதலீட்டாளர் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் முதலீட்டாளர் சட்ட ரீதியாக கம்பெனிபொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்காமல் சவுதியை விட்டு வெளியேறும் பட்சத்தில் தங்களுடைய வேலையை இன்னொரு கம்பெனிக்கு மாற்றிக்கொள்ளவோ அல்லது தாய்நாடு திரும்பவோ அனுமதிக்கப்படுவர்.
10. சலுகை காலத்தில் அமலில் உள்ள விதிகளை பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர், அதிக விவரங்களுக்கு தொழிலாளர்மற்றும் உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தை(web site) பார்க்கவும். இது சம்பந்தமான விதிமுறைகளை வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் இருந்தும் பெற்று கொள்ளலாம்.
சகோதரர்களே! இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபியா மன்னருமான அப்துல்லாஹ் அவர்கள் வழங்கி உள்ள இந்தச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
எச்சரிக்கை சகோதரர்களே....
சலுகை காலத்திற்குப் பின் கெடுபிடிகள் கடுமையாக இருப்பதுடன், கடுமையான தண்டனையும் 2 ஆண்டு சிறைவாசம் 1 லட்சம் ரியால் வரை அபராமும் விதிக்கப்படும்.
இந்த விபரங்கள் எதுவும் தெரியாமல் கிராம பகுதிகளில் வாழும் நம் சகோதரர்களை நினைக்கும் போது நெஞ்சு கணக்கிறது....
மகாத்மா காந்தி சொன்னார் இந்தியா, கிராமங்களில் உள்ளதென்று அதுபோல் சவூதி அரேபியாவில் அதிகமான இந்தியர்கள் கிராமங்களில் பணியாற்றுகிறார்கள். சகோதரர்களே உங்களால் முடிந்தவரை நம் தேசத்தவர்கள் அனைவருக்கும் இந்த தகவலை எடுத்துச் செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவான்.
மேலும் ஆலோசனைகளுக்கு சவூதியில் உள்ள அணைத்து மண்டல தமுமுக நிர்வாகிகள் எப்பொழுதும் தயாராக உள்ளோம் From: TMMK AL-KHOBAR KSA
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~