அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் 

தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு




புதுச்சேரி மாநிலம் புதுச்சேரியில் தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக இன்று 29-09-2013 அர்ப்பணிக்கப்பட்டது.



கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற விழா மற்றும் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தில் தமுமுக மாநில தலைவர் அண்ணன் மவ்லவி ரிஃபாயி அவர்கள் கலந்துகொண்டு அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

ம.ம.க அமைப்புச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். இதில் புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகள்,காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள்கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



இன்று தமுமுக வரலாற்றில் ஒரு உன்னதமான நாள்!
மத்திய அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு முன்னோடியாக விளங்கும் நம் சமுதாய பேரியக்கத்தின் 108 ஆவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்ட தினம்!
இறைவா உனக்கே புகழ் அனைத்தும்!
நம் இயக்கத்தின் இத்தகைய வளர்ச்சிக்கு உழைத்த நம்மோடு இருக்கும் மற்றும் நம்மைவிட்டு பிரிந்த அனைத்து சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!


நம் சமுதாய பேரியக்கம் மேலும் வளர்ச்சியடைய ஏக இறைவன் நல்லருள் புரிவானாக!  

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே....

 Inline image 5
-- 

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 

எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
____________________________________________

________________________
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info
___________________________________________________________________

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
___________________________________________________________________

உள்துறை அமைச்சரின் அறிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் - தமுமுக

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உள்துறை அமைச்சரின் அறிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் - தமுமுக



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

நாடு முழுவதும் அப்பாவி சிறுபான்மையினர் தவறுதலாக சிறையில் அடைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில முதல்வர்கள் எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் இக்கருத்தை தமுமுக முழுமையாக வரவேற்கிறது. மேலும் பல்வேறு தருணங்களில் இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருவதாக தனக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருவதாக குறிப்பிட்டுள்ள ஷிண்டே, இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பொய் வழக்குகளில் சிறுபான்மையினர் கைது செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறுதலாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதோடு அவர்கள் மறுவாழ்வுக்கும் மாநில அரசுகள் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் ஷிண்டே தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சரின் இக்கடிதத்தை அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்றுவதோடு, மத்திய அரசும் மாநிலங்கள் இவ்விஷயத்தில் முறையாக நடந்துகொள்கிறதா என கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என தமுமுக கேட்டுக் கொள்கிறது.

திங்கள், 23 செப்டம்பர், 2013

த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல 49 வது செயற்குழு

ஏகஇறைவனின் திருப்பெயரால்..அஸ்ஸலாமு அலைக்கும்..

த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல 49 வது செயற்குழு


த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல 49 வது செயற்குழு 20-09-2013வெள்ளிக்கிழமை தம்மாம் ரோஸ் ரெஸ்டாரண்ட்டில் நடைபெற்றது.


தமிழக ம.ம.க. துணைத்தலைவர் பொறியாளர் சபியுல்லாஹ் கான் அவர்கள் தலைமையில் கூட்டம் சரியாக காலை 10 :20 மணி அளவில் தொடங்கியது. அல்-கோபார் கிளை நிர்வாகி சகோ. காஜா பஷீர் அவர்கள் வரேவேற்புரை நிகழ்த்திகூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

அடுத்து தலைமை உரை நிகழ்த்திய பொறியாளர் சபியுல்லாஹ் கான் அவர்கள் தனது உரையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக உலகளாவிய சதிகளையும், இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் நம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துள்ள வன்முறைகளையும் நாம் நமது நடவடிக்கைகளை எவ்வாறு அமைத்து கொள்ளவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்கள்.


அதைத் தொடர்ந்து மண்டலப் பொருளாளர் அதிரை நஸ்ருத்தீன் சாலிஹ் அவர்கள் கடந்த செயற்குழுவிலிருந்து இன்றுவரை உள்ள வரவு செலவுகள், பித்ரா, ஜகாத், சதகா வரவு செலவுகள் அறிக்கையை வாசித்தார். மேலும் நாம் நம்எதிரிகளை வீழ்த்தவும், நம் சமூகத்தை மேம்படுத்தவும் நிதி அவசியமாகின்றது எனவும், தமிழகத்தில் நமது சகோதரர்கள தங்கள் உடல் உழைப்பை தருகின்றனர் நாம் பொருளாதார உதவிகள் மூலம் சமூகத்தை மேம்படுத்தவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.


தொடர்ந்து கிளைவாரியான அறிக்கைகளை கடந்த செயற்குழுவிலிருந்து இன்றுவரை கிளைகளில் நடந்த செயல்பாடுகளை வாசிக்க அந்த அந்த கிளை பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். அதை மண்டலச் செயலாளர்சகோ. இம்தியாஸ் அவர்கள் வழிநடத்தினார். அவற்றில் உள்ள நிறைகளையும் தமது ஆலோசனைகளையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மண்டலத் தலைவர் பொறியாளர் அப்துல் காதர் அவர்கள் கடந்த ரமளானில் பித்ரா, ஜகாத், சதகா ஆகியவற்றை வசூலிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துகொண்டார், மேலும் நமது பணிகளில் முக்கியமான பணியாகிய இரத்த தான முகாம்களை தொய்வின்றி நடத்த வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.


இத்துடன் முதல் அமர்வு ஜும்ஆ தொழுகைக்காகவும் உணவு இடைவேளைக்காகவும் முடித்து கொள்ளப்பட்டது.

ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் தொடங்கிய இரண்டாம் அமர்வில் நமது மண்டலத்தின் அணிகளின் பொறுப்பாளர்கள் தங்களது அணியின் செயல்பாடுகளை எடுத்துரைக்க அழைக்கப்பட்டனர் அதில் நமது கிழக்கு மண்டல உறுப்பினர்கள் எண்ணிக்கையையும், அதை இன்னும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும், காலாவதியான உறுப்பினர் அட்டைகளைபுதுப்பிக்க வேண்டியும் உறுப்பினர் அட்டை பொறுப்பாளர் சகோ. அப்துல் குத்தூஸ் அவர்கள் கேட்டுகொண்டார்.

தொடர்ந்து வர்த்தகர் அணிசார்பாக அதன் பொறுப்பாளர் பொறியாளர் இபுராஹிம் ஷா அவர்கள் கடந்த ரமளானில் நமது இயக்கத்தின் நிதி ஆதாரமாக இருக்கக் கூடிய சதக்காவை அதிகம் பெற உழைத்த அனைவருக்கும் நன்றியையும்,தொடர்ந்து அந்த சகோதர்களுடன் தொடர்பை வைத்துகொண்டு வரும் காலங்களில் நாம் அவர்களிடம் இருந்து நிதிகளை பெறவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

தொடர்ந்து மருத்துவ அணி பொறுப்பாளர் சகோ. யூனுஸ் அவர்கள் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நாம் மருத்துவ முகாம்களையும், இரத்த தான முகாம்களையும் சிறப்பாக நடத்த முயற்ச்சிகளை முன்னெடுக்கவேண்டும் என கேட்டுகொண்டார்.

தொடர்ந்து விவகாரங்கள் அணி பொறுப்பாளர் சகோ. சீனி முஹம்மது அவர்கள் மண்டலம் சார்பாகவும், கிளைகள் சார்பாக தாங்கள் செய்த பொது விவகாரங்கள் பற்றி எடுத்துரைத்தார் குறிப்பாக சவுதி அரேபிய அரசின் புதிய சட்டமான நிதாகத் மூலம் பாதிக்கப்பட்டு அநாதரவாக தம்மாம் பார்க்கில் தஞ்சம் அடைந்த நமது சகோதர்களுக்கு தேவையான உணவுகளை சுமார் இரண்டு மாத காலத்திற்கு அல்-கோபார் கிளை சகோதர்களின் உதவியுடன் வழங்கிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார்.

பின்னர் தாயகத்திலிருந்து அலைபேசியில் பேசிய மாநில பேச்சாளர் சகோ. கோவை சையது அவர்கள் உரைநிகழ்த்தினார். அதில் தாயகத்தை விட்டு அயல்நாட்டிற்கு வந்தாலும், நமது தாயகத்தில் வாழும் நம் சமூகத்தின் நலனில் அக்கறை கொள்ளும் தங்களிடம் பேசும்போது நாம் இன்னும் வீரியத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக நமது எதிரிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர் இதை முறியடிக்கும் விதமாக நமது இயக்கத்தின் செயல்பாடுகளை நடத்தி கொண்டு வருகின்றோம். முஸாபர் நகர் கலவரத்தில் சிறுவர்கள் உட்பட 50 பேர் வரை இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் இதை பார்க்கும்போது சிறுபான்மையினருக்கு இந்த நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது நமக்கு விழிப்புணர்வு அவசியமாகின்றது அதனால் நம்மால் இயன்ற அளவு போலீஸ் துறை, நீதி துறைகளில் நமது பங்களிப்பை நாம் செலுத்தவேண்டும், நம் வளர்ச்சியை கண்டு அஞ்சும் அரசும், அரசியல் வாதிகளும் நம்மை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர், அதையும் தாண்டி நாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம், மேலும் மார்க்க ரீதியில் தொய்வுடன் உள்ளவர்களை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மூலம் மீட்டு கொண்டிருக்கின்றோம். களப்பணியாற்றும்நமக்கு அல்லாஹ்வின் சோதனையாக தமது பெயரையும், புகழையும், பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் ஏற்படுகின்றது இதுபோன்ற சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே எதிபார்த்து நமது செயல்பாடுகளை அமைத்து கொள்ளவேண்டும் எனவும், மார்க்கம் அனுமதிக்காத எந்த செயலும் பயனளிக்காது என்பதையும் மனிதில் வைக்கவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து கிளை பொறுப்பாளர்கள் தங்கள் செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும், கிளைத் தலைவர் எவ்வாறு தமது பொறுப்பை மேற்கொள்வது என்பது பற்றியும் மண்டல ம.ம.க. செயலாளர் சகோ. அப்துல்அலீம் அவர்கள் நிர்வாக பயிற்சி வகுப்பை பவர் பாயின்ட் மூலம் நடத்தினார்.

மேலும் விவகாரங்கள் அணி பொறுப்பாளர் பொறியாளர் காயல் இஸ்மாயில் அவர்கள் தாங்கள் செய்த பொதுவிவகாரங்களில் முக்கியமான நிதாகாத்தின் தற்போதைய நிலையை பற்றி எடுத்துரைத்தார் அதில் சுமார் 25,000,00 (இருபத்தி ஐந்து இலட்சம்) இந்தியர்கள் பணிசெய்யும் சவுதியில் இதுவரை இச்சட்டத்தின் மூலம் நமது பங்களிப்பாக தகவல் பரப்புரையும், கள உதவிகளும், அரசு அலுவலகங்களிலும், இந்திய தூதரகத்தின் பிரதிநிதிகளாக பதிவு செய்துகொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தது, மற்றும் இச்சட்டத்தின் மூலம் பாதித்த மக்களுக்கு நிதி மற்றும் உணவு வழங்கியதையும் இந்த சீரிய பணியை செய்ய நாம் இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டதனாலேயே செய்ய முடிந்தது எனவும் அதற்கு வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினார்.

தொடர்ந்து சபையோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது சந்தேகங்களுக்கு பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்களும் பொறியாளர் அப்துல் காதர் அவர்களும் தெளிவான விளக்கத்தை வழங்கினார். 


தர்பிய்யா பொறுப்பாளர் பொறியாளர் ஜக்கரியா அவர்கள் சீரிய அறிவுரைகளை வழங்கினார் அதில் அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்திருப்பதன் நோக்கம் நம்மீது அவன் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே ஆகும். அல்லாஹ்வின்பாதையில் செயல்படக் கூடிய இந்த இயக்கத்தின் மூலம் இந்த பணியை செய்ய அல்லாஹ் பணித்திருக்கின்றான். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே இந்த பணிகளை நாம் செய்கின்றோம். இன்னும் உத்வேகத்துடன்செயல்பட நமக்கு அல்லாஹ் அருள் பாலிக்கவேண்டும் எனவும், வெற்றி தோல்விகளை வழங்குபவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என நாம் முழு நம்பிக்கையும் வைத்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

இறுதியாக த.மு.மு.க. மண்டலத் தலைவர் பொறியாளர் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறினார் மேலும் இந்த செயற்குழுவை சிறப்புடன் நடத்த இடம் மற்றும் உணவு உபசரிப்பு வழங்கிய தம்மாம் மற்றும் அல்-கோபார் கிளையினருக்கு மண்டலம் சார்பாக நன்றி கூற துஆவுடன் கூட்டம் அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் இனிதே நிறைவுற்றது. 

எல்லாப் புகழும் வல்ல நாயனுக்கே.

செய்திதொகுப்பு:அப்துல் குத்தூஸ்



رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
____________________________________________

வியாழன், 19 செப்டம்பர், 2013

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மேதகு தமிழக ஆளுநரை அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மேதகு தமிழக ஆளுநரை அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக பின்வரும் கோரிக்கை மனு தமிழக ஆளுநர் வாயிலாக குடியரசு தலைவருக்கு இன்று அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவின் சுருக்கம்:

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற போலி மோதல் சாவுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் துணைத் தலைவர் வன்ஜாரா கடந்த செப்டம்பர் 1 அன்று குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும் உள்துறைச் செயலாளருக்கு பத்து பக்கத்தில் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய மோதல் சாவுகள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்த உண்மைகளும், கருத்துகளும், ஒப்புதல் வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளன.

குஜராத்தில் நடைபெற்ற மோதல் சாவுகளும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குற்றங்களும் மோடி தலைமையிலான மாநில அரசு பின்பற்றி வந்த தெளிவான கொள்கையின் காரணமாக நடைமுறைப்படுத்தியவை என்று வன்ஜாரா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தானும் குஜராத்மாநிலத்தின் இதர காவல்துறை அதிகாரிகளும் மோடியின் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தவே பயன்படுத்தபட்டதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2002 முதல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வந்த இனஅழிவு தொடங்கி அனைத்து முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் மோடி தலைமையிலான அரசின் திட்டமிட்ட செயல்பாட்டின் அடிப்படையில் நடந்தவை என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவர்கள் சொன்ன கருத்துகளை வன்ஜாராவின் இந்த கடிதம் மெய்ப்பித்துள்ளன.
சமீபத்தில் ஒரு ஊடகவியாளர் வெளியிட்டுள்ள வீடியோ மோதல் சாவுகளில் ஈடுபட்ட அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வினரை காப்பாற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை அம்பலப்படுத்தியுள்ளதுடன் வன்ஜாராவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் மெய்ப்படுத்தியுள்ளது.

குஜராத்தில் நடைபெற்ற மோதல் சாவுகள் உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கைதுச் செய்யப்பட்டுள்ள 32 காவல்துறை அதிகாரிகளின் பங்கு இரண்டாம் பட்சமானது தான். இவர்களை இயக்கியதுடன் அரசியல் சாசன மாண்புகளை அம்மாநிலத்தில் சிதைத்தது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசியல் பிரமுகர்கள் தான்.

இச்சூழலில் மேதகு குடியரசு தலைவர் அவர்கள் தலையிட்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது உரிய நடவடிக்கை எடுத்து குஜராத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க ஆவணச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரர் ஜே.எஸ்.ரிபாயி, தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் பேராசிரியர எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மமக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத், தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். ஹனிபா ஆகியோர் மேதகு தமிழக ஆளுநரை அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.






 T M M K  AL-KHOBAR. K.S.A  I  visit : www.tmmk.info

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!

திங்கள், 16 செப்டம்பர், 2013

இந்தியாவிற்கு மோ(ச)டி தேவையா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


இந்தியாவிற்கு மோ(ச)டி தேவையா?



மோடிதான் பாஜகவின் பிரதம வேட்பாளர் என்ற அறிவிப்பு நாடெங்கிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது!

பலர் மகிழ்ச்சியடைகிறார்கள்! பலர் கவலைப்படுகிறார்கள்! பலர் பதறுகிறார்கள்! நாடெங்கிலும் வெவ்வேறு விதமான உணர்வுகள் பிரதிபலிக்கிறது என்பது உண்மை!

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு! வெறித்தனம் கொண்டவர்களை இந்தியர்கள் அங்கீகரிப்பதில்லை!

அரசியல் தெளிவுள்ளவர்கள் நிதானமாகவே இருக்கிறார்கள். காரணம் பாஜக நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதில்லை! 200 இடங்களை நெருங்குவதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்!

அந்த 200 இடங்களை ஒருவேளை நெருங்கினாலும், அத்வானி ஆதரவு எம்.பி.க்கள் கலகம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. ம.பி.யின் பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான், அத்வானியின் ஆதரவாளர். அவர்தான் அதிகமாக எம்.பி.க்களை பாஜகவுக்கு வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்போது பிராந்தியக் கட்சிகளில் மராட்டியத்தில் சிவசேனாவை மட்டுமே பாஜக நம்பியுள்ளது.

மோடி பிரதமர் வேட்பாளர் என்றதும் ஜெயலலிதாவே சற்று அச்சத்தில்தான் இருக்கிறார். அதனால்தான் சோஅவரை அவசரமாக சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

மோடிக்கு ஆதரவாக சில ஊடகங்கள்தான் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. நன்றிவிசுவாசம் அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது போல? (பணம் பத்தும் செய்யும்).

ஒரு விளக்கு அணைவதற்கு முன்பு வேகமாக எரியும்! அதன் ஒளி வடிவம் ஆகும்! பிறகு அணைந்து விடும்! மோ(ச)டி வித்தைகளின் இறுதி நிலை அப்படித்தான் ஆகும் என்பதை விரைவில் நடக்கவிருக்கும் 5 வடமாநில தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!

அதேநேரம் காங்கிரஸ் கட்சி தனது தூக்கத்தைக் கலைத்து வெளிவர வேண்டும்! 81 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது, நாட்டின் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களுக்கு 5 மடங்கு நட்டஈடு வழங்குவது, சாலையோர வியாபாரிகளின் வாழ்வுரிமையைக் காத்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வழங்கியது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தது போன்ற நல்ல சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல பிரச்சாரக் குழுக்களை அமைத்து செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது!

குறிப்பாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவும், பிரியங்கா காந்தியை பிரச்சாரக்குழு தலைவராகவும் முன்னிறுத்தினால் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புற மக்களும் காங்கிரஸை நோக்கி திரள்வார்கள்!

மோடிக்கு நகர்ப்புற மக்களுக்கு மத்தியில்தான் பரபரப்பு இருக்கிறது. ஆனால் நேரு குடும்பத்திற்குத்தான் கிராமப்புறங்களிலும் செல்வாக்கு இருக்கிறது.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்திலும், ஈழத்தமிழர்களுக்கான துரோகம் விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதன் வெற்றி பிரகாசமாகும்!

இன்னும் காலமிருக்கிறது! மோ(ச)டியை முனை மழுங்கச் செய்யும் மாநில கட்சிகளுடனான உறவை அக்கட்சி வலுப்படுத்திக் கொள்வதும் நலம் பயக்கும்!
அதேசமயம், சிறுபான்மையினரும், நலிந்த பிரிவு மக்களும் மோ(ச)டியைக் கண்டு பதறத் தேவையில்லை.

இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் உணர்வோடும், சகோதரத்துவத்தோடும் நம்மோடுதான் உள்ளார்கள்!

மோ(ச)டி அலை வீசவில்லை! வீசுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது!
ராஜபக்ஷே சந்திக்கும் அதே நெருக்கடிகளை மோ(ச)டியும் சந்திக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

அவரை முன்னிறுத்துவது அரசியல் பேரழிவு என அத்வானியே கூறியுள்ளார்! அது யாருடைய அரசியல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

எனவே சமூக ஊடகங்களில் பணியாற்றும் மத நல்லிணக்க மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் குஜராத்தின் கிராமப்புற நிலை குறித்தும், அங்கு மோடியின் தவறான நிர்வாகக் குறைகள் குறித்து புள்ளி விபரங்களைக் கணக்கெடுத்து, ஒப்பீட்டளவில் மோடி, பீஹாரின் நிதிஷ்குமாரின் சாதனைகளை விட பின்தங்கியுள்ள உண்மைகளை அம்பலப்படுத்திட வேண்டும்!

மாறாக, தனிநபர் விமர்சனம் மூலம் மோடிக்கு அனுதாபத்தையோ, விளம்பரத்தையோ ஏற்படுத்திக் கொடுத்திடக் கூடாது!

காரணம் மோடி அதைத்தான் விரும்புகிறார்.

________________________
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!

சனி, 14 செப்டம்பர், 2013

மண்டிய இருள்கிழிக்கும் மாற்று அரசியலுக்கான மாபெரும் புரட்சியான "மனிதநேய மக்கள் கட்சி" நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது மமக! பிப்ரவரி 8ல் திருச்சியைத் திணறடிக்கும் வகையில் மாநில மாநாடு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


மண்டிய இருள்கிழிக்கும் மாற்று அரசியலுக்கான மாபெரும் புரட்சியான "மனிதநேய மக்கள் கட்சி" நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது மமக! பிப்ரவரி 8ல் திருச்சியைத் திணறடிக்கும் வகையில் மாநில மாநாடு!


தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக வளர்ந்து வரும் மமகஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வருகிறது.

ஏற்கனவே செம்மைப்படுத்தப்பட்டுள்ள கிளை அமைப்புகளை வலுப்படுத்தும் வகை யிலும்தொண்டர்களை களப் பணிக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அடுத்த மாதங்களுக்கான செயல் திட்டங்கள் கடந்த 4.9.2013 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கட்சியின் சார்பில் அதிகமான பொதுக் கூட்டங்கள்போராட்டங்கள் வழக்கத்தை விட அதிகமாக முன்னெடுக்கப்பட உள்ளது.

கட்சிக்கு சாதகமான பாராளுமன்றத் தொகுதியைக் கண்டறியும் வகையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் பணிக்குழு ஒன்றும் அமைக்கப்படும்.

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகை யிலும்அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மக்கள் பிரச்சனைகளை வழமையை விட அதிகமாக கையிலெடுப்பது என்றும் அக்டோபர் முதல் 10 வரை தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒன்றிய வாரியாக மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராட்டங்கள் நடத்துவது என்றும்,

தமிழகமெங்கும் நடைபெற்று வரும் மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையிலும்சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் நவம்பர் முதல் 15 வரை பரப்புரை ஒன்றை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நிதிநிலை மோசமான நிலையில் இருப்பதால்அடுத்தாண்டு ஜனவரி முதல் 15 வரை தேர்தல் நிதி வசூலிப்பது என்றும்வீடு வீடாகவீதி வீதியாக தொண்டர்களைக் களமிறக்குவது என்றும்,

கட்சியின் எழுச்சியை வெளிக்காட்டும் வகையில் பிப்ரவரி அன்று திருச்சி யில் பிரம்மாண்டமான மாநில மாநாட்டை நடத் துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர உறுப்பினர் சேர்ப்புநிர்வாக சீரமைப்புகட்சிக் கொடி ஏற்றுதல் என இதனைச் சார்ந்த பணிகளும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

தலைமை நிர்வாகக்குழுவின் முடிவுகள் கட்சித் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. பரப்புரை மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான அடிப்படைப் பணிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மாவட்டப் பொதுக்குழுக்கள் கூட உள்ளதால் இனிவரும் நாட்கள் அரசியல் அரங்கில் மமகவை தனித்த முக்கியத்துவத்தோடு கவனிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை!
நாங்கள் நுழையாத வரை அது வெற்றிடம்!

நாங்கள் நுழைந்துவிட்டால் அதுவே வெற்றி இடம்!!

இன்ஷா அல்லாஹ் இந்தியாவே திரும்பி பார்க்கும் திருச்சியை...... 

பிரதமர் கணவு கான்பவனுக்கு அது மிக்கபெரிய சவாலாக அமையும்...

இன்ஷா அல்லாஹ் இந்த மாநாட்டில் பங்கெடுக்க தாயகம் வர இன்றே 

தயாராகிவிட்டோம்... சமுதாயமே சந்திப்போம் திருச்சியில்...



சனி, 7 செப்டம்பர், 2013

திருச்சியில் 13 வயது பள்ளி மாணவியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க கோரியும்... குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும்... தமுமுக ஆர்ப்பாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

திருச்சியில் 13 வயது பள்ளி மாணவியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க கோரியும்... குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும்... தமுமுக ஆர்ப்பாட்டம்




தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக இன்று செப்டம்பர் 7 ம்தேதி சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் திருச்சியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க கோரியும்... குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும்... 

சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்கை விரைந்து முடிக்க கோரியும்... மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையிலும்,மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்ஷா,பைஸ் அஹமது,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது மற்றும் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக மாநில் பொதுச்செயலாளர் காஞ்சி.அப்துல் சமது மற்றும் மதுரை மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் நஜ்மா பேகம் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் பெருந்திரளாக பெண்களும்,அண்களும் கலந்து கொண்டார்கள்.












::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
காவல்துறையைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

சென்னையில் தமுமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



திருச்சியில் 13 வயது மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைதுசெய்யாமல் மெத்தனம் காட்டிவரும் காவல்துறையை கண்டித்து சென்னையிலும்திருச்சியிலும் இன்று தமுமுக பெரியளவில் கண்டன போராட்டத்தை நடத்தியது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாநில பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ்ம.ம.க இணை பொதுச்செயலாளர் ஹாரூண் ரஷீதுதமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனிமாநில பேச்சாளர் தைமிய்யா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தனிர். இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்