அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
Welcome
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
செவ்வாய், 26 நவம்பர், 2013
வெள்ளி, 22 நவம்பர், 2013
இஸ்லாம் இசைக்கு எதிரானதா? :::: உளூச் செய்து கொள்கிறோம். பள்ளியில் அமர்வதற்கு முன்பாக தஹிய்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமர்கிறோம். மேற் கூறப்பட்டக்கடமைகள மறக்காமல் செய்து விடுகிறோம் அதேபோன்று பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பாக நமது செல்போனை சைலன்ட் செய்து கொள்வதையும் கடமையாக ஆக்கிக் கொள்ளலாமே. பெரும்பாலான நம்மவர்கள் அதைச்செய்வதில்லை::::.
அஸ்ஸலாமுஅலைகும் ...
இஸ்லாம் இசைக்கு எதிரானதா?
நபி (ஸல்) கூறினார்கள்: என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தையும், பட்டாடைகளையும், மதுபானத்தையும், இசைக்கருவிகளையும் ஹலாலாகக் கருதுவார்கள். நூல் : புகாரி
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த (விலக்கப்பட்ட) விஷயங்கள் இன்று சமுதாயத்தில் தாராளமாகப் புழங்கி வருகின்றன.
1. விபச்சாரம் செய்வது
2. பட்டாடை அணிவது
3. மது அருந்துவது
4. இசைக் கருவிகளைக் கொண்டு இசைப்பது.
மேற்கூறப்பட்ட நான்கு வகை விலக்கப் பட்டவைகளில்
1. விபச்சாரம் செய்வது
2. பட்டாடை அணிவது
மது அருந்துவது, போன்றவைகள் பள்ளி வாசலுக்கு வெளியில் நடப்பவைகளாகும்.
இசைக்கருவிகளை கொண்டு இசைப்பது மட்டும் (செல்போன் மூலம்) பள்ளிவாசல்களுக்குள்ளேயே அதுவும் நம்மவர்களால் நடந்து கொண்டிருக்கின்றது. நாமாக விரும்பி அவைகளை இசைப்பதில்லையே நமது பாக்கெட்டிற்குள் போட்டு விடுகிறோம் அவைகள் தாமாக இசைக்கத் தொடங்கி விடுகின்றன. என நினைக்கலாம். பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு நமக்கு சில தவிர்க்க முடியாத கடமைகள் உள்ளன
உளூச் செய்து கொள்கிறோம். பள்ளியில் அமர்வதற்கு முன்பாக தஹிய்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமர்கிறோம்.
மேற் கூறப்பட்டக்கடமைகள மறக்காமல் செய்து விடுகிறோம் அதேபோன்று பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பாக நமது செல்போனை சைலன்ட் செய்து கொள்வதையும் கடமையாக ஆக்கிக் கொள்ளலாமே. பெரும்பாலான நம்மவர்கள் அதைச்செய்வதில்லை.
ஒவ்வொரு பள்ளிவாசல்களின் வாயில்களில் அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்ட செல்போனை அமர்த்தி விடும் படியான கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் பள்ளிவாயில்களின் வாசல் கதவுகளை நிறைத்துக் கானப்படுகின்றன. ஆனாலும் பலருக்கு அவைகள் ஒரு அறிவிப்பாகவே காணப்படுவதில்லை. அவைகளை ஒருப் பொருட்டாகவும் கருதுவதில்லை.
பள்ளிக்குள் உள்ளங்களை உருக வைக்கும் அல்லாஹ்வின் திருமறை வசனங்கள் தொழுகையில் இமாமால் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவைகள் தொழுகையாளிகளால் ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருக்கும்போது பாக்கெட்டிற்குள் போட்டு வைத்திருந்த செல்போன்கள் இசைக்கத் தொடங்கி விடுகின்றன. இசைக்காமல் சாதாரண மணி ஓசையாக இருந்தால் கூட ஓரளவு சகித்துக் கொள்ளலாம். அதுவும் புதிதாக ரிலீசாகிய ஹிட் படத்தின் ஹிட் பாடலை இசைக்கத் தொடங்கி விடும்.
அல்லாஹ்வின் திருமறை வசனத்தை ஆழ்ந்து செவி மடுப்பதா? ஹிட் படத்தின் ஹிட் பாடலின் இசையை செவி மடுப்பதா? புதுப்புது ராகங்களில்; அழைப்பொலிகளை செல்போனில் பதிந்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். இது அவர்களுக்கு ( நம்மவர் அல்லாதவர்களுக்கு ) அனுமதிக்கப் பட்டிருக்கின்ன. கூர்மையாக சிந்திக்கக் கூடிய புத்தியை முனை மழுங்கச் செய்யும் இசையை தெய்வீக ராகம் என்பார்கள்.
இசை நமக்கு அனுமதிக்கப் பட்டிருக்கின்றதா? கண்டிப்பாக இல்லை இசைக்கருவிகளை உடைத்தெறியப் படுவதற்காக நான் அனுப்பப் பட்டுள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் சிந்தித்துப் பார்க்கப் கடமைப் பட்டுள்ளோம்.
இன்று அவர்களின் தொழில் உற்பத்தி நிருவனங்களில் தயாரிக்கப்படும் மார்க்கம் விலக்கப்பட்ட அனைத்து தயாரிப்புகளையும் விற்றுக் காசாக்கவும் அதன் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ளவும் நமது இஸ்லாமிய நாட்டுச் சந்தைகளைத் தான் அதிகமதிகம் தேர்வு செய்கிறார்கள் .
இன்று இஸ்லாமிய பெயர் கூறப் படாத பல நாடுகளில் இதை நாம் கண்கூடாக கண்டு வரவும் செய்கின்றோம். (ஏன் பெயர் கூறப்பட வில்லை என்றால் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் பரவலாக இவைகள் அனுமதிக்கப்பட்டு அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப் படுவதால் நாம் குறிப்பிட்டு எந்த ஒரு நாட்டையும் கூற விரும்ப வில்லை)
இதனாலேயே அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கூறப்பட்ட ஹராமானவைகளை என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தையும், பட்டாடைகளையும், மதுபானத்தையும், இசைக்கருவிகளையும் ஹலாலாகக் கருதுவார்கள். நூல் புகாரி என முன்னறிவிப்புச் செய்தார்கள்.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரவர்களும் அழுத்தம் திருத்தமாகப் பல நிலைகளில் எடுத்துக் கூறித் தடைசெய்த அனைத்தும் இஸ்லாமிய நாட்டுச் சந்தைகளில் மலிவு விலைகளில் கிடைக்கப் படுவதைக் கண்டு மனம் வெதும்பி வருகிறோம்.
இதில் கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம் யாதெனில் இஸ்லாமிய நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப்படும் விலக்கக்ப்ட்டவைகளை நமது அப்பாவி முஸ்லிம்கள் பலர் அவைகள் யாவும் மார்க்கம் அங்கீகாரம் அளித்திருப்பது போன்று நினைக்கத் தொடங்கி விடுகின்றனர்.
அவைகளை தாங்கள் உபயோகிக்கவும் செய்யத் தொடங்கி விடுகின்றனர் அல்லாஹ்வின் அடியார்களே! எந்தச் சமுதாயத்திற்கும் வழங்காத பல உயர்ந்த அந்தஸ்த்துகளை நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அல்லாஹ் தனது இறுதி நபியன் மூலம் வழங்கி முஸ்லீம் சமுதாயத்தை பல நிலைகளில் கவுரவித்திருக்கின்றான்
அதில் ஒன்று தான் தனது நபியிடம்
வஹியின் மூலம் நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையும், தேர்ந்(தெடுத்)து
( உங்களுக்கு அருட் செய்து அங்கீகரித்துக் ) கொண்டேன். அல்குர்ஆன் 5:3
மக்கள் பெருந்திரளாக திரண்டிருந்த இறுதி ஹஜ்ஜின் பேருரையின் போது அல்லாஹ் இந்த வஹியை இறக்கி அருளி அங்குக் குழுமி இருந்த அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முழுமைப்பெற்ற மார்க்கம் தான் இஸ்லாம் என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்கக் கடமைப்டுள்ளோம். முழுமைப் பெற்ற மார்க்கத்தில் நம்மை முழுமையாக நுழைத்துக் கொண்டோமா ? என்கிற விஷயத்தை நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே சுயப்பரிசோதனை செய்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம்.
நாம் நமது மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளாமல் இருந்து வருகிறோம் என்பதை நம்மை விட அவர்கள் அதிகம் தெரிந்து கொண்டதால் அவர்களின் தொழிற்சாலைகளில் உருவாக்கும் தடுக்கப்பட்ட தயாரிப்புகளை நமது இஸ்லாமிய நாடுகளின் சந்தையை மிக அழகாக தேர்வு செய்து கொண்டார்கள்.
அன்புள்ள சகோதரர்களே! செல்போனை சைலன்ட் செய்து கொள்வதற்காக எழுதப்பட்டக் கடிதம் நீண்டு விட்டது. ஆனாலும் மேற்கூறப்பட்ட ஹதீஸின் தலைப்போடு விளக்கங்கள் ஒத்து வருவதால் கட்டுரையை செல்போன்
விஷயத்திற்காக மட்டுமல்லாமல் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தடைசெய்த விபச்சாரம் செய்வது 2.பட்டாடை அணிவது 3.மது அருந்துவது 4.இசைக் கருவிகளைக் கொண்டு இசைப்பது . போன்ற அனைத்திற்குமாகப் பயன் படுத்திக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஆகவே பயான்களின் அமர்வுகளில் இருக்கும்போதும், பள்ளிவாசல்களில் வணக்கங்களில் இருக்கும்போதும் உங்கள் செல்போனை சைலன்ட் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் வணக்கத்திற்கும் பிறருடைய வணக்கத்திற்கும் இடையூறு அளிக்காமல் இருக்கும். மேலும் உங்கள் செல்போன் அழைப்பில் இசையை தவிர்த்துக் கொள்ளுங்கள், சாதாரண டெலிபோன் (பெல்) சத்தத்தை சேவ் செய்து கொள்ளுங்கள், வெறுக்கத்தக்க பல இசைகள் இன்று செல்போன்களில் பதியப்பட்டு வருவதால் இவைகள் மனதில் கடுமையான சஞ்சலத்தை உண்டு பன்னி வடுகிறது.
நிசப்தமான நிலையில் பள்ளியில் தொழுது கொண்டிருக்கும் போது இதன் ஓசை தொழுகையாளிகளுக்கு மன சஞ்சலத்தையும், மன உலைச்சலையும் உண்டு பன்னி விடுகின்றது பள்ளிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே அதை ஒரு கடமையாகவே நினைத்துக் கொண்டு சைலன்ட் செய்து விடுங்கள். உங்களால் இயன்றவரை ஷைத்தானின் நுழைவு வாயில்களை தடுத்துக் கொள்ளுங்கள்..
Thanks: FBஉங்களின் தேடல்கள்

வியாழன், 21 நவம்பர், 2013
கல்லணை மக்கா பள்ளி வாசல் பொதுப்பணித்துறையால் ஆக்கிரமிப்பு என்று இடிக்க முற்சித்தை தடுத்த மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் நன்றி தெரிவித்தார்கள்.
அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
கல்லணை மக்கா பள்ளி வாசல் பொதுப்பணித்துறையால் ஆக்கிரமிப்பு என்று இடிக்க முற்சித்தை தடுத்த மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் நன்றி தெரிவித்தார்கள்.
கல்லணை மக்கா பள்ளி வாசல் பொதுப்பணித்துறையால் ஆக்கிரமிப்பு என்று இடிக்க முற்சித்தை தடுத்த மனிதநேய மக்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் நன்றி தெரிவித்தார்கள்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட கல்லணையில் 112 ஆண்டுகால வரலாற்று சிறப்பு வாய்ந்த மக்கா பள்ளிவாசலை கல்லணையை கட்டிய கரிகால் சோழனுக்கு மணிமணடபம் கட்டுவதை காரணம் காட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பள்ளி வாசலை ஆக்கிரமிப்பு என கூறி இடிக்க முயற்சித்தார்கள்.
இதனிடையில் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும்,சட்ட மன்ற குழு தலைவருமான முனைவர்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம்24 ம் தேதி பள்ளி வாசலை பார்வையிட்டு பள்ளிவாசல் சம்மந்தமாக சட்ட மன்றத்தில் பேசுவதாக கூறினார்.
பதினான்காவது சட்ட மன்றப் பேரவையின் ஏழாவது கூட்டத்தொடரின் போது இரமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும்,ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்களும் கல்லணை மக்கா பள்ளிவாசலை இடிக்க முற்சிப்பதாக கவன ஈர்ப்பு தீர்மாணம் கொண்டுவந்தார்கள்.
இதற்கு பதிள் அளித்த அப்போததைய பொதுப்பணித்துறை அமைச்சர் இராமலிங்கம் அவர்கள் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான மணிமண்டபம் கட்டும் இடத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என்றும்,மக்கா மஸ்ஜித் என்னும் பள்ளிவாசலை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இவ்வரசு பாதுகாக்கும் என உறுதி அளித்தார்.
திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் போராட்டம் மற்றும் பேச்சு வார்த்தையாலும் மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ களின் சட்டமன்ற கவன ஈர்ப்பு விவாதத்தாலும் கல்லணை மக்கா பள்ளிவாசல் மீட்கப்பட்து (எல்லா புகழும் இறைவனுக்கே..!)
இதற்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உமா மாவட்ட செயலாளர்,மீரான் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் இமாம்கள் அப்துல் சலாம்,ஜாக்கீர்,லுத்புல்லா,சையது முஸ்தபா,அன்சாரி ஆகியோர்கள் பல்வேறு நிகழ்ச்சிக்காக திருச்சி வருகை தந்த ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் நன்றியினை தெரிவித்தார்கள்.
பள்ளியை மீட்க ஒத்துழைத்த அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் நன்றி....
ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் நமது சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்களிடம் இஸ்லாமியர்களுக்கான திருமண பதிவு சட்டம் பற்றியும், உலமாக்கலுக்கு பென்சன் தொகையை அரசு உயர்த்தி தர வேண்டுமென்றும் பல்வேறு சமுதாய விசயங்களையும் சட்ட மன்றத்திலும்,வக்பு வாரியத்திலும் பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிழ்வின் போது மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம்,மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது மற்றும் மாவட்ட துணைச்செயலாளர்கள் சிராஜ்,அப்துல் சமது,முபாரக் ஆகியோர்கள் உடனிருந்தார்கள்
இவண் :
ஃபெரோஸ் கான், தமுமுக & மமக
திருச்சி மாநகர் மாவட்ட மக்கள் தொடர்பாளர்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
T M M K AL-KHOBAR. K.S.A I visit : www.tmmk.info
சனி, 2 நவம்பர், 2013
முஹர்ரம் புனிதமான மாதங்களில் ஒன்று.. ((( முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு! )))
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
· முஹர்ரம் அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!
முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),
· முஹர்ரம் புனிதமான மாதங்களில் ஒன்றுஅல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.· புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:1) துல் கஃதா,2) துல் ஹிஜ்ஜா,3) முஹர்ரம்,4) ரஜப்எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை ’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப் பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என ்று விளங்க முடியும்.
- அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30) மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.
· முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்றார்கள் - யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் அவர்களுக்கு மாறு செய்வதற்காக எதிர்வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் 9 ஆம் நாளையும் சேர்த்து நோன்பு நோற்பேன் என்றார்கள்.· இதனால் முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.· ஆஷுரா நோன்பின் பின்னணிநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்ற நேரம் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு இது என்ன நோன்பு என வினவினார்கள். அதற்கு அவர்கள் இது நல்ல நாள், இந்த நாளில்தான் பனூ இஸ்ராயீல்களை அவர்களின் பகைவ (ஃபிர்அவ்) னிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்தான், அந்த நாளில் மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களைவிட மூஸா (அலை) அவர்களை (மதிப்பதற்கு) நான் தகுதியுடையவன் என்று கூறி அந்த (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பை நோற்றார்கள், அந்த நோன்பை நோற்பதற்கு (மக்களையும்) ஏவினார்கள். (ஆதாரம் : புகாரி)· ஆஷூரா நோன்பைப் பற்றியுள்ள ஹதீஸ்கள்:1. ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்.(அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)2. நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்று (மற்ற மக்களையும்) நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)3. ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)4. எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),ஆதாரம் : முஸ்லிம்)முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நபியவர்கள் எதற்காக நோன்பு நோற்றார்கள் என்பதையும் நோன்பைத்தவிர வேறு எந்த விஷேச வணக்கங்களையும் செய்யவில்லை என்பதை அறிவீர்கள். நபியவர்களை பின்பற்றும் நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். அதை விட வேறு எதையாவது செய்து விட்டு இதுவும் சுன்னத்து அல்லது வணக்கம் என்று சொன்னால் அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதர் மீதும் இட்டுக்கட்டுவதாகும். இதற்கு பித்அத் என்று சொல்லப்படும்.எந்த ஒரு வணக்கமும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு 2 நிபந்தனைகள் அவசியமாகும்.1. அல்லாஹ்வுக்காகவே மட்டும் என்ற எண்ணத்துடன் (இக்லாஸாக) செய்யவேண்டும்.2. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப் பிரகாரம் செய்யவேண்டும்.இந்த இரண்டில் ஒன்று இல்லையென்றால் அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக (மார்க்கமாக) ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),நூற்கள்: புகாரி, முஸ்லிம்)இன்று முஸ்லிம்களில் பலர் இந்த நாட்களில் பல தவறுகளைச் செய்கின்றார்கள். அதாவது குறிப்பிட்ட உணவுப் பண்டங்களை சமைப்பது, உடம்பில் காயமேற்படுத்திக்கொள்வது, மக்களை ஒன்று கூட்டி குறிப்பிட்ட சில வணக்கங்களை செய்வது, இன்னும் இது போன்ற எத்தனையோ செயல்களை செய்கின்றார்கள். இவைகள் அனைத்தும் பித்அத் என்னும் பாவமான செயலாகும். மேலே கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு மாற்றமானதுமாகும். இப்படிப்பட்ட வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளாதிருப்பது மட்டுமல்லாமல் நாளை மறுமையில் தண்டனையும் வழங்குவான். இவைகளை நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்று தெரிந்த பின்பும் நாம் செய்தால் அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றவாளிகளாக கருதப்படுவோம்.ஆகவே, முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில், நோன்பை மாத்திரம் விஷேச வணக்கமாக செய்யுங்கள். இதுதான் நபி வழியாகும்.அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழி நடந்த நன்மக்களாக வாழ்ந்து மரணிக்கச் செய்வானாக.கே.எல்.எம். இப்ராஹீம் மதனி - Rj Anñisa | முஸ்லிம் பெண்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)