அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 6 ஜூன், 2013

மாலேகான் குற்றப்பத்திரிகையில் இந்து பயங்கரவாதிகள் !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாலேகான் குற்றப்பத்திரிகையில் இந்து பயங்கரவாதிகள் !



 கடந்த வாரம் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு பேர் மீதும் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மகாராஷ்ட்ரா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் இந்த நான்கு மதவெறியர்களின் குண்டு வைப்புச் சதிச்செயல்களும் அவர்களின் தொடர்புகளும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் பிரக்யாசிங் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை.
2006-ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் சரியாக தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது ஒரு குண்டு. சிதறித் தெரித்த சில்லுகளுடன் மேலே எழும்பிய புகைப்படலம் களைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்துச் சிதறின. பிய்த்தெறியப்பட்ட சதைத் துணுக்குகளால் அந்த இடமே இரத்தகளரியானது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
இது மாலேகானில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல். இதற்கு அடுத்த பயங்கரவாத தாக்குதல் 2008 ஆம் ஆண்டின் ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்டது. டிபன் பாக்ஸ்களில் அடைக்கப்பட்ட வெடிகுண்டுகள் மாலேகானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை தான், மதிய தொழுகை முடியும் நேரத்தில் தான் இந்த குண்டுகளும் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக கடமையில் இறங்கிய காவல்துறை இதற்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் தான் காரணம் என்று வெற்றிலையில் மை போட்டு பார்த்ததைப் போல அடித்துக் கூறியது. இவர்கள் தான் குண்டு வைத்தனர் இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி ஒன்பது அப்பாவி முஸ்லீம்களை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆனால் அவர்கள் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 2012 இல் விடுவிக்கப்பட்டனர். அதாவது, தவறே செய்யாமல் பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் உடனே இந்து பொதுப்புத்தியில் தாடி, குல்லா வைத்த முஸ்லீம் முகங்கள் தான் தோன்றும். அந்த அளவுக்கு இசுலாமியர்களைப் பற்றிய இந்து பெரும்பாண்மையின் கண்ணோட்டம் ஆர்.எஸ்.எஸ் காவிக் கண்ணோட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த கண்ணோட்டத்தை வடிவமைப்பதிலும், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் ஜனநாயகத் தூண்கள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குண்டு வெடிப்புகள் நடக்கும் போதெல்லாம் அநீதியான முறையிலும் ஒருதலை பட்சமாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான பொதுக்கருத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும் கருத்துக் கருவிகளாகவே இந்த ஜனநாயகத் தூண்கள் செயல்படுகின்றன.
பயம், பீதி, பதட்டம் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இத்தகைய தருணங்களில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தம் பங்கிற்கு தமது சொந்த கற்பனைகளையும், பொய்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வாசகர்களிடம் அள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளுக்கு போட்டியாக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்குகின்றன. வெளியில் ஜனநாயக வேடமும் மூளைக்குள் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் புத்தியையும் வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை தீவிரவாதம், பயங்கரவாதம் என்று ஊளையிடும் இந்த அகிம்சாவாதிகள் எல்லாம் இந்து தீவிரவாதிகள், இந்து பயங்கரவாதிகளின் குண்டுவைப்புகளை பற்றி வாய் திறப்பதே இல்லை.
மாலேகான் தாக்குதலுக்கு முன்பும் இதே பாணியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், பார்பானி நகரில் உள்ள ரஹ்மத் நகர் மகமதியா மசூதியில் ஒரு தாக்குதலும், 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம், புர்ணா நகரின் சித்தார்த் நகரில் உள்ள மிராஜ் உல் உலூரம் மதறாசா மற்றும் மசூதியிலும் இதே போன்ற வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா மசூதியிலும் குண்டுகள் வெடித்தன. 2006-ம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளும் இதே பாணியில் வெள்ளிக்கிழமை, மதிய நேரங்களில் தான் நடத்தப்பட்டன.
அசிமானந்தா சொருகிய ஆப்பு
ஆனால், அடுத்த குண்டு மசூதியில் வெடிக்கவில்லை. ஒரு வீட்டிற்குள் வெடித்தது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் தரோடாவைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டிற்குள் இருந்து வெடித்துச் சிதறியது. பயங்கரவாத தாக்குதல்களுக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதே அந்த குண்டுகள் வெடித்துச் சிதறிவிட்டன. இந்த வெடி விபத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த இருவர் அதே இடத்தில் இறந்தனர், ஐந்து பேர் படுகாயத்துடன் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டுகள் ஒளரங்காபாத் மசூதியை தாக்குவதற்காக தயாரிக்கப்பட்டவை என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. அப்போது தான் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வைப்பு சதி வேலைகள் ஓரளவுக்கு வெளியே தெரிந்தன. இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் தேசபக்த ஒப்பாரியும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி விதம்விதமான திரைக்கதைகளையும் எழுதுகின்ற பத்திரிகைகள் எல்லாம் அப்போது கேடுகெட்ட முறையில் உண்மைகளை மூடி மறைக்கவே முயற்சித்தன.
அதன் பிறகு குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். மாலேகானில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டு வெடிப்பு தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் பெண் சாமியார் பிரக்யா சிங்கும், இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் மேஜர் ஜெனரல் தகுதியில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்கள் தான் இந்து பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பயிற்சியளித்துள்ளனர். இவர்களைத் தவிர மற்றொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவர் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வைப்புகளுக்கு இந்திய இராணுவத்திலிருந்து வெடி மருந்துகளை கொண்டுவந்து கொடுத்த தேசபக்தர் இவர் தான். இந்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவைப்புகளில் எல்லாம் இவனுடைய பங்கு மிகவும் முக்கியமானது.
பிரக்யா உள்ளிட்டோரின் கைதைத் தொடர்ந்து அதே ஆண்டில் உ.பி மாநிலம் கான்பூரில் வைத்து தயானந்த் பாண்டே என்கிற சாமியார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் 2010-ம் ஆண்டு அசிமானந்தா என்கிற ஆர்.எஸ்.எஸ் சின் முழு நேர ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது தான் இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இவர் தான் குண்டு வைப்புகளில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகளைப் பற்றிய பல உண்மைகளை முதன்முதலில் வாக்குமூலமாக அளித்தவர். அவருடைய வாக்குமூலத்தில் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வைப்பில் மட்டுமல்ல, 2006 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ்க்கு சொருகப்பட்ட கூர்மையான ஆப்பாக அமைந்தது.
வாயை திறப்பதற்குள் மூச்சை நிறுத்திய ஆர்.எஸ்.எஸ்
இந்துமதவெறிக் கும்பல் மசூதிகளை அடுத்து இரயில்களுக்கும் குண்டு வைக்கத் திட்டமிட்டது. அந்த திட்டத்தின் முதல் முயற்சியாக, 2007 ஆம் ஆண்டு டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவன் சுனில் ஜோஷி என்கிற ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர ஊழியன். மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா உள்ளிட்ட அனைத்து குண்டுவெடிப்புகளிலும் மிகப்பெரியதொரு வலைப்பின்னல் செயல்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்கள் அனைத்திலும் பிரக்யாசிங், ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், அசிமானந்தா, சுனில் ஜோஷி போன்ற கீழ்மட்ட தலைகளில் இருந்து பல உயர்மட்ட தலைகள் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதை சுனில் ஜோஷியின் கொலை அம்பலப்படுத்தியது.
குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்துமதவெறியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதாலும், ஏற்கெனவே கைதானவர்கள் பல உண்மைகளை கக்கிக்கொண்டிருந்ததாலும், சம்ஜவ்தா குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷி கைது செய்யப்பட்டால் அவனும் வாக்குமூலத்தில் பல உண்மைகளை கக்கக்கூடும் என்கிற அபாயம் இருந்தது. அவனுக்கு இந்த சதிச் செயலின் மொத்த வலைப்பின்னலும் தெரிந்திருந்தது, யார், யார் பெரிய தலைகள், அவர்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் கைதானால் பல முக்கிய தலைகளே உருளும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாதிகளே சுனில் ஜோஷியை 2007-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் தேவாசில் வைத்து போட்டுத் தள்ளிவிட்டனர். அசிமானந்தா இதையும் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் சுனில் ஜோஷியை கொன்றது பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தான் என்கிற உண்மையும் தெரியவந்தது. இந்த கொலைக்காகவும் பிரக்யா சிங் மீது ஒரு வழக்கு போடப்பட்டது.
 நீதிமன்றத்தின் காவிப்பாசம்
குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்துத்துவ பயங்கரவாதிகள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இரண்டாவதாக நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பங்காற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தலிக் என்பவன் 2011 ஆம் ஆண்டில் இறுதியாக கைது செய்யப்பட்டான். இவனையும் சேர்த்து இதுவரை பனிரெண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் பல்வேறு குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே என்கிற இரண்டு பேர் இதுவரை பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் வனவாச வாழ்வு முடிந்து வெளியே வருவதோடு அடுத்த முறை பிரதமர் வேட்பாளர்களாகவும் கூட நிறுத்தப்படலாம். சும்மாவா, தியாகம் அல்லவா செய்திருக்கிறார்கள்.
மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட பதினோரு பேர் மீதும் ”மகாராஷ்ட்ரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் ஒரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். இது கடுமையான சட்டப் பிரிவுகளை கொண்டது. இந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை நாசிக் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்பாவி இஸ்லாமியர்களை பிடித்து ஆண்டுக்கணக்கில் உள்ளே தள்ளுவதில் மகிழ்ச்சி கொள்ளும் நீதி மன்றம், பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளை இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறியதோடு அதை ரத்து செய்து, சாதாரண கோர்ட்டில் நடக்கும் சாதாரண வழக்கைப் போல இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை (அயோக்கியத்தனத்தை) கேட்டதும் பிரக்யாசிங்கின் தந்தைக்கு தலைகால் புரியவில்லை, தனது குடும்பத்தோடு நண்பர்கள் உறவினர்களுக்கு எல்லாம் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.
வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு குழுவிடம் மாற்றம்
 இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் படை விசாரித்து வந்தது. அது தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியும், வேறு சில இஸ்லாமிய அமைப்புகளும் தான் இந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று கூறி ஒன்பது அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து உள்ளே தள்ளியதோடு வழக்கையும் அத்துடன் ஊத்தி மூடப்பார்த்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு இந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்பு வழக்குகளையும் தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து தேசிய புலனாய்வு குழுவிடம் 2011-ம் ஆண்டு ஒப்படைத்தது.
தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை துவங்கிய பிறகு தான் ஓரளவுக்காவது உண்மைகள் வெளிவரத் துவங்கின. எனினும் வலதுசாரி கண்ணோட்டமுள்ள இந்திய ஊடகங்கள் முடிந்த அளவுக்கு தமக்கு விருப்பமற்ற இந்த உண்மைகளை மூடி மறைக்கவே பார்த்தன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு இந்து அமைப்புகள் தான் காரணம் என்பதை தேசிய புலனாய்வுக் குழு ஆதாரங்கள், சாட்சிகளுடன் தனது அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பை 28.12.2012 அன்று வெளியிட்டது. அதன் பிறகு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருந்த இந்து தீவிரவாதிகள் மீதான பிடி இறுக்கமடைந்தது.
இந்நிலையில் இம்மாதம் 23-ம் தேதி இவ்வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் மாலேகான் குண்டுவைப்பில் லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா ஆகிய நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை தெளிவுபடுத்தும் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடந்துவருவதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்ஜி மற்றும் டாங்கேயின் தலைக்கு ரூ.10 லட்சம்மும், அமித் சவுகானின் தலைக்கு ஐந்து லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் முக்கிய குற்றவாளிகளான புரோஹித், அசிமானந்தா, ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் பெயர்கள் இக்குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. ஒரு வேளை இவர்களை தப்பிக்க வைப்பதற்குத்தான் இந்தக் குற்றப்பத்திரிகையா என்றும் தெரியவில்லை. இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, துணை குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நீதி நீதி மன்றத்தில் கிடைக்குமா ?
நாளையே மோடி ஆதரவாளர்களின் விருப்பப்படி பாசிச மோடி பிரதமரானால், இந்த குண்டு வைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பயங்கரவாதிகளும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எந்த குற்றமும் செய்யாத அப்சல் குரு போன்ற அப்பாவிகளின் உயிரை குடித்து தனது வெறியை தீர்த்துக்கொண்ட பாசிச நீதிமன்றங்கள் செயல்படும் இந்தியாவில் இந்துமதவெறியர்களுக்கு எதிராக வழக்கும் விசாரணையும் நடப்பதே பெரிய விஷயம் தான். அந்த வகையில் தேசிய புலனாய்வுக் குழு இந்துவெறியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே நேரத்தில் விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டாலும், குற்றப்பத்திரிகை குற்றவாளிகளை சரியாக அடையாளம் காட்டினாலும் இந்திய நீதிமன்றங்கள் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. நீதிமன்றங்களை மட்டுமே நம்பி இராமல் அதற்கு வெளியில் கட்டியமைக்கப்படும் மக்கள் போராட்டங்களால் தான் இந்த பயங்கரவாதிகளை தண்டிக்க முடியும்.
- வையவன் நன்றி : வினவு

புதன், 5 ஜூன், 2013

நாம் உண்மையான மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்!!ஆளப்பிறந்தவர்கள்!!...வாருங்கள்..வாருங்கள். வாருங்கள்... இணைந்து செயல்படுவோம்..இன்ஷா அல்லாஹ் வெற்றியும் பெறுவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


வீழ்வது நானாக இருந்தாலும், 

வாழ்வது   என் இனமாக இருக்கட்டும்....

முடங்கி கிடந்தால் சிலந்தியும் 
உன்னை சிறைபிடிக்கும்... 


எழுந்து எழுச்சியுடன் போராடினால் 
எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்... 



நாம் உண்மையான மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்!! 


நம்மை ஆளுபவன் நம்மில் 
ஒருவனாக இருக்கட்டும்! 

நாளைய விடியல் நமதாகட்டும்!! 
ஆளப்பிறந்தவர்கள்!!...

வாருங்கள்..வாருங்கள். 

இணைந்து செயல்படுவோம் 

இன்ஷா அல்லாஹ் வெற்றியும் பெறுவோம்.

அல்லாஹ்வின் துணையோடு!

கருப்பு வெள்ளை உடையோடு!!

வீறு கொண்ட நடையோடு!

அநீதி எதிர்க்கும் துணிவோடு!!

விரைந்து வா வீர மகனே!

ஈமானோடு தம்பிகள் கிளம்பட்டும்!!

சிறை பிடித்த கம்பிகள் சிதறட்டும்!

முழக்கங்கள் விண்ணை பிளக்கட்டும்!!

வீரர்கள் மண்ணை ஆளட்டும்!

ஜூலை 6 கோட்டை நோக்கி மாபெரும் 

கோரிக்கை பேரணி!!

லட்சியங்களை அடைய!

லட்சமென கூடுவோம்!!

அழைக்கிறது 

தமிழ் நாடு முஸ்லிம்


முன்னேற்ற கழகம்!



அலைகடலென வாரீர்! வாரீர்!!

~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 

எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

~~~~~~~~~~~~~~~~~~~~~~


~~~~~~~~~~~~~~~~~

          "T M M K" AL-KHOBAR. K.S.A
~~~~~~~~~~~~~~~~~

visit : www.tmmk.info
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து கட்டுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  

  

தமுமுகவின் மூத்த தலைவர் கண்ணியமிகு பேராசிரியர்,டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று 05-06-2013 அன்று புதுச்சேரி வருகை

ஏகஇறைவனின் திருப்பெயரால்...அஸ்ஸலாமு அலைக்கும்.


தமுமுகவின் மூத்த தலைவர் கண்ணியமிகு பேராசிரியர்,டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று 05-06-2013 அன்று புதுச்சேரி வருகை புரிந்தார்கள். 


தமுமுக ம.ம.க நிர்வாகிகளை சந்தித்த பேராசிரியர் புதுச்சேரி மாநில முதல்வர் ரெங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து புதுவையில் முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடிதம் அளித்தார். 

புதுவை மாநில முஸ்லிம்களின் பிரதான கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு கோரியும் மனுவிலும், நேரிலும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் பேராசிரியர். டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்தார்கள். 

Inline image 1
--
முஸ்லிம் பெண்கள் விவாகரத்து குறித்து தொடரப்பட்ட வழக்கு குறித்து திரு. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் கருத்து!

தலாக் கூறி முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிக்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்கக் கோரி சென்னை திருவல்லிக்கேணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வழக்குரைஞருமான பதர் சயீத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பிருமான எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (5.6.2013) புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியது:

‘திருவல்லிக்கேணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் முஸ்லிம் பெண்கள் விவாகரத்து குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். 

அது முற்றிலும் தவறான வழக்கு. மலிவான விளம்பரத்திற்காக இந்த வழக்கை அவர் தொடுத்துள்ளார். முஸ்லிம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கருத்து வேறுபாடு வந்தால் அதனை பள்ளிவாசல்களில் உள்ள இமாம்கள் பேசித் தீர்ப்பார்கள். 

அவர்களுக்குள் உள்ள பிரச்சனையை தீர்த்து சேர்த்து வைக்க முயல்வார்கள். அதில் அவர்கள் சமரசம் அடையவில்லை என்றால் அவர்களுக்கு காஜிக்கள் விவாகரத்து அளிப்பார்கள். 

இதுகாலம் காலமாக முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து வரும் வழக்கம். இதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மேலும் இது முஸ்லிம் சட்டத்திற்கும் விரோதமானது. 

இதனை மாற்றினால் தேவையில்லாமல் முஸ்லிம் பெண்களுக்குப் பிரச்சனை ஏற்படும். இந்த வழக்கில் முஸ்லிம்களின் கருத்தை அறிய வேண்டும். 

இதுகுறித்து முஸ்லிம்களின் உச்சபட்ச அமைப்பான முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கு தகவல் அளித்து, இவ்வழக்கில் ஒரு வாதியாக சேர்ந்து எங்களது கருத்தைத் தெரிவிப்போம். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய அனைத்து வகையிலும் முயற்சி எடுப்போம்’ என்று கூறினார்.

- நன்றி புதுவை சுகுமாரன்


~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com
Join: facebook.com/tmmk.khobar
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து கட்டுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  

  

"நன்மையான காரியங்களில் போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக "

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல் அஹ்ஸா மாநகரில் நிதாகத் 

விழிப்புணர்வுக் கூட்டம்




நன்மையான காரியங்களில் போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக திறன்மிக்கது என்பதை நிரூபிக்கும் வகையிலே நித்தாக்காத் விழிப்புணர்வு விளக்கக் கூட்டம் கிழக்கு மண்டலம் முழுவதும் பெருநகரங்களில் வீரியமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டது என்பதற்கு நம்மைப் படைத்த இறைவன் ஒருவனே சாட்சி.

இவ்வகையிலே, தம்மாம், அல்-கோபர்மாநகரங்களைத் தொடர்ந்து அல்-ஹஸா(ஹபூப்) மாநகரிலும் அல்-ஹஸா இஸ்லாமிய நிலையத்தின் பார்வையாளர் மண்டபம் மூன்றாம் தளத்தில்,ஒருங்கிணைந்த தமிழ்ச் சொந்த-நெஞ்சங்கள் சார்பாக 31-05-2013 வெள்ளியன்று நடத்தப்பட்டது.

மாநகர தமுமுக தலைவர் கந்தகுமாரன் சகோ. அஹ்மது சுகர்னோ அவர்கள் தலைமையேற்க, கிழக்கு மண்டல மமக செயலாளர் அப்கேய்க் சகோ. அப்துல் ஹலீம் சித்தீக்கீ அவர்கள் நித்தாக்காத் - விபரீதம், விளைவு, நன்மைகள், தீர்வுகள் ஆகியவைகளை பொதுவான விளக்கமாக எடுத்துரைக்க வீழ்ந்தவர்கள் விழித்து வெற்றி பெற்றவர்களைப்போல் எல்லோரும் தனித்தனியாக மேடை நோக்கி வர, தனிப்பட்ட முறையில் அவரவர்களுக்கு வேண்டிய கேள்விக்கணைகள் தொடுத்து விளக்கம் பெற்றுச் சென்றார்கள்.

வந்திருந்து விளக்கங்கள் கேட்டவர்களின் விவரங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாணம், (ரியாத்) இந்தியத் தூதரகம் வழிகாட்டலுடன் பின்தொடர இருக்கிறோம் இன் ஷா அள்ளாஹ்.

இக்கூட்டத்திற்கு தண்ணீர், குளிர்பான ஏற்பாடுகளை மாநகர பொருளாளர் உத்தமப்பாளையம் சகோ. அன்வர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். மாலை 5 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம் மாலை 6.30 மணிக்கு இனிதே நிறைவுற்றது இறையருளால்.

வந்திருந்து ஒத்துழைத்த தன்னார்வலர்களுக்கும் விளக்கங்கள் பெற்றவர்களுக்கும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

தொகுப்பு: கு. ஷஹாபுதீன்.


http://www.tmmk-ksa.com/iyakkam1/i-velinadu/i-valaiguda/i-saudiarabia/1381-2013-06-04-07-14-12.html



ஞாயிறு, 2 ஜூன், 2013

மனிதநேய மக்கள் கட்சிக்கு வாருங்கள், சேவை அரசியலில் தங்களையும் இணைத்து கொள்ளுங்கள் .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பு உறவுகளுக்கு..!

மனிதநேய மக்கள் கட்சிக்கு வாருங்கள் ...

ஆதிக்க அரசியலை முறியடிக்க...

அதிகாரத்தை வென்றெடுக்க...

மனிதநேயம் மலரச்செய்ய... 

மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சியாய்...

மாற்று அரசியலின் மாபெரும் புரட்சியாய்...

அதிகார அவையில் உரிய பிரதிநிதித்துவம்...

மாற்று அரசியல் களம்...

மனிதநேய மக்கள் கட்சியில் இன்றே இணைவீர்....

Inline images 1
Add caption
சிந்திப்பீர் செயல்படுவீர் !!
நம்மை ஆளுபவன் நம்மில் 
ஒருவனாக இருக்கட்டும்!
நாளைய விடியல் நமதாகட்டும்!!

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப்
பெரிய வெற்றிகளைத் தடுத்து
விடுகிறது. நாம் எல்லோருமே 
மிகப்பெரும் சாதனைகளை 
படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்...

மனிதநேய மக்கள் கட்சிக்கு வாருங்கள்,

சேவை அரசியலில் தங்களையும்
இணைத்து கொள்ளுங்கள் ........



~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்  அந்த வல்ல இறைவன் 
அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~ 

Inline images 2
--